Skip to content
Post Views: 6,485
இரவு பத்து மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தாள் துளசி வெற்றி வந்திருக்கவில்லை, வெளியில் எட்டி பார்க்க ஹாலிலும் அவன் இல்லை மெல்ல எழுந்து வந்தவள் ஹாலின் அந்த ஒற்றை ஜன்னலின் முன்னே நின்று தெருவைப் பார்த்தாள்.
Advertisement
எங்கும் நிசப்தம் தூரே தெரு நாய்களின் சத்தம் மட்டும்… கதவைத் திறக்கக் கொஞ்சம் பயம் இருந்ததது அங்கே வெறும் கதவு மட்டுமே முன்னில் இரும்பு கேட் ஒன்றும் இல்லை ஆகையால் அந்த ஜன்னலின் அருகே நின்று வானத்தை வெறித்துப் பார்த்திருந்தாள்.
Advertisement
Advertisement
ஏதேதோ சிந்தனைகள் இதுதான் என்று இல்லாமல் மொத்தமாகச் சுழற்றியடித்தது, பைக் வரும் சத்தத்தில் கலைந்தவள் அவன்தான் என்பதை உணர்ந்து நேரம் பார்க்க இரவு பன்னிரண்டு பத்து வேகமாகச் சென்று உடலைக் குறுக்கி படுத்துவிட்டாள்.
Advertisement
அவன் உள்ளே நுழைந்து கதவை அடைத்துவிட்டு பெட்ரூம் வந்து பார்த்தான் சிறிது நேரம் நின்றவன் அவள் பக்கத்தில் படுத்துவிட்டான், தன்னை தொல்லை செய்யாதவரை நல்லது என்று எண்ணிய துளசியும் உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையும் அதுவே பால் இல்லை இரவு சாப்பிடாமல் வேறு படுத்துவிட்டாள், குளித்து வந்தவள் கையில் இருந்த காசை எடுத்துக்கொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு இடப்பக்கம் நடந்தாள் அங்கு ஒரு கடை கண்டதாக ஞாபகம் நேற்று ஆகவே நடந்து செல்லக் கொஞ்சம் பெரிய கடையாகவே இருந்தது.
ஒரு பாக்கெட் பாலும் நூடுல்ஸ் ஒன்றும் வாங்கிக்கொண்டு வந்தாள் ‘புதிதாக இருக்கிறாளே’ என்று கடைக்காரர் ஆராய்ச்சியாகப் பார்த்து நின்றார் வந்தவள் மொத்த பாலையும் காய்ச்சி வைத்தாள் பிரிட்ஜ் இல்லையே வெளியிலே வைத்திருந்தால் கேட்டுப் போகும்.
முதலில் டி குடித்துவிட்டு துணிகளை எடுத்துத் துவைத்துவைத்தாள், கிட்சன் சென்று இருக்கும் பாத்திரங்களைப் பார்த்து விட்டு என்ன என்ன வாங்க வேண்டும் என்று லிஸ்ட் எழுதினாள், கிச்சனில் சுவரை அடைத்து ஒரு ஷெல்ப் இருந்தது அடுப்பு மேடைக்குக் கீழே கொஞ்சம் இடம் இருந்தது அவ்வளவே பொருட்களை அதற்குள்ளே அடைக்க வேண்டும் ஆகையால் சின்ன சின்ன டப்பிகளாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தாள்.
நூடுல்ஸ் ஒன்றுதான் செய்தாள் அதேயே சாப்பிட முடியவில்லை கொஞ்சமாக உண்டுவிட்டு மீதியை தெருவில் நாய்க்குப் போட்டுவிட்டாள், அப்படியே ஹாலில் அமர்ந்தவள் கண்ணயர்ந்துவிட ஒன்பது மணிக்கு எழுந்து வந்தான் வெற்றி.
பல் தேய்த்து குளித்து வந்தவன் “துளசி” என்று அழைக்க ஒரு சத்தத்திற்க்கே எழுந்துவிட்டாள்.
“என்ன இங்க தூங்குற” என்றவன் “குளிச்சிட்டல்ல” என்றான்.
அவள் “ஹ்ம்ம்” என்க.
“சரிவா சாப்பிடபோலம் அக்கா வெய்ட் பண்ணும்” என்றான்.
அவளுக்கு ஆயாசமாக இருந்ததது “இல்ல எனக்குப் பசிக்கல நான் நூடுல்ஸ் சாப்பிட்டேன்” என்றாள்.
“நூடுல்ஸா!… இருந்ததா?” என்றான் சந்தேகமாக.
“இல்ல கடைக்குப் போய்ப் பாலும் அதும் வாங்கிட்டுவந்தேன்” என்றவள் “டி வேணுமா அப்படியே நூடுல்ஸ் செய்யவா” என்க.
“டி மட்டும் குடு” என்று அமர்ந்துவிட்டான், அவள் டீயை கொடுக்க “அக்கா டிபன் செஞ்சிருப்பாங்க இப்போ வேண்டாம் சொன்னா எப்படி சும்மா வந்து கொஞ்சமா சாப்பிடு” என்றான்.
‘இவர்கள் யாருமே ஏன் மற்றவர்களைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்’ என்றுதான் தோன்றியது அவளுக்கு, அவர்கள் நினைப்பதை மட்டும் அப்படியே நடத்தி கொள்ள வேண்டும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தி அதைச் செய்யவைக்க வேண்டும், இந்த மூன்று நாளில் என்னிடம் ஏதாவது பேசியிருப்பானா ஏதேனும் கேட்டுத் தெரிந்துகொண்டானா எல்லாமே இவன் இஷ்டமா என்று ஆத்திரம் வந்தது.
“அங்க போய் என்ன செய்ய இங்கேயே இருக்கேன்” என்றாள் அவள்.
“அவங்க வரச் சொல்லியும் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம், நேத்து நைட்டும் வரல அவங்க கேட்டாங்க ஏன் நீ வரலன்னு, வந்தவுடனே என் அக்காவை எதிரியா பாக்குறியா” என்றவனிடம்.
“ஆமாடா என் மனசை புரிஞ்சுக்காத என் அம்மா என் சந்தோஷத்தை அழிச்ச பெரியம்மா அவங்க பொண்ணு, என்னைத் தப்பா பேசின கற்பகம் தாலி கட்டிட்டன்னு என்னை எல்லா விஷயத்துலயும் அடிபணிய வைக்குற நீ… நீங்க எல்லாரும் எனக்கு எதிரிதான்” என்று உரக்க காத்த வேண்டும் போல இருந்தது.
அடக்கி வைத்த கோபத்தில் கழுத்தில் நரம்புகள் முறுகியது “ஒழுங்கா வா” என்றவன் முன்னில் சென்று வண்டியை வெளியில் எடுக்கக் கதவைப் பூட்டி விட்டு அவனுடன் சென்று ஏறிக்கொண்டாள் வெண்மதியின் வீட்டிற்கு சென்றனர் அவர்களும் அப்பொழுதுதான் எழுந்து குளித்து அமர்ந்திருந்தனர்.
“வாடா” என்ற வெண்மதி அனைவருக்கும் நூடுல்ஸை பாத்திரத்தில் போட்டு எடுத்து வந்து கொடுக்கத் துளசி வெற்றியை அழுத்தமாகப் பார்த்தாள், அவளை ஒருமுறை பார்த்தவன் உண்பதில் கவனமானான், வேண்டாவெறுப்பாக உள்ளே கடினப்பட்டு தள்ளினாள்.
“நாங்க எழுந்ததே லேட் இங்க எல்லாரும் நூடுல்ஸ் போதும் சொன்னாங்க அதான் அதேயே பண்ணிட்டேன்” என்றாள் வெண்மதி.
“மாமா வெளில போகலாமா… மால் போகலாம்” என்றாள் நதியா.
“ஹ்ம்ம் போலாம் வீட்டில ஒரே போர்” என்றவர்கள் அடுத்த அரைமணியில் மால் சென்றனர், நதியா காவ்யாவுடன் வெற்றி அனைத்து விளையாட்டிலும் கலந்து கொண்டு விளையாடினான், துளசியை அழைக்க அவள் வரவில்லை என்றுவிட்டாள்.
“துளசி ரொம்ப அமைதியோ பேசவே மாட்டற” என்ற ராஜேஷ் அவளிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்க, இடையிடையே வெண்மதியும் பேசினாள்.
வெண்மதி அந்தப் பக்கம் நகர்ந்ததும் ராஜேஷ் துளசியிடம் “நீதான் அவனைக் கொஞ்சம் மாத்தி எடுக்கணும் துளசி, அவன் கொஞ்சம் சோம்பேறி மெடிக்கல் கூட ஒழுங்கா தொறக்கமாட்டான் அவனுக்குத் தோணுற நேரம்தான்… இனிமே குடும்பம்னு ஆகும்போது பொறுப்பில்லாம இருந்தா எப்படி மாத்தி எடு” என்றான்.
“நல்லது” என்று மனதில் எண்ணிக்கொண்டாள் துளசி, ஏற்கனவே வாழ்க்கை ஒளிவட்டம் பிரகாசமாக ஒளிர்கிறது அடுத்து இதுதான் என்று, இரவுதான் வீட்டிற்கு வந்தனர் அன்று அவனிடம் சிக்கிக்கொண்டாள் எரிச்சல் எரிச்சல் உடல் மனம் எல்லாம் எரிச்சல்.
அடுத்த நாளும் ஓடிமறைய மூன்றாம் நாள் ராஜேஷின் காரில் பாண்டிச்சேரி பயணம், இரண்டு நாளும் பார்கவிக்கு அழைத்துத் தந்தையை பற்றிக் கேட்டுக்கொண்டாள் சாந்தா அழைத்தாலும் துளசி பேசுவதில்லை தான் மட்டும் எங்கோ தனித்து தொலைந்துபோனதை போல மூன்றே நாளில் வாழ்வின் மொத்த வெறுமையும் அவளிடம்.
சாந்தா தெரிந்தவர் ஒருவரை கணவனைப் பார்த்துக்கொள்ள ஏற்படு செய்துவிட்டு வந்தார், உடன் வீட்டிலே விஜயகுமாரின் ஒன்றுவிட்ட அக்காவும் தங்கிக்கொண்டார் அவருடைய ஒரே மகன் திருமணம் முடிந்து குடும்பமாக மும்பையில் இருக்க இவர்க்கு ஊரை விட்டுச் செல்ல விருப்பம் இல்லாமல்.
இங்கேயே தங்கிவிட்டார் அவருக்குத் துளசியின் வீடு ஆறுதல் இப்பொழுது துளசியின் வீட்டோடு வந்துவிட்டார், சாந்தா வெளியூர் போகும் நேரம் வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டுமே.
நேரே மூத்தமகள் வீட்டிற்கு வந்துவிட்டார் சாந்தா மறுநாள் ரிசப்ஷன் ஊரிலிருந்து யாரும் வரமாட்டார்கள் இத்தனை தொலைவு அதோடு அவர்கள் அனைவவரும் திருமணத்திற்கு வந்தவர்கள் தானே, சென்னையிலிருந்து ப்ரேமும் ஆனந்தியும் குழந்தையுடன் வருவார்கள் அதோடு இங்கிருக்கும் விஜயகுமாரின் சில சொந்தங்கள் வருவார்கள் மற்றும் துர்கா குடும்பம்.
பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் இங்கேயும் கசகசவென்று வீடுகள் தான் தெருவின் கடைசியில் இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் ராஜேஷ் உள்ளே வண்டி நிறுத்த இடமில்லை இது கொஞ்சம் பெரிய வீடாக இருந்ததது ஆனால் படுக்கையறை குறைவு.
ஒரு ஹால் படுக்கையறை கிட்சேன் மேலே மொட்டைமாடியில் ஒரு படுக்கையறை, சோபா பெரிய டிவி, டைனிங் டேபிள், டபுள் டோர் பிரிட்ஜ் வாட்டர் பில்டர், பெரிய அடுப்பு அதோடு படுக்கையறை மற்றும் கிட்சேன் நன்றாகப் பர்னிஷ் செய்யப்பட்டிருந்ததது, மேலே படுக்கையறையில் வாஷிங் மிஷினும் இருந்தது.
உள்ளே நுழைந்ததும் “உங்க பேகை மேல வெச்சுடுங்க” என்றார் மாமனார், வெற்றியுடன் இவள் மேலேற “எப்போவும் நாமதான் அங்க படுப்போம் இப்போ ஏன் அவங்கள அனுப்புறீங்க எனக்கு மேலதான் படுக்கணும்” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள் நதியா.
“நதி இந்தத் தடவை அவங்க அங்க படுக்கட்டும் அடுத்த தடவ நாம படுக்கலாம் எல்லார்க்கும் அங்க இடம் இருக்காது” என்றார் விஸ்வநாதன்.
“அப்போ அவங்க கீழ படுக்கட்டும் நாம எப்போவும் போல மேல படுக்கலாம்” என்றாள் அவள், துளசி அமைதியாகச் சோபாவில் அமர்ந்துவிட்டாள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று, வெகுநேர சமாதானத்திற்கு பிறகு மனைவியை மேலே அழைத்துச்சென்றான் வெற்றி.
“நீங்க ஏன் கடலூர்ல இருக்கீங்க உங்க அப்பா அம்மா தனியாத்தான இருக்காங்க இங்கேயே இருந்திருக்கலாமே” என்றாள், அவனிடம் கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும் ஒன்றுமே கேட்க்காமல் இந்த வாழ்க்கையை எப்படித்தான் ஓட்ட என்ற எண்ணம் தோன்ற கேட்டுவிட்டாள்.
“இங்க நிறைய மெடிக்கல் இருக்கு கடலூர்ல நாம இருக்குற ஏரியால பெருசா இல்ல அக்கா மாமா சொல்லித்தான் அங்க வெச்சோம், அதோட அக்காக்கு பக்கத்திலே இருக்கட்டும்னு அப்பாவோட சேவிங் போட்டு அந்த வீட்டை வாங்கிக்குடுத்தார்” என்றான்.
“சரி” என்று கேட்டுக்கொண்டாள், அங்கேயும் வீட்டில் ஒன்றும் சமைக்கவில்லை ஊர் சுற்றுவது ஹோட்டலில் சாப்பிடுவது என்றே தான் கழிந்தது, மறுநாள் ரிசப்ஷன் துர்காவுக்கு அழைத்த துளசி எப்பொழுது வருவார்கள் என்று கேட்க மதியம்போல வந்திடுவோம் என்றாள்.
ரிசப்ஷன் அன்று மதியம் இரண்டுமணிபோல அவளைப் பியூட்டி பார்லர் அழைத்துசென்றுவிட்டாள் வெண்மதி, போவதற்கு முன் துளசி அழைத்துக் கேட்க நெருங்கிவிட்டோம் வந்துவிடுவோம் என்றார்கள்.
“வீட்டிலேயிருந்து வராங்க அவங்க வந்ததும் போலாமா” என்றாள் துளசி.
“அதெல்லாம் அப்பா பாத்துப்பார் நீ வா” என்று அழைத்துசென்றுவிட்டாள் வெண்மதி.
error: Content is protected !!