Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 33.

நிலாவின் சந்தோஷத்துக்காக தமிழ் எடுக்கும் முடிவு.

 

தமிழ் கவினிடம் போனில் பேசி விட்டு ஏதோ யோசித்த படி வராண்டாவில் நடந்து கொண்டிருந்தான்.

 



Advertisement

இனி,

 

தமிழை ரொம்ப நேரமாக காணாததால் நிலா வராண்டாவிற்கு வந்து பார்த்து விட்டு,

Advertisement

 

Advertisement

‘தமிழ் என்னாச்சு’, என அவனிடம் கேட்க,

 

‘கவின் கிட்ட இருந்து போன் வந்துச்சு . அதான் அவன் கிட்ட பேசிட்டு அப்படியே நடந்து கிட்டு இருக்கேன்’, என தமிழ் சொல்ல,

Advertisement

 

‘சரி நானும் உங்களுக்கு கம்பெனி குடுக்கறேன்’, என சொல்லி நிலாவும் வந்து தமிழ் கூட நடக்க,

 

‘இல்ல  பரவால்ல வா உள்ள போகலாம்’, என தமிழ் அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி சென்றான்.

 

என்ன தான் நிலா சந்தோஷமாக பேசி சிரித்தாலும் தமிழுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவனை சிறிது நேரம் கூட தனியாக விடாமல் சரியாக தூங்காமல், சாப்பிடாமல் கூட குழந்தையை பார்த்து கொள்வது போல் பார்த்துக் கொண்டாள்.

 

இதை பார்த்த தமிழுக்கு நிலா தன்னால் கஷ்டப் படுகிறாள் என்ற வருத்தம் இருந்தது.

 

‘நிலா எனக்கு நெஜமாவே உடம்பு நல்லா ஆயிருச்சு. அதனால நீ என்ன பத்தி கவலப்படாத. ரொம்ப யோசிக்காத. உன் வேலைல கான்சன்ட்ரேசன் பண்ணு’, என தமிழ் சொல்ல,

 

‘ம் சரி என் வேலையே உங்கள பாத்துக்கறது தான்’, என நிலா சொல்ல,

 

‘நிலா ப்ளீஸ் நான் சொல்றத கேளு. நாளைக்கு ஆபிஸ்கு கிளம்பலாம். ‘, என தமிழ் சொல்ல,

 

‘அவ்ளோ தான போலாம். ஓகே வா’, என சொல்லி விட்டு நிலா லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து உட்கார்ந்து இருந்த அவனை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு தட்டி குடுக்க அவளை பார்த்து கொண்டே தமிழ் தூங்க நிலாவும் அப்படியே தூங்கினாள்.

 

காலையில் எழுந்து இருவரும் கிளம்பி கீழே வர, ‘ஏன்டா இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்ல’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ராஜி ஏற்கனவே இப்ப தான் நிலாவ சமாளிச்சிட்டு வந்தேன். நீ வேற ஆரம்பிக்காத. .எனக்கு ரொம்ப போர் அடிக்குது. நான் தான் நல்லா தான இருக்கேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இப்ப எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகறீங்க. ஆன்டி நீங்க கவலைப்படாதீங்க. அதான் நான் கூட இருக்கேன்ல நான் பாத்துக்கறேன்.’, என நிலா சொல்ல,

 

‘ஆமா ராஜி அவன பத்தி உனக்கு தெரியாதா. நிலா தான் கூட இருக்கால்ல’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘சரி வாங்க சாப்டலாம்’, என தமிழ் அம்மா சொல்ல அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

தமிழும், நிலாவும் ஆபிஸ்க்கு கிளம்ப நிலா காரை ஓட்ட இருவரும் சென்றனர்.

 

ஆபிஸில் நிலாவும் நந்தினியும் எப்போதும் போல் நடந்ததை பேசிக் கொண்டு வேலையை பார்த்தனர்.

 

அப்போது கவின் ஆபிஸ்க்கு வர நிலா அவனிடம் பேசி விட்டு தமிழிடம் கூட்டி சென்றாள்.

 

‘கவின் என்ன டா திடீர்னு’, என தமிழ் கேட்க,

 

‘நீ எப்டி இருக்கன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்’, என கவின் சொல்ல நிலா இருவருக்கும் காபி கொண்டு வந்து குடுத்து விட்டு, ‘சரி நீங்க பேசி கிட்டு இருங்க’, என சொல்லி விட்டு நிலா செல்ல முயல கவின் காபிக்கு சுகர் எடுத்து போடும் போது ஸ்பூனை எதேச்சேயாக தவற விட அது கீழே விழுந்த சத்தம் கேட்டு நிலா வேகமாக ஓடி வந்து தமிழை பதற்றமாக,  ‘தமிழ் என்னாச்சு எதும் தலை சுத்துதா மயக்கம் வர மாதிரி இருக்கா’, என கேட்க,

 

‘நிலா ஒரு நிமிஷம் அமைதியா இரு. எனக்கு ஒன்னும் பண்ணல. நீ பதட்டப்பாத. ஸ்பூன் தவறுதலா கீழே விழுந்திருச்சு. அவ்ளோ தான்’, என தமிழ் . சமாதானப்படுத்த,

 

‘ஓ அப்டியா. நான் உங்களுக்கு ஏதோ ன்னு கொஞ்சம் பயந்துட்டேன். சாரி நீங்க கன்டினியு பண்ணுங்க ‘, என சொல்லி நிலா தமிழை திரும்பி பார்த்த படியே வெளியே சென்றாள்.

 

‘நிலா உனக்கு உடம்பு சரியில்லாம போனதிலிருந்து உன் மேல இன்னும் அதிகமா கேர் எடுத்துக்கறா போல. ஒரு ஸ்பூன் கீழ விழுந்ததுக்கே உனக்கு எதாவது ஆயிடுச்சோன்னு இவ்ளோ பயப்படறா’, என கவின் கேட்க,

 

‘ஆமா டா என்ன கவனுச்சுக்கறதுக்காக ஒழுங்கா சாப்டல, தூங்கல. பத்தாதுக்கு அந்த டாக்டர் வேற தனியா விடாதீங்க கூடவே இருந்து பாத்துக்கங்க ன்னு சொல்லிட்டாரு.’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இப்ப அதுக்கு என்ன. நிலா உன் மேல அக்கறையா இருக்க நீ குடுத்து வச்சிருக்கணும்.’, என கவின் சொல்ல,

 

‘ஆமா கண்டிப்பா நிலா கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கேன் தான். ஆனா நான் அவளுக்கு கிடைக்க அவ ஏதோ பாவம் பண்ணிருக்கா’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன சொல்ற எனக்கு புரியல’, என கவின் சொல்ல,

 

‘ஒரு சாதாரண பொண்ணோட வாழ்க்கைய பத்தின ஆசை என்னவா இருக்கும் சொல்லு’, என தமிழ் கேட்க,

 

‘ம் நல்ல பாசமா பாத்துக்கற புருஷன் கிடைக்கனும். குடும்பம், குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கனும்’, என கவின் சொல்ல,

 

‘ம் ஆனா நிலா எங்கூட இருந்தா இது எதுவும் அவளுக்கு கிடைக்காது. காலத்துக்கும் இப்டி எனக்கு என்ன ஆகுமோன்ற பயம் தான் அவளுக்கு இருக்கும். டாக்டர் சொன்னத பாத்தா இது இத்தோட முடிய போறது இல்ல. எப்ப வேணா இது மாதிரி வரலாம் ஜாக்ரதையா இருங்கன்னு சொன்னாரு. இது திரும்ப வருமோ வருதோ ஆனா வந்துருமோன்னு நிலா ஒவ்வொரு தடவையும் பயப்படறத அவ கண்ணுல நான் பாக்கறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இப்ப அதுக்கு நீ என்ன சொல்ல வர’, என கவின் கேட்க,

 

‘அதற்குள் நிலா கதவை தட்டி, ‘மே ஐ கமின்’, என கேட்க,

 

‘ம் கமின்’, என தமிழ் சொல்ல,

 

‘சாரி உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டனா.  ப்ரூட்ஸ் குடுத்துட்டு போலாம்னு வந்தேன். ரெண்டு பேரும் மிச்சம் வைக்காம சாப்டுருங்க.’, என சொல்லி நிலா வைத்து விட்டு சென்றாள்.

 

‘இப்ப அவ எதுக்கு வந்தான்னு உனக்கு தெரியுமா’, என தமிழ் கேட்க,

 

‘ம் இதென்ன கேள்வி. அதான் அவளே சொன்னாளே ப்ரூட்ஸ் குடுக்கன்னு’, என கவின் சொல்ல,

 

‘அது அவ சொன்ன ரீசன். அவ நா நல்லா இருக்கனான்னு பாக்க தான் வந்தா. நீ வேனா பாரு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ இது மாதிரி எதாவது ஒரு ரீசன் சொல்லிட்டு அவ வருவா’, என தமிழ் சொல்ல,

 

‘என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. இதுக்கு சரியான முடிவு சீக்கிரமா நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கைய ஸ்டார்ட் பண்றது தான். குழந்த குட்டின்னு ஆயிட்டா அதுங்கள பாத்துக்கறதுல உன்ன மறந்தே போயிடு வா.’, என கவின் ஐடியா குடுக்க,

 

‘இல்ல அப்டி செஞ்சா நிலா எனக்கு செஞ்ச நல்லதுக்கு நான் அவளுக்கு தண்டனை குடுத்த மாதிரி ஆயிடும்’, என தமிழ் சொல்ல,

 

‘இப்ப நீ என்ன தான் சொல்ல வர’, என கவின் கேட்க,

 

‘அவள என்ன விட்டுட்டு போய் வேற ஒரு சந்தோஷமான வாழ்க்கைய வாழ சொல்ல போறேன்’, என தமிழ் இழுக்க,

 

‘தமிழ் அவசரத்துல எடுக்கற முடிவு கண்டிப்பா தப்பா தான்டா இருக்கும். நிதானமா யோசிச்சு பாரு. நிலாவால உன்ன விட்டு இருக்க முடியாது. அத விட உன்னால கண்டிப்பா அவள பிரிஞ்சு இருக்க முடியாது.’, என கவின் சொல்ல,

 

‘நீ சொல்றத நானும் ஒத்துக்கறேன். ஆனா நல்லா யோசிச்சு தான் இந்த முடிவ எடுத்திருக்கேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி இதுக்கு முதல்ல நிலா ஒத்துக்கனுமில்ல’, என கவின் கேட்க,

 

‘கண்டிப்பா ஒத்துக்க மாட்டா. ஆனா நான் கேட்டா எனக்காக கண்டிப்பா பண்ணுவா. ‘ என தமிழ் சொல்ல,

 

‘சரி அப்புறம் நீ என்ன பண்ண போற அவ இல்லாம’,  என கவின் கேட்க,

 

‘ம் தெரியல. நீங்க,  என் ராஜி, அப்பா எல்லாரும் தான் எங்கூட இருக்கீங்கல்ல பாத்துக்கலாம்’, என தமிழ் சொல்ல,

 

‘டேய் சும்மா பைத்தியக்காரன் மாதிரி பேசாத. நிலா பாவம் டா அவள இன்னும் கஷ்டப் படுத்தாத’, என கவின் சொல்ல,

 

‘நானும் அவ நல்லதுக்கு தான்டா சொல்றேன்’, என தமிழ் சொல்லி அழ,

 

‘ஏய் தமிழ் அழாத. நிலா மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு புரியுது. ஆனா’, என கவின் சொல்ல,

 

‘அவ மேல நான் வச்சிருக்கறத விட அதிகமா அவ என் மேல உசுரே வச்சிருக்கா டா’, என தமிழ் சொல்ல,

 

‘சரி பாக்கலாம் கடவுள் தான் இதுக்கு ஒரு நல்ல முடிவு தரனும்’, என கவின் சொல்ல,

 

மீண்டும் ‘மே ஐ கமின்’, என நிலாவின் குரல் கேட்க தமிழ் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, ‘கமின்’, என்றான்.

 

”சாரி வேற எதுவும் வேனுமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்’, என நிலா சொல்ல,

 

கவின் தமிழை பார்த்த படி, ‘இல்ல ஒன்னு வேனாம் நிலா. ‘, என கவின் சொல்ல நிலா தமிழின் முகம் சோர்ந்து இருப்பதை பார்த்து, ‘என்னாச்சு தமிழ் ஏன் முகம் வாடி இருக்கு.’ என தன் துப்பட்டாவால் அவன் முகத்தை துடைத்து விட,

 

‘நிலா ஒன்னுமில்ல லைட்டா டயர்டா இருக்கு அவ்ளோ தான்’, என தமிழ் சமாளிக்க,

 

‘நிலா நானும் தமிழும் கொஞ்சம் காத்தாட வெளிய போய்ட்டு வறோம்’, என கவின் சொல்ல,

 

‘ம் ஓகே போய்ட்டு வாங்க. அப்புறம் கொஞ்சம் அவர எங்கயும் தனியா விடாம கூடவே இருங்க.’, என நிலா சொல்ல,

 

‘ம் கண்டிப்பா. சரி வா தமிழ்.போலாம்’, என கவின் கூப்பிட,

 

‘நிலா போய்ட்டு வந்தறேன்’, என தமிழ் சொல்ல இருவரும் வெளியே சென்றனர்.

 

‘தமிழ் உன் நிலமை எனக்கு புரியுது. ஆனா வேற எதுவும் சொல்யூசன் இல்லயா’, என கவின் கேட்க,

 

‘தெரியல உனக்கு எதுவும் தோனுச்சுன்னா சொல்லு’, என தமிழ் கேட்க,

 

‘ம் ஆமா இதுக்கு மத்தவங்க ஒத்துக்குவாங்களா’, என கவின் கேட்க,

 

‘அத பத்தி எனக்கு கவல இல்ல. நிலாவ எப்டி ஒத்துக்க வக்கறதுன்னு தான் யோசிக்கறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘ஆமா கண்டிப்பா இதுக்கு நிலா ஒத்துக்க மாட்டா’  என கவின் சொல்ல,

 

‘இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. அவ என்னைய வெறுக்கற மாதிரி நடந்துக்கிட்டா அவளே என்ன விட்டு பிரிஞ்சு போயிடுவா’, என தமிழ் சொல்ல,

 

‘இப்பவும் சொல்றேன் இதெல்லாம் தேவை இல்லாத வேலை. உன்னால  அவள வெறுக்கற மாதிரி நடந்துக்க முடியுமா’, என கவின் கேட்க,

 

‘தெரியல பாக்கலாம்’, என தமிழ் சொல்லி விட்டு அமைதியாக எதையோ யோசித்த படி வர கவினும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்.

 

இருவரும் ஆபீஸ்க்கு திரும்பி வந்தனர்.

 

‘சரி நிலா நான் கிளம்பறேன்’, என கவின் சொல்ல,

 

‘சரி அண்ணா வீட்ல எல்லாரயும் கேட்டதா சொல்லுங்க ‘, என நிலா சொல்ல நிலாவை பார்த்த படியே கவின் சென்றான்.

 

தமிழ் யோசித்தது சரியா?

 

தொடரும்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!