Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 36.

தமிழை விட்டு பிரிய ஒப்புக் கொள்ளும் நிலா.

 

தமிழ் கோபத்தில் போனை கட் பண்ண கவின் திரும்ப தமிழுக்கு கூப்பிட்டான்.

 



Advertisement

இனி,

 

‘நான் தான் உன் ஹெல்ப் வேணாம்னு சொல்லி வச்சுட்டேன்ல.  அப்புறம் ஏன் கூப்டற’, என தமிழ் கேட்க,

Advertisement

 

Advertisement

‘டேய் ரொம்ப தான் பிகு பண்ணாத. சொல்லு என்ன நடந்துச்சுன்னு’, என கவின் கேட்க,

 

‘அத ஏன்டா கேக்குற. என் கிட்ட எதோ கேக்கனுமாம். அப்பாயின்மெண்ட் கேட்டா. ‘, என தமிழ் சொல்ல,

Advertisement

 

‘அப்பாய்ண்மண்டா உன் கிட்ட பேசவா எதுக்கு. சார் எப்போ அவ்ளோ பிசியா ஆனிங்க ‘, என கவின் கேட்க,

 

‘ம் நான் தான் அவாய்ட் பண்றேன்ற பேர்ல  அவ கிட்ட சரியா பேசறதுல்ல ஆபிஸ்கு கூட கூட்டிட்டு போறதுல்ல.’ என தமிழ் சொல்ல,

 

‘டேய் என்ன டா பண்ணி வச்சிருக்க. கொஞ்சம் ஓவரா தான் போயிருக்க போல’, என கவின் சொல்ல,

 

‘இப்ப அவ என் கிட்ட எதாவது கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லட்டும். அத மட்டும் சொல்லு’, என தமிழ் கேட்க,

 

‘ஆமா பண்றது எல்லாம் தேவை இல்லாத வேல. எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப என்ன பண்றதுன்னு வந்து என்னைய கேளு. சரி பேசாம நீ அவ கிட்ட நேராவே அவள விட்டு பிரிய போறேன்னு சொல்லிடு’, என கவின் சொல்ல,

 

‘அப்டி சொன்னா ஏன் எதுக்குன்னு ரீசன் கேப்பாளே’, என தமிழ் கேட்க,

 

‘ஆமா கேப்பா தான். ஆனா உன்னோட ரீசன அவ கிட்ட உன்னால சொல்ல முடியாதுல்ல. அப்புறம் என்ன ஏதோ ஒன்னு சொல்லி சமாளி’, என கவின் சொல்ல,

 

‘சரி நான் சொல்றத அவ ஏத்துக்குவாளா’, என தமிழ் கேட்க,

 

‘கண்டிப்பா ஏத்துக்க மாட்டான்னு  உனக்கே தெரியும். இங்க பாரு இப்ப கூட இந்த பிரச்சனைய சரி பண்ணிடலாம். நீ உன் முடிவ மாத்தி கிட்டா. என்ன சொல்ற’, என கவின் சொல்ல,

 

‘சரி நான் பாத்துக்கறேன். நீ போன வை’, என சொல்லி விட்டு தமிழ் போனை கட் செய்தான்.

 

‘தமிழ் வா சாப்டலாம்’, என தமிழ் அம்மா கூப்பிட,

 

”இதோ வரேன் ராஜி’, என சொல்லி விட்டு உள்ளே போனான் தமிழ்.

 

அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.

 

‘சரி நாங்க போய் தூங்கறோம். நீங்களும் கதவ சாத்திட்டு போய் தூங்குங்க ‘, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘டாடி எனக்கு தூக்கம் வரல. கொஞ்ச நேரம் பேசிட்டு போய் தூங்கலாமே’, என தமிழ் கேட்க,

 

‘டேய் எங்களுக்கு தூக்கம் வருது. நீயும் நிலாவும் சேர்ந்து உட்கார்ந்து பேசி கிட்டு இருங்க. ஏங்க நீங்க வாங்க’, என தமிழ் அம்மா சொல்ல தமிழ் அம்மாவும், அப்பாவும் தங்கள் அறையில் தூங்க சென்றனர்.

 

‘ராஜி இப்டி இவ கிட்ட தனியா மாட்டி விட்டுட்டு போறியே நீ எல்லாம் ஒரு அம்மாவா’, என தனக்குள் சொல்லிக் கொண்டு வேறு வழி இல்லாமல் தமிழ் கதவை சாத்தி விட்டு மேலே செல்ல நிலாவும் பின்னாடியே சென்றாள்.

 

ரூமுக்கு சென்று தமிழ் வேகமாக முதலில் படுத்து கொள்ள,

 

‘ஏங்க நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொன்னனே’, என நிலா சொல்ல,

 

‘ஆமா இல்ல கண்டிப்பா இன்னிக்கே பேசி ஆகனுமா’, என தமிழ் கேட்க,

 

‘ஆமா’, என நிலா சொல்ல,

 

‘இவ நம்மள விட மாட்டா போல. இன்னிக்கு செத்த டா தமிழு’, என தனக்குள் நினைத்து கொண்டு, ‘ஓ பேசலாமே தாராளமா பேசலாமே’, என தமிழ் சொல்ல,

 

‘எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியல. நேராவே உங்க கிட்ட கேக்கறேன். என்னைய ஏன் அவாய்ட் பண்றீங்க. நான் எதுவும் உங்களுக்கு பிடிக்காத விசயத்த செஞ்சுட்டனா. எதா இருந்தாலும் எங்கிட்ட  சொல்லுங்க. நான் மாத்திக்கறேன். ‘, என நிலா பொறுமையாக கேட்க,

 

‘அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ எதாவது நினச்சு கிட்டு இருக்காத’, என தமிழ் சமாளிக்க முயல,

 

‘அப்ப ஏன் எங்கிட்ட ஒரு வார்த்தைல பேசறீங்க ‘, என நிலா கேட்க,

 

‘ஏதாவது அவசரத்துல அப்டி பேசி இருப்பேன்.’, என தமிழ் சொல்ல,

 

‘சரி ஏன் முகத்து பாத்து பேச மாட்டீங்கறீங்க’, என நிலா கேட்க,

 

‘ அது எதாவது முக்கியமான வேல செஞ்சுட்டு இருந்து இருப்பேன்’, என தமிழ் சொல்ல,

 

‘அப்டியா சரி ஏன் ஆபிஸ்கு என் கூட வராம தனியா போறீங்க ‘, என நிலா கேட்க,

 

‘அதுக்கு ரீசன் தான் நான் சொல்லிட்டனே ஒரு வாரத்துக்கு முக்கியமான வேலயா போக வேண்டி இருக்கு அதான்’, என தமிழ் சொல்ல,

 

‘ஏன் தமிழ் இப்டி பொய் சொல்றீங்க. நீங்க எதையோ மனசுல வச்சு கிட்டு இப்டி பண்றீங்க. எதா இருந்தாலும் சொல்லுங்க பரவால்ல. நான் உங்கள கஷ்ட படுத்த மாட்டேன்’, என நிலா அழ,

 

‘நிலா ப்ளீஸ் அழாத. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஒன்னு சொல்லுவேன். எதுக்கு என்னன்னு கேக்காம நான் சொல்றத செய்வியா’, என தமிழ் கேட்க,

 

‘ம் நீங்க எது சொன்னாலும் செய்றேன். நீங்க எப்பவும் போல என் கூட பேசுனா போதும்’, என நிலா சொல்ல,

 

‘அது வந்து நீ என்னை விட்டு போகனும். ‘, என தமிழ் தட்டு தடுமாறி சொல்ல,

 

நிலாவுக்கு அதை கேட்டதும்  மூச்சே நின்று விடுவது போல் இருந்தது.

 

‘நிலா நிலா’, என தமிழ் அவளை பிடித்து அசைக்க,

 

‘என்ன தமிழ் சொல்றீங்க. நான் எந்த தப்பு பண்ணி இருந்தாலும் அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை குடுக்காதீங்க ப்ளீஸ்’, என நிலா அழ,

 

‘நிலா தப்பு பண்ணது நீ இல்ல நான் தான். அதனால தான் எனக்கு நானே தண்டனை குடுத்துக்கறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘நீங்க என்ன சொல்றீங்க எனக்கு எதுவுமே புரியல’, என நிலா சொல்ல,

 

‘எனக்காக எது வேனாலும் செய்வேன்னு சொன்னியே அதெல்லாம் அப்ப சும்மா சொன்னியா’, என தமிழ் கேட்க,

 

‘நான் உங்க மேல வச்சிருக்கிற பாசத்த இப்டி தான் நான் உங்களுக்கு நிரூபக்கனும்னு அவசியமே இல்ல ‘, என நிலா சொல்ல,

 

‘நிலா உன் கிட்ட நான் கெஞ்சி கேக்கறேன். என்னை விட்டு போயிரு. என் வாழ்க்கைய விட்டு நீ போயிரு’, என தமிழ் அழ

 

நிலா தன் மனதை கல்லாக்கி கொண்டு, ‘சரி அது தான் உங்களுக்கு வேனும்னா நான் செய்யறேன். ஆனா எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. ஆனா எப்பவும் போல நீங்க எங்கிட்ட பேசனும், நடந்துக்கனும் நான் உங்கள விட்டு போனதுக்கு பிறகு கூட. இதுக்கு நீங்க ஓகே சொன்னா நான் நீங்க சொன்னத செய்யறேன். ஆனா ஆன்டி, அங்கிள் கிட்ட நான் எப்பவும் பேசி கிட்டு தான் இருப்பேன். நீங்க அவங்கள என்ன வேனா சொல்லி சமாளிச்சுக்குங்க’, என நிலா சொல்ல,

 

‘ம் ஓகே நான் பாத்துக்கறேன்’, என தமிழ் சொல்ல,

 

நிலா அதற்கு பிறகு எதுவும் பேசாமல் லைட்டை ஆஃப் பண்ணி விட்டு படுக்க தமிழும் படுத்தான்.

 

நிலாவின் தலையணை அழுது அழுது நனைந்தது.

 

‘சாரி நிலா நான் பண்றது உன் நல்லதுக்கு தான். என்னை மன்னிச்சிடு’, என தமிழ் தனக்குள் சொல்லிக் கொண்டு அவனும் அழுதான்.

 

காலையில் இருவரும் எழுந்து கிளம்பி கீழே வர அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

‘தமிழ் போலாமா’, என நிலா கேட்க,

 

‘இல்ல நிலா’, என தமிழ் இழுக்க,

 

‘என்ன நேத்து சொன்னத மறந்துட்டீங்களா. வேல முடிஞ்சிருச்சு நாளைல இருந்து நாம ரெண்டு பேரும் ஒன்னா போலாம்னு சொன்னீங்க’, என நிலா சொல்ல,

 

‘ஆமா நிலா மறந்துட்டேன். ஒன்னா தான ஓ போலாமே’, என தமிழ் சொல்ல,

 

‘சரி ஆன்டி அங்கிள் பாய் நாங்க போய்ட்டு வறோம்’, என சொல்லி விட்டு நிலா கிளம்ப இருவரும் ஆபிஸ்க்கு சென்றனர்.

 

நிலா ஏதோ ஒன்றை பேசி கொண்டே வர தமிழும் வேறு வழி இல்லாமல் பேசி கொண்டே வந்தான்.

 

ஆபிஸில் எப்போதும் போல் நந்தினியும் நிலாவும் பேசிக் கொண்டே வேலை பார்த்தனர்.

 

‘நிலா என்னாச்சு ஏன் டல்லா இருக்க ‘, என நந்தினி கேட்க,

 

‘அத ஏன் கேக்குற நந்தினி. தமிழ் என் கிட்ட என்னை விட்டு போயிரு ன்னு சொன்னாரு’, என நிலா சொல்லி விட்டு சிரிக்க,

 

‘ஏய் நிலா என்னடி சொல்ற. தமிழ் சாரா அப்டி சொன்னாரு. சரி அதுக்கு நீ என்ன பதில் சொன்ன. இப்ப எதுக்கு சிரிக்கற’, என நந்தினி கேட்க,

 

‘சிரிக்காம அழ சொல்றயா. வேனுங்கற  அளவுக்கு நேத்தே அழுதுட்டேன். இதுக்கு மேல என் கண்ணுல அழ கண்ணீர் இல்ல.’, என நிலா சோகமாக சொல்ல,

 

‘நிலா என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு’, என நந்தினி கேட்க,

 

‘என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க ன்னு கேட்டேன். அதுக்கு அவரு என் மேல உண்மையாவே நீ பாசம் வச்சிருந்தா  என்ன ஏதுன்னு கேக்காம நீ என்ன விட்டு என் வாழ்க்கைய விட்டு போயிருன்னு சொன்னாரு’, என நிலா சொல்ல,

 

‘அதுக்கு நீ என்ன சொன்ன’, என நந்தினி கேட்க,

 

‘இப்டி சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன மாட்டேனா சொல்ல முடியும். சரின்னு சொல்லிட்டேன்’, என நிலா சொல்ல,

 

‘நிலா என்னடி சொல்ற உன்னால அது முடியுமா. தமிழ் மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும்’, என நந்தினி சொல்ல,

 

‘ஆமா நந்தினி அவரு மேல உசரையே வச்சிருக்கேன். அதனால தான் அவரு கேட்டத என்னால முடியலைன்னா கூட செய்யறேன்னு சொல்லிட்டேன்’, என நிலா அழ,

 

‘நிலா ப்ளீஸ் அழாத உன் நிலைம எனக்கு புரியுது. ஆனா தமிழ் சார் ஏன் இப்டி சொல்றாருன்னு தான் எனக்கு புரியல’, என நந்தினி சொல்ல,

 

‘எனக்கே ஒன்னும் புரியல நந்தினி. எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது. ‘, என நிலா கேட்க,

 

‘சரி தைரியமா இரு. என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்’, என நந்தினி நிலாவை சமாதானம் செய்தாள்.

 

தமிழை விட்டு நிலா பிரிவாளா?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!