Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

உறவாக  அல்ல  உயிராக 7

உறவாக  அல்ல  உயிராக

   அத்தியாயம்    7



Advertisement

    அந்த  பெரிய ஹாஸ்பெட்டல்  வரண்டாவில்  அமர்ந்து  இருந்தான்  ஜெகன்.

Advertisement

Advertisement

  டாக்டர்   சொல்லியதை   அவனால்  நம்ப  முடிய  வில்லை.

  மகிழ்வதனிக்கு  சிறுவயதிலிருந்தே  ஹார்ட்  ப்பிராப்லம்  இருக்கு.  அவங்க   அதிகமா   கோபபட்டாலோ , அழுதாலோ  இல்லை  ரொம்ப  ஏமோஸ்னல் ,   ஆனாலோ  மயக்கம்  வந்துரும்,  மத்தபடி  ஒன்னும் பிரச்சனை  இல்லை,  மெடிசன்  தரேன் போதும் என்றார்  மருத்துவர்.

Advertisement

  நீங்க  ஒரு   அரை  மணி நேரம்  கழிச்சு  அவங்களை  ஹாஸ்பெட்டலிருந்து  கூட்டிட்டு  போகலாம்.

   ஜெகனுக்கோ  தன்னால் தான் , மகிழ்லுக்கு  இப்படி  என்றவன். அவளிடம்  எதுவும்  இனி   கூறக்கூடாது  என்று  முடிவு  எடுத்தவன்,  அவளை  அழைத்துக்  கொண்டு  அவளின்  வீட்டில்  விட.

   ஜெகனோ,  மகிழ்வதனியை  நிமிர்ந்து  கூடப்  பார்க்கவில்லை. அவளிடம்   மாத்திரையைக்  குடுத்தவன்.  மாத்திரை  சரியா  சாப்பிடு,  வேலைக்கு  வர  வேண்டாம்.  நான்   பாத்துக்கிறேன்.  இமெயில்  அனுப்புகிறேன்.  ஒரு நாள்  மட்டும் ஆபீஸ்  வந்து  சைன்   பண்ணிட்டு  போ  என்று  காரின்  கதவைத்  திறக்க.

  மகிழ்வதனி  ஜெகன்  முகத்தைத்  தான்  பார்த்துக்  கொண்டு   இருந்தாள்.

 ஜெகனோ  இனிமேல்  தன்னால்   இவளுக்கு  எதுவும்  ஆகக்கூடாது  என்று  முடிவு  எடுத்தவன்.  அவள்  முகத்தைப் பார்க்க  கூடவில்லை.

  மகிழ்   காரிலிருந்து   இறங்காமல்   இருக்க.  அவள்  முகத்தை ஒரு  நிமிடம்  பார்த்தவன்.

    அவள்  தன்னைப்   பார்ப்பதைப் பார்த்து,” என்ன  மகிழ்  உங்க  அம்மா   போன்  போட்டுட்டே  இருக்காங்க  கிளம்புமா.” என்று  கூற.

  அவளோ,  ஜெகன்  முகத்தை  மட்டும்  பார்க்க.

  அவனோ , அவள்  பார்ப்பதை  தவிர்க்க  எண்ணி.  நீ  கிளம்பு  என்று  கூறி  காரின்  ஜன்னல்  ஓரம்  திரும்பிக்  கொள்ள.

   மகிழ்வதனி, ” நான்   போகட்டுமா?   என்று  கேட்க.

   இம், போ  என்றானே தவிர   திரும்பி  பார்க்க வில்லை.

  ‘ஜெகன் ‘   என்றாள்  கலங்கிய  குரலில்.

  சட்டென   அவளைப்  பார்த்தவன்,  மீண்டும்  சன்னல் புரம்  திரும்பி,   “நீ  கிளம்பு  மகிழ்”  என்றான்.

  மகிழ்லோ, ” நான்  இப்போ   போனால்   திரும்பி  வரமாட்டேன்   பரவாயில்லையா?”  என்று    சொல்லி  முடிக்குமுன்.

   அவளைப்  பாய்ந்து  வந்து  அணைத்து  இருந்தான்  ஜெகன். அவளை   அணைத்துக்  கொண்டே  மகிழ்,  மகிழ்   என்றானே  தவிர  வேறு. வார்த்தைகள்  வரவில்லை.

   அவள்  முகம் முழுவதும்  முத்தமிட்டவன்.” சாரி  , சாரிமா”  என்று விலக.

  அவனைப்  பார்த்து  முறைத்தவள்,  ” உங்க  போன்  நம்பர்  கொடுங்க”,  என்றாள்.

‘எதற்கு’  என்று  அவளைப்பார்க்க.

  ” போன்  நம்பர்”,  என்றாள்  மறுபடியும்.

 ஜெகன்  அவனின்  நம்பரைச்  சொல்ல.

அதை  பதிவு  செய்தவள் , அந்த  எண்ணிற்கு  பிரகாதீஸ்வரனின்  நம்பரை   அனுப்பியவள் ,  சரி  நான் வர்ரேன். என்று கிளம்ப.

  ஜெகன்,  “இது  யாருடையா  நம்பர்?”  என்றான்.

   இதுவா “இது   என் அத்தை  பையன்   பிரகாதீஸ்வரனுடைய  நம்பர்.”

  ” இந்த   நம்பர்  எனக்கு  எதற்கு ?”  என்றான்   ஜெகன்.

  ஓ…. என்றவள்,  என்  அம்மா , அப்பா   கிட்ட  என்னால  கல்யாணத்த பத்தி  பேச  முடியாது. நீங்க தான், என் அத்தான்  பிரகாதீஸ்வரன் கிட்ட பேசனும்.

  என்ன பேசனும்?

  அவனைப்  பார்த்து  முறைத்தவள்,  அவன்  ஏதோ  குழப்பத்தில்  இருக்கிறான்.  என்று  நினைத்தவள்.

அவனைப் பார்த்து  சிரித்து.

  ” உங்களுக்கு  இந்த  மகிழ்ழ  கல்யாணம்  பண்ண  வேணுமா?  வேண்டாமா? என்றாள்.

  அவனோ  என்ன   சொல்லுறா   இவ   என்று   கேட்டு  கொண்டு  ஏய்  மகிழ் !   என்றான்   சந்தோஷக் குரலில்.

  மகிழ்  ஜெகனிடம் ” நான்  இந்த  கல்யாணத்தை  நிறுத்த  மாட்டேன.”  நீங்க  தான்  எதாவது  செய்யனும்.

    அப்பொழுது தான்  அவள்  சொல்லியதை   புரிந்து  கொண்டவன்.  மகிழ்!  “உண்மையா?  சொல்லுறியா?  என்னை  உனக்கு   பிடிச்சு  இருக்கா?.”

   இப்போ  கேழுங்க!  இவ்வளவு  நேரம்   நான்   என்ன  சொல்லிட்டு இருக்கேன்.

   “சாரிடா ,  சாரி    நான்  ஏதோ  நினைப்புல   இருந்துட்டேன்,  நீ   கவலைப்  படாத  நான்   பார்த்துக்கிறேன்.  உன்  அத்தை  பையன்  பேர்  என்ன   சொன்ன?  பிரகாதீஸ்வரன்”   என்று  தனது  போனில்  சேவ்   செய்தவன்.

   அவளின்  கையைப்  பிடித்துக்கொண்டு   தாங்க்  யூ. மகிழ்   என்று  சொன்னான்.

  ஒன்னும்  வேண்டாம்  என்று  கையை  இழுக்க  ” நீ   இப்போ  உன்  கையை  குடுக்கிறீயா  இல்லை, உன்னை   தூக்கி,”  என்று  சொல்ல.

  வேண்டாம் ?  என்றவள்  அவனிடம்  தன்  கையை    நீட்ட.

 இரு   கைகளையும். தன்  கன்னங்களில்  வைத்து  கொண்டவன்.  அந்த   கைகளுக்கு முத்தம்   கொடுத்து விட்டு. ” நான்   பார்த்துக்கிறேன்,  நீ  தைரியமா  இரு,  உடம்ப  பாத்துக்கோ, இப்போ  தான்  மயக்கம்  வந்த  சரியாகி  இருக்கு”.

 “இந்த   கல்யாணத்தை  நிறுத்தர , பாடு  என்னுடையது.  நீ. வீட்டுக்கு  போய்  தூங்குமா.

  மகிழ்  ஒரு  அழகான  புன்னகையைச்  சிந்தியவள்  ஜெகனிடம்   இருந்து   விடைப்பெற்றுச்  சென்றாள்.  வீட்டின்  ஹாலில்  உள்ள  சோபாவில்  தூங்கிக்  கொண்டு  இருந்தார்  கோமதி.

 மகளை பார்த்து  ஏன்டி  இவ்வளவு நேரம்.?

   மகிழோ  ” என்னுடைய   வேலையை  முடிச்சுக்  குடுத்துட்டு வந்துட்டேன்மா.  இனிமேல்   வேலைக்குப்  போக  வேண்டாம்”.

   “சரி !  நீ  போய்  தூங்கு,  காலையில்  நானும்   அப்பாவும்  குலதெய்வம்   கோயிலுங்குப்  போறோம். ”  உனக்கு  கல்யாணத்துக்கு  தேவையானதை பாரு  சரியா. பத்துரமா  இருமா  நைட்டு   வந்துருவோம் “

 சரிமா.

  நாட்கள்  வேகமாகச்  சொல்ல.

   கல்யாணத்துக்கு  மூன்று  நாட்களே  இருக்க  மகிழுக்கு  பயம்  வர  ஆரம்பித்தது.  இந்த ஜெகன்  என்ன  பண்ணுறார்  என்று  நினைத்தவள்.  ஜெகனை  போனில்  அழைக்க.

  அவனோ  போனை  எடுத்து,   “என்ன  மகிழ்  எனக்கு  போன்  பண்ண  இவ்வளவு  நாளா உனக்கு.”

  ஹலோ!  ஏன்  நீங்க  போன்  பண்ண  வேண்டியது  தானே.

   ஹலோ  மேடம், ” கல்யாணப்  பொண்ணு  ரொம்ப  பிசியா  இருப்பேன்னு  நினைச்சேன்”.

  என்ன  கிண்டலா?

  ” ஆமா  கிண்டல்  தான் என்  பொண்டாட்டியை  நான்  கிண்டல் பண்ணாம  யாரு  பண்ணுவா?”

  சொல்லுறது  எல்லாம்  நல்லா  தான்  இருக்கு.  அதுக்கான  வேலையை  பார்த்திங்களா?

   நீ  வேற , ” உன்  அத்த  பையன்  போனை  எடுக்க  மாட்டுறான்.”  முந்தா  நேத்து  தான்  போனை  எடுத்தான்.  அந்த   பிரகாதீஸ்வரன்,  அவன்  கிட்ட  நம்மல  பத்தி   சொன்னா  ஓ.. அப்படியான்னு  கேட்டு  போனை  வச்சுட்டான்.  மறுபடியும்  போன் போட்ட ,  ”  என்  மகிழ்  பத்தி  எனக்கு  தெரியும்  போனை  வைடா  என்று  திட்டிட்டான். ரொம்ப   நல்லவனா இருக்கான்.  நான்  என்ன  செய்ய?   நீயே  சொல்லு  மகிழ்.”

   உங்க  வீட்டுக்கு  வந்து  பேசவா? இல்ல  கிளம்பி  வர்றீயா  எதுனாலும்  எனக்கு  ஓகே  தான்.

 நீங்க  சொல்லியும்  அத்தான்  நம்பலியா?

 ” ஆமா!  என்ன செய்ய?   நீயே  சொல்லு  மகிழ்.”

  நானா?  என்றவள்,  ” தன்  தந்தை  தாயிடம்  தன்னால்  சொல்ல  முடியுமா?  என்று  நினைத்தவள்  அது  மட்டும்  என்னால்  முடியாது.”

 பிரகாதீஸ்வரன்  கிட்ட  தான்  சொல்ல  வேண்டும்  என்று  நினைத்தவள்.  நாளை   அத்தானை  பார்த்து  நேரில்  சொல்ல  வேண்டும்  என்று  நினைத்து.

 ஜெகனிடம்,” நான்  அத்தான் கிட்ட  பேசறேன். நீங்க  கொஞ்சம்  வைட்  பண்ணுங்கோ”.  ” அப்படி   எதுவும்  சரி  வல்லன்னா. நான்  கிளம்பி  வர்ரேன்.  நம்ம  மேரேஜ்  பண்ணிக்கலாம்.”

   ” சரி  மகிழ்,   நான்  வைட்  பண்ணுறேன். நீ  எது  சொன்னாலும் ஓகே  தான். ரொம்ப  ஸ்டைன்  பண்ணிங்காதமா.”

எதுவனாலும்  பார்த்துக்கலாம்.

 கல்யாண வீடு  பரபரப்பாய்  இருந்தது.   வருபவரை  கவனிக்கவே  கோமதிக்கு  நேரம்  சரியாக  இருந்தது.

  வெளிவேலைகளை   திருச்செல்வம்  பார்த்துக் கொண்டார்.

  நிர்மலாவை  நேற்றே  வரச்  சொல்ல.  அவரோ  ” இல்லை   அண்ணா  கல்யாணத்துக்கு  இரண்டு  நாள்  முன்பு  வீட்டுக்கு  வர்ரோம்”  சரிமா   உன்  இஷ்டப்படி  யே  வா  என்றார்  திருச்செல்வன்.

   மறுநாள்  காலையில்   முகூர்த்த  கால்  நட்டினார்கள்  திருச்செல்வன் வீட்டில்.

  நிர்மலாவும்  அவர்கள்  வீட்டிலும்  முகூர்த்த  கால்  நட்டி விட்டு. மத்தியானம்  விமானத்தில்  கிளம்பி  சென்னை வர.

  திருச்செல்வனுக்கு , தங்கையையும்   விமல்ராஜை  பார்த்து  சந்தோஷமாக  இருக்க,    “மாப்பிள்ளை பிரகாதீஸ்வரன் வர  வில்லை”  என்று  எல்லோரும்  கேட்க  நாளை  நண்பர்களோடு  வருவதாகச் சொல்ல.

  மகிழ்  பிரகாதீஸ்வரனை  எதிர்பார்தது  காத்து   இருக்க. அவன்  வரவில்லை  என்ற  தெரிந்து கொண்டவள்.  நாளை  மண்டபத்தில்  பிரகா  அத்தான்  கிட்ட  எல்லாத்தையும்  சொல்லிடனும்  என்று  நினைத்துக்  கொண்டு இருக்க.

  மகிழ்வதனிக்கு  நேரமே   போதவில்லை  உறவுகள்  வந்து போக    இருக்க.  அழகுகலை  நிபுணர்கள்   வீட்டிற்கே  வந்து.  அவளுக்கு  வேண்டியவைச் செய்ய   நேரங்கள் வேகமாகச்  செல்ல.

******

   தன்  பேத்தி  இனியாவை. முறைத்த படியே  இருந்தார்   மீனாட்சி.

  ” என்ன  முறைப்பு  கிழவி?   உன்  பேத்தி  கல்யாணத்துக்கு  போகணும்  அவ்வளவு  தானே? “

  கிழவியின்னு  சொன்ன  பாத்துகோ.

  என்ன  பாத்துகோ?   பார்க்குறதுக்கு   கிழவி  மாதிரி  தான்   இருக்க  நீ  என்ன   குமரியா?

  ஏய்  நான்  எப்போதும்  யூத்  தாண்டி.

  ஆமாம்   சொன்னாங்க  பி.பி.சி. நீயூஸ்ல.

  ஏய்….

   சும்மா  இரு  மீனுகுட்டி  எல்லா  வேலையை   முடிச்சுட்டு  வர  லேட்டாகிருச்சு.  இப்போ  என்ன   உன்னை  பிளைட்ல  தான்   கூப்பிட்டு  போறேன்.   மத்தியானம்   சென்னை  போயிறலாம் .  போய்  ரூம்முல  ரெஸ்ட்   எடுத்துட்டு  உன்ன  கல்யாண  மண்டபத்துல   விட்டுறேன்.

   அப்போ  நீ?

    நானா !   என்ன  யாரு   கல்யாணத்துக்கு   கூப்பிட்டா?  உன்   மகன்  கூப்பிட்டாரா,  இல்லை  உன்  மருமகளாவது   வரச்   சொன்னாங்கலா?  யாருமில்லை?

  ” ஏன்டி,  உன்  அக்கா  கல்யாணத்துக்கு  யாரு  உன்ன  கூப்பிடனும்?”

  ” அக்காவா  யாரு  அக்கா?   மகிழா!  நீ  வேற  பாட்டி  அவளுக்கு  என்னை  கண்டாவே  பிடிக்காது. நான்  கல்யாணத்துக்கு   வரலன்னா  சந்தோஷப்படுற  முதல்  ஆளு  அவ  தான்,  நான்  வர்றது யாருக்கும்  பிடிக்கல  போல, என்னை  எல்லோரும்  மறந்துட்டாங்க  மீனுக்குட்டி.”

 நீ  போ  உன்ன  தான்  எல்லோரும்   கூப்பிட்டாங்க.

    ஏண்டி  இப்படி  எல்லாம்  பேசுற.  யாரோ  மாதிரி.

  இல்ல  பாட்டி  நான்   சரியா  தான்  பேசுறேன்.” நான்   இங்க  வந்தது  உனக்காகத்  தான்.  உன்னை  தனியா  என்னால  விட  முடியாது.”

  ” அது  இல்லாம  என்  பிரெண்ட். ஜிஜிதாவுக்கு   இன்னைக்கு  தான்  ரிஷப்சன்,  நாளைக்கு  தான்  அவளுக்கும்   கல்யாணம்.”  நான்  உன்ன  விட்டுட்டு  அங்கே   போகனும்.  நைட்டு  வந்து  உன்ன  கூப்பிட்டு  போறேன்.

   மண்டபம்   பக்கத்துல  தான்  ரூம்  போட்டு  இருக்கு.

     மீனாட்சி,  இனியாவைப்  பார்த்து,  ஏன்டி  அப்போ  நீ  கல்யாணத்துக்கு  வர  மாட்டியா.?

  ” வருவேன்,  என்  அத்தை   அவங்க   பையன்  கல்யாணத்துக்கு  என்னை  வர  சொன்னாங்க.  அதுனால  நான்  நாளைக்கு  கல்யாணத்துக்கு வரேன்.  இப்போ  என்னுடைய  பழைய    ஃபிரெண்ட்  எல்லாம். ஜிஜி  கல்யாணத்துக்கு  வர்ராங்க சோ , நான்  ரொம்ப  ஹாபியா இருக்கேன்..”

” நீ  என்ன  நெனச்சு  எதுவும்  வருத்தப்படாத .  நீ. இந்த  கல்யாணத்துக்கு  போக  எவ்வளவு   ஆசைப்பட்டேன்னு  எனக்கு  தெரியும்.”  உன்  பேரன்  பேத்தி  கல்யாணத்தை  என்ஜாய்  பண்ணு.

  ஏர்போர்ட்டில்  இருந்து   வெளியே  வர .” என்ன  பாட்டி  பீச்  போலாமா”?   என்று  இனியா  கேட்க.

  மீனாட்சி  பாட்டியோ  என்னால  முடியலடி.  நேர  ரூம்  போகலாம்  காலெல்லாம்  வலிக்குது.

  இரு   பாட்டி  கார்  எடுத்துட்டு  வந்துறேன்.

  என்ன கார்டி?

 நம்ம கார்தான்.

  இது  எப்போடி  இங்கே   வந்தது.

  ”  நேத்தே குமரன் கிட்ட  சொல்லி  ஏர்போர்ட்டில்  காரை  விடச்  சொல்லிட்டேன்,  பின்ன  உன்ன  வச்சுக் கிட்டு  கார்  புக்  பண்ணி  அங்கே  இங்கே  போக  முடியுமா”? நான்  வேற   ஜிஜி  கல்யாணத்து  போக  வர  இருப்பேன்.  கார்  தான்  வசதி.

  தன்  பேத்தியைப்  பார்த்து.  என்  கண்ணு  என்மேல   எவ்வளவு  அக்கர.

  மெதுவா   வா   பாட்டி.  சென்னை  வெயில்   மண்டையைப்   பிளக்குது.

 ஆமாம் , இங்க  கொஞ்சம்   வெயில்   கூடத்தான்.

  என்ன   பாட்டி   வண்டியை  டி. நகர்  விடவா?

   ஏய்  என்னப்  பார்த்தா  உனக்கு  எப்படி  இருக்கு?

 நான்  சொல்லவா?

 சொல்லு.

  எனக்கு  ஃபிரெண்டு  மாதிரி  இருக்க. சாப்பிட்டுப்  போகலாமா?.

  போகலாம்,  ஆனா  கால்  வலிக்குமே.

  பரவாயில்லை  பாட்டி?  சாயங்காலம்  போய்   சுடு  தண்ணீர்ல  கால  வச்சா  சரியா  போயிடும்.

 சரி,  வேண்டிய  டி.நகர்  நோக்கி  விடு.  வண்டியின்  உள்  மீனாட்சியின்  பேச்சும்   இனியாவின்   சிரிப்பு  சத்தம்  தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!