ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 14
பிடித்தம் 14
மித்ராணியும் கமலாவும் கிளம்பிச் சென்ற சில மணி நேரத்தில் பிரசாத் கமலாவை கைபேசியில் அழைத்தான்.
Advertisement
கமலா, “ஹலோ” என்றதும்,
பிரசாத், “அத்தை மித்து பக்கத்தில் இருக்கிறாளா?”
Advertisement
Advertisement
“இல்ல.. அவ ரூமில் இருக்கிறா.. குடுக்கவா?” என்றதும்,
அவன் அவசரமாக, “இல்ல.. வேணாம்.. நான் உங்க கிட்ட தான் பேசணும் அத்தை.. மித்து பக்கத்தில் இல்லைனா பெட்டர்” என்றான்.
Advertisement
“என்ன?” என்று அவர் யோசனையுடன் வினவ,
அவனோ, “நம்ம மித்து மனோ பத்தி பேசத் தான் அத்தை கூப்பிட்டேன்” என்று அக்கறையான குரலில் கூறினான்.
“ஹ்ம்ம்.. சொல்லு”
“மித்து மனோ மேல் ரொம்ப கோபமா இருக்கா.. அவ கோபம் நியாயமானது தான்.. இருந்தாலும் நாம இப்படியே விட முடியாது தானே!”
“ச்ச்.. எங்க டா! இன்னைக்கு காலையில் கூட பேசிப் பார்த்தேன்.. இவ கேட்டா தானே! கொஞ்சம் கூட இறங்கி வர மாட்டிக்கிறா” என்று கமலா சிறு கவலையுடன் கூற,
அவன், “அதுக்கு தான் நான் ஒரு பிளான் வச்சிருக்கிறேன்……….”
அவர் அவசரமாக, “என்ன பிளான்?”
“நாளைக்கு முகூர்த்த புடவை எடுக்க போறோம் தானே! அதுக்கு மனோவையும் மித்துவையும் தனியா மனோ காரில் வர வைப்போம்”
“ப்ச்.. நடக்கிறதை பேசு” என்று காற்று போன பலூனை போல் இறங்கிய குரலில் ஒருவித சலிப்புடன் கூறினார்.
“மனம் இருந்தால் மார்க்கபந்து.. ச.. மார்க்கம் உண்டு அத்தை.. நீங்க நான் சொல்ற மாதிரி செய்யுங்க.. கண்டிப்பா இது நடக்கும்” என்று அவன் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச,
அவரோ அப்பொழுதும், “அப்படியா சொல்ற!” என்று யோசனையுடன் வினவினார்.
பிரசாத் உறுதியான குரலில், “கண்டிப்பா நடக்கும்” என்றான்.
சற்று நம்பிக்கை பெற்றவராக கமலா, “சரி.. நான் என்ன செய்யணும்?” என்று கேட்டார்.
“இப்போ மித்துக்கு தெரியாம கார் டயரை பஞ்சர் பண்ணுங்க.. ஏதாவது ஆணியை வச்சு ஏதாவது ஒரு டயரை குத்தி பஞ்சர் பண்ணுங்க.. நாளைக்கு காலையில் கிளம்பும் போது மித்து பார்த்துட்டு சொல்லவும் மனோவை போன் பண்ணி வர சொல்லுங்க.. அவ ஒத்துக்க மாட்டா.. ஆட்டோவில் போகலாம் னு சொல்லுவா.. அப்போ.. ‘முகூர்த்தப் புடவை எடுக்க போறோம்.. ஆட்டோவில் போகக் கூடாது.. மனோ வரட்டம்’ னு நீங்க தான் ஸ்ட்ராங்கா சொல்லணும்”
“சூப்பர் ஐடியா தான் ஆனா நானும் தானே கூட வருவேன்?”
“மனோ அங்கே வந்ததுக்கு அப்புறம், எல்லோரும் சேர்ந்து போகலாம் னு சொல்லி இங்கே எங்க வீட்டுக்கு வாங்க.. அப்புறம் அம்மா கிட்ட சொல்லி மனோவையும் மித்துவையும் தனியா வர வச்சிடலாம்.. அம்மா சொன்னா மித்து கேட்பா.. இங்க வச்சு பேசும் போது அப்பா அம்மா முன்னாடி மனோவை விட்டுக் கொடுக்கலையே! நீங்க உங்களோட யோசனை மாதிரி அம்மா கிட்ட சொல்லுங்க”
“சரி.. ஆனா நடக்குமா?”
“அத்தை முதல்லையே என்ன சொன்னேன்?”
“சரி சரி.. நீ சொன்னபடியே செய்றேன்”
“சரி.. இப்போ மித்துக்கு தெரியாம டயரை பஞ்சர் பண்ணுங்க.. சீக்கிரம்.. நாளைக்கு பார்க்கலாம்.. சொதப்பாம ஒழுங்கா பண்ணுங்க.. பை அத்தை”
“ஓகே பை” என்று அழைப்பை துண்டித்தவர் பிரசாத் சொன்னது போல் மகள் அறியாமல் வண்டி உருளிப்பட்டையை(TYRE) ஆணி கொண்டு துளை போட்டு காற்றை இறக்கிவிட்டு வீட்டினுள் சென்றார்.
[the_ad id=”6605″]
—————————————————————————————————————————————————
இரவு வேலை முடிந்து சற்று தாமதமாக தான் வெற்றிவேல் வீட்டிற்கு சென்றான்.
(ACP வெற்றிவேல் வந்துட்டான்.. எல்லோரும் ஜோரா கை தட்டி வரவேற்கிறீங்க னு எனக்கு தெரியுது ஆனா அவனோட அம்மா அவன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாங்க.. வாங்க என்ன னு போய் பார்ப்போம்……………….)
வெற்றிவேல் வீட்டினுள் நுழைந்து காலுறையைக் கூட கழட்டி முடிக்கவில்லை, அதற்குள் அவன் முன் கோபமாக வந்து நின்ற அவனது அன்னை மாலதி, “இந்த வேலை வேணாம் விட்டுத் தொலை னு சொன்னா கேட்கிறியா? நாளைக்கே முதல் வேலையா இந்த வேலையை ரிசைன் பண்ற” என்று பொரிந்தார்.
வெற்றிவேலிற்கு ஆயாசமாக வந்தது. ‘போலீஸ் வேலை வேண்டாம்’ என்று அன்னை எப்பொழுதும் கூறும் ஒன்று தான் என்றாலும், மாலினியை பற்றி சிந்திக்க கூட முடியாத அளவிற்கு தற்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கு மண்டைக்குள் குடைந்துக் கொண்டிருக்க, வீட்டிற்கு வந்ததும் அன்னை வேலையை விடச் சொல்லவும் ஆயாசமாக இருந்தது, கூடவே எரிச்சலும் வந்தது. இருப்பினும் நிதானமான குரலில், “வேலையை விட்டுட்டு பூவாக்கு என்ன பண்ண?” என்று வினவினான்.
“அப்பா வீட்டில் சும்மா தான் இருக்கார் னு சொல்லி காட்டுறியா?” என்று வினவ அவன் சட்டென்று தந்தையை பார்த்தான்.
அவனது தந்தை சுந்தர்ராஜனோ கண்ணை மூடித் திறந்து ‘நான் உன்னை என்றும் தப்பாக நினைக்க மாட்டேன்’ என்று தெம்பூட்டும் விதத்தில் பார்த்தார். (அவனது தந்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் ஆகிறது)
அன்னை இப்படி எல்லாம் பேசுபவர் இல்லையே என்ற யோசனையுடன் கூர் விழிகளுடன் அன்னையை நோக்கியவன், “நான் அப்படி நினைக்க மாட்டேன் னு உங்களுக்கே தெரியும்.. இப்போ எதுக்கு இந்த பேச்சு?”
“இந்த வேலை வேண்டாம் னு நான் எப்போதும் சொல்றது தானே!”
“காரணம் கேட்டேன்”
“எனக்கு பிடிக்கலை.. வேணாம்……………”
“உங்களுக்கு பிடிக்கலைங்கிறது புதுசு இல்லை.. ஆனா இன்னைக்கு நீங்க பேசுறது புதுசு தான்.. என்ன ஆச்சு?” என்று வினவியவன் பார்வையில் இன்னும் கூர்மையைக் கூட்டினான்.
“என்ன பார்வை டா இது? வெளியவே நீ போலீஸ்ஸா இருக்க வேணாம் னு சொல்லிட்டு இருக்கிறேன்.. இதில் நீ என்னடானா வீட்டிற்குள்ளேயும் போலீஸ் மாதிரி பார்க்கிற!”
வெற்றிவேலின் பொறுமை குறையத் தொடங்கியது. அவன் சற்று குரலை உயர்த்தி, “இப்போ என்ன பிரச்சனை னு சொல்ல போறீங்களா இல்லையா?”
“உன் வேலை தான் பிரச்சனை.. அதை விடு.. அவ்ளோ தான்”
“அது என்னால் முடியாது” என்றுவிட்டு அவன் தனது அறையை நோக்கி செல்ல,
மாலதி கடும் கோபத்துடனும் கலங்கிய கண்களுடனும், “அப்போ என்னை உயிரோட பார்க்க முடியாது” என்று கூற,
“அம்மா!!!” என்று வெற்றிவேல் கோபத்துடனும் வலியுடனும் அலற,
“அம்மா!!!” என்று யாழினி தனது அறை வாயிலில் நின்றபடி பதற,
“மாலதி!!!” என்று வெற்றிவேலின் தந்தை கோபத்துடன் அதட்டினார்.
மாலதி, “உங்க யாருக்காவது ஏதாவது ஆகிறதை பார்க்கும் சக்தி என்னிடம் இல்லைங்க.. அதுக்கு முன்னாடி நான் போய்டுறேன்” என்று கலங்கிய குரலில் கூறியவர் அப்படியே கன்னங்களில் கண்ணீர் வடியத் தரையில் அமர்ந்தார்.
மூவருமே அவர் அருகில் விரைந்தனர்.
தந்தை மற்றும் தங்கைக்கு முன் அன்னையை நெருங்கிய வெற்றிவேல் அன்னையை தோளோடு சேர்த்து இறுக்கமாக அணைத்தான். அவரும் அவனிடம் தஞ்சம் புகுந்து அழத் தொடங்கினார். அன்னையை அணைத்தபடி அவரது முதுகை வருடியவன் அவரது அழுகை மெல்ல குறைந்து நின்றதும், “யாரும் போன் பண்ணி மிரட்டினாங்களா மா?” என்று மென்மையான குரலில் வினவினான்.
பட்டென்று அவனது கையை விலக்கி அவனை தள்ளிவிட்டவர் முறைக்கத் தொடங்கினார்.
தரையில் அமராமல் ஒரு காலை மட்டும் முட்டி போட்டபடி இருந்தவன் அவர் தள்ளியதில் முழங்கையை ஊன்றியபடி சற்று மல்லாக்க விழுந்தான்.
அவன் மென்னகையுடன், “ஒரே தள்ளுல கெத்து போலீஸான என்னை இப்படி சிரிப்பு போலீஸா மாத்திட்டியே மா!!!” என்று கூற, அவன் கூறிய விதத்தில் யாழினி மற்றும் சுந்தர்ராஜன் இதழ்களில் மென்னகை அரும்பியது.
மாலதிக்கும் லேசாக சிரிப்பு வந்தாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்து, “சிரிப்பு போலீஸ்ஸோ கெத்து போலீஸ்ஸோ! எனக்கு எந்த போலீஸ்ஸும் வேணாம்” என்றார்.
[the_ad id=”6605″]
அவர் கூறியதை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன் எழுந்து அவர் அருகில் அமர்ந்து அவரின் நாடியை பிடித்தபடி, “என் செல்ல மாலு மம்மி.. சிரிப்பு வந்தா சிரிச்சிடனும்” என்று புன்னகையுடன் கொஞ்சினான்.
மகனின் வசீகர புன்னகையிலும் கொஞ்சலிலும் கோபத்தை கைவிட்டவர், “நமக்கு இந்த வேலை வேணாம் டா” என்று கெஞ்சலில் இறங்கினார்.
அவரது தோளில் கை போட்டபடி லேசாக அணைத்தவன், “குரைக்கிற நாய் கடிக்காது மா.. சும்மா மிரட்டுவாங்க.. இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது.. நீங்க இப்படி பயந்து என்னை இந்த கேசையோ வேலையையோ விட சொல்றது தான் அவங்களோட திட்டம்.. நீங்களே உங்க பையனை தோற்கடிப்பீங்களா மா?”
“எனக்கு என் பையன் உயிரோட இருந்தா போதும்”
“இந்த வேலை எனக்கு உயிர் போன்றது னு இன்னுமா மா உங்களுக்கு புரியலை?” என்று வருத்ததுடன் வினவ அவனது அன்னை அமைதியாக இருந்தார்.
அவருக்கும் புரிகிறது தான் ஆனால் மகனின் மீது உள்ள பாசம் அவரை இப்படி நடந்துக்க வைக்கிறது.
அன்னையின் மனதை அறிந்த வெற்றிவேல் அந்த பேச்சை விடுத்து, “அம்மா இப்போ நான் பார்த்துட்டு இருக்கிற கேஸ் எவ்ளோ முக்கியமானது தெரியுமா? இது…………….”
“உனக்கு எல்லாம் கேஸும் முக்கியம் தான்.. எனக்கு என் பையன் தான் முக்கியம்”
“அம்மா.. இந்த கேஸ் ரொம்ப முக்கியம் மா.. ஏன்னா பொண்ணுங்க சம்பந்தப்பட்ட விஷயம்.. மூணு பொண்ணுங்க மா.. மூணு பேருமே நம்ம யாழு வயசு தான்.. அதுவும் ஆதரவற்ற ஆனாதை பொண்ணுங்க.. அவன்களோட வேலையே ஆதரவற்ற பொண்ணுங்களை கடத்தி தப்பான தொழிலில் ஈடுபடுத்துறது தான்.. ரெண்டு பொண்ணுங்களை கடைசி நேரத்தில் சேதாரமில்லாமல் காப்பாத்திட்டேன்.. ஆனா ஒரு பொண்ணை!!” என்று நிறுத்தியவன் இயலாமை தந்த கோபத்தில் தரையில் ஓங்கி குத்தினான்.
பின், “இதை செஞ்சவனை நான் நெருங்கிட்டேன்.. அதான் உங்களை மிரட்டி இருக்கிறான்.. அனாதை பொண்ணுங்க னா கேட்க ஆள் இல்லை னு இப்படி பண்ணியிருக்கிறான்.. நான் காப்பாத்தியது மூணு பொண்ணுங்களைத் தான்.. இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை இப்படி பண்ணானோ! அவனை சும்மா விட சொல்றீங்களா மா?” என்று கோபத்துடன் எழுந்து நின்றவன், “நம்ம யாழு………………”
“வெற்றி!!!” என்று மாலதி உள்ளம் பதற அலறினார்.
அவன், “வெறும் வாய் வார்த்தையா கூட உங்களால் கேட்க முடியலையே மா அந்த பொண்ணுங்க நிலைமையை யோசிச்சு பாருங்க.. எப்படி பயந்து போய் இருக்கிறாங்க தெரியுமா? அதுவும் ஒரு பொண்ணு ரொம்ப ரொம்ப பாவம் மா.. ரெண்டு நாளா.. ப்ச்.. கிட்டதிட்ட சிதைச்சிட்டான்க மா.. உடல் ரீதியா தேறி வந்தாலும் அந்த பொண்ணோட மனநிலை!!!” என்று குமறியவன் அடுத்த நொடியே கண்ணில் ரௌதிரத்துடன், “அவனை நான் சும்மா விட மாட்டேன் மா! என்னை பத்தி அவனுக்கு தெரியலை” என்றவன் மனதினுள் ‘நாளைக்கே அவன் சாப்டர் க்ளோஸ்’ என்று கூறிக் கொண்டான். ஆம் அவனது மனம் என்ற நீதிமன்றம் இதை செய்தவனுக்கு மரண தண்டனையை தீர்மாணித்து விட்டது.
சுந்தர்ராஜன் அவன் தோளில் கை வைக்கவும் இரண்டு நொடிகளில் தன்னை மீட்டு நிமிர்ந்து பார்த்தான். மாலதி சிறு கலவரத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க, யாழினி கலங்கிப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா…” என்று வெற்றிவேல் ஆரம்பிக்க,
சுந்தர்ராஜன், “நீ போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என்றவர், “மாலதி சாப்பாடு எடுத்து வை” என்றார்.
வெற்றிவேல், “நான் சாப்டுட்டேன் பா” என்றவன் யாழினியை பார்த்து, “மொட்டை மாடியில் கதை பேசி ரொம்ப நாளாச்சே! இப்போ போகலாமா?” என்றான்.
யாழினி வேகமாக தலையை ஆட்ட, அவன், “டூ மினிட்ஸ்” என்றுவிட்டு தன் அறைக்கு சென்றான். அறைக்கு செல்லும் முன் தந்தையை அர்த்தப்பார்வை பார்த்துவிட்டே சென்றான். அந்த பார்வை அன்னையை கவனிக்கச் சொல்லியது.
சொன்னது போல் இரண்டே நிமிடத்தில் வந்தவன் தங்கையை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
அதே நேரத்தில் சுந்தர்ராஜன் தங்கள் அறையில் மனைவியிடம், “நீ செய்றது சரியில்லை மாலதி”
“உங்களுக்கும் என் பயம் புரியலையாங்க?” என்று அவர் தவிப்புடன் வினவ,
மனைவியின் தோளில் கை போட்டவர், “புரியுது மா ஆனா அது தேவை இல்லை னு சொல்றேன்.. இத்தனை வருஷம் அவனை பார்க்கிற தானே! இன்னைக்கு வந்தது போல் மிரட்டல்கள் வராமலையா இருக்கும்? அவனுக்கு அவனை பார்த்துக்க தெரியும்.. ஊரையே காவல் காக்கிறவன் தன்னை பார்த்துக்க மாட்டானா?”
மாலதி மெளனமாக இருக்க, சுந்தர்ராஜன், “நீயா மாறுவ னு நானும் அவனும் நினைத்தோம் ஆனா இன்னைக்கு நீ பேசியது ரொம்ப அதிகம்”
[the_ad id=”6605″]
“அவன் விருப்பம் புரியுதுங்க ஆனா எனக்கு இன்னும் இந்த வேலை பிடிக்கலைங்க.. கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா அதுவும் இந்த வேலையால் தட்டி போகுது.. சிலர் விரும்பி வராங்க ஆனா இவன் பிடிகுடுத்து பேச மாட்டிக்கிறான்”
“கல்யாணத்தை பத்தி அப்பறம் பேசலாம்.. இப்போ வேலையை பத்தி பேசி முடிச்சிரலாம்..” என்றவர், “அவனுக்கு இந்த வேலை தான் பிடிக்குது.. இந்த வேலையை உயிரா நேசிக்கிறான்.. இந்த வேலையை விட்டால் அவன் ஜடம் போன்ற வாழ்க்கையை தான் வாழ்வான்.. அதான் உனக்கு விருப்பம் னா சொல்லு நான் அவனிடம் பேசுறேன்”
“ப்ச்.. என்னங்க?!”
“இதுக்கு ஒரே வழி.. நீ தான் உன் மனசை மாத்திக்கணும்.. வேலையில் அவனுக்கு எவ்வளவோ டென்ஷன்ஸ் இருக்கும்.. வீட்டுக்கு வந்தா நீயும் அவனை படுத்தினால் எப்படி? நீ கொடுக்கிற டென்ஷனில் அவனோட கவனம் சிதைந்தால் அவன் நிலை என்னாகுறது? நீயே யோசிச்சு முடிவு பண்ணு” என்றார்.
மொட்டை மாடியில் வெற்றிவேல், “என்ன டா! அந்த பொண்ணை பத்தி நினைச்சிட்டு இருக்கிறியா?”
“ஹ்ம்ம்”
தங்கையை தன் தோளில் சாய்ந்தவன், “இதுக்கு தான் நான் பார்க்கிற கேஸ் பத்திலாம் வீட்டில் பேசுறதே இல்லை.. இதை விட மோசமான கேஸ் எல்லாம் பார்த்திருக்கிறேன் டா.. நீ கவலைப் படாத.. அந்த பொண்ணை சரி பண்ணிடலாம் னு தான் டாக்டர்ஸ் சொல்றாங்க.. உடளவில் கொஞ்ச நாளில் தேறினாலும் மனதளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில வருஷங்கள் ஆகலாம் ஆனா நிச்சயம் சரி ஆகிடுவா.. நானும் என்னால் முடிந்ததை அந்த பொண்ணுக்கு செய்வேன் டா”
“நான் அந்த பொண்ண பார்க்கலாமா?”
“கொஞ்ச நாள் ஆகட்டும்.. இப்போ அந்த பொண்ணை பத்தி யோசிக்காம திவா கூட டூயட் பாடி சந்தோஷமா இரு” என்றதும் யாழினி முகத்தில் வெக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவள், “போ ணா” என்று வெக்கத்துடன் கூறினாள்.
திவா என்ற திவாகர் யாழினிக்கு வீட்டில் பார்த்திருக்கும் மணாளன். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறவன் தற்போது தற்காலிகமாக லண்டனில் இருக்கிறான். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் லண்டனில் தான் குடித்தனம். அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
வெற்றிவேல் மென்னகையுடன், “பார் டா! என் குட்டி தங்கைக்கும் வெக்கம் வருது!”
“அண்ணா!!” என்று அவள் சிணுங்க வெற்றிவேல் சிரித்தான்.
மேலும் திவாகர் பற்றி பேசி தங்கையை இயல்பிற்கு மாற்றிய பின் கீழே அழைத்துச் சென்றான்.
யாழினி அவள் அறைக்கு சென்றதும் பெற்றோரின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவனின் பார்வை முதலில் தந்தையிடம் தான் சென்றது. அவர் கண்களை மூடித் திறக்கவும் நிம்மதியுடன் அன்னையைப் பார்த்தான்.
மாலதியின் மனம் இப்பொழுதும் மாறவில்லை தான் என்றாலும் மகனிற்காக வேலையை பற்றி பேசக் கூடாது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.
அன்னை அருகில் அமர்ந்தவன் அவர் கையை பற்றி, “இனி இப்படி பேசாதீங்க மா.. எனக்கு நீங்க ரொம்ப முக்கியம்.. எனக்கு னு இல்லை நம்ம குடும்பத்தோட அஸ்திவாரமே நீங்க தான் மா” என்றான்.
“சாரி டா.. அப்போ ஏதோ.. ப்ச் விடு.. இனி இப்படி பேச மாட்டேன்” என்றார்.
“அது நல்ல பிள்ளைக்கு அழகு” என்று அவன் கெத்தாக கூற, அவர் மென்னகைத்தார்.
“உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?”
“என்னடா?”
[the_ad id=”6605″]
“என் அம்மா பேரும் மாலு என் மனைவி பேரும் மாலு ஆனா எனக்கு மட்டும் மானு” என்றான் ரசனையுடன் கூடிய விரிந்த புன்னகையுடன்.
அவன் என்ன கூறுகிறான் என்பது புரிய பெற்றோருக்கு இரண்டு நொடிகள் எடுத்தது.
மாலதி மகிழ்ச்சியுடன், “படவா அதான் நான் பார்க்கிற பொண்ணை எல்லாம் வேண்டாம் னு சொல்றியா?”
அவன் சிறு ஆச்சரியத்துடன் பார்க்க அவர், “என்ன பார்க்கிற! நான் காதலுக்கு எதிரி இல்லை.. நிவேதா செய்தது தப்பு.. அவ நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.. ஹ்ம்ம்.. அவளால் கொஞ்ச நாள் யாழுவையும் கொஞ்சம் படுத்திட்டேன்.. சரி விடு.. அதெல்லாம் முடிந்து போனது.. இப்போ உன் லவ் பத்தி சொல்லு” என்றார் ஆர்வத்துடன்.
“தன்க் யூ மா” என்று மகிழ்ச்சியுடன் கூறியவன் தந்தையை பார்த்தான்.
அவரும் மென்னகையுடன், “சுப்ரீம் கோர்ட்டே ஓகே சொல்லியாச்சு.. அப்பறம் என்ன!” என்று கூற,
அவன், “தேங்க்ஸ் பா” என்று கூற,
மாலதி, “நான் சுப்ரீம் கோர்ட்டா! கதை விடுறதை பார்” என்றார்.
சுந்தர்ராஜனோ, “பின்ன இல்லையா!” என்று கூற, மாலதி செல்லமாக முறைத்தார்.
அன்னை தந்தையின் சண்டையை ரசித்த வெற்றிவேல் புன்னகயுடன், “இப்போ நான் சொல்லவா வேணாமா?”
மாலதி, “சொல்லு டா” என்று கூற,
சுந்தர்ராஜன், “பொண்ணு பேரு மாலினி.. அவளை பஸ்ட் டைம் யாழு காலேஜ்ஜில் பாட்டு போட்டியில் பார்த்த” என்று கூற,
அவன் இப்பொழுது சிறு அதிர்ச்சியுடன் தந்தையை பார்த்து, “எப்படி பா?” என்று வினவ,
“நான் தான் சொன்னேன்” என்றபடி உள்ளே வந்த யாழினி, “அப்பவே நான் சொன்னேன் பா.. இல்லை னு என்னமா சாதிச்சான் தெரியுமா?” என்றாள்.
வெற்றிவேல் சிரிப்புடன், “ஏய் வாலு! திவா கூட பேசாம இங்கே என்ன பண்ற?” என்றான்.
“பேச்சை மாத்தாத டா” என்றவள் அன்னையிடம், “என்ன மா நீ! இப்படி சட்டுன்னு ஓகே சொல்லிட்டியே! கொஞ்சமாச்சும் சுத்தல்ல விட வேணாமா? கெத்து போலீஸ் னு சொல்லிட்டு திரிறானே! கெஞ்ச விட வேணாமா!” என்று கூற,
தங்கையின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகி, “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சு” என்றவன் மனதினுள், ‘அதான் சேர்த்து வச்சு பொண்ணும் அப்பாவும் என்னை சுத்தலில் விடுறாங்களே!’ என்று நினைத்தான்.
சுந்தர்ராஜன் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்க, மாலதி, “நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் பையன் கெத்து போலீஸ் தான்டி” என்று கூற,
யாழினி, “பார் டா!” என்றபடி வாயில் கையை வைத்தாள்.
மாலதி, “இவ கிடக்கிறா.. நீ மாலினி பத்தி சொல்லு” என்றார்.
வெற்றிவேல் மாலினி குடும்பத்தை பற்றியும் தனது காதலைப் பற்றியும் சொல்லி முடித்தவன் மாலினி மற்றும் அருணாச்சலத்தின் மறுப்பை பற்றி சொல்லவில்லை.
பிறகு பெற்றோரை பார்த்து, “கொஞ்ச நாள் டைம் கொடுங்க.. மாலினி கிட்ட என் காதலை சொல்லி அவ சம்மதம் சொன்ன பிறகு மாலினி அப்பா கிட்ட பேசுங்க”
மாலதி, “மாலினி சம்மதம்………….”
வெற்றிவேல், “அவளுக்கும் என்னை பிடிக்கும் மா”
“கிட்ட திட்ட நாலு வருஷம் பார்த்துக்கவே இல்லையே டா”
“ஆனா அவளுக்கு என்னை நியாபகம் இருக்குது மா.. சண்முகம் கல்யாணத்தில் அவளை பார்த்தேன்.. கல்யாண பொண்ணு அவ பிரெண்டோட அக்கா.. அவ அப்பாவுக்கும் என்னை நல்லா அடையாளம் தெரிந்தது.. மாலினிக்கு என்னை பிடிக்கும் மா” என்று அவன் உறுதியுடன் கூற,
[the_ad id=”6605″]
மாலதி, “சரி.. மாலினி கிட்ட பேசிட்டு சொல்லு” என்றார்.
யாழினி, “அண்ணா ஒழுங்கா ட்ரீட் கொடுக்கிற”
“உனக்கு இல்லாததா! கொடுத்துட்டா போச்சு”
“போச்சு இல்லை.. கொடுக்கிற”
“சரி சரி.. இப்போ போய் தூங்கு”
“அவர் கிட்ட பேசிட்டு தான் தூங்குவேன்” என்று மெல்லிய வெக்கத்துடன் கூற,
“பேசுவியோ கனவில் டூயட் பாடுவியோ! நான் தூங்க போறேன்” என்றவன், “குட் நைட் மா.. குட் நைட் பா” என்றுவிட்டு கிளம்ப,
யாழினி, “அண்ணி கூட டூயட் பாட இவ்ளோ அவசரமா!” என்று கிண்டல் செய்ய, அதைக் கேட்க அவன் அங்கில்லை.
யாழினியும், “குட் நைட் மா… குட் நைட் பா” என்றுவிட்டு கிளம்ப, மாலதியும் சுந்தரராஜனும் மென்னகையுடன் உறங்க ஆயுத்தமானார்கள்.
————————————————————————————————————————————————–
அடுத்த நாள் முதலில் மித்ராணி மறுப்பு தெரிவித்தாலும் அதன் பிறகு பிரசாத் சொன்னது போல் தான் நடந்தது.
பிரசாத்தின் வண்டியை பிரசாத் ஓட்ட, அவனது வண்டியில் பெரியவர்கள் மூவரும் இருந்தனர். மனோஜின் வண்டியில் அவனை முறைத்துக் கொண்டே மித்ராணி முன் இருக்கையில் அமர, மனோஜ் மகிழ்ச்சியுடன் வண்டியை கிளப்பினான்.
மனோஜ் வண்டி முன்னால் செல்ல பிரசாத் வண்டி பின்னால் சென்றது.
மனோஜ் பேச முயற்சிக்க மித்ராணி வண்டியில் பாடலை ஒலிக்க விட்டாள். அவளது மனநிலையை கெடுக்க விரும்பாமல் வரும் போது பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மனோஜ் அமைதியாக வண்டியை செலுத்தினான்.
ஜவுளிக் கடையை நெருங்கிய போது எதிரில் வேகமாக வந்துக் கொண்டிருந்த ஒரு வண்டி(சுமோ) மனோஜின் வண்டியை இடிப்பது போல் வர, மனோஜ் சுதாரித்து இடது பக்கம் வண்டியை வளைத்து திருப்பி நிறுத்துவதற்குள் பின்னால் வந்த மற்றொரு வண்டி(அதுவும் சுமோ தான்) அவனது வண்டியை சற்று பலமாக இடித்துவிட்டு செல்ல, மனோஜின் வண்டி அருகில் இருந்த மரத்தில் இடித்து நின்றது. இருமுறை இடித்ததில் மனோஜ் வண்டியின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது.
பிரசாத்தின் வண்டி பின்னால் தான் வந்துக் கொண்டிருந்தது. இந்த விபத்தை பார்த்த கமலாவும் மல்லிகாவும் ஒரே நேரத்தில், “அய்யோ!!” என்று அலறினர்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
