Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 20

அம்மையப்பன் 20

 

பொண்ணு வந்துடுச்சு அருமைகாரரே நீங்க அடுத்து பாருங்க.. என அம்மையப்பன் கூறினார்..

 



Advertisement

அப்பொழுது பக்கத்தில் நின்ற பெண்கள் கூட்டத்திடம் சலசலப்பு.. என்னங்கடி இது, பெரியய்யா இப்படி சொல்லுறாங்க..

 

ஆமாடி அந்த காருல வந்தவுக பொண்ணு வீட்டுக்காரவங்க போலருக்கு..

Advertisement

 

Advertisement

ஆனா பொண்ண காணுமேடி.. என மணப்பெண் அலங்காரத்தில் யாரும் இல்லாததைக் கண்டு பெண்கள் குழம்பி போயினர்..

 

ஷாலினி அதியையே விழிகள் விரிய ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் உடை அலங்காரம் எல்லாம் சின்னவளுக்கு மிகவும் பிடித்திருந்தது..

Advertisement

 

சட்டென அதி நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள்.. பவளம் கூப்பிட்டும் நிற்காது.. அக்கா என அதியின் அருகே சென்று நின்று அவள் கரத்தை பிடித்துகொள்ள.. அதியை பற்றி நன்கு தெரிந்தவர்கள் என்ன செய்ய போகிறாளோ பாவம் சின்னபெண் என நினைத்து கொண்டனர்..

 

ஆனால் அங்கு நடந்ததெல்லாம் அவர்களின் நினைப்புக்கு மாறாய் இருந்தது.. 

 

அக்கா.. இந்த சேரில சூப்பரா இருக்கீங்க க்கா.. என ஆசையாக ஷாலினி அவளை பார்த்தவாறு சொல்ல.. அதி அவளையே இமைக்காது பார்த்தாள்..

 

அதில் ஏதோ ஒன்று இருந்தது.. 

 

பலவருடங்களுக்கு முன்பு, பால் வெள்ளை சிரிப்புடன், தன் கரத்தை இறுக்கி பிடித்தவாறு, இதே போல் சின்னவள் நின்றிருந்த நிகழ்வு மீண்டும் அதியின் விழிகளில் உலா வந்தது.. அதியும் அபயும் கண்ணோர சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.. 

 

அபய் புருவம் உயர்த்தி ஷாலினியை பார்த்தவன்.. ஷிஸ் லைக் யூ.. என கூற.. அதி தன் பார்வையை அவளிடமிருந்து மாற்றினாள்..

 

நாட் எக்ஸாக்ட்லி என அதி சொல்லி.. மெல்ல குழந்தையை கொடுப்பது போல் ஷாலினியிடமிருந்து தன் கரத்தை உருவிகொள்ள.. ஷாலினியின் கவனம் இப்பொழுது குழந்தையிடம் சென்றது.. அவள் சிற்பிகாவிடம் மாறிய குழந்தையை கொஞ்ச.. சிற்பிகா சிரித்தாள்.. 

 

அதியின் பிறந்த வீட்டினர்.. அதாவது மும்பையில் இருந்து வந்திருந்த மணிமேகலையும் மற்ற எல்லோரும் இதனை அதிர்வுடன் பார்த்து கொண்டிருந்தார்கள்.. அதுவும் மதுமித்ராவின் விழிகளில் அதிர்ச்சியோடு அதிகளவு பொறாமையும் இருந்தது..

 

இதுவரை அவளே அதியிடம் இவ்வளவு அருகில் நின்று பேசியதில்லை.. அதற்கு அவளின் பயம் விடவில்லை என்பதும் ஒரு காரணம்.. ஆனால் ஷாலினியோ அதியின் கரத்தை பற்றியவாறு பேசியதை கண்டு அவளுக்கு வருத்தமும் அதியின் மேல் ஆதங்கமும் வந்தது.. தங்களிடம் இப்படி இல்லையே என்று.. 

 

அவர்கள் மட்டுமல்ல அம்மையப்பன் வீட்டு பெண்களுக்கும் ஷாலினியின் இச்செயல் அதிர்ச்சியே.. அதுவும் குழலி யாழினி அமுதன் மூவரும் கோபத்தோடு அவளை பார்த்தார்கள் எனில், தந்தைகள் இருவரும் மகிழ்ச்சியோடு பார்த்தார்கள்..

 

அக்கா.. குட்டி பையன நான் தூக்கவா.. என ஷாலினி ஆசையாக கேட்க.. சிற்பிகா தன்னவனின் முகத்தை பார்த்தாள்.. அதில் சம்மதம் தெரியவும் குட்டியை கொடுக்க அவன் போக மறுத்தான்..

 

செல்லகுட்டில வாங்க சாமி.. என்ற தங்கம்ல்ல, இந்தா இந்த பூவ வச்சுக்கோங்க என விதவிதமாக கொஞ்ச.. அவன் முகத்தை திருப்பி பிகு செய்தான்..

 

ஷாலினியின் முகம் சற்று வாட.. குட்டி நம்ம அக்காடா.. கொஞ்சம் நேரம் போறீங்களா என சிற்பிகா சின்னவளின் வருத்தம் பொருக்காது மகனிடம் கெஞ்சி கொஞ்ச.. தந்தையை போல் தாயின் கொஞ்சளில் மனமிறங்கிய குட்டி அபய் ஷாலினியிடம் தாவினான்.. 

 

ஹேய்.. தங்ககுட்டி வந்துட்டாங்க.. என்ற தங்கத்துக்கு அம்மான்ன அம்புட்டு புடிக்குமா.. அம்மா சொன்னாதான் வருவீங்களா என அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, வயிற்றில் முகம் புதைத்து கிச்சு கிச்சு மூட்ட.. குழந்தை கிளுக்கிச் சிரித்தான்..

 

அக்கா குட்டி பையன் பேரு என்ன..

 

அஸிகரன்.. என மென்மையாக சிற்பிகா சொல்ல..

 

முழுப்பேர் சொல்லு சிற்பிக்குட்டி என அபய் தன்னவளை வம்பிழுத்தான்..

 

சிற்பிகா தலைகுனிந்து மறுக்க..

 

வார்த்தைக்கு வார்த்தை சிம்மு மாமு சொல்ற.. முழுப்பேர் சொல்ல மாட்டியா என அதியும் கிண்டல் செய்தாள்..

 

சிற்பிகா வெட்க சிணுங்களோடு.. அஸிகரன் சிம்ஹா சக்சேனா என சொல்ல..

 

இது இன்னும் முழுமை இல்லை.. இடையில ஒரு பேர் விட்டுட்ட.. என அபய் கேலி செய்ய, மாமு என சிணுங்கினாள் சிற்பிகா..  

 

அதி, அபய் போதும் டைம் ஆகிடுச்சு.. போகலாம் என சுஜாதா சொன்னவர்.. வாங்க போகலாம் என கிருஷ்ணகுமாரையும் மற்றவர்களையும் அழைத்தார்..

 

எல்லோரும் கோவிலுக்குள் செல்ல.. ஊரே யார் பெண் என தெரியாது குழம்பி கொண்டிருந்தனர்..

 

அய்யா பொண்ணு மாப்பிளைய வர சொல்லுங்க.. என அருமைகாரர் அழைக்க.. அகத்தியன் கால்கள் அசைய மறுத்தது.. கை முஷ்டி இறுகி அவன் தன்னை கட்டுப்படுத்த போராட.. அவனின் கரத்தோடு ஓர் கரம் நுழைத்து கொள்ள, அகத்தியன் அதிர்ச்சியாக விழி திறந்து பார்த்தான்..

 

அவன் பக்கத்தில், ஒற்றை புருவம் உயர்த்தி அதி பார்க்க, அகத்தியனின் திகைப்பு குறையவில்லை.. அவளிடமிருந்து தன் கரத்தை பிரிக்க கூட மறந்து அவளையே பார்க்க..

 

அதியோ பார்வையாலையே அவனை நடத்தி கொண்டு சென்றாள்..

 

அதி அவன் கரத்தை பற்றிய நொடி, குழலி அதிர்வுடன் தன் கரத்தை விலக்கிக்கொள்ள, தன்னவளின் மனம் புரிந்த அமுதன், இருக்கமாக அவளின் விரல்களை பற்றி கொண்டான்.. அதில் குழலியின் மனம் சற்று அமைதியானது..

 

அடியே அவுகதான் பொண்ணா.. என்னடி இந்திபட நடிகையாட்டம் இருக்காங்க.. இவங்களா நம்ம அய்யாவ கண்ணாலம் பண்ணிக்க போறாங்க என ஊரே வாயில் விரல் வைத்து, முணுமுணுத்துக் கொண்டிருந்தது.. 

 

ரெண்டு பேரும் மாலை மாத்திக்கோங்க என அருமைக்காரர் இரு பூமாலை தர, அதி அவனின் கரம் விலக்கி அதனை வாங்க அகத்தியன் நிகழ்காலம் வந்தான்..

 

அதியே முதலில் அகத்தியனுக்கு மாலையிட்டாள்.. அப்பொழுது அவன் விழியையே பார்த்து கொண்டிருக்க.. அகத்தியனும் பலவித குழப்பம் வருத்தம் வேதனை என அனைத்தும் மனம் முழுக்க நிறைந்திருந்தாலும் அந்நிமிடம், அதியின் விழிகளை மட்டும் பார்த்தவாரே அவளுக்கு மாலையிட்டான்..

 

திருமாங்கல்யம் தட்டு வர.. எல்லாரும் அதனை தொட்டு கும்பிட்டு, மஞ்சள் கலந்த அரிசி மற்றும் ரோஜா பூ அட்சதையை அனைவரும் எடுத்து கொண்டனர்..

 

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்

அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய

தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கை உண்டே நமக்கு..

 

என அருமைகாரர் மங்களவாழ்த்து பாடி.. திருமாங்கள்யத்தை எடுத்துக் கொடுக்க.. அகத்தியன் ஓர் பெருமூச்சுடன் அதனை வாங்க முற்பட.. 

 

ஒரு நிமிஷம் என அதி அவனை தடை செய்தாள்.. அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்..

 

என்னம்மணி என்னாச்சு என பதட்டமாக கேட்டார் அம்மையப்பன்..

 

இத நானே மிஸ்டர் அகத்தியன் கழுத்துல கட்டுறேன்.. ஏன் லேடிஸ் மட்டும்தான் இத மாட்டிக்கணுமா, என்ன? என கேட்க.. அனைவரும் மயக்கம் போடாத குறையாக அவளை திகைத்து பார்த்தனர்..

 

அம்மணி.. என அம்மையப்பன் அவளை அதிர்ந்து அழைக்க.. 

 

ஹ்ம்ம்ம் என புருவம் உயர்த்திய அதி..

 

என்ன அபி.. நீ என்ன சொல்ற.. 

 

ம்ம்ம் இதுவும் நல்லாத்தான் இருக்கும்.. என அவன் கண் சிமிட்டி தோளை குலுக்க.. சிற்பிகா அதிர்ந்து.. பாவமாய் அகத்தியனை பார்த்தாள்..

 

*******************************

 

பக்கத்தில் இருந்த சொந்த பந்தமெல்லாம் அதியின் ஜாடை மரகதம் போல் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.. என்னவாக இருக்கும், இவளுக்கும் அம்மையப்பன் குடும்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கிறது, எதற்க்கு இந்த திடிர் திருமணம் என பல கேள்விகளை மனதில் வைத்து கொண்டிருந்தார்கள்..

 

அப்பொழுதே அவர்களிடம் கேட்க ஆசைதான்.. ஆனால் குடும்பத்தார் அனைவரும் இறுக்கமாக இருப்பதால் பிறகு கேட்டு கொள்ளலாம் என கஷ்டப்பட்டு தள்ளிவைத்து கொண்டிருந்தனர்..

 

அதியின் கேள்வி அவர்கள் செவியில் விழவும் மொத்தமாக அதிர்ந்து போயினர்..

 

என்னதிது இந்த பொண்ணு இப்படி பேசுது.. இது தாலி கட்ட போகுதா என அனைவரும் திகைத்து இருக்கும் நேரம்.. 

 

ஹலோ அத என்கிட்ட கொடுங்க என விரல்சொடுக்கி தாலியை அவள் வாங்க பார்க்க.. எங்கே அதை தன் கழுத்தில் கட்டிவிடுவாளோ என பயந்த அகத்தியன், அதி வாங்குமுன்பு தானே பறித்து கொண்டான்..

 

அதி அவனை முறைக்க, அவனோ யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை.. சட்டென வாங்கிய நொடி அவள் கழுத்தில் கட்டிவிட்டான்..

 

இப்பொழுது அவன் மனதில் அவள் தாலி கட்டிவிடுவாளோ என்ற பயத்தை தவிர்த்து, எவ்வித அலைபுருதலும் இன்றி அதியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்..

 

அனைவரும் எங்கே அதி அகத்தியன் கழுத்தில் கட்டிவிடுவாளோ என இத்தனை நேரம் பயந்து கொண்டிருந்தவர்கள், அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சுவிட்டனர்..

 

ஜஸ்ட் மிஸ்டி.. இல்லைன்னா உன்ற ஐயன் காலம்பூரா தாலியோடதான் திரிஞ்சிருக்கனும்.. என அமுதன் மாமனை நினைத்து சிரிப்பும், அதியை நினைத்து கடுப்புமாக குழலியிடம் சொல்ல.. அவளோ தந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையில் ஆழ்ந்தாள்.. 

 

நான்தான் உனக்கு கட்டுறேன்னு சொன்னேன்ல என அதி பல்லை கடித்து கொண்டு கேட்க.. அகத்தியன் பாவமாய் விழித்தான்..

 

நடந்த நிகழ்விலிருந்து அருமைக்காரர் இன்னும் வெளிவராமல் இருக்க.. அம்மையப்பன் அவரை கூப்பிட்டு அடுத்து நடக்க வேண்டியதை செய்ய சொன்னார்.. 

 

அடுத்த ஒவ்வொன்றுக்கும் அனைவரையும் படுத்தி எடுத்துவிட்டாள் அதி..

 

பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க.. என பெரியவர் சொல்ல..

 

அகத்தியன் அம்மையப்பன் பேச்சியம்மை காலில் விழ.. அதி அலட்சியமாக நின்றாள்..

 

இவளுக்கு இருக்கிற திமிருக்கு என அமுதன் அதியின் செயலில் பல்லைக் கடித்தான்..

 

நல்லாயிருய்யா என அவனை ஆசீர்வதித்தவர்.. அதியின் சிரத்தில் கரம் பதித்து புள்ள குட்டியோட நல்லாருக்கோனும் அம்மணி என நெகிழ்வுடன் கூறினார்..

 

அடுத்து உள்ள அனைவரிடமும் அவள் இப்படியே நிற்க அகத்தியன் மட்டும் எல்லோர் காலிலும் விழுந்தான்.. திருச்செல்வம் திருநாவுக்கரசு இருவரும் கரம் நடுங்க அவளின் சிரத்தை வருட.. அமிர்தமும் பவளமும் உள்ளுக்குள் புழுங்கினார்கள்.. 

 

அகத்தியன் பக்கம் முடிய.. அவன் கேள்வியாக அதியை பார்க்க.. அவள் கிருஷ்ண குமாரிடம் சென்றாள்.. அகத்தியனும் பின்தொடர்ந்தான்..

 

அவன் மணிமேகலை கிருஷ்ணகுமார் காலில் விழ.. அதி அப்பொழுதும் அவர்கள் காலில் விழவில்லை.. ஆனால் கிருஷ்ணகுமார் அவளை அன்பாக அனைத்து கொண்டார்.. அவர் விழிகள் மகிழ்ச்சியிலும் வருத்தத்திலும் பணித்து கிடந்தது.. பேசக்கூட முடியாத உணர்வுக்குவியல்களில் சிக்கியிருந்தார்..

 

அடுத்து அலமேலு பாதம் பணிய அகத்தியன் முற்பட அதி தடுத்தாள்.. இவங்க ஒன்னும் அவ்வளவு பெரிய ஆளும் இல்ல.. அதி புருஷன் விழுகிற அளவுக்கு தகுதியும் இல்ல.. என அதி திமிராக சொல்ல.. அலமேலுவிற்கு உள்ளுக்குள் வசவுகள் பொங்கிக்கொண்டு வந்தது.. 

 

ஆனால் அதனை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு அதிமேல் பயம் இருக்க அமைதியாக இருந்தார்.. மித்ரன் அவளை முறைக்க.. அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை..

 

அதுவரை இறுக்கமாக இருந்த அதி, சிறு புன்னகையுடன் அபயின் பெற்றோரிடம் சென்றாள்.. 

 

கங்கிராஜுலேசன் அதி என சுஜாதா அதியை அன்புடன் அணைத்து கொள்ள..

 

மென் சிரிப்புடன்.. தாங்ஸ் ஆன்ட்டி.. என அணைத்து கொண்டாள்.. 

 

இது எங்களோட சின்ன கிப்ட்.. என ஒரு கவரை சஞ்சீவ்ரதன் கொடுக்க.. அதி கேள்வியாக அவரை பார்த்தார்..

 

உனக்கு ரொம்ப பிடிச்ச ப்ளேஸ்ல இருந்து, ஒரு தீவ உன் பேருல வாங்கிருக்கோம் என அவர் சொல்ல..

 

அங்கிள் இது இப்போ அவசியம் தானா என ஒரு முறைப்பை கொடுத்தாள்.. இருவரும் அதனை கண்டுகொள்ளவில்லை..

 

அப்பொறம் இது என்னோட செலக்க்ஷன்.. என ஒரு நகை பெட்டியை திறந்து, மூன்று அடுக்குள்ள நீளமான வைர ஆரம் அதனோடு கழுத்தை ஒட்டிய ஆரம், தோடு, மோதிரம், வளையல் என செட்டாக இருந்த நகைகளை பரிசளித்தார் சுஜாதா..

 

அதோடு அவரே நகையை அவளுக்கு போட்டுவிட.. பொன்னகை இல்லாமலே அழகியாக மிளிர்ந்தவள்.. இப்பொழுது அதுவும் சேர்ந்து விடவும் பேரழகியாக திகழ்ந்தாள்..

 

அப்பொறம் மிஸ்டர் அகத்தியன் இது உங்களுக்கு என அவனுக்கும் பிரேஸ்லெட், மோதிரம், செயின், கடிகாரம் என வைரத்தில் பரிசளிக்க அகத்தியன் சங்கடமாக உணர்ந்தான்..

 

அட வாங்கிக்கோங்க வைரத்துக்கும் மேலா எங்க பொண்ணையே உங்களுக்கு கொடுத்துருக்கோம்.. இதெல்லாம் ஒன்னுமேயில்ல என சஞ்சீவ்ரதன் சொன்னார்.. 

 

மற்றவர்கள் இதனையெல்லாம் கண்டு வாயை பிளக்க.. அலமேலு வயிறு எறிந்தார்..

 

அய்யோ அய்யோ இவளுக்கு வந்த வாழ்வ பாரேன்.. நான் இவளை அடக்கி ஒடக்கணும்ன்னு நினைச்சா, இப்படி வளர்ந்து நிக்கிறாளே என உள்ளுக்குள் பொருமித் தள்ளினார்..

 

மணிமேகலை அவர்களை வெறுமையாக பார்த்தார்.. கிருஷ்ண குமார்க்கு வருத்தமாக இருந்தது.. அவரும் அதிக்கு நிறைய செய்ய நினைத்தார்.. ஆனால் அதி விடவில்லை.. 

 

ஆன்ட்டி.. என அதிருப்தியாக அதி இழுக்க..

 

ஷ்ஷ்.. எதுவும் பேசகூடாது.. என சுஜாதா அவளை அடக்கினார்..

 

அதி அபியை பார்க்க.. அவனோ இதழ் பிதுக்கி தோளை குலுக்கினான்..

 

ஒருவழியாக எல்லாம் முடிந்து அனைவரும் வெளியே வர.. வானத்திலிருந்து பூமழை பொழிய ஆரம்பித்தது.. அனைவரும் வாய் பிளக்க மேலே பார்த்தனர்..

 

தன் மேல் விழுந்த ரோஜா இதழ்களை வருடிய அதி.. மேலே பார்த்து.. அபி இட்ஸ் அமேசிங்.. என அவனை அணைத்து கொண்டாள்.. அவள் முகம் அப்படியொரு பொலிவுடன் இருந்தது..

 

இது அபய்யின் ஏற்பாடு என அகத்தியனுக்கு புரிந்தது..

 

வைரநகைகளும் மிகப்பெரிய தீவும் அவளிடம் ஏற்படுத்தாத மகிழ்ச்சியை இப்பூமழை கொடுக்க.. அகத்தியன் அவளை வியப்பாக பார்த்தான்.. அதோடு அவளை குறித்தான பலவித யோசனைகளும் கேள்விகளும் தோன்றியது.. 

 

என்னங்கடி இது.. அந்த பொண்ணு வேற ஆம்பளைய கட்டி புடிக்குது.. நம்ம அய்யாவும் சும்மா இருக்காங்க.. 

 

அட சும்மா இருங்க.. அது அவுக அண்ணனா இருக்கும்.. 

 

பூமழை ஓய.. அனைவரும் அம்மையப்பன் இல்லத்திற்கு செல்ல ஆயத்தமாக.. சஞ்சீவ்ரதன் சுஜாதா தம்பதியர் அங்கிருந்தே அதியிடம் விடைபெற்றனர்..

 

அவர்களின் வேலைபளு அதிக்கு தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை..

 

அப்பொறம் என்ன அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே.. வாங்க போகலாம் என அலமேலு தன் மகனிடம் எரிந்து விழ அதி அவரையே அழுத்தமாக பார்த்தாள்.. பாவம் அவர் அதனை கவனிக்கவில்லை..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!