மறுநாள் காலை எழுந்து வந்த ரூபாவை பார்த்த விலாசினி “நாளைக்கு ஹிந்திபடத்துலநடிக்கறவிஷயமாநாம பெங்களூர் போகணும்.. காலைலகிளம்பணும்“
“ஏம்மா…உனக்கு எப்பவும் நடிப்பு..நடிப்புதானா..காலைல எழுந்து வந்ததும் இதான்பேச்சா..சாப்பிட ஏதாவது குடுமா..பசி உயிர் போகுது..”
விலாசினி திரும்பி சமையலறையை பார்த்து கூப்பிடுவதற்குள் அங்கு வந்த சமையல் செய்யும் ராணி அக்கா “பாப்பா..மன்னிச்சுக்கங்க..நீங்க வந்ததயேபாக்கல..இந்தாங்க..” என தட்டை நீட்டினார்.
Advertisement
விலாசினியோகோபத்தோடு வேகமாக “ராணி உனக்கு மரியாதையே தெரியாதா..பாப்பானுசொல்லாத..மேடம்னுசொல்லுனு எத்தனை தடவை சொல்றது.. யாராவது மரியாதைப்பட்டஆளுங்க வந்த எங்களகேவலமாநெனக்கமாட்டாங்க..”
“மா..போதும் மா…அவங்களுக்கு உன் வயசு ஆகுது..விடு… அவங்களுக்குஎப்டி கூப்பிட வசதியோஅப்டிகூப்பிடட்டும்…நீங்க உள்ள போங்க கா…”
அம்மாவை பேசி சமாளித்து விட்டு தட்டை பார்க்க பச்சை கலர் ஜுஸ், எண்ணி நாலு வறுத்த முந்திரி, பிஸ்தா, வால்நட், அக்ரூட், ஊற வைத்து தோலுரித்தபாதாம் பத்து இருக்க “என்னது மா..இது எனக்கு இதகுடுக்கற…எனக்கு வேணாம்..நேத்துநைட்டேசாப்பிடல மா..பயங்கரமாபசிக்கிது..எனக்கு இருக்கறபசிக்கு எத்தனை இட்லி, தோசை சாப்பிடுவேனோ…தெரியாது..ராணி அக்கா எனக்கு நாலு இட்லி சாம்பார் போட்டு எடுத்துட்டு வாங்க..”
Advertisement
வீட்டில் வேலை செய்பவர்கள் முன்னாலயே அவள் பேசியதை கேட்ட விலாசினிக்கு எங்கு போய் முட்டிக்கொள்வது என்றே தெரியாமல் போனது.
Advertisement
அடுத்த நிமிடமே ராணி தட்டில் இட்லி சாம்பாரோடுவர..கொஞ்சம் கூட அம்மாவை பார்க்காமல் தட்டை வாங்கிய ரூபா எதை பற்றியும் யோசிக்காமல் கண்ணை மூடி திறப்பதற்குள் சாப்பிட்டு தட்டை அலம்பி டைனிங் டேபிளில் வைத்து “கா…சாம்பார் சூப்பர்” என சொல்லி விட்டு வந்தாள்.
அவளை கையை பிடித்து தரதர என இழுத்து சென்ற விலாசினிரூபாவின் அறைக்கு நுழைந்து கதவை அரைந்து சாத்தி விட்டு“ஏய் உனக்கு கொஞ்சமானும் அறிவு இருக்கா இல்லையா..காலைல எழுந்து வந்ததும் தின்றது தான் முதல் வேலையா? ஜிம்முக்குபோயிட்டு வந்து தானே சாப்பிட வரணும்..எதுக்குமொதல்லயே வந்த டி..”
“மா..பசிச்சிது..சாப்பிட்டது ஒரு குத்தமா மா..வயத்துக்காக தானே உழைக்கிறோம்…சாப்பிட கூட இல்லாம எதுக்கு யாருக்கு நான் உழைக்கணும்னு சொல்லு..”
Advertisement
“அடியேய்..ஒழுங்கா நான் சொல்றதகேட்டுட்டு தானே இருந்த..இப்பஎன்னாச்சு…யார் என்ன சொல்லி குடுத்தாங்க…ஏன் டி என் வயத்தெரிச்சலகொட்டிக்கற…”
“உன் வெயிட்ஏறாமஇருக்கறதுக்கு நான் படற பாடு உனக்கு எப்டி தெரியும்..மொதபடத்துலநடிக்கறப்ப உன் வெயிட் 55 கிலோ…இத்தனை வருஷமா அதையே மெயின்டயின் பண்ண நான் எவ்ளோகஷ்டப்பட்டிருப்பேன்..”
“நல்லா தீனி தின்னு வெயிட்ஏறினாஹீரோயின்னா நடிக்க கூப்பிட மாட்டாங்கடி..ஹீரோயினுக்கு அம்மாவா வேஷம் கட்ட வெச்சு உன் சினிமா வாழ்க்கையையேஅழிச்சிடுவாங்கடிபுரிஞ்சிக்கோ…”
“ஏற்கனவே தெலுங்கு படத்துலநடிச்சிட்டே…ஹிந்திலநடிக்கணும்..படம் சக்ஸஸ்ஆகணும்…படங்களா வந்து குவியணும்…பாலிவுட்ல நீ தான் லேடி சூப்பர் ஸ்டாராஇருக்கணும்..நீ வெச்சது தான் சட்டமாஇருக்கணும்..
“கொஞ்சம் வருஷம் நடிச்சிட்டு யாராவது பெரிய பணக்காரனா, இல்லவடக்க தான் ராஜ வம்சத்து ஆள் நிறைய இருப்பாங்களே…அவங்களபேரும், பணமும், புகழும்இருக்கறஆளாபாத்து உன்னை கல்யாணம் பண்ணி குடுத்திட்டு உன் பசங்களபாத்துக்கறசாக்குல நானும் உன் கூடவே வந்திட்டு என்மிச்சசொச்ச நாளை நிம்மதியாவாழ்ந்திடுவேன்..”
“இப்டி நான் எவ்ளோ கனவு கண்டுட்டுஇருக்கேன்..கண்டத எல்லாம் தின்னு…எக்கச்சக்கவெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமஆகி..என் ஆசையை நிராசையாக்கிநீர்குமிழி மாறி உடைச்சிடாதடி…”
“மா..போதும் நிறுத்து மா..என்னபேசணும்னுதெரிஞ்சு தான் பேசறீயா…இத்தனை வருஷமா நீ சொல்றத தானே கேக்கறேன்.. எத்தனை மணிக்கு எழுப்பினாலும்எழுந்துக்கறேன்..நீ சாப்பிட சொல்லி குடுக்கறத தானே சாப்பிடறேன்..”
“யார் கிட்ட பேசணும்னுசொல்றீயோஅவங்க கிட்ட மட்டும் பேசறேன்..நீ பேசக்கூடாதுனுசொல்றவங்க கிட்ட பேச கூட முயற்சி பண்றதில்ல..இவ்ளோ ஏன் நீ எனக்காக ஒரு லஷ்மண ரேகை கோடு போட்டிருக்கியே.. அந்த கோட்டை தாண்டறது பத்தி யோசிச்சது கூட இல்ல..”
“ஏதோ ஒரு நாள் ஒரே ஒரு தடவை பசிக்கிதுனுசாப்பிட்டதுக்குஇப்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவியா… நீ பண்றதபாக்கவெறுப்பா இருக்கு மா..”
“நீ ரொம்ப பேசிட்ட..நீ சொல்றத எல்லாம் கேக்கறேன்..தயவு செய்து என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு..சரியாசாப்பிடாததாலதலையசுத்தற மாறி இருக்கு..இப்பஇங்கேயிருந்துபோ..கொஞ்சம் நேரம் நான் ரெஸ்ட்எடுக்கணும்..ப்ளீஸ் மா..”
எதற்கும் அசராதவிலாசினி மகளின் கெஞ்சல் வார்த்தைகளால் போனால் போகட்டும் என எதுவும் பேசாமல் அமைதியாக அவள் அறையில் இருந்து வெளியேறினார்.
அம்மா வெளியே போனதும் கதவை தாழ் போட்ட ரூபா ஜன்னல் கதவுகள் எல்லாவற்றையும் மூடி அறையை இருட்டாக்கி விட்டு, தன் அறையில் இருந்த வேண்டாத பொருட்கள் போட்டு வைக்கும் பெட்டியை அங்கிருக்கும்கேமரா கண்களில் படாமல் உள்ளே இருந்த சிறிய அறைக்கு எடுத்து கொண்டு வைத்து விட்டு அமைதியாக போய் தன் கட்டிலில் தூங்குவது போல படுத்து கொண்டாள்.
விலாசினியின் தன் அறையில் இருந்து ரூபாவின்அறையில் இருக்கும் கேமராவினால் எப்போதும் போல அவளை கண்காணிப்பது போல கண்காணிக்க ஆரம்பித்தார்.
தன்னை அறியாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தூங்கியரூபாஇன்டர்காம்சத்தத்தால் கண் விழித்தாலும் தூக்க கலக்கத்தோடுரிசீவரை எடுக்க அந்த பக்கத்தில் விலாசினி “ரூபா கண்ணு நம்மதோட்டத்துலேந்து மணி ஃபோன் பண்ணி இருந்தான்…நம்மநிலத்துக்குபக்கத்துல இன்னும் கொஞ்சம் இடம் விலைக்கு வருதாம்..அவங்களுக்கு ஏதோ அவசர தேவையாம்..உடனே விக்கணுமாம்..”
“நான் போய் பார்த்து சரியா இருந்து நமக்கு எல்லாம் ஒத்து வந்தா அட்வான்ஸ் குடுத்திட்டுராத்திரியே திரும்ப வந்திடறேன்..உனக்கு துணைக்கு ராணி இருப்பா..நான் வர்றவரைக்கும் நீ வெளியே வர வேண்டாம்…தூங்கி ரெஸ்ட்எடு..சரியா..”என மூச்சு வாங்காமல் பேச அதற்கு பதிலாக “சரி மா..பாத்துபோயிட்டுஜாக்கிரதையா திரும்ப வா..துணைக்குராஜாவையும்அழைச்சிண்டு போ..” என ரூபா சொல்லி ரிசீவரை வைத்து விட்டு மறுபடியும் தூங்கி போனாள்.
கதவு தட்டும்சப்தத்தால் எழுந்த ரூபா கதவை திறந்து பார்க்க வெளியே ராணியின் கையில் இருந்த தட்டை பார்த்து பூரித்தவள் “அக்கா…முகம் அலம்பிட்டுவந்துடறேன்..” என வேகமாக போய் முகத்தை அலம்பி விட்டு வந்து தட்டை வாங்கி கேமரா கண்களில் படாமல் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து நிமிடங்கள் காலி செய்தாள்.
“பாப்பா என்ன அவசரம்.. பொறுமையா தான் சாப்பிடறதுதானே..எப்பவும் போல நீ வழக்கமாசாப்பிடறதைகேமராஇருக்கறபக்கமாஎடுத்துட்டுவந்தேன்..இதுநம்ம வழி ..” என சொல்லி சிரித்து விட்டு தட்டை வாங்கி கொண்டார்.
ரூபா மறுபடியும் தன்னறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதை கேட்ட ராணி பாப்பா இப்பவாவதுநிம்மதியா இருக்கட்டும் என மனதுக்கு நினைத்தபடி கீழே இறங்கி தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
கதவை தாளிட்டதும்தன்னறையில் இருந்த டிவியைஆன் செய்து அவளுக்கு பிடித்த கார்ட்டூன் சேனலை வைத்து விட்டு உட்காரும் இடம் கேமராவில் கவர் ஆகாது என்பதால் வேகமாக சின்ன அறைக்கு போய் ஏற்கனவே எடுத்து வைத்த பெட்டியை திறக்க அதில் அவளுடைய அப்பாவின் ஃபோட்டோவை பார்த்து கண் கலங்கினாள்.
எதாவது அவசரம், ஆபத்து என்றால் மட்டுமே அந்த பெட்டியின் உள்ளே சாதாரணமாக கண்களுக்கே படாமல் இருக்கும் சின்ன பெட்டியை திறக்க வேண்டும் என அப்பாவின் பாச வேண்டுகோள் நினைவுக்கு வர..மெல்ல துழாவி அந்த பெட்டியை தேடி திறக்க..அதனுள் ஒரு சிறிய ஃபைல் இருக்க அதை பிரித்து பார்த்தவளுக்கு இதுவரை அவளுக்கு தெரியாத அவளுடைய வாழ்வின் ரகசியங்கள் அதில் நிறைந்து இருந்தது.
கண்களில் நீர் வழிவது தெரியாமல் பார்த்தவளுக்குஅதனுடேயே அவளுடைய அப்பாவின் கையெழுத்தில் இருந்த கடிதம் தெரிய அதனையும் எடுத்து பிரித்து படித்தவளுக்கு தன் தந்தையின் தீர்க்கதரிசனத்தில் வழக்கம் போல ஆச்சரியம் ஏற்பட்டது.
அவர் உபயோகப்படுத்தியஃபோனை எடுத்து சார்ஜ் போட்டவள் ஒரு மணி நேரத்துக்கு பின் கடிதத்தில் அப்பாவால்எழுதப்பட்டதொலைபேசிஎண்களை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தவளுக்கு எதிர் புறம் கேட்ட குரலால்ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
சில நிமிடபேச்சுக்கள் மட்டும் எதிர் புறத்தில் பேச ரூபாவெறுமனம்ம் என சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள்.
இரவு எப்போதும் போல அறைக்கு அவளுடைய டயட் உணவு வர எந்த எதிர்ப்பும் இல்லாமல் சாப்பிட்டு தட்டை அலம்பி திரும்பி குடுத்து தன்னறைக்குள் சென்றாள்
இரவில் யாரும் மாடிக்கு போகும் வழக்கம் இல்லாததால் எப்போதும் போல தன்னறையில் ராணி படுத்து தூங்க ஆரம்பித்தார்.
மறுநாள் காலை பெங்களூர் போக நேரமாகிவிட்டதே என அவசர அவசரமாக விலாசினிரூபாவின் அறையை திறந்து பார்த்து தேடியதும் தான் ரூபா வீட்டில் இருந்து காணாமல் போனதே தெரிய வந்தது. (தொடரும்)