Skip to content
Post Views: 4,686
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் 6
Advertisement
Advertisement
திருச்செல்வன் ” கோமதியை அழைத்து கொண்டு இருந்தார்.”
Advertisement
சமையல் அறையில் இருந்து வந்தவர் என்னங்க. ” பத்து நிமிசம் சாப்பாடு ரெடியாகிரும்.
Advertisement
கோமதி , சமையல பத்தி கேட்கல, இங்கே வா , திருச்செல்வன் பக்கத்தில் அமர்ந்து சொல்லுங்க.
” நம்ம ஜோசியர் கல்யாணத்துக்கு, நாள் குறிச்சு குடுத்தது வர்ர ஞாயிறு போய், அடுத்த ஞாயிற்றுக் கிழமை தான். நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறோம்.
நிறைய வேலை இருக்கு கோமு.பத்திரிக்கை நாளைக்கு வந்துரும்.
முதல்ல நம்ம குலதெய்வம் கோயில் போய் பத்திரிக்கை வச்சுட்டு வந்துருலாம்.
திருச்செல்வன். ” மகிழ் வதனி எங்கே”?
” அவளுக்கு ஈவ்னிங் தான் வேலை 10.30 11 மணிக்கு வந்துருவா.”
” சரி மகிழ் கிட்ட போன் போட்டு வேலையை ரிசைன் பண்ணச் சொல்லிரு. உடனே போன் பண்ணி சொல்லு . எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு பொய்யிட்டு வந்துருறேன்.”
கோமதி மகிழ்வதனியை போனில் அழைத்து” வேலையை ரிசைன் பண்ணிரும்மா. அப்பா சொன்னார் இன்னும் (10) பத்து நாள்ல உனக்கு கல்யாணம்”, என்று கூற.
அம்மா ” எனக்கு 10 நாளெல்லாம் பத்தாது. ஒரு மாதமாவது வேணும். இன்னும் நான் சாப்பிங் போகல , புடவை செலக்ட் பண்ணல, மேக்கப் பாங்கனும், எனக்கு 10 டேஸ் எல்லாம் பத்தாது.
மகிழ், ” உங்க அப்பா சொல்லிட்டார் மாத்த முடியாதுமா , வேலையை சீக்கிரம் விட்டுட்டு உனக்கு வேண்டியதை பாருமா.”
சரியா, நான் போன் வைக்கிறேன்.
மகிழ் பக்கத்தில் இருந்த ஒரு தோழி ” என்ன மகிழ்? பெரிய யோசனையா இருக்க.”
எனக்கு இன்னும் 10 டேஸ்ல கல்யாணம்.
“ஏய் ! என்ன சொல்லுற கன்கிராட்ஸ் பா. என்ன பா திடிர்ன்னு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. சொந்த. பையன்னா.?”
ஆமா! பா.
அப்பெண் மகிழ்லிடம் ” சரி வேலையை ரிசைன் பண்ண போறியா? இல்லை கண்டின்யு பண்ண போறியா.?
” இல்லப்பா ரிசைன் பண்ண தான் டைப் பண்ணிட்டு இருக்கேன். இதோ அனுப்பியாச்சு.”
சரிப்பா உன் கல்யாணம் நடக்க போகுது. வா நம்ம கேன்டீன் போய் பேசிட்டு வரலாம்.
இருவரும் கேன்டீன் சென்ற , சிறிது நேரம் பேசிவிட்டு , காபி குடித்துவிட்டு வர.
அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் வந்து. “மகிழ் உங்களை எம். டி . சார் ருமுக்கு வர சொன்னார்.”
டைம் பார்த்தவள் , அவள் கிளம்பும் நேரம் ஆவதைக் கண்டு. அவள் தோழியிடம் சாரை பார்த்துட்டு வந்துருவேன், எனக்கு வைட் பண்ணு என்று கூறிச் சொல்ல.
எம் , டி , யின் ரூம் கதவை தட்டி விட்டு, சார் ” மே ஐ கம் இன் ” ?
எஸ் , கம், இன் என்று சொல்ல.
உள்ளே நுழைந்தாள் மகிழ்வதனி.
ஜெகன் தன் தலையை பிடித்த படியே சேரில் அமர்ந்து இருந்தான்.
மகிழ் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தவன். ” வாங்க மகிழ் ஏன் வேலையை ரிசைன் பண்ண மெய்ல் அனுப்பி இருக்கீங்க? என்ன விசயம்? “
சார் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்க அதான்.
ஓகே …. எப்போ ரிலீவ் ஆகுறீங்க என்றான்.
மகிழ்லோ நீங்க நாளைக்கே சொன்னாலும். ஓகே தான் சார்.
என்ன திடிர்ன்னு. மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க.
அதுவ! சார் சொந்த அத்தை பையன், அதனால் சீக்கீரம் முடிவு பண்ணிட்டாங்க.
“ஓ…… உன்னை மாதிரி அழகான , அறிவான , பாக்க கண்ணுக்கு லட்சணமான, பொண்ணு எல்லாம், அத்த பையன், மாமா பையன், கட்டிக்கிட்டு போய்ட்டா . நாங்க என்ன பண்றது. காசி , ராமேஸ்வரம் , போய் சன்னியாசி ஆக சொல்லுறீயா.”
“நான் உன்ன 6 மாசம நெனச்சு உருகிட்டு இருக்கேன். என்ன பாத்த கேனன்னு நெனச்சியா? என்று கத்தியவன். அவன் டேபல் மேல் இருந்த பேபர் வைய்டை தூக்கி எரிந்து இருந்தான். கண்ணாடி கதவின் மீது.
கீரிச் , கீரிச், என்ற சத்தம் காதை பிளந்தது.
சொல்லு டீ , என்னைப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது. என்று அவள் அருகில் வந்து அவளை உலுக்கி இருந்தான்.
அவளோ கண்ணாடி உடைந்த சத்தம் தாங்காமல் கையை வைத்து காதை மூடி இருக்க.
நிமிர்ந்து அவனை பார்த்தவள். தன் முன் ருத்ரமூர்த்தியாய் நின்றவனைப் பார்த்து பயம் கொண்டு, சாரி சார் எனக்கு தெரியாது.
என்ன தெரியாது?
நீங்க என்னை விரும்பியது தெரியாது.
ஓ….. உனக்கு என்ன தான் தெரியும் ? அம்மா சொன்னாங்க, அப்பா கேட்டார், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல தான் தெரியும்.
” நான் சொல்லுறதா நீ கேளு வீட்டுக்குப் போய் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லு.”
ஏன்னு கேட்ட, ” எனக்கு ஜெகன் சார்தான் பிடிச்சுருக்கு, அவரத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுற.”
மகிழ்வதனி முடியாது என்று தலையை ஆட்ட.
என்ன. … டி? தலையை ஆட்டுற, கழுத்தை நெறுச்சிப் புடுவேன் சாக்கிரதை.
உன்ன யாருக்கோ விட்டுக் குடுப்பேன்னு நெனச்சியா? நெவர், உன்னை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது.
சொன்னத செய்.
மகிழ் தைரியத்தை வர வைத்து கொண்டு அவனிடம் ஒரு பொண்ண விரும்புனா, அவ கிட்ட போய் முதல்ல சொல்லனும், அத விட்டுட்டு அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவு ஆனதும் சொல்லக்கூடாது.
என்ன? விரும்புன உடனே சொல்லனுமா? சொல்லிட்டா போச்சு என்றவன். அவள் முன் மண்டியிட்டு, அவன் டேபில் மேல் இருந்த பூங்கொத்தை எடுத்து அவளிடம் ” நான் உன்னை விரும்புறேன் , ஐ லவ் யு மகிழ் என்று சொல்ல…
சார்!
சாரி சார், இப்படி எல்லாம் பண்ணாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு. நான் போறேன் என்று எலுந்தவளை.
ஏய் நில்லுடி, போன அவ்வளவு தான் பதில் சொல்லிட்டு. போ.
என்ன பதில் சொல்ல?
என்னை புடிச்சுருக்குன்னு.
சார்! நீங்க யாரு சார்? உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்லனும், வேலை பத்தி என்ன வேணுமுன்னாலும் கேளுங்க பதில் சொல்லுறேன். இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் வீட்டுங்குப் போறேன் டைம் ஆச்சு.
வெளியே செல்ல போனவளை. பிடித்து தூக்கி தன்னுடன் மடியில் வைத்து கொண்டான் ஜெகன்.
அவள், அவனிடமிருந்து விடு படப் போராட.
மகிழ் சொன்ன கேளு, நான் சொல்லுறத கேட்டுட்டு போ.
அவளோ , அவனின் கையிலும், காலிலும், அவளின் கைக்கொண்டு , என்னை விடு, விடு, என்று அடிக்க.
நல்லா அடி . என்ன அடிச்சாலும் எனக்கு வலிக்காது என்று கூறிச்சிரிக்க.
நீ எல்லாம் ஒரு மனுஷன, இன்னும் 10 நாள்ல எனக்கு கல்யாணம், என்ன இப்படி பண்ணுறியே? என்று புலம்பியபடி , அவனிடம் இருந்து வெளி வர போராட.
அவனோ, ” நீ நான் சொல்லுறத அமைதியா கேளு, உன்னை விட்டுறேன், இல்ல நான் இப்படித்தான் ஆர்ப்பாட்டம் பண்ணுவேணு சொன்னா. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நல்லா தான் இருக்கு உன்னை மடியில் வைத்து இருப்பது” என்று சொல்லி சிரிக்க.
அவளோ , அவன் என்ன சொன்னாலும் சரியின்னு செல்லிட்டு, இங்கே இருந்து போனா போதும் என்று நினைத்து. அவனிடம் சரி , “நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். என்னை விடுங்க”. என்று சொன்னவுடன்.
அவனின் மடிமீது அமர்ந்து இருந்தவளை. பக்கத்தில் உள்ள சேரில் உங்கார வைத்து விட்டு.
” நான் சொல்லுறத கேளு.” என்றவன்.
அவள் கையை, தன் கையுடன் சேர்த்து பிடித்துக் கொண்டு, அமைதியாக இரு நிமிடம் இருந்தான்.
மூச்சை நன்றாக இரத்த விட்டு. எப்படி சொன்னா உனக்கு புரியும்.என்ன சொல்ல, என்று புலம்பிய படியே.
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மகிழ். உன்னை நான் நல்ல பாத்துப்பேன்.என்னை நீ கல்யாணம் பண்ணிக்கோ, என்னால உன்னை விட முடியாது டா.
உன்னை முதல்ல பார்த்தப்பா எந்த பிலிங்ஸ்சும் எனக்கு இல்லை.
நம்ம கம்பெனியில் போன வருஷம். பொங்கல் பண்டிகை கொண்டாடுனும்முல அப்போ, உன்னைப் பார்த்தேன், வைலட் கலர் புடவை கட்டி இருந்த, பாக்க ரொம்ப அழகா இருந்த, பொங்க வைக்க எல்பு பண்ண , சின்ன சின்ன வேலை பார்த்துட்டு இருந்த.
நான் உன்னை மட்டும் தான் பார்த்துட்டே இருந்தேன்.
என்னால என் கண்ணை கன்ரோல் பண்ண முடியல. என் கண் உன்னை மட்டும் தான். பார்த்துட்டு இருந்தது.
அப்போ எனக்கு ஒன்னு புரிஞ்சது. நான் தேடிக்கொண்டு இருப்பவள் இவள் தான்னு…
என் மனம் ,என்கிட்ட சொல்லுச்சு.
ஒரு நிமிசம் என்றவன், அவன் கப்போர்டைத்திறந்து, அவளை பொங்கல் தினத்தன்று பிடித்த போட்டோவை ,அவளிடம் காண்பிக்க. அந்த கவர்
முழுவதும் அவளின் புகைப்படங்கள் இருந்தது.
அதைப்பார்த்து அதிர்ந்தாள் மகிழ். இதை எல்லாம் எப்படி போட்டோ பிடித்தார்கள், என்று நினைக்க.
ஜெகன் மீண்டும் ஒரு பெரிய கவரை காண்பிக்க அதிலும் அவளின் வித விதமான புகைப்படங்கள் அதையும் பார்த்தவள். என் அனுமதியில்லாமல் ஏன் என்னை போட்டோ எடுத்தீங்க? என்று கூறி போட்டோவை கிளிக்க.
அதை அவளிடம் இருந்து பிடுங்கியவன். கப்போர்டில் போட்டோ கவரை வைத்து பூட்ட.
மகிழ் வதனிக்கு கோபம் எல்லை கடந்தது. என் போட்டோவை என்கிட்ட குடுக்க என்று கபோர்டைத் திறக்க முயல.
ஜெகன் அவை எல்லாம், என்னோட பொக்கிஷம், நான் யாருக்கும் தரமாட்டேன்.
பொக்கிஷம் , எது பொக்கிஷம்? என் போட்டோவா? உங்களுக்கு பொக்கிஷமா? அதை முதலில் என்கிட்ட குடுங்க, அதை எரிக்கனும் இல்ல கிழிக்கனும். என் போட்டோ உங்க கிட்ட இருக்கக் கூடாது , அது தப்பு.
ஓ! இருக்கக் கூடாதா? உன் போட்டோ என்கிட்ட இருக்கக் கூடாது. அது தானே சரி என்றவன். எல்லா போட்டோவையும் அவளிடம் தர.
அவளோ, வெறி வந்தவள் போல, ஒன்னு, ஒன்னாக கிளிக்க. அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. மனதில் பாரம் கூடிக்கொண்டே போக.
அந்த போட்டோக்கள் எல்லாம் அவள் கடந்த ஆறு மாதங்களாக, ஆபிஸ்க்கு , போட்டு வந்த உடைகளில் இருக்க. அவளுக்கு அது தெரிய, என்ன மாதிரியான, உணர்வு என்றே இவளால் சொல்ல முடியவில்லை.
பொங்கல் மறுநாள் இருந்து நேற்று வரையில் ஆன புகைப்படங்கள், எல்லாத்தையும் கி்ழித்து முடித்தவள். நிமிர்ந்து ஜெகனைப் பார்த்து என்னை மறந்து விடுங்கள் சார்.
நான் ஏதாவது உங்களை, எனக்கு தெரியாமா , தொந்தரவு பண்ணி இருந்தா சாரி, என்று சொல்லி கிளம்ப தயார் ஆக.
ஒரு நிமிசம் என்ற ஜெகன், இதையும் கிழிச்சிட்டு இல்ல எரிச்சிட்டு போ என்றவன். அவனின் சட்டை பட்டனை கழட்டி இடது மார்பை காட்ட அதில் மகிழ்வதனியின் முகம் அழகாக டாட்டு வரைந்து இருக்க.
என் பக்கத்தில் வா, நீ தான சொன்ன உன் நினைவா என்க்கிட்டே எதுவும் இருக்க கூடாதுன்னு. வா , மா மகிழ்வதனா வந்து இத அழிச்சிட்டு போ என்று சொல்லி அவனின் மார்பைக் காட்ட.
ஆடித்தான் போனாள் மகிழ்வதனி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவனுக்கு என்ன பைத்தியமா? இவன் இப்படி செய்யுவான் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. என் மீது இவ்வளவு காதல முன்பே சொல்லி இருக்கலாம். இன்னும் என்ன செய்ய போறானோ. என்னை பைத்தியம் பிடிக்க வைக்கப்போறான். மெதுவாக ஜெகன் அருகில் வந்தவள் அவனது மார்பில் இருந்த அந்த டாட்டுவை பார்த்து. தன் கைக்கொண்டு அதை அழுத்தி தொடக்க. அது அழியாமல் இருக்க.
ஜெகன், மகிழ்வதனியிடம் என்ன மார்கர் வைத்து எழுதி இருக்காணு பாத்தியா. நீ ஒன்னும் கஷ்ட பட வேண்டாம் இரு என்றவன்.
அவன் கபோர்டை திறந்து ஒரு கத்தியை எடுத்து குத்தி பாரு மகிழ் என்று கத்தியை அவளின் கையில் குடுக்க.
அதை தூக்கிப் போட்டவள். கீழே மடிந்து உங்கார்ந்து, கத்தி அழ ஆரம்பித்தாள். ஏன் சார் என் முகத்தை டாட்டு போட்டிங்க. என்று அவள் அழுவதை பார்க்க முடிவில்லை ஜெகனால்.
சாரி மகிழ் உன்னை ரொம்ப கஷ்ட படுத்துறேன்.” நான் உன்னை லவ் பண்ண நினைக்கல, மேரேஜ் பண்ண தான் நெனச்சேன் அதுக்கு தான். உங்க வீட்டுக்கு என் பெற்றொரை அனுப்பினேன். எல்லாம் தப்ப போச்சு. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன். முடிவு உன் கையில் . நீ கிளம்பு நேரம் ஆச்சு”.
ஜெகன் ஒரு தண்ணீர் கேனை எடுத்து அவளிடம் நீட்டி குடி என்று சொல்ல அதை வாங்கி குடித்தவள்.
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து. எழுந்து கதவில் பக்கத்தில் போக .
ஏதாவது சொல்லிட்டு போ மகிழ் என்று ஜெகனின் குறல் கேட்க.
என்ன சொல்ல, என்னால் ஒன்னும் சொல்ல முடியாது என்று அமைதியாக இருக்க.
உன்னை மறக்குர , மாதிரி என்னை ஏதாவது திட்டிட்டு போ. அப்போவாவது உன்னை நினைக்காமல் இருக்க டிறை பண்ணுறேன். சொல்லு மகிழ் என்று அவன் அவளிடம் அருகில் சொல்ல மகிழ்வதனியின் கை நடுங்குவதை பார்த்தவன் என்ன மகிழ் என்ன ஆச்சு மா, சாரி மகிழ் , என்ன பண்ணுது , அவள் முகத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று கேட்க . மயங்கி இருந்தாள் மகிழ்வதனி….
error: Content is protected !!