Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

உறவாக அல்ல உயிராக 10

உறவாக  அல்ல  உயிராக

     அத்தியாயம்  –  10



Advertisement

    நிர்மலா  மயங்கி  சரியவும்.  விமலும், திருச்செல்வனும்  நிர்மலாவை   பிடித்து  கொண்டனர்.

Advertisement

Advertisement

  அங்கே  எல்லோருக்கும்,  பதட்டமாக  இருக்க.  இனியாதான், பொறுப்பை  ஏற்று.  எல்லோரும்  தள்ளுங்க  என்றவள். தண்ணி  கொண்டு  வாங்க.

  இனியா  பிரகாதீஸ்வரனை  பார்க்க  அவன்  கையில்  ப்பிரித்தம்மை  வைத்து  இருக்க. இனியனை  அழைத்தவள் . அத்தையை  தூக்கு  என்று சொல்ல. இனியனும், திருச்செல்வனும்   நிர்மலாவை  தூக்க  அந்த  ரூம்பில்  படுக்க  வைங்க  என்றவள்.

Advertisement

  தண்ணி , தண்ணீர்  என்று  கேட்க ஒருவர்  கொண்டு  வந்து  கொடுத்தார்.  தண்ணீரை  நிர்மலாவின்  முகத்தில்  தெளிக்க.  அவருக்கு முழிப்பு  வரவில்லை. இனியா  அத்தை  அத்தை  என்று  அவரின்  கன்னத்தை  தட்ட   நிர்மலாவுக்கு.  நினைவு  வராமல் இருக்க.

  இனியா  உடனே  தன்  காரை  நோக்கி ஓடியவள்.  அவளின்  மருத்துவ  கிட்டை  எடுத்து  வந்து  நிர்மலாவுக்கு  ஒரு  ஊசியை  போட்டவள் , அவரின்  வாயை  திறந்து  ஒரு  டேப்லட்டை  வைத்தவள். நிர்மலாவின்  கன்னத்தை  தட்ட   மெல்ல  கண் விழித்தார்.

 விமலுக்கோ   தான்  டாக்டர்  என்று  கூட  நியாபகம்  இல்லை. நிர்மலாவை  மட்டும்  நினைத்து  கொண்டு  இருக்க.

  நிர்மலா  கண்விழித்ததும்.  பக்கத்தில்  இருந்த  அவரின்  கணவரிடம். என்னை  ஏமாத்திட்டான்  . என் பிள்ளை   என்று  வெடித்து  அழுதார் .  அவரோ  அழத  நிம்மி   உனக்கு  ஏதாவது  ஆகிடா போகுது  பாத்துகலாம். திருச்செல்வனிடம் நிர்மலா  அண்ணா  எவ்வளவு  நம்பிக்கை  வைத்தேன் . பிரகாவின்  மேல்  என்று சொல்லி அழுக.

 இனியா அத்தை  ரொம்ப  அழுகதிங்க.  உங்களுக்கு  ஏற்கனவே  லோ .பி. பி  இருக்கு  பொறுமையா  பேசுங்க.

 என்ன  பொறுமையா  பேசறது. சொல்லு  இனியா . என்  கனவு  , ஆசை  எல்லாம்  போச்சு. என்  ஒரே  பையன்  கல்யாணத்தை  எப்படி  எல்லாம்   நடக்கனுமுன்னு  ஆசை பட்டேன்.  இப்போ  பாரு  எவ்வளவு  பெரிய  அவமானம்.

   என்  அண்ணனுக்கு  என்ன   சொல்வேன் . மகிழ்  கேட்குற  கேள்விக்கு எப்படி    பதில்  சொல்வேன். என்று  புலம்ப.

  இனியா  ரூம்பில்  இருந்த  அனைவரையும்  கொஞ்சம்  வெளியே  போங்க  என்றவள்.

   விமல்  பக்கத்திலே  இருக்க  நீங்களும்  போங்க  மாமா  அத்தை  கிட்ட  பேசனும். இல்லம்மா  நான். என்  நிம்மி  விட்டு  போக மாட்டேன்  என்று  சொல்லி. அவரின்  கையை  பிடித்து கொள்ள.சரி நீங்க  மட்டும்  இருங்க   என்றவள்.  அனைவரையும்  வெளியே  அனுப்பி  கதவை  மூடியவள்.

 நிர்மலாவின்   அருகில் வந்து  அத்தை  பொறுமையா  யோசிக்க, அத்தான்  மேல்  உங்களுக்கு  நம்பிக்கை  இல்லையா.

  நம்பிக்கை  இருக்கு  இனியா. பிரகா  தான்  ஒரு  குழந்தையை  வைத்து.  இது  என்  குழந்தையின்னு  சொல்லுறானே. என்னை  எப்படி  அவன் நம்ப  சொல்லுற . இந்த  விசயத்தை   கல்யாணத்துக்கு  சம்மதம்  கேட்டப்ப  சொல்லி  இருக்கனும்.  இப்போ  வந்து  3  வயசு குழந்தை  என்னுடையது  அப்படியின்னு  சொன்ன  என்ன  அர்த்தம். அந்த  குழந்தையை  பாத்தீயா  அப்படியே பிரகாவை  போலவே   இருக்கான். இத  என்கிட்ட  முன்னாடி  சொல்லி இருக்கனுமுள்ள.

 இனியா  அத்தை நீங்க  சொல்லுறது  சரிதான். அத்தானை  கூப்பிட்டு பொறுமை  பேசுங்க. அவர்  ஏன்  கல்யாணத்துக்கு ஓகே சொன்னார்.  சொல்லிட்டு  இப்போ  குழந்தையை  பத்தி ஏன்  சொன்னாருன்னு.

 நீ  ,போ  இனியா  எனக்கு  பிள்ளையே இல்ல.  நான்  யார்கிட்டையும் பேச  மாட்டேன்.

  அத்தை  இப்போ  கோப்படுற  நேரம்  இல்லை . இப்பவே  மணி      1 ன்னு . நாளைக்கு  இந்த  கல்யாணம்  நடக்கனுமா  , இல்லையாயின்னு   முடிவு எடுக்குற  நேரம்.  நான்  சொல்லுறேன்னு   கோப  படாதீங்க,   அத்தானை  பத்தி  எனக்கு  தெரியும். அவர் எது செய்தாலும். அதில் ஒரு  நல்லது  இருக்கும். குழந்தையை பத்தி  சொல்லாம  மகிழ  கல்யாணம்  பண்ணி இருக்கலாம். அவர்  உண்மையை , இப்போ சொல்ல  வேண்டிய  அவசியம்  என்ன  யோசிக்க.  நம்ம  கிட்ட   இருந்து இந்த விசயத்தை  அவரால  மறைக்க  முடியாத , முடியும். அத்தான் பிரகாதீஸ்வரன்  பொய் பேச மாட்டார் . சின்ன  வயசுல  இருந்து  பாத்துட்டு  வர்ரேன்.

 நீங்க அத்தான்  கிட்ட  இருந்து  என்ன  சொல்லுறாருயின்னு   பாருக்க.  சரியா , நான்  போய்  அத்தானை  அனுப்புறேன். நீங்க அவர்  கிட்ட  பேசி  நல்ல  முடிவுக்கு  வாங்க.

 விமல்ராஜ்ஜோ  இனியாவை  பார்த்து  இருந்தார். நாங்கள்  என் பிள்ளைமேல்  வைக்காத  நம்பிக்கை. இந்த  பெண்  வைத்துள்ளாள்  என்று ஆச்சரியமாக  பார்கக.

  கதவை  திறந்தவள், பிரகாதீஸ்வரனை  பார்க்க  அவனோ . அவள்  உள்ளே  பேசியது  அனைத்தும்  வெளியே  இருந்தவர்களுக்கு  கேட்டது. இரவு,   அமைதியான சூழ்நிலை, கதவில் பக்கத்தில்  சன்னல்  திறந்து  இருக்க அனைத்தையும் கேட்டனர்  அங்கே  இருப்பவர்கள்.

  பிரகாதீஸ்வரனிடம்  இருந்த  குழந்தையை   வாங்கியவள் ,  பிரகாவை  உள்ளே  போக  சொல்ல.   குழந்தை புதியவளை பார்த்து அழ. அட  அழ  தட   கண்ணா   ஆண்ட்டி. டா வா டா  நாம  வெளியில்  போகலாம்   என்று  தூக்கி  கொண்டு  இனியனை  அழைக்க  அவனும்  அவள்  பின்னால்  போனான்.

 இனியா  ப்பிரித்தம்மை   பார்த்து  கொள்வான்  என்று  உள்ளே  செல்ல.

  கட்டிலில்  படுத்து  இருந்தார்.  நிர்மலா அவரின்  அருகில்  சென்றவன். சாரிம்மா  நான்  உங்ககிட்ட   முன்னால  சொல்லி  இருக்கனும்  சொல்ல  முடியலம்மா  என்றவன்.  ப்பிரித்தம்  என்  குழந்தை தான் .

 நான் என்  நண்பனுக்கு குழந்தையில்லான்னு  சொன்னாதால. நான்  என்னுடைய  உயிர்  அனுவை  கொடுத்து  உதவி  செய்தேன். செயற்கை  முறையில்    குழந்தை  பிறந்தது.

 எழுந்து  அமர்ந்தார்  நிர்மலா  என்ன   சொல்லுற பிரகா.

  என்னுடைய  நண்பன்  முகுந்தன். அவனுக்கு  கல்யாணமாகி  ரொம்ப  வருஷமா  குழந்தை இல்ல.  அவன்  பொண்டாடிக்கு  ஒன்னும்  பிரச்சனை இல்ல.  இவனுக்கு  தான்   அணு  கவ்டிங்கு   கம்மியா  இருந்தது.

 அவன்  என்னிடம்  உதவி  கேட்டான்.  நான்  செய்தேன்ம்மா.  வேற  எந்த  தப்பும் நான் செய்யல .

 முகுந்தன்  நான்  பண்ண  முதல்   ப்ராஜட்டுக்கு  மிகவும்  உதவி செய்தான்.   அவன்  இல்லனா  நான்  செய்த  முதல்  வேளை  நின்னு இருக்கும் .  ரொம்ப   நல்ல  நண்பன்  மா . அவன் ஒரு  உதவியின்னு  கேட்டப்போ  மறுக்க முடியல.

 3 நாள்  முன்னாடி தான்   அவனுக்கு  பத்திரிக்கை  வைக்க  போனேன் . அப்போ  தான்  எனக்கு விசயம்  தெறிஞ்சது.

 முகுந்தன்  மனைவிக்கு  இப்போது  இயற்கையாக  கற்பமாக   இருக்காங்க.  அதனால என்  மூலமா  வந்த  குழந்தை  அவங்க   சரியா  பாத்துகறது  இல்லையாம்.

 முதலில்  நல்லா தான் ப்பிரித்தம்மை  பாத்துகிட்டாங்கலாம்   இப்போ . இந்த  குழந்தை   இயற்கையா  வந்த  விட   . அவனை   சரியா  பாத்துகிறது  இல்ல.

முகுந்தனிடம்  சண்டை  போட்டு  ப்பிரித்தம்மை  ஆனாதை  இல்லத்துல  கொண்டு  போய்  விட்டுடாங்கலாம்.

   முகுந்தனை என்னால  கண்ணால  பாக்க முடியல . ஹாஸ்பெட்டல  இருந்தான். எவ்வளவு  கம்பீரம  இருப்பான் . இப்போ  இரண்டு  தடவை  தற்கொலைக்கு   முயற்சி  பண்ணி  இருக்கான்.  அவன  நான்   என்ன கேட்பேன்.

   எனக்கு என்ன பண்ணனும்முன்னு  தெரியல . ஆனாதை   இல்லம்   தேடி போனேன்.  ப்பிரித்தம்மை  பத்தி கேட்டு  குழுந்தையை   பாக்க போனேன்.  அது ஒரு பெரிய ஹால்  நிறைய  குழந்தை  இருந்தது.  அங்கே இருந்த  குழந்தைகள்  எல்லோரும்  விளையாட . இவன் மட்டும்  ஒரு   முலையில்  உள்ள  சேரில்  உக்கார்ந்து  இருந்தான்.  பக்கத்தில்  போய் பார்தேன் .  என். அனுவில்   இருந்து  உருவான பிள்ளை  என்னை  போலவே  இருந்தான்.  என்ன மாதிரியான  உணர்வுண்ணு  எனக்கு சொல்ல தெரியல. ப்பிரித்தம்  பக்கத்தில்  போய்  உக்கார்தேன் . அவன்  என்னை  பார்த்து  அந்த  பக்கம்   திரும்பி  கிட்டான்.  அவன்  இங்கே  வந்ததுல  இருந்து  யாருக்கிட்டையும்  பேச  மாட்டானாம்.  மம்மி  வேணும் , டாடி  வேணும்  அழுவானாம் .

 எனக்கு  எப்படி  இருக்கும்  அம்மா  என்று  சொல்லி  நிர்மலாவை  அனைத்து கொண்டான். என்னால முடியலம்மா  பச்ச  குழந்தை  அவனை  விட்டு  வர   முடியல.கூப்பிட்டு  வந்துட்டேன் .

  நிர்மலா   பிரகாவிடம்  சாரிடா  சாரி   நான்  உன்னை  தப்ப  நினைச்சுட்டேன்   என்று  கூற.

   பிரகாதீஸ்வரன்  நிர்மலாவிடம்  பரவாயில்லைம்மா , நாள்  இப்படி  ஒரு  குழந்தையை  காட்டி , என  குழந்தையின்னு  சொன்னா  எல்லோரும்  தப்பா  தான்  நினைப்பாங்க.

 திருச்செல்வன். பிரகாதீஸ்வரனின்  அருகில்  வந்து  உன்னை  பத்தி  எங்களுக்கு   தெரியாத  மாப்பிள்ளை.

 அண்ணா  என்று  நிர்மலா  ஏதோ  சொல்ல  வர .

 திருச்செல்வன்  இந்த  கல்யாணம்  நாளை  நடக்கும்  என்று  சொல்ல.

  அங்கே  இருந்த  மகிழ். எனக்கு  இந்த  கல்யாணத்துல  விருப்பம்  இல்ல.

கோமதி  மகிழிடம், ஏய்  வாயை  மூடு  அதான்  பிரகா  மாப்பிள்ளை  மீது   எந்த  தப்புமில்லையின்னு   தெரிஞ்சு  போச்சுல . அப்புறம்   என்ன.

 அப்போ  அந்த  குழந்தை என்று  மகிழ்  கேட்க .

 நிர்மலா  குழந்தையை  நான்  பார்த்துகிறேன். மகிழ்  நீ  கவலை  படாத .

  பிரகாதீஸ்வரனோ    அம்மா  என்  குழந்தை  என்க்கிட்ட  தான்  இருக்கும்.

  பாத்தீங்களா  அத்தை  இப்போவே  என்  குழந்தையின்னு  பேசுறாரு  நாளைக்கு  எனக்கு  ஒரு குழந்தை  பிறந்த  அது  இரண்டாம்  பச்சமாக  தானே இருக்கும்.

   அந்த  குழந்தை  தானா உங்க  முதல்  வாரிசு என்று பேச.

திருச்செல்வன் மகிழ்  அமைதி பேசு. கோமதி  மகிழின் அருகில்  வந்து  அடிச்சேன்னு   வையு .  என்ன  பேசுற  அவன்  சின்ன  குழந்தை டி .நாங்க  பாத்துகிறோம். நீ  அந்த  குழந்தையை  பார்க்க

 வேண்டாம். சொன்ன கேளு  கல்யாணத்துக்கு  சம்மதம்  சொல்லு.

  இனியாவும் , இனியனும்  மகிழின்  அருகில்  வர .  குழந்தை  இனியாவின்  கையில்  இருந்தது.

   இனியாவின்  கழுத்தில்  உள்ள  செயினை பிடித்து  குழந்தை  விளையாட. அவளை முத்தம் கொடுத்து விட்டு  இனியனை  பார்த்து  சிரிக்க.  இனியன்  என்  தங்கை  என்று  சொல்ல.  குழந்தை  என்  ஆண்டி  என்று  சொல்லி  விளையாட. அந்த  குழந்தையின்  சிரிப்பு எல்லோரையும்  ஈர்த்தது.  இனியா  மகிழின் பேச்சை  கேட்டு கொண்டு  தான்  வந்தாள்.

 ப்பிரித்தம்மை   கோமதியிடம்  தர.  அவன்  போக  முடியாது என்று   தலையை ஆட்ட.  கோமதி வாடா   தங்கம்  பாட்டி கிட்ட  வாங்க . குழந்தை  இனியாவின்  கழுத்தை  கட்டி  கொண்டது.

 இனியா பிரகாவை  காண்பித்து  அப்பா கிட்ட  போ  என்று  கூற . குழந்தை பிரகாவை பார்த்து  சிரித்து   அவனிடம்  சென்றது.

 இனியா  மகிழிடம். இப்போ  உனக்கு  என்ன  பிரச்சனை  மகிழ்  அத்தானை  கல்யாணம்  பண்ண.

 பிரகாதீஸ்வரன்  விடு  இனியா  விருப்பம்  இல்லாமல்  யாரும்  என்னை   கல்யாணம்  பண்ண  வேண்டாம்.

 அத்தான்  கொஞ்சம்  பொருங்க  . அவளுக்கு  சின்ன  வயசுல  இருந்து  உங்கல  பிடிக்கும்.  எடுத்து  சொன்னா  கேட்பா.

யார்  சொன்னாலும்  நான்  கேட்க   மாட்டேன். இந்த  கல்யாணம்  எனக்கு வேண்டாம்.

 மகிழ். யோசி  அத்தானை  பத்தி  உனக்கு  நான்   சொல்லனுமுன்னு  அவசியம்  இல்ல .  அவர விட  நல்லவர்  உனக்கு  கிடைக்க  மாட்டார்.

 என்னடி  ரொம்ப  சப்போர்ட்  பண்ணுற.  அந்த  நல்லவரை   நீ  கல்யாணம்  பண்ணிக்கோ.

ஏய்  மகிழ்  என்ன  பேசுற . புரிஞ்சு  தான்  பேசுறேன்.

 இங்கே  பாரு  நான்  ரொம்ப  தெளிவ இருக்கேன் .  எனக்கு   அத்தான்  வேண்டாம்.  உனக்கு  அவர்  நல்லவர  தெரிஞ்சாருன்னு  வையி  நீயே  கட்டிக்கோ   என்னை விடு என்று  கூறி  அவளின் ரூம்  சென்று  விட்டாள்.

அனைவரும்  இனியாவை  பார்க்க. அந்த   பார்வையில்  உள்ள  அர்த்தத்தை அறிந்தவள். அய்யோ  என்றானது.

   கோமதி  இனியாவின்  அருகில்  வந்து . இனியா நீ  பிரகாதீஸ்வரனை   கல்யாணம்  பண்ணிக்கிறியா  என்று கேட்க.

அம்மா  நான்  அத்தானை  எப்படிம்மா.என்னால  முடியாது  சாரிமா. நிர்மலாவோ  இனியாவின்  கையை  பிடித்து  கொண்டு இனியா  என்று கூற வர.

 அத்தை  நீங்க  எதுவும். சொல்லாதீங்க. அதை  என்னால மறுக்க  முடியாது. எனக்கு. இப்போது   கல்யாணம்  பண்ணுற  ஐடியா  இல்ல.

  நான்  அத்தானுக்கு  சரியான  ஜோடி  இல்ல . அத்தான்  உலகத்தையே  சுத்தி  வர்ர  வரு.

என்னால  பொள்ளாச்சியை  விட்டு  நகற  முடியாது. எனக்குன்னு  தேவேந்திரன்  தாத்தா  நிறைய  பொறுப்பை   கொடுத்து  இருக்காரு  அதை  நான்   பாத்துக்கனும். சாரி  அத்தை ,அத்தானுக்கு   என்னை விட  நல்ல  பொண்ணு  கிடைப்பா.

 நீங்க  கல்யாணம்  நிக்குதுன்னு  வருத்தபடதீங்க.  இன்னும்  கொஞ்ச  நாள்  கழிச்சு. அத்தானுக்கு   நல்ல  மொண்ணு அமையும். உங்களுக்கு ப்பிரித்தம்மை  பார்க்க  முடியலன்னா  சொல்லுங்க. நானும்   பாட்டியும்  பாத்துக்கிறோம்.

 அனைவரும்  இனியாவை  தான் பார்த்து  இருந்தனர்.சின்ன  பொண்ணு இப்படி  பொறுப்பு  பேசுது  என்று  பார்க்க.

 பிரகாவோ   இனியாவை   ஆழ்ந்து  பார்த்தான்.  என்  மேல் உனக்கு  ஏன்  இவ்வளவு  நம்பிக்கை , பாசம்,  என்னை  விட  நல்ல  பெண்  கிடைப்பாள்  என்று  சொல்லும்  அவளின்  நல்ல  உள்ளம். நான்  என்ன  செய்தேன்   இவளுக்கு.

  கோமதியிடம்  வந்த   இனியா  அம்மா  நா  கிளம்புறேன். பொள்ளாச்சிக்கு   என்று கூறிவிட்டு.  மீனாட்சியை  பார்த்து வா பாட்டி  நாம  கிளம்பலாம்.

 நான்  வர மாட்டேன்,  என்று  ஒரு  சேரில்  போய்  உட்கார்ந்து  கொள்ள.

ஐய்யோ என்று  இருந்தது  இனியாவுக்கு. இவ்வளவு  நேரம்  பேசி  அவளுக்கு  தொண்டை  வலிக்க.

மீனுக்குட்டி   என்றவள்.  உனக்குதான்  எல்லாம்  தெரியுமுல்ல.  சின்ன  குழந்தை  மாதிரி  பண்ணாத  பாட்டி. வா  போகலாம்.

 நான்   வரமாட்டேன் . என்  பேரன்  கல்யாணம்  நடந்த தான்  வருவேன்.

  இனியா  “பாட்டி  அதான்   மகிழ்   கல்யாணம்  வேண்டாம்னு  சொல்லிட்டாளே”.

 அப்போ  எப்படி  கல்யாணம்  நடக்கும்.

 அதான் நீ  இருக்கீல . என்  பேரனை  கட்டிக்கோ.

 பாட்டி  என்றவள். பல்லை கடிக்க. உன்  பேரன்  வாழ்க்கை  முறை  வேறு . என்   வாழ்க்கை  முறை  வேறு. அத்தான்   இயற்கையை அழகை  உலகம்  பூரா   சுத்தி  பார்த்து  ரசிக்குரவரு.  நாடு நாடா போய்  வேலை   பாக்குறாரு.

 நான்  அப்படியா. பொள்ளாச்சியை  விட்டு   என்னால  வர  முடியாது.  சொன்ன  புரிஞ்சுக்கோ  பாட்டி.எங்க இரண்டு பேருக்கும்  சரிவரது.

 மீனாட்சியோ   இனியாவிடம்  நீ  நான்  சொல்லுறத  கேளு . பிரகாவை  உனக்கு பிடிக்குமா , பிடிக்காதா.

 பிடிக்கும்.

 அப்பறம்  என்னடி.

நீ  புரிஞ்சுக்க  மாட்டா  என்றவள்.

திருச்செல்வனிடம் சென்று  அப்பா  உங்க  அம்மா கிட்ட  சொல்லுங்க. என்  கூட  பொள்ளாச்சிக்கு  வர  சொல்லி.

 மீனாட்சி  என்  பேரன்  கல்யாணம்   நடக்காம.  நான்  இந்த  மண்டபத்துல  இருந்து வர மாட்டேன்.  அப்படி  நான்  கல்யாணம்  நடக்காமா   போகுறத  இருந்த  . நான்  போக  மாட்டேன். என்   பொனம்  தான்  போகும்.

  திருச்செல்வன்  அதிர்ச்சியில்  அம்மா  என்க. அத்தை  பாட்டி  அம்மா என்று அனைவரும் இப்படி  பேசாதிங்க  என்று  கூறி  கொண்டு  இருக்க.

 இனியா  மீனாட்சியிடம்  வந்தவள். இப்போ  என்ன   உன்  பேரனை நான்  கலயாணம்   பண்ணிங்கீறேன்.  ஆனா  ஒரு  கண்டிசன்.  கல்யாணம்  நடந்தாலும்  நான்  பொள்ளாச்சியில் தான்  இருப்பேன்.  அதற்கு சம்மதமா அத்தான்  கிட்ட கேளு.

 மீனாட்சி  பிரகாவிடம்  உனக்கு  சம்மதமா  அய்யா என்று கேட்க.

  எனக்கு  சம்மதம்  பாட்டி  என்று  கூற.

 இனியாவோ  பிரகாவை  அதிர்ச்சியாக  பார்க்க. அவன்  இதற்கு  சம்மதிக்க மாட்டான்  என்று  நினைக்க.

  பிரகாதீஸ்வரன்  இனியாவை  பார்த்து  நாளைக்கு  காலையில்  உனக்கும்  எனக்கும்  கல்யாணம்  போய்  ரெடியாகு  பேபி  என்று  சொல்லி கண்ணடித்து  செல்ல.

 ஆவென்று  பார்த்து  இருந்தாள்  இனியா…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!