Skip to content
Post Views: 5,461
“ஹாய் மதூ..” என்றபடியே வீட்டுனுள் ஓடி வந்தது தன்விக் குட்டி!
பின்னால் வந்த தாரிகா, “ஏய் தன்வி, இனிமே அப்படிக் கூப்பிடக்கூடாது, மது சித்தின்னு தான் கூப்பிடனும்!” என்றாள்.
“போ.. மாட்டேன், நான் மதுன்னு தான் கூப்பிடுவேன்!” தன்வியிடம் அடம்.
“நீ மதுன்னே கூப்பிடு செல்லம்!” என்றவாறு அவளை தூக்கிக்கொண்டாள் மது!
Advertisement
மதுவைப் பெண் அழைக்க வந்திருந்தார்கள் ராகினி கண்ணன், வைஷு ராகவன் தம்பதிகள்!
கூடவே வந்து விட்டார்கள் குட்டீஸ் இருவரும் கூடவே ராகினியின் பையன் ஆதியையும் அழைத்துக்கொண்டு!
வரும் வழியில் எல்லாம் ஒரே மது புராணம் தான் தன்வியிடம்!
Advertisement
மது ரொம்ப அழகா இருப்பா, சூப்பரா ஸ்நாக்ஸ் தருவா, கூட சேர்ந்து விளையாடுவா, பாட்டுப் பாடுவா என்று!
Advertisement
அவனுக்கும் அந்த மது ஆண்டித்யைப் பார்க்க ஒரே ஆர்வம்! அவனும் கூட வந்து விட்டான்.
வந்தவன், “வாவ்! மது ஆண்ட்டி, நீங்க தன்வி சொன்னத விட ரொம்ப அழகா இருக்கீங்க!” என்றான்.
ஆமாம். அப்படிதான் இருந்தாள் மது!
Advertisement
முகம் கொள்ளாத பூரிப்புடன், கொஞ்சம் வெட்கமும் கலந்து, வைஷுவும் ராகினியும் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய சாரியில், ஏற்பாடு செய்து இருந்த பிராண்டட் பியுட்டி பார்லரில் இருந்து வந்திருந்த பியுடிசியன் கை வண்ணத்தில் அப்படியே வானத்தில் இருந்து வந்த தேவதைப் போலவே இருந்தாள்!
வைஷுவே அப்படியே அசந்து விட்டாள்!
“அய்யோ நம்ம பக்கி ரகு இவளை இப்போ பார்த்தால் அவ்வளவு தான்! அய்யா அப்படியே பிளாட் ஆகிவிடுவான்!” உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்!
“ம்.. ஹும். என்ன பெரிய அழகு. அழகுன்னுறாங்க. எல்லாம் மேக்கப்! பன்னி கூட தான் பருவத்துல அழகா இருக்கும்! என்னமோ பெரிசா பீத்திக்கிறாங்க!” என்று இடித்து சொன்னாள் மகேஸ்வரி!
அவ்வளவு பொறாமை!
“மானு, அடுப்படியில போய் ஸ்டவ்வ பாரு,பால் பொங்கி வழிஞ்சுடுச்சு போல, தீஞ்ச வாடை வருது பார்! போய் எல்லோருக்கும் காபி போடும்மா” ராஜு மானுவை உள்ளே அனுப்பினான்.
“வாங்க வாங்க எல்லோரும் உட்காருங்க, ஸ்வீட் காரம் காபி சாப்பிட்டுவிட்டு பொண்ண அழைக்கலாம், இன்னும் நல்ல நேரம் நிறைய இருக்கு” என்றார் சொர்ணம் ராஜுவின் தாய்!
மதுவை அழைத்துக் கொண்டு அவர்கள் மண்டபம் போக, அங்கே மாப்பிள்ளை அழைப்பு முடிந்து ரகு மண்டபத்தில் இருந்தான்.
கூட மச்சான் மாதுவுடன் அந்த பார்த்தியும்! மாப்பிள்ளைத் தோழனாக!
பார்த்தி, ஒன்றும் இப்போது பேச வில்லை!
ஏதோ அவனுக்கும் இந்த கல்யாணத்தில் மிகப் பெரிய சந்தோசம் என்பது போல அவனும் மாதுவுடன் சேர்ந்து கொண்டான், அவனும் மதுவுக்கு இன்னொரு ப்ரதராம் இப்போ!
அவன் தான் போட வேண்டிய பிட்டுகளை எல்லாம் போட்டு வைத்து விட்டு அது வெடிப்பதற்கு காத்து இருக்கானே!
ஆனால் அவன் கல்யாணத்தை நிறுத்த ஒன்றும் ட்ரை பண்ண வில்லை! பண்ணினால், வெளிப்படையாக அதை ரகுவே அதைப் புரிந்து கொண்டு தன்னை விலக்கி விட்டு கூட இந்த கல்யாணத்தை நடத்திக்கொண்டு விடுவான்!
அப்படியே இல்லையென்றாலும் இருக்கவே இருக்கா இந்த வைஷு!
அவள் நடத்தி விட தான் செய்வாள்!
வீணாக அவன் பேர் தான் கெடும்!
அதுக்கு பதில் கல்யாணத்திற்கு பிறகு கூட அந்த மது நிம்மதியாக இருக்க விடாமல் செய்ய, போட வேண்டிய தூபத்தை, பற்ற வைக்க வேண்டியதை பக்குவமாக கரெக்டான டோஸில் ரகுவிடம் செய்து விட்டு தான் நல்ல பிள்ளைப் போல இந்த கல்யாண சடங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறான்!
மணப்பெண் கோலத்தில் மதுவைக் கண்டவுடன், ரகு அப்படியே பேச்சற்று கொஞ்சம் வெளிப்படையாகவே அசந்து நின்றான்!
“ஏய்! மது டார்லிங் என்னடி இப்படி என்னை கொல்லப் பாக்குற! முதல் நாள் பங்க்சனுக்கே இப்படி இருக்கேன்னா, நாளை கல்யாணத்தில் அப்படியே என்னை முழுங்கிவிடுவே போலிருக்கே!”
இத்தனைக்கும் அந்த சாரி கூட அவன் செலக்சன் தான்!
முஹூர்த்த புடவை எடுக்க , அவளையும் கூப்பிட்ட போது, அவள் வர மறுத்து விட்டாள்.
“என் நந்துவுக்கு, எனக்கு எது நல்லா இருக்கும்னு தோணுதோ, அத எடுத்தால் போதும்! எனக்குன்னு தனியே ஆசை எல்லாம் இல்லவே இல்ல! நீ பார்த்து ரசிக்க தான் இந்த புடவை, நகையெல்லாம்! உனக்கு என்ன பிடிச்சுருக்கோ அது தான் எனக்கும் பிடிக்கும்!”
“ம்ம். எனக்கு.. நீ.. “ என்றுகாதில் அவன் ரகசியம் போல அவனுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லி அவளை வெட்கப் பட வைத்ததும் இப்போ நினைவுக்கு வந்தது அவனுக்கு!
“அய்யோ! டாக்டர் சார், வாயில் ஈ போய்டப் போகுது! ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்!” அவன் காதருகே கமென்ட் அடித்தான் ராஜு!
“டேய்.. ஏண்டா இப்படி மானத்தை வாங்குற..” காதைக் கடித்தான் ராகவனும்!
மது கொஞ்சம் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்!
“அய்யோ, இப்படி பார்க்காதேடி! நான் பாட்டுக்கு, எல்லோர் முன்னாடியும் வந்து உன்னைக் கட்டிப் பிடிச்சுடுவேன் போல!” ரகு மனதுக்குள் அவளிடம் பேசினான்!
அது அவளுக்கும் புரிந்தது. மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.
முதல் நாள் திருமண சடங்குகள் நல்லபடியே நடந்து முடிந்தன.
சடங்குகள் முடிந்தவுடன், ரகுவின் பெரியப்பா, ரொம்ப உற்சாகமாய், எல்லோரையும் வட்டமாக சேர்களை இழுத்து போட சொல்லி உட்கார வைத்து, ஒரு அந்தாக்சரி போல பாட வைத்தார்.
ராஜுவின் அப்பா கூட பாடினது எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்! கூடவே அவர் அவன் அம்மாவையும் பாட சொல்ல அவரும் வெட்கத்துடன் பாட, ஒரே சந்தோஷ கூச்சல் இளையவர்கள் மத்தியில்!
கூடவே மதுவின் மாமாவும் பாடினார்! மகேஸ்வரியின் முறைப்பையும் கண்டுக்காமல்!
ரகுவின் அத்தை கிரிஜா, மாமா முரளியும் கூட பாடினார்கள்!
ராகினி கண்ணன், வைஷு, ராகவனை டான்ஸ் ஆட வைத்தார்கள் இளையவர்கள்!
ரகுவின் அப்பா ராமநாதனுக்கும் ஒரே சந்தோசம்! அவர் மன நிறைவுடன் சிரித்தபடியே உட்கார்ந்திருந்தார்!
பட்டுப் பாட்டியும் அப்படியே!
ராஜுவும் மாதுவும் ஆட, அவர்களுடன் ஓடி வந்து கலந்து கொண்டான் திலீப்!
வைஷு மானுவிற்காக பார்த்திருந்த மாப்பிள்ளை!
அவன் பெற்றோர்களும் வந்து இருந்தார்கள்! வந்தவர்கள் மானுவைப் பார்த்து அவர்களும் திலீப் மானு கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட, இந்த கல்யாண கொண்டாட்டத்தில், இன்னொரு கல்யாணம் முடிவாகியது!
“என்னடா, உன் சின்ன அத்தானும் வந்து விட்டான்” மாதுவின் காதில் ராஜுவும் கமென்ட்!
அவன் சிரித்தபடி, திலீப்பை பார்க்க, அங்கே அவனோ மானுவை சைட் அடித்துக் கொண்டிருந்தான். மானுவோ வெட்கப் புன்னகையில்!
அவர்கள் இருவரையும் ஒரு சின்ன ஏக்கத்தோடு பார்த்து விட்டு, தோளை குலுக்கிக் கொண்டான் சபரி! மானுவை முதலில் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட மாமா மகன்!
மறுநாள் கல்யாணம்!
அந்த அதி காலையில் மாது பதட்டமாய் இருந்தான்! இன்னும் ராஜூவைக் காண வில்லை!
“என்னடா இங்க நின்னுகிட்டு என்ன பண்ற?’ அவன் மாமா கேட்டார்.
“இல்ல.. மாமா ராஜுவோட அம்மா, அவங்க வீட்டில் காலையில் குளிக்க போன போது பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்து விட்டாங்க.
விழும்போது தரையில் கையை ஊன்றி விட்டாங்க, அதனால் கையில் கொஞ்சம் அடி! பிராக்சர் ஆகிடுச்சு போல, இன்னும் அவனைக் காணோம்!”
“அதுக்குதான், நான் அவங்கள இங்கேயே தங்க சொன்னேன், அது தான் இங்க இத்தனை ரூம் இருக்கே! . சரி சரி வருவான் டென்சன் ஆகாத!”
ராஜுவின் அம்மா வர முடியாது போனா, மதுவ யார் தாரை வார்த்துக் கொடுக்க பெற்றோர் இடத்தில் இருப்பது!
இதுக்கு மாற்று ஏற்பாடு செய்யணுமே அவர் வைஷுவைத் தேடி சென்றார்.
போகும் வழியில் மகேஸ்வரி பிடித்துக் கொள்ள, அவளிடம் விசயத்தை லேசாக சொல்லிவிட்டு போனார்.
அது போதுமே அவளுக்கு! உள்ளுக்குள் ஒரே சந்தோசம்!
இந்த கல்யாணத்தில் இந்த பன்னாடைங்க ஒரேடியா ஆட்டம் போடுதுங்க.
அவளுக்கு ஒரே கடுப்பு!
முடிந்த வரை மானுவையும் மாதுவையும் ஏதாவது வேலை சொல்லி விரட்டு விரட்டு என்று விரட்டிக் கொண்டே இருந்தாள்.
நாகா பாட்டிக்கு குடிக்க ஹாட் வாட்டர், மூட்டு வலி தைலம், தலைவலிக்குது உடனே காபி வேணும் என்று ஒரு ஒரு வேலையாக சொல்லி அவர்களை படாத பாடு படுத்திக் கொண்டு தான் இருந்தாள்.
கூடவே வைஷுவிடம் போய், “இனிமே பார், உங்க வீட்டுல எங்க மதுவோட ராஜ்ஜியம் தான்! பார்த்துக்கோ” என்று அவளுள் பொறாமைத் தீயை உண்டு பண்ண ட்ரை பண்ணினாள்.
ஆனால் அவளிடம் பருப்பு வேக வில்லை. அவள் சிரித்து விட்டுப் போய் விட்டாள்!
ரகு காது பட வேண்டுமென்றே, “மது ரொம்ப சாமர்த்தியம், அவள் அத்தை வேதா மாதிரி, பாருங்க பெரிய இடத்தை வளைச்சுப் போட்டுட்டா!
இனி அந்த மாப்பிள்ளை பையன் இவ உட்காருன்னா உட்காரனும், நில்லுன்னா நிக்கணும்!” பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது போல பேசினாள்.
“இதோ இந்த பெரியவர தான் மது, காபி போட்டுக் கொடுத்தே கரெக்ட் பண்ணிட்டா” என்று ரகுவின் பெரியபபவைக் காட்டினாள், ரகுவின் அப்பாவின் காதில் விழும்படி!
அவர்கள் எல்லோருக்கும் இவள் புத்தி தெரிந்து இருந்ததாலும், கொஞ்சம் மன முதிர்ச்சியுள்ள டாக்டர்கள் என்பதாலும் கண்டுக்கவில்லை!
மேலும் மதுவின் மாமாவே போய் ராமனாதனிடமே தனியே கூப்பிட்டு, இந்த கல்யாணத்தில் என் மனைவியின் சொற்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வேண்டியிருந்தார்!
இப்போது பிரச்சினையை தேடிக்கொண்டு இருந்த மகேஸ்வரிக்கு, ஒரு விஷயம் கிடைத்து விட, அவள் நேரே போய் பட்டு பாட்டியிடம் இதை சொல்லி அவரை டென்சன் ஆக்கினாள்.
வயதான அவர் பதறினார்!
“டென்சன் ஆகு! கிழவி நல்லா, பேத்திக்கு பெரிய டாக்டர் மாப்பிள்ளைன்னு மிதப்புல இருந்தேல்ல! படு!”
ரொம்ப நல்ல எண்ணம்!
கல்யாணத்திற்கான சடங்குகளுக்கு தேவையானவற்றை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தனர் வைஷு, ராகினி, கூடவே மானுவும்.
அங்கே மணப்பெண் அறையில் மதுவுக்கு மேக்கப் போட்டு கொண்டிருந்தார்கள்!
அங்கே சென்ற மகேஸ்வரி, மதுவிடம் போய் ராஜுவும் அம்மாவிற்கு அடி பட்டு விட்டது, கையில் பிராக்சர் என்று சொல்லி அவளையும் பதட்டப் படுத்தினாள்.
மது உடனே ராஜுவிற்கு போன் செய்தாள்.
அவன், “அம்மாக்கு பெரிசா ஒண்ணும் இல்ல மது, சின்ன பிராக்சர் தான்! இரு அவங்க கிட்ட பேசு!” பேச கொடுத்தான்.
“அம்மாடி எனக்கு ஒண்ணும் இல்லடா, நீ எத பத்தியும் யோசிக்கமா, கல்யாணப் பொண்ணா அமைதியா சந்தோஷமா இருடா!” போனை வைத்த பின்னும் மதுவுக்கு கொஞ்சம் கண் கலங்கியது!
மதுவிற்கு கண்களில் மேக்கப் போட முடியாது அந்த பியுட்டிசியன் கொஞ்சம் காத்திருந்தாள்.
ஆனால் மகேஸ்வரி அவளின் அழுகையை நிறுத்த விடவே இல்லை. தொடர்ந்து பேசி அவளை நோக செய்து கொண்டே இருந்தாள்.
“என்னமோ போ மது, இப்படியா உன் ராசி இருக்கணும்! ஏற்கனவே உன் அம்மா அப்பா இருந்து தாரை வார்த்து கொடுக்கும் கொடுப்பினை உனக்கு இல்லாம போய்டுச்சு! இப்ப என்னன்னா பாவம் அந்த ராஜு அம்மா இப்படியா இந்த நேரத்துல போய் கையை உடைச்சுக்கணும்! எல்லாம் உன் ராசி போல!”
மதுவின் கண்கள் மறுபடியும் கலங்க, அந்த வடக்கத்திய பியுட்டிசியன் கடுப்பானாள்!
அவளுக்கு மகேஸ்வரி பேசுவது புரியவில்லை என்றாலும், அவள் தொடர்ந்து பேசி, மதுவை அழ வைத்துக் கொண்டே இருக்கிறாள் என்று அறிந்து கொண்டு, கத்த ஆரம்பித்து விட்டாள் ஆங்கிலத்தில்!
கூட இருந்த சாலினியிடம், “ஆஸ்க் திஸ் லேடி டு கெட் அவுட்! ஏய் மேடம் இங்க இருந்து போ” வெளியே அவளுக்கு தெரிந்த தமிழில் கத்தினாள்!
ஷாலினி அவளை அழைத்துக் கொண்டு வெளியே போனாள்!
அதற்குள் மானு அங்கே வந்து, “ராஜுவின் பெற்றோருக்கு பதில், ரகு அத்தானின் அத்தை கிரிஜாவும் மாமா முரளியும் மதுவின் அம்மா அப்பாவாக நின்று தாரை வார்த்து கொடுக்க போகிறார்கள், நீ ஒண்ணு ஒர்ரி பண்ணாதேக்கா! வைஷு அக்கா உன்னிடம் சொல்ல சொன்னாங்க!”
இருந்தாலும் மதுவிற்குள் தன் கல்யாணத்தில் இப்படி பெற்றோர் இல்லாது போனது பெரிய வருத்தத்தை தந்து அவள் கொஞ்சம் பதட்டமானாள்.
கைகள் கொஞ்சம் நடுங்கிக் கொண்டே தான் இருந்தன மணவறையில் அமர்ந்த பின்னும்!
அங்கே ரகுவின் முகத்திலும் என்னவென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு உணர்ச்சிக் கலவையில் இருந்தான்!
காரணம் பார்த்தி! நேற்று இரவு பாச்சிலர் பார்ட்டி என்று அவன் வைக்க சொன்ன பார்ட்டியில் அவன் ரகுவிடம் ஏற்றி விட்ட புது தூபம் ஒன்று ரகுவின் மனதை லேசாக ஆட்டி வைத்துக் கொண்டு இருந்தது!
மற்ற சடங்குகள் முடிந்து, மதுவின் கழுத்தில் ரகு தாலி கட்டினான்.
மதுவின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கில் குபுக்கென்று கண்ணீர்!
அவளின் கைகள் நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்த ரகு, தன்னையறியாமல் அனிச்சை செயலாகவே அவள் கையை இறுக பற்றிக் கொண்டான் ஆறுதலாக!
இத்தனை நேரம் மகேஸ்வரியின் சொற்களால் உண்டாகியிருந்த மிகுந்த மன வேதனையை, அந்த ஒரு சின்ன செயல் அவளை அப்படியே ஆசுவாசப் படுத்திவிட்டது!
“என் நந்து இருக்கான்! என் கணவன் இருக்கான்! இனி எனக்கு ஒன்றும் கவலை இல்லை” என்று மிகப் பெரிய ஆறுதல் அடைந்தாள் மது!
அதன் ஆயுள் ரொம்ப குறைவு என்று அறியாமல்!
error: Content is protected !!