Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 5

நயம் – 5

அபி  ஆபீசை விட்டு கிளம்பியவுடன் தன் அத்தைக்கு போன் செய்து பக்கத்திலுள்ள காபி ஷாப்பிற்கு மாமாவுடன் வரச் சொல்லி விட்டான். அதேபோல பவி, கோகுலையும் வரச் சொல்லி விட்டான். இவன் கிளம்பி செல்வதற்குள் அவர்களும் வந்துவிட்டனர்.

கணேஷ்யை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று கட்டிக்கொண்டான். மாம்ஸ் உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு ? இன்னும் அப்படியே இருக்கியே மாமா. அந்த சீக்ரெட் என்னனென்று எனக்கும் கொஞ்சம் சொல்லலாமே.

ஏண்டா. உள்ளே வந்த உடனே ஐஸ் வைக்குற. அதான் உன் அத்தையை கவுத்தி பொண்ணை கட்டிக்க போறியே. இன்னும் என்ன ? என்றார் கணேஷ் அபியின் தந்தை.



Advertisement

அத்தையை எல்லாமே பல வருஷத்துக்கு முன்னே என் பேச்சுக்கு கட்டி போட்டாச்சு. உன் பொண்ணு தான் மாமா மசியமாட்றா. தேஞ்சு  போன ரெகார்ட் மாதிரி என் மாமா பையனை தான் கட்டிக்கிவேன்னு சொல்றா.

அதான் அவ ரூட்ல போயி கல்யாணம் பண்ண போறேன். லவ் மேரேஜ் பண்ணலாம்னா விட மாட்டேங்கிறா. அதான் உங்களை எல்லாம் கூப்பிட்டேன்.

என்ன கோகுல் அண்ணா. வந்ததுல இருந்து எதுவும் பேச மாட்டேங்குறீங்க. பவியை பார்த்ததும் பேச மறந்துடீங்களா ?

Advertisement

ஏன் சொல்லமாட்டா. காலையிலயிருந்து மண்டபம், இன்விடேஷன்னு என்னை கூடக் கூட்டிட்டு போய் மதியம் வரை விடமாட்டமா எல்லாத்தையும் முடிச்சிட்ட இப்ப குடும்பத்தோடு கூட்டம் கூடி வைச்சு இருக்கற எதுக்குப்பா ?

Advertisement

என்ன அண்ணா பண்றது ? நான் ஒரே பையன். கல்யாண வேலை செய்ய ஆளே இல்லை. நீங்கதான் பையன் சார்பா அண்ணன். பொண்ணு சார்பா வீட்டு மூத்த மாப்பிள்ளை. அதான் உங்களை கூட்டிக்கிட்டு போய் எல்லா வேலையையும் முடிச்சேன். என்னதான் போன்ல அப்பாட்ட, மாமாட்ட பேசி எல்லாம் செய்தாலும் மாரல் சப்போர்ட்க்கு ஆள் வேணுமில்லை. என் கல்யாணத்திற்கு தூணே நீங்கதான்.

வாயிலேயே வடை சுட உங்கிட்ட தான் கத்துக்கணும். சரி இப்போ என்ன ?

நான் சண்டே தான் வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினச்சேன். ஆனால் அப்பா அம்மா நாளைக்கு காலையிலே வராங்க .  நாளைக்கே பூவைக்கணும்னு சொல்றாங்க. அதான் இங்கே ஒரு சின்ன மீட்டிங்.

Advertisement

ஆமாம் . எங்ககிட்டையும் அண்ணன் போன்ல எல்லாம் சொன்னார் என்றார் பிரியா.

அப்ப நாங்க நாளைக்கு மதியம் வர்றோம் அத்தை. அபிகிட்ட சாயந்தரம் பொண்ணு பார்க்க வருவதால் லீவு சொல்ல சொல்லிருங்க. நான் அவ வேலையெல்லாம் முடிக்க வெச்சுட்டேன். இப்போ போய் நீங்க சொல்லுங்க. என்னைப்பற்றி மட்டும் எதுவும் சொல்ல வேண்டாம். சரியா என்றான் அரவிந்த்.

நானும் பவி மாமியார்ட்ட சொல்லி அவங்களையும் வரச் சொல்லிடுறேன். ஆனால் ஒரு வாரத்துல கல்யாணம்ங்கிறது  தான் கொஞ்சம் வேகமாய் வேலையை பார்க்கிற மாறி இருக்கு. ஆற அமர பண்ணலாம்னா கேக்க மாட்டேங்குற. என்றார் கணேஷ்.

மாமா இவ்வளவு நாள் இருந்துட்டேன். இனி காத்திருக்க எல்லாம் முடியாது. கல்யாணம் பண்ணிட்டு தான் அடுத்து  பிசினெஸ்ல புதுசா நிறைய மாத்த போறேன். அது ஆரம்பிச்சா எனக்கு நேரமே இருக்காது. அதான் இவ்வளவு சீக்கிரம் என்று புன்சிரிப்புடன் சொன்னான் புது மாப்பிள்ளை.

தனக்கு வேண்டியதை ஒரு சிணுங்கலோ, பிடிவாதமா இன்றி கைபற்றிக் கொள்வதில் கெட்டிக்காரன். எங்கு யாரிடமும், எப்படி பேச வேண்டும் என கற்று தேர்ந்த வித்தைக்காரன்.  தன எதிராளியை  கூட புன்னகையால் கட்டி போடும் கண்கட்டு வித்தைக்காரன். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் தனக்கு விருப்பமானதை நிறைவேற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தவன்.

திட்டமிட்டப்படி மறுநாள் அனைவரையும் வரச் சொல்லிவிட்டனர். அபியிடம் கூறி அவளை லீவும் எடுக்க சொல்லி விட்டனர். தான் நாளை லீவு என்று மட்டுமே மேனேஜரிடம் கூறி விட்டாள். மறுநாள் சென்று திருமண விஷத்தை கூறலாம் என அதனை மறைத்து விட்டாள்.

வீட்டிற்கு சென்றவுடன் மகளை அழைத்த கணேஷ் அவளிடம், அபிம்மா! நாளைக்கு அச்சு மாமா வரார். அடுத்த வாரமே உனக்கு கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்றார். கிருஷ்ணா அடுத்து பாரின் போறதால் மேரேஜ் முடிக்கணுமாம். அதனால் நீ இனிமே வேலைக்கு போகாதே . திங்கட்கிழமை பிறகு என்னவென மாப்பிளை முடிவெடுப்பார்.

திடீர்னு என்னப்பா அவசரமா மேரேஜ் ? ஏன் இவ்ளோ சீக்கிரம் ?

மாப்பிளை இந்தியா வந்ததே இப்போதான். திரும்பி போய்ட்டாருன்னா எப்போ வருவாருணே சொல்ல முடியாது. அதனால் தான் மா . ஏன் உன்னிடம் அவர் சொல்லலையா என்றவரிடம் புரியாது முழித்தாள்.

அச்சு மாமா என்னிடம் பேசவே இல்லையே. அவரையும் நான் பார்த்ததில்லை . எப்படிப்பா சொல்லுவாங்க.

வரவர க்ரிஷ் ரொம்ப விளையாடுறான். இங்கே வந்து கல்யாண வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ணி, உனக்கு புடவையெல்லாம் கூட  எடுத்து வைச்சுட்டான். மண்டபம் எல்லாம் ரெடி. ரெண்டு நாளா இந்த வேலை எல்லாம் பாத்துட்டு இருந்தும் உன்கிட்ட ஆபீஸ்லேயும் எதுவும் சொல்லலியா ?

அபி என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள் , அவள் முழிப்பதை கண்டு நாளைக்கு அவன் வந்தபின்பே என்னவென்று நீயே கேட்டுக்கோ . இப்போ போய் நல்லா  தூங்குமா என்ற தந்தையிடம் எதுவும் கூற முடியாமல் உள்ளே சென்றாள்.

கடவுளே, நான் அவன்கிட்ட விளையாட நினச்சா என்னை இப்படி குழப்புறானே,  அடுத்த வாரம் கல்யாணமா , எல்லாமே ராக்கெட் ஸ்பீடுல போனா மீ பாவம்ல. வருஷ கணக்கா வெயிட் பண்ணேன். அதான் சட்டுனு வந்து பட்டுனு மேரேஜ் வச்சா குப்புனு வேர்க்குதே, சரி நம்ம ஆள் தானே. என்னத்த பண்ண போறார்னு பார்ப்போம்.  இரவின் தனிமையில் அவனை பற்றிய எண்ணங்களோடு உறங்கியும் உறங்கா நிலையில் உறங்கினாள்.

காலையில் வீட்டிற்கு வந்த பவியின் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டின் அருகே இருக்கும் மாலிற்கு சென்று கொஞ்ச நேரத்தில் வந்து விடுவதாய் சொல்லி அங்கு வந்து விட்டாள்

இதோ மாலிற்கு வந்து குழந்தைகளோடு சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள். சிறியவர்கள் வீடியோ கேம் விளையாட சென்றுவிட்டனர். இவளும் சாப்பிடுவதற்கு எதையாவது வாங்கி வரலாம் என கடைக்கு வந்தாள். பிரெஞ்சு ப்ரைஸ், மோமோஸ் , கட்லட் வாங்கி கொண்டு திரும்பினாள் எப்போதும் போல் எதிரில் அரவிந்த் நின்று கொண்டு இருந்தான்.

அட நம்மாளு நிக்கிறாரு ! கொஞ்சம் வம்பிழுத்து பாப்போம். வீட்ல ஒன்னும் பண்ண முடியாதுல என நினைத்து கொண்டே கேசுவலாக குட் மோர்னிங் சார் என்றாள்.

அவனும் சிரித்து கொண்டு கையில் உள்ளதை வாங்கி கொண்டு, அவள் அமர சேரை இழுத்து போட்டான்.

என்ன அபி. வீட்ல இருப்பன்னு நினச்சா இங்க வந்துருக்க.

இன்னிக்கு லீவுதானே. அதான் பசங்களோடு ஜாலியா இங்க வந்தேன். இவ்வளவு நேரம் சந்தோசமா போச்சி. இனி எப்படியோ தெரியலை.

ஓ..என்ன பார்த்தா உனக்கு பிடிக்கலையா ? அதான் அப்படி சொல்றப்போல.

நீங்க இங்கு வந்தா எனக்கு என்ன சார். வீட்டுக்கு கெஸ்ட் வராங்க . அதான் உடனே கிளம்பனும். இல்லைனா ஜாலியா சினிமாவுக்கு போயிருப்பேன். அப்பா வேகமா வர சொல்லிட்டாங்க. என்றாள் சலித்துக் கொண்டே.

அவ்வளவு தான.  நம்ம இங்கேயே சாப்பிட்டு சினிமாவுக்கு போகலாம். மாமாட்ட போன் பண்ணி சொல்லிருவோம்.

உங்க மாமாட்ட நீங்க சொல்லுங்க. எனக்கு என்ன ? நான் எங்க அப்பா பேச்சை மீறி எங்கயும் போகமாட்டேன் சார் என்றாள்.

உங்க அப்பாவை தான் மாமான்னு சொன்னேன். நான் வேணா அவருக்கு கால் பண்ணி சொல்லவா?

அதுவரை பொறுமையாக இருந்தவள். சார், இது ஆபீசும் இல்லை. நீங்க  என் பாசும் இல்லை. இதுக்கு மேல ஏதாவது பேசுனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. நானும் எத்தனை தடவை சொல்றேன். உங்களுக்கு புரியலையா. எனக்கு ஆள் இருக்கான்னு சொல்றேன். திரும்ப திரும்ப இப்படி பேசிவிட்டு வந்த என்ன பண்ணுவேன்னு தெரியாது அவ்ளோதான் பாத்துக்கோங்க.

உனக்கே தெரியாதுனா என்னமா பண்ண முடியும். இதுக்காக இன்னொரு ஸ்டாபா  நான் வேலைக்கு வைக்கமுடியும்.

உங்களை  எல்லாம் திருத்தவே முடியாது. போங்க  என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

இவளின் கோபத்தைக் கண்டு சிரிப்பதா இல்லை இன்று நடக்க போவதற்கு இன்னும் எவ்ளோ கோபப்படுவாளோ  எனத் தெரியாமல் அவள் போவதை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான்.

இவளோ நன்றாக அவனிடம் கோவத்தில் திட்டுவது போல் திட்டிவிட்டு ,  போகையில் அவனது அப்பாவி முகத்தை நினைத்து சிரித்துக்கொண்டே வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

அவள் சென்றவுடன் தன் அத்தைக்கு போன் செய்தவன் , அத்தை அவ வந்துட்டாளா ? ரொம்ப கோபமாய் கிளம்பிட்டா.  அவ மூஞ்சிலேயே சிக்கனை பொரிச்சி எடுத்திரலாம் என நக்கல் செய்து சிரித்தான்.

ஏன் தம்பி எப்போ பாரு என் பொண்ணுட்ட வம்புக்கு நிக்குற. இன்னும் கொஞ்ச நேரம் தான். உன்ன பற்றி அவளுக்கு தெரிஞ்சுது உன்னை உரிச்சு உப்புகண்டம் போட்டுத்தொங்க விட்ருவா . அமைதியா இருக்கிறாள்னு எல்லாம் நினைக்காதே. அது சுடிதார் போட்ட  சொர்ணாக்கா. என் பொண்ண பத்தி நானே சொல்லக்கூடாது. இருந்தாலும் வேறு வழியில்லை.  உன்கிட்ட சொல்லி தானே ஆகணும். உங்க ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிகிட்டு நான் தான் முழிக்கின்றேன்.

என்ன அத்தை, இப்போவே புலம்ப ஆரம்பிச்சுட்ட . இன்னும் எவ்ளோ இருக்கு . நீ தானே எல்லாத்தையும் சமாளிக்கணும் என கூறியப்படியே சிரித்தான்.

சரி பேசிக்கிட்டே இருக்காதபா ,சட்டுபுட்டுனு வீட்டுக்கு வந்து சேரு. ஈவினிங் சாப்பிட எல்லாம் ரெடி பண்ணிட்டேன். உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ணறாங்க என அலைபேசியை வைத்து விட்டு சமயலறையில் நுழைந்தார்.

சமைத்த உணவுகளை ஒவ்வொன்றாய் எடுத்து வந்து வைக்க ஆரம்பித்தார். அவங்க எல்லாம் இந்தியாவுக்கு வந்து எத்தனை வருஷம் ஆச்சு. பவி கல்யாணம் அப்போ வந்தது. அடுத்து இப்போதான் அண்ணியும் சேர்ந்து  வராங்க. வெளிநாடு போனா இங்க திரும்பிவர மனசு வராது போல.

சின்ன பிள்ளையில கூட்டிட்டு போனாங்க. ஏதோ இவன் மட்டும் தான் நம்ம கூட டெய்லி டச்சுல இருக்கான். இல்லைனா என்ன பண்றது ?பையன் கல்யாண வயசு வந்ததும் தான் நம்ம நினைப்பே வருது. அதுவரைக்கும் பேசின வார்த்தையை மறக்காம கிளம்பி வந்தாங்களே. அதுவே சந்தோஷம். தூக்கி வளர்த்த பாசம் இவனுக்கு இன்னும் இருக்கு.

என் பொண்ணை கட்டிக்கிட லண்டன்ல இருந்து ஓடி வந்துருக்கான். என்ன கல்யாணம் பண்ணிட்டு அவளையும் கூட்டிட்டு போகணும்னு சொல்றாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு . அபிகுட்டி இல்லாம என்ன பண்ண போறேனோ ? பொண்ணை பெத்தவங்க எல்லாம் இப்படி புலம்ப வேண்டிதான் இருக்கு. என்ன செய்ய என அங்கலாய்த்தபடி கணவரை கூப்பிட அறைக்கு சென்றார்.

அபி வந்த பின் சாப்பிடலாம் என்று அவரும் கூறியதால் சற்று நேரம் திருமணம் குறித்து பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் வந்த அபி
குழந்தைகளை அறையில்  விட்டுவிட்டு ரூம்க்கு சென்று டிரஸ் மாற்றி வர சென்று விட்டாள்.

அவர் அறையில் நுழைந்த நேரம் இரு வாண்டுகளும் மல்லு கட்டி கொண்டு நின்றது. கட்டில் முழுவதும் நாணயங்கள் இறைந்து கிடந்தன. பசங்களா என்ன பண்றீங்க, ஏன் ரெண்டு பெரும் சண்டை போடுறீங்க.

பெரியவனான சிவா உடனே பாட்டி இந்த விஷ்ணுக்கு ஏதும் தெரியல, சொன்னலும் கேக்க மாட்டேங்கிறான் . நீங்களே கேளுங்க என சொல்லி கொண்டே அழ ஆரம்பித்து விட்டான்.

என்னடா குட்டி பண்ணீங்க, அண்ணன் ஏன் அழுகின்றான் என கேட்டது தான் தாமதம், அவனும் அழ ஆரம்பித்து விட்டான்.

இவருக்கு ஐயோ என்று ஆனது. சொல்லிட்டு அழுகலாம் தம்பி, நீ குட் பாய் தானே என்றதும்

பாட்டி கடையில் போய் ஸ்னாக்ஸ் வாங்கலாம் 3 ரூபீஸ் எடுத்து வர சொன்னா , உண்டியல் காசை எல்லாம் கீழே கொட்டி வச்சிருக்கான். என்னடானு கேட்டா 3 ரூபீஸ் இல்லனு சொல்லறான்.

அதான் இவ்ளோ காயின் இருக்குல்ல, ஏன் இல்லைனு சொன்னப்பா விஷ்ணு என்றவுடன்

நல்லா பாரு பாட்டி, 1 , 2 , 5 , 10 , 20 கூட இருக்கு , ஆனால் 3 ரூபீஸ் மட்டும் இல்லை , இதை சொன்னா எனக்கு ஒன்னும் தெரியலனு சொல்லறான். அதான்  காயின் எல்லாத்தையும் கீழே கொட்டி கவுண்ட் பண்ணி காட்டினேன். நீயே கேளு பாட்டி என்று சமர்த்தாய் பதில் சொன்னான் விஷ்ணு குட்டி.

அதை கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார், இருந்தும் அண்ணன் சொல்றதும் சரி , நீ சொல்றதும் சரி . 3 ரூபீஸ் இல்லை. நீ நல்லா படிச்சு முடிச்சு பெரிய பையன் ஆகி ,  அந்த காயினை பிரிண்ட் பண்ணலாம் , இப்ப நம்ம போய் சாப்பிட போகலாம் வாங்க என அழைத்து சென்று விட்டார்.

மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வரும் நிகழ்வினை அடுத்த பதிவில் காண்போம்.

***********

“ஆண்டுகள் பல கடந்திடினும்
ஆயிரம் உறவுகள் இருந்திடினும்
தொலைந்து போன உந்தன்
நேசத்தை தேடி கொண்டு
என் விழி பாவைகள்
உறங்காமல் விழித்திருக்கும்
இமைகள் இமைக்க மறந்த நொடி
இமை குடைக்குள்
நிறைந்து நின்றவனால்
மனதில் தோன்றியது நொடிப்பொழுதும்
இனி இமைக்கவே கூடாதென
என் உறங்கா இரவுகள்
உன்னோடு தொடர்ந்திடுமா
தொடங்கிடுமா அறியேன் ”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!