Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 19

அம்மையப்பன் 19

 

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே

என் மார்பில் சேர வந்த மன்னவரே



Advertisement

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..

 

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்

Advertisement

மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

Advertisement

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

 

Advertisement

என தோட்டத்தில் வேலை செய்பவரின் போனிலிருந்து பாடல் ஒலிக்க, அகத்தியன் விழிகள் வேதனையுடன் மூடியது..

 

இப்பாடல் அவனுக்கும் அன்பழகிக்கும் ரொம்பவும் பிடித்த, மனதிற்கு நெருக்கமான பாடல்.. அவனுக்கும் அவளுக்குமான பிரத்தேயகமான அந்தரங்க பொழுதுகளில், அன்பழகி வெட்கதோடு இவனை ஓரவிழியால் பார்த்து கொண்டே, மயக்கும் குரலில் பாடுவாள்.. இதனை நினைத்து பார்த்தவன் விழிகள், வலியிலும் வேதனையிலும் சிவந்து போனது.. 

 

அழகி என்னை மன்னிச்சுருடி.. நான் உனக்கு துரோகம் பண்ண போறேன்.. நம்ம குடும்பத்தை காப்பாத்துறதுக்கு எனக்கு இதை விட்டா வேறு வழியில்லம்மா என மனதோடு தன்னவளிடம் மறுகி கொண்டிருந்தான்..

 

அவனும் அவளும் வாழ்ந்த வாழ்கை நிழற்படமாக ஓடிகொண்டிருந்தது.. இறுதியில் தன் மகளின் கதறலில் அவன் நினைவு வந்து முடிய, அது கொடுத்த தாக்கத்தில்.. மரத்தை குத்தி கொண்டிருந்தான்..

 

****************************

 

குழலி இன்னும் அழுகையை விடாமல் தேம்பிகொண்டிருந்தாள்.. அவளுக்கு தாளவே முடியவில்லை.. தந்தை எவ்வாறு திருமணத்திற்கு சம்மதித்தார்.. அதுவும் அந்த அதி.. என அதையே நினைத்து அழுது கொண்டிருந்தாள்..

 

அம்மு.. அம்மு போதும்.. நிப்பாட்டு.. இப்போ நீதான் மாமாவுக்கு துணையா இருக்கனும்.. அதவிட்டுட்டு நீயே இப்படி அழுதுட்டு இருக்க, பாவம்டி அந்த மனுஷன்.. என அமுதன் ஆதங்கமாய் சொல்ல.. 

 

நீங்க எப்பவும் என்ற ஐயனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க.. என தேம்பலுடன் அமுதனை பார்த்து முறைத்தவாறு சொன்னவள்.. ஏன் மாமா ஐயன் அப்படியொரு முடிவு எடுத்தாங்க என மீண்டும் அழுதாள்.. 

 

அம்மு.. மாமா நம்மளுக்காக தாண்டி இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சு இருக்காங்க.. என்றவன் காலையில் நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னான்..

 

நம்ம குடும்பத்து மனுஷங்க அப்படி என்னதான் அவளுக்கு செஞ்சாங்கன்னு தெரியல.. இவங்க பண்ண தப்புக்கு மாமாதான் கஷ்டப்பட்டுட்டு இருக்கார்.. இதுல நீயும் இப்படி அழுதா, மாமா நொறுங்கி போயிடுவார்டி.. என அமுதன் வருத்தமாக சொன்னான்..

 

மாமா அத்தைய ரொம்ப விரும்புனாரு.. இப்போ வரைக்கும் அவங்ககூட மனசால வாழ்ந்துட்டு இருக்கார்.. உன்னை விட உன்ற ஐயனுக்கு தான் இந்த கல்யாண விஷயம் பெரிய வலி, வேதனை என அமுதன் முகம் கசங்கி கூற.. குழலிக்கு தன் தவறு புரிய, தந்தையை நினைத்து பரிதவித்து போனாள்.. 

 

அச்சோ.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் மாமா.. ஐயா ரொம்ப பாவம்.. இதுல நான் வேற அவரை கஷ்டப்படுத்திட்டேன்.. ஐயாவ உடனே பாக்கணும் என வேகமாக எழுந்தாள்..

 

சரி வா.. கண்டிப்பா தோட்டத்துல தான் இருப்பாரு என அமுதனும் குழலியும் கீழே வந்தார்கள், அங்கு கல்யாண வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டிருக்க.. பெண்கள் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்தனர்..

 

அமுதன் பெருமூச்சுடன் அவர்களைப் பார்த்தவாறு வெளியேறினான்..

 

அமுதன் நினைத்தது போல் அகத்தியன் தோட்டத்தின் மத்தியில் தான் இருந்தான்..

 

தந்தையை கண்டதும் ஐயா என கத்தியவாரு, குழலி அவனிடம் ஓட, தன் மகளை அங்கு எதிர்பார்க்காத அகத்தியன், எதிர்கொண்டு  அவளை அணைத்துக் கொண்டான்..

 

ஐயா என்ன மன்னிச்சுடுங்க.. உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. என அவள் அழுகையில் கரைய.. அகத்தியன் கலங்கிய விழிகளுடன் மகளை சமாதானம் செய்தான்..

 

என்ற அம்மணி எந்த தப்பும் செய்யல கண்ணு, அவளுக்கு இந்த ஐயன்கிட்ட இல்லாத உரிமையா.. என கரகரப்பாக சொன்னான் அகத்தியன்..

 

தன் மகள் தன்னை வெறுத்து விடுவாளோ என இத்தனை நேரம் தவிப்பில் இறுகி இருந்தவன்.. மகளின் பேச்சில் மெல்ல மெல்ல உருகி கொண்டிருந்தான்.. 

 

ஹக்கும் பேச்சுதான் அப்பனுக்கும் பொண்ணுக்கும்.. அப்பொறம் ஏன்யா உன்ற கைய இப்படி பண்ணி வச்சுருக்க.. என கோபத்தோடு மாமனின் கரத்தை பிடித்தான்..

 

அது ஒன்னுமில்லடா என தன் கரத்தை உருவ பார்க்க.. அமுதன் விடவில்லை..

 

சிறுவயதிலிருந்தே மகளின் கண்ணில் சிறு தூசி பட்டாலும் அதனை தாங்க முடியாது இருந்தவன்.. இன்றைக்கு அம்மகளின் கதறலுக்கு தானே காரணமாகியதை தாங்கிக்கொள்ள முடியாது.. மரத்தில் தன் கரத்தை குத்தியவாறு தன்னை தண்டித்து கொண்டிருந்தான்..

 

அய்யோ.. ஐயா.. என குழலி அவன் கரத்தை பற்றி பதறியழ..

 

ஒன்னுமில்லடா கண்ணு.. சின்ன காயம் தான்.. மரம் குத்திருச்சு..

 

ஹக்கும் ஆமா சும்மா இருந்த உன்ற கைய பிடிச்சு குத்துச்சாக்கும்.. சின்ன புள்ள மாதிரி பண்ணிக்கிட்டுகிடக்க மாமா.. என அவன் கரத்தை தண்ணீரில் கழுவ.. குழலி தன்னுடைய ஷாலை கிழித்து அந்த இடத்தில் கட்டினாள்..

 

ஐயா.. நீங்க எதுக்கும் விசனபடாதிங்க.. நான் இப்போ சரியாகிட்டேன்.. யாரு நம்மளுக்குள்ள வந்தாலும் நீங்க என்ற ஐயன் தானே.. யாராலும் உங்களையும் என்னையும் பிரிக்க முடியாது.. பாருங்க அவங்கள நான் என்ன பன்றேன்னு என குழலி சிறு கோபமாக சொல்ல.. அகத்தியன் அமுதன் இருவரும் மகிழ்ந்தனர்..

 

அகத்தியன் இத்திருமணத்தால் மகளின் மனநிலை பாதிக்கப்படுமோ, தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ என மிகவும் பயந்து இருந்தவன்.. இப்பொழுது தான் நிம்மதியடைந்தான்.. அகத்தியன் மகளை ஒருபக்கம் அணைத்து கொள்ள.. மறுபக்கம் அமுதன் சேர்ந்து கொண்டான்..

 

நீ எதுக்கும் கவலை படாத மாமா.. என்ன இருந்தாலும் நாம சேர்ந்து சமாளிப்போம் என அமுதன் கூற அகத்தியனுக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது..

 

அவர்கள் வீட்டிற்கு வரும் பொழுது.. வீடே மாறியிருந்தது என சொல்லலாம்.. வேலையாட்கள் அனைவரும் அகத்தியனை அதிர்வும் ஆச்சரியமுமாக பார்க்க.. அகத்தியன் சிறு சங்கடம் கொண்டாலும்.. இதனையெல்லாம் இனி சந்தித்துதான் ஆகவேண்டும் என மனதை சமன் செய்தான்..

 

அடியே குழலி எங்கடி போனா.. எவ்வளவு நேரம் உன்ன தேடுறது.. இங்க வந்து மாமா ரூம பாரேன்.. என ஷாலினி உற்சாகமாக அழைக்க.. குழலி முகத்தை திருப்பினாள்..

 

அடி வாடி.. என தோழியின் முகம் திருப்புதலை சட்டை செய்யாது அவளை இழுத்து கொண்டு மேலே சென்றாள்..

 

அகத்தியனின் அறை சற்று பெரியது.. அதனை சற்று வித்தியாசமாக மாற்றியிருந்தனர்.. சுவர்கள் முழுக்க வெண்மையும் நீளமுமாக இருந்தது.. ட்ரெஸ்ஸிங் டேபிள், ஒருப்பக்கம் முழுவதும் கண்ணாடி அதனோடு இணைந்திருந்த வாட்ரோப், ஐந்து பேர் வரை தாராளமாக படுக்க கூடிய கட்டில், சுவர் அலங்காரம் என ரூமின் பழமையை மாற்றாது புதுமையும் புகுத்தியிருந்தனர்.. ஓய்வரையில் பாத் டப் எல்லாம் வைத்திருக்க ஷாலினியை கையில் பிடிக்க முடியவில்லை.. ஒவ்வொன்றையும் ஆசையாக பார்த்து கொண்டிருந்தாள்..

 

குழலியின் விழிகள் விரிந்தாலும்,  முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.. அண்ணே அக்காக்கு ப்ளூன்னா ரொம்ப புடிக்குமா.. என விஷ்ணுவின் அருகே சென்று ஷாலினி கேட்க..

 

விஷ்ணு ஓர் நொடி விழித்து… ஆம் என்பதாய் தலையசைத்தான்..

 

அடியே.. அவுங்களுக்கு என்ன கலர் புடிச்சா உனக்கென்னடி.. என குழலி ஷாலினியின் முதுகில் அடிக்க.. அவளோ அதனை அசட்டை செய்து, மீண்டும் விஷ்ணுவிடம் அதி பற்றி கேள்வி கேட்க ஆரம்பிக்க.. குழலி கோபத்தோடு வெளியேறினாள்..

 

என்னாச்சு அம்மு, ஏன் கோபமா இருக்க.. அந்த அல்லக்கை ஏதாச்சும் சொன்னானா என விஷ்ணு குறித்து கோபமாக கேட்டான் அமுதன்..

 

குழலி யாரென புரியாது விழிக்க.. அந்த விஷ்ணு பையன் ஏதாச்சும் சொன்னானா அம்மணி என அகத்தியன் கேட்டான்..

 

ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லங் ஐயா.. ஷாலு தான் தேவையில்லாதத பேசி என்னை கடுப்படிக்கிறா.. என குழலி பொறிந்தாள்..

 

ஷாலு என்ன பண்ணா..

 

அதை நீங்களே போயி பாருங்க என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சென்றுவிட.. அமுதனும் அகத்தியனும் ஒருவரையொருவர் ஆச்சரியமாக பார்த்து கொண்டனர்..

 

என்ன மாமா ரெண்டும் எப்போ பாத்தாலும் ஒன்னாவே சுத்துவாய்ங்க.. இன்னைக்கென்ன ஆளுக்கொரு பக்கம் நிக்கிறாய்ங்க.. அப்படியென்ன என்ற தங்கச்சி பண்ணிருக்கும் என மேலே சென்றவன்.. ஷாலினியின் செயலில் கொதிகலனில் நிற்பது போலானான்…

 

அண்ணே அந்த வெள்ள சுவத்துல இந்த மாதிரி செய்றிங்களா.. இதை நானே வரைஞ்சேன்.. அதி அக்காக்கு இது பிடுக்கும்.. என ஒரு வரைபடத்தை காண்பிக்க.. விஷ்ணு ஆச்சரியமாக அதனை பார்த்தான்..

 

ஒரு பெண்ணின் நிழல்.. அவளின் சிகையில் ஒரு வெண்மை நிற ரோஜா பூ, அடுத்து சிகையை மறக்கும் அளவிற்கு ஒரு பெரிய கரு நிற ரோஜா பூ, அதனுள் குட்டி பூ, அதனை சுற்றி சின்ன சின்ன இலைகள், பூவையையும் பாவையையும் சுற்றி பட்டாம்பூச்சிகள், அப்பெண்ணின் கரத்தில் மற்றொரு வெண்மை நிற பூ என வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது..

 

அண்ணே இத போடுறீங்களா என ஷாலினி ஆசையாக கேட்க.. விஷ்ணு மறுக்க முடியாது அதனை வாங்கியவன்.. வேலை செய்பவர்களிடம் இதைப்போல் செய்ய சொன்னான்..

 

ஷாலினி மகிழ்ச்சியாக அதனையே பார்த்தவள்.. அடுத்து என்ன செய்யலாம் என மீண்டும் ஒவ்வொரு இடத்தையும் அலச.. அவள் தலையில் நறுக்கென கொட்டு விழுந்தது..

 

ஆஆஆஆ.. என தலையை தேய்த்தவாரு ஷாலினி திரும்ப.. அங்கு கோபத்துடன் அமுதன் நின்றிருந்தான்..

 

திருதிருவென விழித்தவள்.. அப்படியே ஒன்றும் தெரியாதவள் போல்.. அண்ணே ஏண்ணே கொட்டுன.. என சிணுங்கினாள்..

 

உனக்கென்ன இங்க வேலை.. என அதட்டினான் அமுதன்.. 

 

ப்ச மாமா ரூமு எப்படி இருக்குன்னு பாக்க வந்தேன்..

 

அதப்பாத்து நீ என்ன பண்ண போற.. அதுவும் அவன்கிட்ட என்னடி பேச்சு.. என மறுபடியும் கொட்ட போக, மாமா என அகத்தியனிடம் ஒண்டினாள்..

 

அடேய் விடுடா.. பொம்பள புள்ள மேல கைய நீட்டிக்கிட்டு கிடக்க.. என அகத்தியன் அதட்டினான்.. 

 

அம்மணி நீ உன்ற ரூமுக்கு போடா.. என அகத்தியன் சொல்லவும், ஷாலினி மனதேயில்லாது அங்கிருந்து சென்றாள்.. 

 

அகத்தியன் அந்த அறையை பார்த்தான்.. அவனும் அன்பழகியும் ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்த அறை.. ஆனால் இப்பொழுது அவனுக்கு அந்நியமாக தெரிந்தது.. அங்கு அவனால் நிற்க முடியவில்லை.. சட்டென வெளியேறிவிட்டான்..

 

**********************************

 

அம்மையப்பன் குடும்பத்திற்கு சொந்தமான அம்மையும் அப்பனும் வீற்றிருந்த, அவர்களின் குலதெய்வ கோவிலில் ஊரே திரண்டிருந்தது.. இன்னும் சற்று நேரத்தில் அகத்தியனுக்கு திருமணம்.. அதனை பார்க்கத்தான் அனைவரும் ஆவலாக நின்றிருந்தார்கள்..

 

என்ன சேதியா இருக்கும்டி.. இப்படி திடிர்னு அய்யாக்கு கண்ணாலம் பன்றாங்க..

 

அதான்டி புரியல, அய்யா சம்சாரம் இறந்தப்ப அவருக்கு சின்ன வயசு.. அப்போ கண்ணாலம் செய்ய சொல்லி, அம்புட்டு பேர் சொல்லியும்.. வேண்டவே வேண்டாம்ன்னு ஒத்த காலுல நின்னவருடி..

 

ஹ்ம்ம் அதாண்டி ஆச்சரியமா இருக்கு.. சின்ன வயசுல கண்ணாலம் வேண்டாம்னு சொன்னவரு இப்போ பொண்ணுக்கு சம்பந்தம் பேசுற நேரத்துல கண்ணால செய்யப் போறாரு.. என ஊர் மக்கள் தங்களின் பலவித யோசனைகளை பகிர்ந்து கொண்டும்.. என்னவாய் இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் சலசலத்துக் கொண்டிருந்தனர்..

 

அடியே அய்யா குடும்பம் மட்டும் இருக்காங்க.. பொண்ணு வீட்டுக்காரவுக யாரையும் காணோம்..

 

எனக்கென்னமோ சரியா படலடி.. பாரேன் அய்யா முகத்திலயும், வீட்டு பொம்பளைங்க முகத்திலயும் கொஞ்சம் கூட சிரிப்பே இல்ல.. என ஒரு கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.. 

 

அவர்கள் பேசியது போல் தான் அகத்தியன் வீட்டு பெண்மக்கள் இருந்தனர்.. ஷாலினியை தவிர்த்து.. ஆண்களில் அமுதன் அகத்தியனை தவிர்த்து மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்..

 

அகத்தியன் பட்டு வேஷ்டி சட்டையில் முகம் இறுகி நின்றிருந்தான்.. குழலி பட்டு தாவணியில் பயமும் பதட்டமுமாக தந்தையின் கரத்தை பிடித்தவாறு நின்றிருந்தாள்.. அம்மையப்பன் வீட்டின் பெண்மக்கள் முகத்திலும் களையே இல்லை.. அனைவருமே ஒருவித இருக்கத்துடனும் பதட்டத்துடனும் இருந்தார்கள்.. ஆனால் ஷாலினியும் மற்ற ஆண்களும் மகிழ்ச்சியுடன் அதியின் வரவிற்காக காத்திருந்தார்கள்.. 

 

அய்யா நேரமாச்சுங்.. என அருமைக்காரர் வந்து சொல்லி கொண்டிருக்க.. ஆறு கார்கள் வரிசையாக வந்து நின்றது.. ஊர் மக்கள் அனைவரும் அதனையே ஆர்வமும் ஆச்சரியமுமாக பார்த்தார்கள்..

 

ஓர் காரிலிருந்து அதியின் தாய் மணிமேகலை தந்தை கிருஷ்ணகுமார், தங்கை மதுமித்ராவும், அதியின் தம்பி மித்ரனும் இறங்கினார்கள்.. அவர்களோடு கிருஷணகுமாரின் தாய் அலமேலுவும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இறங்கினார்.. அவருக்கு இங்கு வரவே பிடிக்கவில்லை..

 

மணிமேகலை மித்ரன் கூட வேண்டாவெறுப்பாய் தான் இங்கு வந்திருந்தார்கள்.. அம்மையப்பன் குடும்பம் அவர்கள் அனைவரையும் கண்டு அதிர்ந்து போனார்கள்.. இவர்கள் வருவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை..

 

எதிர்பார்த்திருக்க வேண்டும் மறந்து விட்டனர்.. 

 

மணிமேகலையையே, அமிர்தம் பவளம் மரகதம் மூவரும் வெறித்து கொண்டிருந்தார்கள்.. திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவரும் அவர்களின் முகத்தை காண முடியாது சற்று தலை குனிந்தனர்..

 

மற்றொரு காரிலிருந்து அபய்யின் பெற்றோர், சஞ்சீவ்ரதன் சுஜாதா தம்பதியினர் இறங்கினார்கள்.. மற்ற மூன்று காரிலிருந்து கருப்பு உடை பாதுகாவலர்கள் இறங்கினர்..

 

இருவர் வேகமாக வந்து ரோல்ஸ் ராயஸ் காரின் முன்கதவை திறக்க.. ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஒயிட் ஷர்ட், பிளாக் கலர் ப்ளேசருடன் கூலிங் கிளாஸ் என அட்டகாசமாய் இறங்கினான் அபயசிம்ஹா சக்சேனா..

 

மறுபக்கம், சிவப்பு நிற டிசைனர் பிளைன் ஃபிரில்ஸ் புடவையை அணிந்து, கர்லிங் செய்த முடியை இருப்பமும் சற்று எடுத்து பின் செய்து.. மல்லி பூ வைத்து, காதில் நீளமான ஜிமிக்கி கண்களில் கூலிங் கிளாஸ் என வித்தியாசமாக இறங்கினாள் அதி.. 

 

அபய் பின்பக்கம் கதவை திறக்க பட்டுபுடவை தலை நிறைய பூ, நெற்றியில் குங்குமம் என அம்சமாய் சிற்பிகா புன்னகைக்க.. அபய் எப்பொழுதும் போல் அவளிடம் மயங்க தொடங்கினான்.. அது பொருக்காத அவன் மகன் தொண்டையை திறந்தான்..

 

அடேய் வில்லா உங்கம்மாவ பாக்க கூட கூடாதடா என அவனை தூக்கவும், சிற்பிகா இறங்கினாள்..

 

ம்ம்.. ம்ம்.. மா என அவன் கை காலை உதைத்து தாயிடம் செல்வதற்காக சிணுங்கினான்..

 

டார்லிங் இங்க வாங்க.. என அதி தூக்கவும், பொக்கை வாயுடன் அவளை பார்த்து சிரிக்க.. அதில் மயங்கிய அதி மென்மையாக அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!