Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 9

💞 நயம் 9 💞



Advertisement

அவள் அறைக்கு வந்ததும் அவன் கண்டது வித விதமான கிருஷ்ணர் புகைப்படங்களே. பென்சில் ட்ராயிங் தொடங்கி தஞ்சாவூர் பெயின்டிங் வரை அற்புதமாக இருந்தது.

Advertisement

Advertisement

வாவ். வாய் மட்டும் தான் பேசுவேன்னு நினைச்சேன். கையும் அழகா வரையுதே. எல்லாமே சூப்பரா இருக்கு என அவற்றின் அருகே சென்று ஒவ்வொன்றையும் பார்வையிட்டான். அவளும் அமைதியா அவன் முகத்தை மட்டும் பார்த்து கொண்டு நின்றாள்.

Advertisement

இந்த படத்தை எல்லாம் நான் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. முகம் எல்லாம் ஒரே ஜாடையா இருக்கு, அப்புறம் இந்த கண்ணு என்றவன் அப்போதுதான் ஒன்றை கவனித்தான்.

ஏய் …,என்னுடைய சின்ன வயசு முகம் மாதிரி இருக்கு. அப்ப இதெல்லாம் என்னை மாடல் மாதிரி நினச்சு வரைஞ்சியா என்றான்.

இவரு பெரிய மாடல் . இவங்கள பார்த்து வரையிறாங்க, மனசுல உள்ளத தானே கை வரையும் , இது கூட புரியலையா என மனதில் எண்ணிக்கொண்டு ம்ம்ம்.., என்று உச்சு கொட்டினாள்.

பரவாயில்லை இப்படியாவது என்னை ஞாபகம் வச்சி இருக்கியே, சூப்பர் என்றவன், ஆமாம் உன் லவர் இங்கே இருப்பார்னு சொன்னியே , எங்கே ஆளையே காணோம், என்ன பார்த்ததும் ஓடி போய்ட்டான் போல என்றான் புருவம் தூக்கி சிரித்து கொண்டே.

தூங்கறவங்களை எழுப்பலாம், ஆனால் நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது, அவங்களா எந்திரிச்சி தான் உண்டு. இப்போ நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நான் அப்புறம் காட்டறேன் என்றபடியே குளியலறைக்கு சென்று விட்டாள்.

நீதாண்டா அதுன்னு வாயை திறந்து ஒரு வார்த்தை சொல்ராளா, நீயே சொல்ற வரைக்கும் உன்னை விடமாட்டேன் என மனதில் நினைத்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தான்.

பின் மெதுவே அந்த அறையை தன் கண்களால் அலசி ஆராய்ந்தான். அனைத்திலும் ஒரு நேர்த்தி. மிக விசாலமான அறை. ஒரு பக்க சுவற்றில் அலமாரி முழுதும் டைரி மற்றும் புத்தங்கங்களே . அதன் அருகில் அவள் வாங்கிய பதக்கங்கள், கோப்பைகள், அவளின் பல்வேறு நடன அரங்கேற்றத்தை போது எடுத்த புகைப்படங்கள் என வரிசையாக இருந்தன. மற்றொரு புறம் மூடிய கப்போர்டுகள் இருந்தன. நடுவே கட்டில், ஒரு ஓரத்தில் மேஜை, நாற்காலி, ட்ரெஸ்ஸிங் டேபிள் என இருந்தன . தேவைற்ற பொருட்கள் என எங்கும் இல்லை.

அத்தை மாதிரியே இவளும் எல்லாம் அழகா, நேர்த்தியா, சுத்தமா வச்சி இருக்கா. அதான் ஆபீசுலேயும் கரெக்டா மேனேஜ் பண்ரா போல. ஸ்மார்ட் கேர்ள் தான் என் பொண்டாட்டி என மனதில் எண்ணிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் முகம் கழுவி வந்தவள் என்ன பாஸ் தூங்கலையா, அமைதியா இருக்கீங்க.

ஆளே இல்லாத ரூமில் என்னமா பண்ண முடியும். அதான் சும்மா பார்த்துட்டு இருக்கேன்.

ஆமாம், அக்கா, மாமா, பசங்க எல்லாம் இன்னும் மண்டபத்துல தானே இருக்காங்க. அவங்க இருந்தா ஜாலியா இருக்கும். கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்கா மாட்டாங்க. அவங்க பின்னாடியே சுத்த சரியாய் இருக்கும்.

கொஞ்ச…, தான் பார்க்கின்றேன் . எங்கே நேரம் கிடைக்க மாட்டேங்குதே என்றான் உள்சென்ற குரலில்.

அதை கண்டு கொள்ளாது ஆமாம், நீங்க எப்படி உடனே கல்யாணம் பண்ண சரி சொன்னிங்க. அதுவும் இவ்ளோ அவசரமா, கொஞ்சம் யோசிக்க கூட டைம் இல்ல, எல்லாத்துலையும் வேகம் , ஒன்னு கண்டுக்க மாட்டேங்கிறீங்க, இல்லை ஜெட் ஸ்பீடுல ஓடுறிங்க.

ஏன்மா , உனக்கு எல்லாம் சீக்கிரம் பண்ண மாதிரி பீல் ஆகுதா ?

பாஸ், பத்து நாள்ல கல்யாணம், என் பிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா? என்னமோ நீங்க என்னை பார்த்த உடனே காதல்ல விழுந்து உடனே கல்யாணம் பண்ணும்னு ஒத்த கால்ல நின்ன மாதிரி சீன் போட்டாங்க.எல்லாம் நக்கல் பண்ராங்க, ஒவ்வொருத்தியையும் கல்யாணதுக்கு இன்வைட் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சி. பதில் சொல்லி முடியல, இதுல ஒருத்தி ஹச்ன்னு தும்மும்போது கிருஷ்ணானு சொல்லுவியே அது இவர் தானேன்னு கிண்டல் பண்ரா, முடியல.

ஓ.., என்னை பத்தி அவங்ககிட்ட சொல்லி இருப்ப, அதான் இப்போ கலாய்கிறாங்க.

என் பிரென்ட் க்ரிஷ் பத்தி மட்டும் தான் பேசுவேன். அதுவும் சின்ன வயசில, அப்புறம் தான் நீங்க விட்டுட்டு ஓடி போயிட்டீங்க, உங்களை பத்தி ஒன்னும் தெரியாது, நான் என்ன சொல்றது அவங்ககிட்ட?

அப்ப யாருகிட்டயும் நீ க்ளோசா பேச மாட்டியா, பழக மாட்டியா ?

அப்படியெல்லாம் எல்லாத்தையும் யாருகிட்டயும் சொல்லமாட்டேன், உங்களை விட க்ளோஸ் பிரென்ட் யாரும் இல்ல. அதான் எப்பவும் உங்ககிட்ட மட்டும் சொல்லி பழகிட்டேன், அதை மாத்த முடியல.

அப்ப இன்னும் நான் உன் பிரென்ட் தானா? என்கிட்டே பேசாம எப்படி எல்லாத்தையும் சொல்லுவ என்றான்.

அவள் பதில் சொல்வதற்குள் அவள் பெரியம்மா அவர்களை அழைத்து செல்ல ரூம்க்கு வந்து விட்டார் மண்டபத்திற்கு கூட்டி செல்லவென்று.

இவர்கள் மண்டபம் வருவதற்குள் அனைத்து சீர்வரிசை , பரிசு பொருட்கள் எடுத்து செல்ல தயார் நிலையில் இருந்தன.இதோ இன்னும் சிறிது நேரத்தில் ப்ரியாவின் மகள் அவளை விட்டு புகுந்தகம் செல்ல இருக்கின்றாள். எத்தனை கட்டுப்படுத்தியும் கண்ணீர் இமை தாண்டி கொட்ட தயாராய் இருந்தது. பாசத்தை கொட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்த மகள், இனி தன் மகளாய் மட்டுமே இருக்கப்போவதில்லையே.

மருமகனின் மனைவியாய் மட்டும் தான் எங்கும் முன்னிருத்தப்படுவாள்.உறவில் தெரிந்த மனிதரின் வீட்டில் தான் என்றாலும் உரிமையாய் இனி சட்டென்று மகளை காண முடியாதே, அதுவும் அவள் சிறிது நாளில் லண்டன் சென்று விடுவாள், வருடத்திற்கு ஒருமுறை தான் அருகில் பார்க்க முடியும். நவீன யுகத்தில் எத்தனை வசதிகள் வந்தாலும் அருகில் அமர்த்தி தொட்டு ரசித்திடும் அந்த சுகம் கிடைக்காதே. பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து அன்னைகளுக்கும் இந்த வலி உண்டுதானே. மாற்ற முடியாத மறுக்க முடியாத வலி.

ஆனாலும் பொங்கும் கண்ணீரை மறைத்து கொண்டு, மகளை திடமாய் வழியனுப்பி வைத்தார். ஏற்கனவே பவி திருமணத்தின் போதே சொல்லி உள்ளார். அழுகை வந்ததும் அதனை அடக்கி கொண்டு சிரித்த முகத்துடன் தான் கணவனோடு செல்ல வேண்டும். உன் முதல் அடியை மாமியார் வீட்டில் எடுத்து வைக்கும் போது மலர்ந்த மலர் போல் புன்னகையுடன் வலம் வர வேண்டும். தன் பெண் மனைவி என்னும் அடுத்த நிலைக்கு செல்லும்போது சோகம் கூட சுகமாய் மாற வேண்டும் என்பதே அந்த தாயின் விருப்பம்.

வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா, இது தான் உன்னோட கோட்டை என்றார் பிரமிளா மருமகளிடம்.

அபியும் சிரித்தபடி அவன் கரங்களை பற்றி கொண்டு உள் நுழைந்தாள். இங்கும் மற்ற சடங்குகள் முடிந்தவுடன், பூஜையறையில் விளக்கேற்றி வழிபாட்டாள். பின் அவளை மட்டும் கீழே உள்ள அறையில் குளித்து ரெடியாக சொன்னார்கள்.

அவளுக்கு துணையாக பவியும் வந்து இருந்ததால் ஒன்றும் சொல்லாது அறைக்கு சென்று விட்டாள். குளித்து விட்டு வந்தவள் அடர் பச்சை வண்ண சாப்ட் சில்க் சேலையை உடுத்தி, மிதமான அலங்காரம், நகைகள் அணிந்து, தளர்வாக தலை பின்னி மல்லிகை பூ முடித்து அப்சரசாக நின்றாள்.

அவள் வாழ்வின் முதல் படியை தொடும் நாள் என்பதால் மனதில் ஒரு சிறு தயக்கம். இனம் புரியா தவிப்பு. சிறு வயது நண்பன், தன் அன்பு காதலன் என்றாலும் தனியறையில் அவனோடு இருப்பதை எண்ணி மனம் தடுமாறியது.

அபி, ஏன் ஒரு மாதிரி நெர்வசா இருக்க, ரிலாக்ஸ் ஆக இரு. நம்ம அரவிந்த் தானே. ஏன் பயப்படுற. உன்ன ரொம்ப நல்லா பார்த்துக்குவான் என்றாள் பவி.

இல்லக்கா,, அப்படிலாம் ஒண்ணுமில்லை.

பலவாறு பேசி அவளது மனதை தேற்றி அரவிந்த் அறைக்கு முன் அழைத்து சென்று விட்டு வந்தாள். எப்போதும் வரும் வீடுதான், ஆனால் இன்றோ புதிதாய் தெரிந்தது. கதவை தட்டவே சிறு தயக்கம். அவள் முயன்று கதவில் கை வைத்த நொடி, பட்டென்று கதவு திறந்தது.

உள்ளே வாம்மா , இது நம்ம ரூம், ஏன் யாரோ மாதிரி தயங்கி நிற்கிற என்றபடி அவளை உள்ளே அழைத்து சென்றான்.

கையில் இருந்த செம்பை வாங்கி டேபிள் மேல் வைத்தவன் அவளை அமர சொன்னான்.

ம்ம்ம், என்ற ஒற்றை வார்த்தை மட்டும் வந்தது. அவள் தயங்குவதை கண்டவன் அவளை மாற்றும் பொருட்டு, என் அபிக்குட்டிக்கு வெட்கம் எல்லாம் வருது. மேடையில அவ்ளோ வாய் பேசுனா பொண்ணு எங்கே காணோம் ? இப்ப என்னாச்சு, வெறும் காத்து தான் வருது என்றான் நக்கலாய் சிரித்தபடி.

உங்ககிட்ட அவ்ளோ பேசணும்னு நினைச்சி வந்தேன். ஆனால் என்னால் பேச முடியவில்லை. ஒரு மாதிரி இருக்கு என்றாள் தயங்கியபடி.

நம்ம ரெண்டு பெரும் பிரெண்ட்ஸ் தானே, டெய்லி என்கிட்டே எல்லாம் சொல்லுவேன்னு சொன்ன, ஏன் இப்போ பயமா இருக்கா, சொல்லுமா என்றான் தணிவாய்.

அவன் முகத்தை பார்த்தவள் எனக்கு கொஞ்சம் டைம் வேணும். எதோ ஒரு தயக்கம், ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்கோ.

எனக்கும் சட்டுனு கல்யாணம் பண்ணது ஒரு மாதிரி தான் இருக்கு. நம்ம கொஞ்ச நாள் பிரெண்ட்ஸா மட்டும் இருப்போம். அப்புறம் இயல்பா கணவன் மனைவியாய் வாழ ஆரம்பிக்கலாம், எனக்கு நீ என்கூட இருந்தாலே போதும் என்றான் நெகிழ்வுடன்.

அவன் கூறியதை கேட்டவள் தலை அசைத்து சரி என்றாள்.

நாளைக்கு காலையில் சீக்கிரம் கிளம்பி கோயிலுக்கு போகணும், நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. இப்போ எடுத்தா மட்டும் தான் உண்டு. அப்புறம் ரெஸ்ட் எல்லாம் கிடைக்காது .

இப்பதானே நல்லவன் மாதிரி பேசுன, அதுக்குள்ள என்னடா என்பதாய் பார்த்தவள் கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் போனில் பார்த்து கொண்டே இருந்தவன் அவள் நிம்மதியாக தூங்கிவிட்டாள் என்பதை தெரிந்துக் கொண்டு மெதுவாக அவள் அருகில் சென்று படுத்தவன். தன் விரல் கொண்டு அவள் முன் நெற்றி கூந்தலை களைத்து விளையாடினான்.

நயா, இந்த நாளுக்காக எவளோ நாள் வெயிட் பண்ணேன் தெரியுமா. நீ இப்படி என்கூட இருக்கிறது பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. உனக்கும் என்னை பிடித்து தான் கல்யாணம் பண்ணன்னு தெரியும் ஆனால் என் அளவுக்கு காதல் இருக்குமானு தெரியலை. உன் வாய் திறந்து நீ சொல்ற அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருப்பேன். இத்தனை நாள் உன்னை பார்க்காம இருந்தேன். இப்ப நீ என் பக்கத்துல வந்துட்ட, என் மனசுல உள்ளதை நீ புரிஞ்சுக்கும் நேரம் வரை பொறுமையாக இருப்பேன். ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க தெரியாதா ? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ எப்பவும் எனக்கு மட்டும்தான் என்றான் இமைகள் வருடிக்கொண்டே.

டேய். லூசுப்பயலே. அவ முழிச்சு இருக்கும்போது இதெல்லாம் சொல்லியிருந்தா அப்படி இப்படினு ஏதாச்சும் ரொமான்ஸ் நடந்துருக்கும் . இப்படி தூங்குறவகிட்ட புலம்புற. வீணா போனவனே என அவன் மனசாட்சி காரித் துப்பியது.படுறா பேசாமா என மனசாட்சியை திட்டிக் கொண்டு அவனும் இமை மூடினான்.

💞💞💞💞

“வருவான் காதல் தேவன் என்று

காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று

காவல் மீற

வளையல் ஓசை ராகமாக

இசைத்தேன் வாழ்த்துப்பாடலை

ஒரு நாள் வண்ண மாலை சூட

வளர்த்தேன் ஆசைக்காதலை

அடடா நானும் மீனைப் போல

கடலில் வாழக்கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல

உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது…

அதில் நாயகன் பேரெழுது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!