Skip to content
Post Views: 13,574
“ஷப்பா… இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கே படிப்பு முடிய” என்று மலைப்பாய் நினைத்தான்.
ஆனால் விஷாலினியோ… விஷ்ணுவர்தனை ஆசை தீர ரசித்து, தனியறைக்கு வந்தபின்னே அலங்காரம் களைந்து, இன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு, இன்பக்கனவுகளோடு உறங்கியிருந்தாள்.
அடுத்தநாள் ஆகாய வர்ணப்பட்டில் ஜொலித்தாள் விஷாலினி. கடையில பார்த்ததை விட, இவ கட்டின பின்ன சேரி இன்னும் அழகாயிருக்கே என்று நினைத்திருக்க, மணமேடை ஏறிய விஷாலினி விஷ்ணுவர்தன் அருகே அமர்ந்தாள்.
“அழகான பையன் கிடைச்சிட்டான்ற நிம்மதியில நல்லா தூங்கியிருப்ப போல. எனக்குத்தான் தூக்கமேயில்ல. ஆனாலும் பியூட்டிஸியனை பாராட்டனும்” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
Advertisement
ஓஹ் அப்போ நான் அழகில்லை, பியூட்டிஷியன்தான் என்னை அழகாக்கியிருக்காங்களா? என்று விஷ்ணு நினைப்பை உணர்ந்து, “ஹப்பா… தாலிகட்டப்போகும் போதாவது பேசுனிங்களே” என்றாள் இவளும் நக்கலாக.
“எது?”
“இல்ல… இந்த சினிமால வரமாதிரி ரகசியமா பேசுவிங்க, எல்லாரும் தூங்கின பின்ன என்னைப்பார்க்க வருவிங்கனு என்னென்னவோ நினைச்சேன். ஆனா இது ஏதும் நடக்கல. ரொம்ப வெக்கப்படுவிங்களோனு பயந்துட்டேன்.
Advertisement
ஆனா நான் நினைச்ச அளவுக்கு நீங்க மோசம் இல்ல. இத்தனை பேர் முன்ன தைரியமா பேசிட்டிங்க” என்றாள் பாராட்டாக.
Advertisement
“அடிங்… உன்கிட்ட பேச எனக்கு தைரியம் வேணுமா?” என முறைக்க, ‘இந்த காலத்து பிள்ளைகளுக்கு கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள ப்ராணம் போய்டறது, மாப்பிள்ளை வேறவளா இருந்தா திட்டிடலாம், போலீஸா போய்ட்டாளே’ என மனதில் கடிந்த ஐயர், “சார் இதை ஹோமத்துல போடுங்கோ” என்றார் கோரிக்கையாக.
விஷாலினியை முறைத்தவாறே ஐயர் சொன்னதை செய்தவன், பின்னே மாங்கல்யத்தை கையில் வாங்க, விஷாலினி தலை குனிந்தாள் வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வுகளோடு.
விஷ்ணு மாங்கல்யம் அணிவித்த பின்னே, அட்ஷதையிட்ட ஒவ்வொருவரும் தேவர்களாகவே தெரிந்தனர் மேகலையின் கண்களுக்கு. இப்படி ஊர் பார்க்க… பெரியோர் முன்னிலையில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தால், இரண்டாம் முறையாக தன் கழுத்தில் மாங்கல்யம் கட்ட துணிவு வந்திருக்காது ஜெகதீசனுக்கு. ரகசிய திருமணத்தால் எஞ்சியது ரகசிய ரணங்கள் மட்டுமே.
Advertisement
தன் மகளுக்கு அப்படியல்லாமல் பெரியோர்களின் ஆசியோடு அக்னி சாட்சியாக நடந்த திருமணம் பெருத்த நிம்மதியை கொடுத்திருக்க, மேகலை கண்கள் கலங்கியது ஆனந்தத்தில்.
மகன் திருமணம் இனிதே நடந்து முடிந்த சந்தோசம் இருந்த போதும், மகள் திருமண வாழ்வு எப்பொழுது சரியாகுமோ என்ற தவிப்பிருந்தது பிரபாவதிக்கு.
கோபாலனின் நெகிழ்ந்த முகத்தை பார்த்து மகிழ்ந்த காவ்யா, இப்படித்தானே தன் திருமணத்தை நடத்த யோசித்திருப்பார் தந்தை. யாருமல்லாமல் எப்படி அந்த காரியத்தை செய்தேன்? பெற்றோர் வாழ்வு பூர்த்தியாவது பிள்ளைகளின் சிறந்த வாழ்வில்தானே?
நேற்றிரவிலிருந்து தற்போது வரை தன் வாழ்வைப் பற்றி எத்தனை பேர் கேட்டுவிட்டார்கள்… ஓர்நாள் பதில் சொல்லவே நம்மால் முடியவில்லை. தன்னிடம் மட்டுமல்லாமல் தனது சித்தி சித்தப்பாவிடமும், நீங்களாவது காவ்யாவைப் பத்தி யோசிக்கலாமில்லை? என்பவர்களிடம் சித்தி சித்தப்பா சங்கடத்தோடு பதில்சொன்னதை நினைத்தவளுக்கு, நான்கு வருடம் முன்னே எத்தனை பேரிடம் அவமானம் சுமந்து நின்றிருப்பார்கள்?
இன்றும் கூட விஷ்ணு திருமணம் நடந்த சந்தோசத்தை விட தன் வாழ்வு குறித்த கவலைதான் அன்னை முகத்தில். தன் வாழ்க்கை போனதை விட, தன் வாழ்வு குறித்த பெற்றோர் வேதனையை எப்படி போக்குவது என்ற கவலை பெரிதாய் ஆட்கொண்டது காவ்யாவிற்கு.
இப்படியாக ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர் விஷ்ணுவர்தன் விஷாலினி திருமணத்தில்.
திருமணம் முடிந்து அனைத்து சம்பிரதாயங்களையும் இனிதே முடித்து, ஐயர் கிளம்பிட, பெரியோர்களும் வந்தவர்களை கவனிக்க கிளம்பிட, மணமக்கள் தனித்து நின்றனர் மணமேடையில்.
“தாலி கட்டுற வரைக்கும் வாயடிச்ச, கல்யாணம் முடிஞ்ச பின்ன என்னாச்சு? குனிஞ்ச தலை நிமிரவேயில்ல. கண்ணை துடைச்சிட்டே இருந்த, பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்றான் அதட்டலாக.
ஒன்னுமில்லை என்பதாய் தலையசைத்தாள் விஷாலினி. “ப்ச் என்னைப் பாரு” என்று கட்டளையிட, விஷாலினி விஷ்ணுவைப் பார்க்க, “என்ன?” என்றான் சிறு பதட்டத்தோடு.
“ரொம்ப சந்தோசமா இருக்கு. மனசெல்லாம் என்னவோ பண்ணுது. கண்ல தானா தண்ணி வருது. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல” என்றாள் கலங்கியபடியே.
காவல் துறை அதிகாரிகளில் பலர் குடும்பத்தோடு வந்திருக்க, சொந்தங்கள் சூழ்ந்திருக்க அனைவர் பார்வையும் மணமக்கள் மீதுதான் இருந்தது. இத்தனை பேர் முன்னிலையில் தனியாக அழைத்துச் செல்லவும் முடியாது என்று, “ரூம்க்கு போய் பத்து நிமிஷம் ரெஸ்ட் எடு” என்று கையை பிடித்தவாறு மேடையிலிருந்து கீழிறங்க எத்தனிக்க, கோபாலன் வந்தார் இவர்களிடம்.
“என்னாச்சு விஷ்ணு? எல்லாரும் கிஃப்ட் கொடுக்க வராங்க, இந்த நேரம் ஏன் கீழ இறங்குற?” என்றார் பதட்டத்தோடு.
“இவளை கூட்டிட்டுப் போங்கப்பா, பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுக்கட்டும” என்றான்.
“ஏண்டா? என்னாச்சு?” என்று கோபாலன் விஷாலினியை விசாரிக்க, “ஒன்னுமில்ல மாமா” என்றவள், “இல்ல நான் போகல, இப்போ சரியாகிட்டேன்” என்றாள் விஷ்ணுவிடம்.
“ப்ச் போ” என்று அதட்ட, காரணமில்லாமல் மகன் சொல்லமாட்டான் என்றுணர்ந்து, “வாம்மா” என்று விஷாலினி கையை கோபாலன் பிடித்ததும் கையை உருவியவள், “இல்லமாமா, எனக்கு ஒன்னுமில்ல. இவரோட இங்கையே இருக்கேன்” என்றாள் புன்னகையோடு.
இவர்களைப் பார்த்திருந்த காவ்யா அருகே வந்து, “என்னாச்சு விஷாலினி? ஏன் கண்ணு சிவந்திருக்கு? விஷ்ணு திட்டிட்டானா? அவன் திட்டுற அளவுக்கு நீ என்ன செய்த? என்னைப்பத்தி பேசுனியா?” என்று காதோரம் தன் கேள்விகளை அடுக்கினாள் கிசுகிசுப்பாக.
“அதெல்லாம் இல்லைக்கா, சந்தோசத்துலல கண்ல தண்ணி வந்துடுச்சு, என்னவோனு பயந்துட்டார்” என்றாள் இன்முகத்தோடு.
“ஷப்பா… பயந்துட்டேன், இப்போ ஓகேதான?” என்று விசாரித்து நிம்மதிப் பெருமூச்சோடு கீழிறங்கினாள் காவ்யா.
“இங்க பேச முடியாதுனுதான அப்பாவோட போக சொன்னேன்? சொல்ற பேச்சு ஒன்னாவது கேக்குறியா?” என முறைத்தான்.
“எனக்கு ஒன்னுமில்லைங்க, இந்த மொமண்ட்டை என்ஜாய் பண்ணுவோம்” என்றாள் புன்னகையோடு.
விஷாலினியின் அன்னையைப் பார்க்க, அவரும் இயல்போடு பேசிக்கொண்டிருந்தார் அவரின் அண்ணியோடு. மேகலையின் தந்தையும், அண்ணனும் திருமணத்திற்கு வந்திருப்பதை அப்பொழுதுதான் பார்த்தான் விஷ்ணு.
“இவங்க வந்தது பிடிக்காமத்தான் அழுதியா?” என்று விசாரிக்க, “அச்சோ” என்று சலித்தவள், “அவங்க வந்தா நான் எதுக்கு அழப்போறேன்? இது வேறங்க. அதை இங்க சொல்ல முடியாது” என்றாள் இன்முகத்தோடே.
சற்று முன் வடித்த கண்ணீரால் நெருடல் இருந்த போதும், தற்போதைய சிரித்த முகம் கண்டு பெரிதாய் ஏதும் இருக்காதென்ற நம்பிக்கையோடு, “ஹம்” என்று மனைவி கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டு வாழ்த்து சொல்ல மேடை ஏறியவர்களை கவனிக்கலானான்.
சற்று நேரம் கழித்து சித்தார்த் வந்தான் மேடைக்கு. “ஹே… வாடா” என்று ஆரவாரமாக வரவேற்றான் சித்தார்த்தை. பிறகு, “இவன் சித்தார்த். ஐ.பி.எஸ் முடிச்சிட்டு இப்போ யுபில ஏ.எஸ்.பியா இருக்கான். இரண்டு வருசத்துக்கப்புறம் நம்ம கல்யாணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கான்” என்றான் பெருமையாக.
இருகை கூப்பி மரியாதையோடு வணங்கினாள் விஷாலினி. “வணக்கம் பெருசா இருக்கு” என சிரித்து, “அப்போ நானும் பெரிய வணக்கம் போட்டுடறேன். விஷ்ணுகிட்ட காரியம் சாதிக்க தங்கச்சி தயவு வேணும்ல?” என்று வணங்கினான் சிரிப்போடு.
“டேய்” என விஷ்ணு சிரிக்க, “காவ்யாவை எனக்கு கட்டிக்கொடுப்பாங்களானு உன் புருசன்கிட்ட கேட்டு சொல்லுங்கம்மா. இரண்டு மாசம் கழிச்சு திரும்ப வருவேன். அப்போ கல்யாணத்தை முடிச்சிக்கலாம்” என்றவன் விஷ்ணுவை பாராமல் கீழிறங்கினான்.
விஷ்ணு, விஷாலினி இருவருமே பெரும் அதிர்வுக்குள்ளானார்கள். இருவர் முகத்தையும் பார்த்த கோபாலன் மேலே வந்து விசாரிக்க, “வீட்டுக்கு போய் பேசிக்கலாம்ப்பா” என்றுவிட்டான் விஷ்ணுவர்தன்.
மதியம்போல் வீட்டிற்கு வந்தனர் அனைவரும். விஷாலினி வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மணமக்களுக்கு பால்பழம் கொடுத்த பின்னே, “நான் போய்ட்டு வரேன்” என்று கணவன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் சாந்தி.
“டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் வாங்க” என்று சித்தப்பா மக்களை அழைத்துக்கொண்டு கிளம்பினாள் காவ்யா.
“அந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க தம்பி” என்று மகள் மருமகனுக்கு தனிமை கொடுத்து, மற்றொரு அறைக்குள் சென்றார் மேகலை.
விஷ்ணு உள்ளே செல்ல, பின்னோடு விஷாலினியும் சென்றாள். என்ன முயன்றும் படபடப்பாகத்தான் இருந்தது விஷாலினிக்கு. “உக்காரு” என்று கதவை சாற்றிவிட்டு அருகே அமர்ந்தவன், “எதுக்கு அழுத?” என்றான் விசாரணையாக.
“அது… இப்போவே சொல்லனுமா?”
“அத்தனை பேர் முன்ன அழுதுட்டு, இப்போவே சொல்லனுமானு கேள்வி வேறையா?” என்றான் முறைப்பாக.
“நீங்க தாலி கட்டுறதுக்கு முன்னாடி வரை, மனசுக்கு பிடிச்சவங்களை கட்டிக்கப்போறோம். அத்தை மாமா நெருங்கின உறவாகப்போறாங்கன்ற சந்தோசத்தோட இருந்தேன்.
மணமேடை ஏறி உங்க பக்கத்துல உக்காரும்போது கூட பெருசா ஏதும் தோணல. ஆனா நீங்க தாலி கட்டின பின்ன, நானும் என் அம்மாவும் இனி அனாதையில்லைனு தோணுச்சு. இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எப்போவும் அனாதைனு நினைச்சதேயில்ல.
பாட்டிக்கு அப்புறம் அம்மாக்கு நானிருக்கேன். எனக்கு அம்மா, அத்தை மாமாலாம் இருக்காங்கன்ற நினைப்புலதான் இருப்பேன்.
ஆனா அம்மாவும் நானும் தனின்ற நினைப்பு எனக்கே தெரியாம என் உள்மனசுல இருந்திருக்கும் போல. அதுதான் காலைல அப்படி நினைக்க வச்சிடுச்சு. என் வாழ்க்கையில இதுவரை என்னெல்லாம் இல்லையோ… அதெல்லாம் மொத்தமா என் கைக்கு வந்தமாதிரி ஃபீல்.
அம்மாக்கு இனி என்னைப்பத்தின கவலையிருக்காது. அம்மாக்கு ஒன்னுனா நீங்கள்லாம் இருக்கிங்கன்ற தெம்பு வந்துடுச்சு. முன்னேவே இருக்கும்தான். ஆனா இப்போ வேறமாதிரி, ரொம்ப உரிமையான உறவான மாதிரி, ஒரு மாதிரி புதுசா தோணுச்சு.
பாட்டி சாகும்போது கூட என் மகளை பார்த்துக்கனு சொன்னாங்க. நல்லா வாழ்வனு ஆசிர்வதிச்சாங்க. அவங்க ஆசை நிறைவேறிடுச்சுனு மணமேடையிலயே நினைச்சேன். நீங்க கட்டின தாலி அப்படி நினைக்க வச்சுச்சு.
இதெல்லாம் விட முக்கியமா, இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த அதிகாரிகள் உங்களுக்கு கொடுத்த மரியாதை, நீங்க கஷ்டப்பட்டு வாங்கின வேலை, உங்க ஒழுக்கம், கம்பீரம், அழகு, எல்லாமும் அத்தை மாமாவோட சேர்த்து இனி எனக்கும் சொந்தம்ன்ற நினைப்பு… பெருமை… இல்லயில்ல கர்வம்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்.
இப்படி ஏதேதோ நினைப்புல ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. வாழ்க்கையில எதையோ பெருசா சம்பாதிச்ச ஃபீல்… உங்களை கட்டிக்கிட்டா இத்தனை கிடைக்கும்னு சத்தியமா நினைக்கவேயில்லங்க” என்று தற்போதும் கண்கலங்கினாள் ஆனந்தத்தில்.
இத்தனை யோசித்திருக்கிறாளா என்று விஷ்ணுவிற்கே மனதை எதோ செய்தது. இதுபற்றி பேசி மேலும் அவளை உணர்வுப் பிடிக்குள் தள்ள வேண்டாம் என்று, “இத்தனை தோணியிருக்கு… கல்யாண வாழ்க்கைக்கு தேவையான காதல் வந்தபாடில்லையே” என்றான் ஆராய்ச்சிப் பார்வையோடு.
“அதெல்லாம் ஒருமாசம் முன்னவே வந்துடுச்சு” என்றாள் பெருமையாக.
“பார்டா…” என வியந்த பாவனை காட்டி, “எங்க… ப்ருஃப் பண்ணு பார்க்கலாம்” என்றான் குறும்பாக.
சிறு பயம்தான் என்றாலும், “இல்ல… முன்னல்லாம் உங்க நினைப்பு வரும்போது மைண்ட்வாய்ஸ்ல கூட அவங்க இவங்கனு மரியாதையாத்தான் நினைப்பேன். இப்போ கொஞ்ச நாளா அவன் இவனு தோணுதே… அப்போ காதல் வந்துடுச்சுனுதான அர்த்தம்?” என்றாள் தன் பின்னலை சுருட்டியவாறு.
காதல் பார்வை பார்ப்பாள், வெக்கப்படுவாள் என்று விஷ்ணு எதிர்பார்க்க, இவள் சொன்ன பதிலில் கண்கள் மின்ன, “அடிங்க” என்று நெருங்கி அமர, படபடத்தாலும் அசையாமல் அமர்ந்திருந்தாள் விஷாலினி.
ஓ அவ்வளோ தைரியமா? என நினைத்தவன், “என்னை கட்டிக்கோ” என்றான் கட்டளையாக.
“என்ன?” என்று அதிர்வாய் பார்க்க, “எல்லாம் கைக்குள்ள வந்த நினைப்பிருந்தா போதாது. அவன் இவனு உரிமையா நினைச்சா போதாது. தாலி கட்டினவனை சந்தோசமா வச்சிக்கனும். ம் கட்டிப்பிடி என்னை” என்றான் மீண்டும்.
எழுந்தவள், “எழுந்து நில்லுங்க” என்றாள் சன்னக்குரலில்.
“ஏன் இப்படியே கட்டிக்க மாட்டியா?” என்று கேட்டபடி விஷ்ணு நிற்க, பெரு முயற்சி எடுத்து அணைத்துக்கொண்டாள் கணவனை. கைகள் விஷ்ணு இடையைப் பற்றியிருந்த போதும், உடல்கள் உரசாமல் அணைத்திருக்கும் மனைவியின் தந்திரத்தை ரசித்தவன், சற்றே நெருங்கி நின்றான் புன்னகையோடு.
தற்போதும் இரு உடல்களும் உரவில்லை என்றாலும் விஷ்ணுவின் நெருக்கம் படபடப்பை உண்டாக்கிட சட்டென அணைப்பை தளர்த்தினாள். ஏமாற்றமடைந்தவன், “நான் போதும்னு சொன்னேனா?” என்றான் முறைப்பாக.
முயன்று தன்னை சரிபடுத்திக்கொண்டவள், “கட்டிப்பிடிச்சா ஏன்டா கட்டிப்பிடிச்சோம்னு நினைக்க வைக்க கூடாது. அதான் விட்டுட்டேன்” என்று விஷ்ணு அன்று கோபமாய் சொன்னதை கிண்டலாய் சொன்னாள் உள்ளடக்கிய சிரிப்போடு.
“பேக்கு மாதிரிதான சுத்திட்டிருந்த? எங்கிருந்துடீ இவ்வளோ பேச கத்துக்கிட்ட?” என்று ரசனையாய் கேட்டு, இடையை வளைத்து அவளின் நெற்றியோடு தனது நெற்றியை முட்டினான் மெச்சுதலாக.
error: Content is protected !!