Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 29

அம்மையப்பன் 29

 

அகத்தியனின் அறை..

 



Advertisement

கீழே அமைதியின் மறு உருவாய், சாந்த சொரூபியாய் இருந்த அதியின் முகம், இப்பொழுது வதம் செய்யும் காளியாய் இருந்தது..

 

அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்தாள்.. புடவை பூ வளையல் நகை என பார்க்க பார்க்க அவளின் கோபம் பன்மடங்காக எகிறியது.. தன்னுடைய இயல்பே தொலைந்தது போல் உணர்ந்தாள்..

Advertisement

 

Advertisement

யக்.. அதி வாட்ஸ் ராங் வித் யூ? நீ எப்படி அவன் சொன்னதுக்கெல்லாம் ஒத்துக்கிட்ட.. ஒரு மணிநேரம் இவங்க கூட அமைதியா போறதே இவ்வளவு காண்டாகுது.. இதுல இன்னும் இருபத்தியொரு நாள் எப்படி இவங்களை எல்லாம் டாலரேட் பண்ண போற.. என அறையில் குறுக்கும் மறுக்காக நடந்து கொண்டு, கத்திக் கொண்டிருந்தாள்..

 

*********************************

Advertisement

 

நேற்றைய இரவு அபயசிம்ஹா தன் மகன் மனைவியோடு பெங்களூர் செல்ல, அதி தன் வீட்டிற்கு வந்தாள்..

 

விஷ்ணுவிடம் நாளை மேட்டுப்பாளையத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்ய சொல்லிவிட்டு, உறங்க சென்றுவிட்டாள்..

 

மறுநாள் அதிகாலையில் அதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.. அப்பொழுதும் அவளின் உள்ளுணர்வில் ஏதோ தோன்ற, சட்டென தலையணையின் அடியில் இருக்கும் தன் துப்பாக்கியை எடுத்து ஓரிடத்தில் குறிவைத்தாள்..

 

அங்கு அகத்தியன் அம்மையப்பன் தான் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..

 

இங்க என்ன பண்ற? என துப்பாக்கியை இறக்கியவாறு கேட்டாள்..

 

என்ற மனைவி இன்னைக்கு எங்க வீட்டுக்கு வரதா சொல்லிருந்தாங்க.. அதான் அவங்களை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.. என அவள் விழிகளை பார்த்தவாறு அமைதியாக கூறினான்..

 

வியப்பாய் புருவம் உயர்த்திய அதி, பாருடா மனைவி.. ம்ம்ம்ம்.. என கேலியாக இழுத்தாள்..

 

ரெண்டு நாள்ல எங்கயாவது ஓடிடுவன்னு நினச்சேன்.. என நக்கலாக கேட்டவள்..

 

அவன் முகத்தை அழுத்தமாக பார்த்தவாறு.. என்னோட வாழ்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா.. என கட்டிலில் சாய்ந்து அதிகாரமாக கேட்டாள்..

 

என்ற பொண்டாட்டி அளவுக்கு இல்லைன்னாலும் எனக்கும் கொஞ்சம் தகிரியம் இருக்கு தான் அம்மணி..

 

ஓஹோ.. என ஒருமாதிரியாக இழுத்த அதி..

 

மிஸ்டர் அகத்தியன் அம்மையப்பன், நான் ஒன்னும் உங்ககூட சந்தோஷமா வாழுறதுக்கு அங்க வரலை.. உன்னோட ஒட்டு மொத்த குடும்பத்தையும் கதற வைக்கறதுக்காக வரேன்.. என திமிரும் அலட்சியமுமாக அவள் சொல்லவும், அகத்தியன் புன்னகைத்தான்..

 

உங்களால முடிஞ்சது அது மட்டும் தான்னு எனக்கு தெரியும் அம்மணி.. என அவன் மேற்கொண்டு என்னவோ சொல்ல போக.. அதி கரம் உயர்த்தி அவன் பேச்சை தடை செய்தாள்..

 

சும்மா சொற்பொழிவு நடத்தாம உனக்கு என்கிட்ட என்ன சொல்லணுமோ அத நேரடியா சொல்லு, என அதி அழுத்தமாக சொல்ல.. அவளுக்கு குறையாத அழுத்ததுடன் அவளை பார்த்தான் அகத்தியன்..

 

எப்படி நடந்தாலும் எந்த காரணத்துக்காக நடந்தாலும், உங்களுக்கும் எனக்கும் கண்ணாலம் ஆகிடுச்சு.. அதுக்கான மரியாதைய நாம கொடுக்கணும்.. என அகத்தியன் நிதானமாக சொல்ல.. மெல்ல அவனை நெருங்கிய அதி..

 

அதுக்கு என்ன பண்ணனும் மிஸ்டர் அகத்தியன்.. உன்கூட குடும்பம் நடத்தி புள்ள குட்டி பெத்துக்கனுமா.. என கேட்டாள்..

 

அதில் அகத்தியன் முகம் சற்று மாற.. அதி அவனை கேலியாக பார்த்தாள்..

 

நொடியில் தன்னை சுதாரித்து கொண்ட அகத்தியன்.. எல்லாம் சேர்ந்தது தான கண்ணாலம்.. அப்போ அதுவும் இருக்கும்.. என அவன் முகம் திருப்பி சொல்ல.. அதி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்..

 

என்னால இத மட்டும்தான் பண்ண முடியும்னு, எத நினச்சு சொன்ன.. என அதி அவனின் முந்தைய வார்த்தையை பற்றி கேட்டாள்..

 

அகத்தியன் அழுத்தமாக நின்றான்..

 

என்னால எதையும் செய்ய முடியும்.. இந்த அதியால செய்ய முடியாததுன்னு ஒன்னு கூட இல்லை.. என அவள் அலட்சியமாக சொல்ல.. அகத்தியன் அவளை நேர்கொண்டு பார்த்தான்..

 

இல்லை.. உங்களால முடியாததும் இருக்கு..

 

எப்படி சொல்ற? அப்படி என்ன பெரிய இத என்னால செய்ய முடியாது.. என அதி கோபமாக கேட்டாள்..

 

அதிமதுராந்தகியம்மையா இருக்கனும்.. அம்மையப்பன் வீட்டு பழக்க வழக்கத்தை தெரிஞ்சுக்கணும், பின்பற்றனும்.. அம்மையப்பன் வீட்டு மருமகளா எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கணும்.. எங்க அம்மாக்கு அன்பான மருமகளா இருக்கனும்.. நம்ம குடும்பத்துல இருக்க ஒவ்வொருத்தர்கிட்டயும் அன்பா நடத்துக்கணும்.. மொத்தத்துல இந்த அகத்தியன் அம்மையப்பனுக்கு ஏற்ற அதிமதுராந்தகியம்மையா இருக்கனும்.. உங்களால முடியுமா.. என அகத்தியன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்து நிதானமாக கேட்க.. அதி சற்று அதிர்ந்து தான் போனாள்..

 

ஆனால் நொடியில் தன்னிலை வந்தவள்.. ஹா ஹா.. என்ன ஒரு மட்டமான ப்ளான்.. இப்படியெல்லாம் என்ன உசுப்பேத்தினா நான் உடனே எல்லாத்துக்கும் ஒத்துக்குவேன்னா என அதி நக்கலாக கேட்க.. அகத்தியன் பதில் பேசாது அவளையே பார்த்தவாறு நின்றான்..

 

ஹும்.. என் ஈகோவ டச் பண்ணிட்ட.. என்ன பண்ணலாம்.. என அவள் அவனை பார்த்து புருவம் உயர்த்தி கேட்க, அகத்தியன் அப்பொழுதும் அமைதியாகவே நின்றான்..

 

ஹும்ம்ம்ம்.. அதியால முடியாதது எதுவும் இல்லை.. நடந்துக்குறேன்.. நீ சொல்றபடி எல்லாம் நடந்துக்குறேன்.. வெறும் 21 நாள்.. பாக்கலாம் இந்த அதியோட பொறுமை எவ்வளவு நாள் இருக்குதுன்னு.. என அதி கேலியாக கூறினாள்..

 

**********************************

 

அதி மேலே தன் அறையில் இருக்க.. அகத்தியன் தோட்டம் வரை சென்றிருந்தான்..

 

ஹ்ம்ம் யாருன்னு நினைச்சா.. என் பேரன.. அவன் ஆம்பள சிங்கம்.. ரெண்டு நா முன்னாடி ஆட்டமா ஆடுனவள, இப்போ பொட்டி பாம்பா அடக்கிட்டான்ல.. என பேச்சியம்மை தன் வெண்கல குரலில் பெருமை பேச அனைவரும் அவரை பார்த்தனர்..

 

ஏண்டி பவளம், அப்படி என்ன செஞ்சு பேரன் உன்ற மவளை மாத்தியிருப்பான் என அவர் கேள்வி கேட்க.. பவளம் அவரை முறைத்தார்..

 

என் பேரன்.. இந்த மேட்டுப்பாளையத்துக்கே ராசா.. அவன கண்டா இளசுல இருந்து பெருசு வரைக்கும் தலை வணங்க.. பொட்ட சிறுக்கி அவன மண்டியிட வச்சுட்டா.. என கத்தி கொண்டிருந்தவர்..

 

அடியே ராங்கி கீழ வாடி.. என மேலே பார்த்து கத்த அனைவரும் பதறிவிட்டனர்..

 

அச்சோ அப்பத்தா என்ன பண்றீங்க.. என குழலி பதட்டமாக கேட்க..

 

அதி எரிச்சலையும் கோபத்தையும் முகத்தில் காட்டாதிருக்க பெரும் முயற்சி செய்தவாறு வந்தாள்..

 

என்னடி ஆடி அசைஞ்சு வர.. விரசா வா.. வந்து இங்கன உக்காரு என பேச்சியம்மை தன்னருகே அழைக்க.. அதி உள்ளுக்குள் அவரை கருவியவாறு அமர்ந்தாள்..

 

அச்சோ இவருக்கு ஏன் இந்த வேலை என பேச்சியம்மையை திட்டியவாறு.. மற்றவர்கள் உள்ளுக்குள் பதட்டத்துடன் இருந்தனர்..

 

என் காலை அமுக்கு.. என பேச்சியம்மை அடுத்த கட்டளையிட அதி அவரை கோபமாக பார்த்தாள்..

 

என்னடி முறைக்கிற.. அமுக்குங்குறேன்ல என அவர் மீண்டும் அதட்டலிட்டார்..

 

ப்ச் அம்மத்தா ஏன் அக்காவை தொந்தரவு பண்றீங்க உங்களுக்கு நான் கால் அமுக்குறேன்.. என ஷாலினி வர, பேச்சியம்மை முறைத்தார்..

 

அடியே சின்ன கழுதை.. உன்னைய யாரும் இங்க வெத்தல பாக்கு வச்சு அழைக்கல.. பேசாம கிட.. வந்துட்டா அக்காளுக்கு பரிஞ்சுக்கிட்டு.. என பேச்சியம்மை நொடிக்க.. ஷாலினி அதி இருவரும் அவரை முறைத்தனர்..

 

ஹ்ம்ம்.. பாத்ததெல்லாம் போதும் அமுக்கு.. என பேச்சியம்மை காரியத்தில் கண்ணாக இருக்க..

 

காம் டவுன் அதி, காம் டவுன்.. இன்னும் வெறும் 21 டேஸ் தான்.. அதுக்கப்புறம் இந்த கிழவிய நாம வச்சு செய்யலாம்.. என உள்ளுக்குள் தனக்குத்தானே சமாதனம் செய்த அதி.. மெல்ல அவரின் காலை பிடித்து விட ஆரம்பித்தாள்..

 

ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அதியின் அமைதியும் அவள் செய்கையும் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது..

 

ஹ்ம்ம்.. நல்லா பளப்பளன்னு தான் இருக்க.. கையும் பஞ்சாட்டம் இருக்கு.. வீட்டுல ஒரு வேலையும் செய்ய மாட்டியோ.. என அதியின் கொமட்டில் குத்த.. அவள் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது..

 

இன்னைக்கு மதியம் எல்லாருக்கும் இந்த சிறுக்கி தான் சமைக்கணும் வேதவல்லி.. போ போயி உன்ற மருமவளுக்கு அடுப்படிய காமி.. நீ மேற்பார்வை மட்டும் பாரு.. மத்த எல்லாத்தையும் இவ தான் பாக்கணும்.. என கட்டளையிட்டு மெல்ல தன் அறைக்கு சென்றார்..

 

அமிர்தமும் யாழினியும் அதியை நக்கலாக பார்த்தனர்..

 

அம்மா.. எனக்கு நாட்டு கோழி ரசம், அப்பொறம் அமுதனுக்கு சிக்கன் சிந்தாமணி, குழலிக்கு அரிசி பருப்பு சாதம், யாழினிக்கு பள்ளிபாளையம் சிக்கன், முக்கியமா ஆட்டுக்கறிய குழம்பு, மிளகு கறி இதை எல்லாம் உங்க மருமகளை செய்ய சொல்லிடுங்க.. என அமிர்தவல்லி ஒரு நீண்ட பட்டியலை வாசித்து விட்டு செல்ல.. ஏளன சிரிப்புடன் யாழினி அவரை பின்தொடர்ந்தாள்..

 

அதி இரு நொடி கண் மூடி நிற்க.. அனைவரும் அவளை பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்..

 

தன் ஒட்டு மொத்த கோபத்தையும் விழிகளில் தேக்கி, அவள் கண் திறக்க.. மீன் விழிகள் இரண்டும் செந்நிறம் கொண்டு இருந்தது..

 

அதைக் கண்டு பயந்து போன வேதவல்லி.. நீ எதுவும் செய்ய வேணாம் கண்ணு, எல்லாத்தையும் நானே பாத்துக்குறேன்.. நீ கூட வந்து நின்னா.. இல்ல இல்ல அதுவும் வேணாம்.. நீ போய் ஓய்வெடு.. என அவர் பதட்டமாக சொல்ல.. அவரையே இமைக்காமல் பார்த்த அதி.. பரவாயில்ல நானே சமைக்கிறேன்.. நீங்க வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. அத்தை என சொல்ல.. வேதவல்லி மயங்கி விழ போனார்..

 

அதி அதனை உணர்ந்தார் போல் அவர் கரம் பிடித்து சமையலறை அழைத்து செல்ல.. பித்து பிடித்தவர் போல் அவளை பின்தொடர்ந்தார்.. வேதவல்லி..

 

ஷாலினி பவளம் மரகதம் மூவரும் அவர்கள் பின் சென்றனர்..

 

குழலிக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.. சமையலறை செல்வதா இல்லை தன்னறை செல்வதா என அவள் முழித்துக் கொண்டு இருக்க.. அமுதன் அவள் கைப்பிடித்து தோட்டத்திற்கு அழைத்து சென்றான்..

 

அக்கா நீங் நவுருங்க.. அம்மா அத்தை எல்லாம் பாத்துக்குவாங்க என அதியின் கரம் பிடித்து ஷாலினி சொன்னாள்..

 

இல்ல ஷாலினி அவங்க என்னதான் பண்ண சொன்னாங்க.. நானே செய்றேன்..

 

அதென்ன அவங்க.. அழகா அம்மத்தான்னு சொல்லு என மரகதம் அதட்டினார்..

 

அதி அமைதியாக கேட்டு கொண்டாள்..

 

சரி அப்போ நான் உங்களுக்கு உதவி செய்றேன்.. என்றாள் ஷாலினி..

 

வேதவல்லி மரகதம் பவளம் மூவரும் எதுவும் செய்யவில்லை.. பொருட்கள் மட்டும் தான் எடுத்து கொடுத்தார்கள்.. அதி தான் அனைத்தும் செய்தாள்.. பவளம் வேதவல்லி உதவிக்கு வந்தாலும் தடுத்து விட்டாள்.. ஷாலினி ஒட்டுப்புல் போல் அவளுடன் இருந்தாள்.. அம்மியில் கூட அதி மசாலா பொருள் அரைக்க.. நால்வரும் அவளை வியந்து பார்த்தனர்..

 

சமையலறை பக்கமே சென்றிறாத ஆண் மக்கள் அனைவரும் சமையலறையை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்..

 

பவளம் ஏதாவது பண்ணும்னா சொல்லு, நான் பண்றேன் என திருச்செல்வம் சொல்ல.. பவளம் அவரை முறைத்தார்.. 

 

என்ன ண்ணே ஏதாவது வேணுமா அங்கு வந்த நாகநாதனிடம் வேதவல்லி கேட்க.. அவர் மறுப்பாய் தலையசைத்து விட்டு சென்றார்..

 

சில நிமிடங்களில் அம்மையப்பன் திருநாவுக்கரசு நாகநாதன் திருச்செல்வம் என ஐவரும் சமையலறை வாசலில் சேர் போட்டு அமர்ந்து விட்டனர்..

 

பேச்சியம்மை அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..

 

**********************************

 

மதிய உணவின் நேரம் தான் அமிர்தம் யாழினி இருவரும் கீழே வந்தனர்..

 

அம்மா பசிக்குது.. உங்க மருமக எல்லாம் செஞ்சுட்டாளா.. என அதிகாரமாக அவள் கேட்டு கொண்டிருக்கும் பொழுது, அகத்தியன் அமுதன் குழலி மூவரும் உள்ளே வந்தனர்..

 

மூவரின் முகமும் சோர்ந்து கிடந்தது..

 

வேதவல்லி, வாய்யா ஏன் முகம் இப்படி வாடிக்கிடக்கு.. ரொம்ப வேலையோ..

 

ஹ்ம்ம் ஆமாங் ம்மா..

 

சரி சரி போயி கை கால கழுவிட்டு வாங்க.. அடியே ராங்கி உன்ற புருசன் வந்துட்டான் பாரு அவனுக்கு என்ன வேணும்னு கேளு.. மரகதம் பவளம் சோத்த எடுத்துட்டு வாங்க.. என எல்லாரையும் அதட்டினார்..

 

அனைவரும் உணவுன்ன அமர்ந்துவிட்டனர்..

 

அதி முதலில் சாதம் வைக்க போக பேச்சியம்மை அதட்டினார்..

 

ஒழுங்கா பரிமாற தெரியுதா.. மொதல்ல ஓரத்துல உப்பு வச்சுட்டு, மத்த வெஞ்சனம்  எல்லாம் வையி.. அப்பொறம் சோத்த போடு என அதட்டினார்..

 

பவளம் ஷாலினி வேதவல்லி அவளுடன் சேர்ந்து பரிமாறினர்..

 

அகத்தியன் தன் வழக்கம் போல் முதல் பிடியை குழலிக்கு ஊட்டிவிட்டவன்.. அதன் பிறகு தான் சாப்பிட்டான்..

 

சாப்பாட்டை வாயில் வைத்தவனின் முகம் மாறியது.. அவன் தன் அன்னையையும் அத்தையையும் பார்க்க.. அவர்கள் அதி பக்கம் கண் காட்டினர்..

 

அகத்தியன் அதியை பார்த்து ஆச்சரியமாக புருவம் உயர்த்த, அவளோ தேமேயென நின்று கொண்டிருந்தாள்..

 

மற்ற ஆண்கள் அனைவரும் கண்கள் கலங்க ஒரு வாய் உணவை உண்ட நிலையில் அமர்ந்திருந்தனர்..

 

ச்சக் என்ன சாப்பாடு இது.. வாயிக்கு விளங்கவே இல்ல.. என யாழினி கத்த.. அமிர்தவல்லி திரு திருவென முழித்தார்.. அவருக்கும் ஏதாவது சொல்ல வேண்டும் என ஆசைதான்.. ஆனால் இப்பொழுது அவர் பேசினால் அது எதிர்பதமாக தான் முடியும் என அவருக்கு தெரியும்..

 

யாழினி அமைதியா இரு என மென்குரலில் அவர் முணுமுணுக்க.. யாழினி அமிர்தத்தை பார்த்து முழித்தாள்..

 

என்னாச்சுங்கம்மா நீங்கதான சொன்னீங்க, எப்படி இருந்தாலும் நல்லா இல்லைன்னு சொல்ல சொல்லி.. என அவளும் முணுமுணுக்க..

 

ப்ச் கொஞ்சம் எல்லாரையும் பாரு என மெல்லிய குரலில் கடிய.. அவளும் பார்த்தாள்.. வீட்டில் உள்ள அனைவரும் அவளைத்தான் முறைத்து கொண்டு இருந்தனர்..

 

அதுவும் அம்மையப்பனின் முறைப்பு மிகவும் பயங்கரமாக இருந்தது.. இதுவரை அவரிடமிருந்து இப்படியொரு முறைப்பை கண்டிராத யாழினி, பயத்தில் நடுங்கினாள்..

 

என்ன சொன்ன சாப்பாடு நல்லா இல்லையா.. என அவர் ஒரு முழி முழிக்க.. யாழினி பயத்துடன் இரு பக்கமாய் தலையசைத்தாள்..

 

ஹ்ம்ம்ம்.. அது.. என்பது போல் பார்த்தவரின்.. விழிகள் மீண்டும் கண்ணீரை சொறிந்தது..

 

அமுதன் குழலி ஷாலினி யாழினி ஏன் அதியும் கூட பெரியவர்கள் அனைவரையும் ஒன்றும் புரியாது பார்த்தார்கள்….

 

பேச்சி.. அப்படியே எங்க ஆத்தா சமைச்ச மாதிரி இருக்கு.. என அதியை பார்த்தவாறு மனைவியிடம் பெருமையாக கூற.. பேச்சியம்மை நொடித்து கொண்டார்..

 

ஆம் அதியின் சமையல் அப்படியே பெரியவரின் அன்னை கைமணத்தில் இருந்தது.. அதனால் தான் அனைவரும் நெகிழ்ந்த நிலையில் இருந்தனர்.. அதனால் தான் அமிர்ததிற்கும் குறை சொல்ல முடியாமல் போய் விட்டது.. அதுவும் அகத்தியனுக்கு அவரின் சமையல் மிகவும் விருப்பமானது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!