Skip to content
Post Views: 13,861
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 23
நிரஞ்சன் வாழ்க்கையை கொஞ்சம் புரிந்தும், புரியாத நிலையிலும் இருந்தான். வித்யா கொஞ்சம் மாறுபட்டவள் தெரியும் தான். ஆனால், நானும் என் குடும்பமும் அவளுக்கு என்ன எதிரியா?… ஏன் தள்ளியே நிற்க வேண்டும். குழப்பத்தில் தான் இருந்தான்.
நர்மதா எப்பவும் போல கணவன், பிள்ளைகள், வீடு என்ற தன் வட்டத்திற்குள் நின்று கொண்டாள். வித்யா, தன் தாய் சொன்ன பின் எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தாள்.
Advertisement
வீட்டின் நிலவரம், வரவு, செலவு என்று எல்லாவற்றுக்கும் அவள் பார்வைக்கு கொண்டு வந்து பார்க்க… எல்லா செலவும் முகுந்தன் உடையது தான். மிகவும் தப்பான பெண் என்று வரையறைக்குள் வர மாட்டாள்.
பெறவர்களை பார்ப்பதும் நம் கடமை. அவ்வளவு தான். அதை விட்டு எல்லோரையும் கட்டி இழுப்பது நம் வேலை இல்லை என்றே நினைத்தாள். அதன் படி வீட்டின் முழு கடமையும் முகுந்தன் தலையில் விழுந்தது அவளுக்கு பிடிக்க வில்லை. பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்து இருந்தாள்.
இதுவரை எல்லாம் பார்த்தது நிரஞ்சன் தான். ஒருவருக்கும் குறை வைத்தது கிடையாது. வீட்டில் வரும் பொது செலவு கூட, அவனே பார்த்து கொள்வான்.
Advertisement
இன்று அவனே பெரும் கண்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளான். நிறைய பணம் லாஸ். அவனை தொந்தரவு செய்ய கூடாது என்று தான், பொறுப்பை முகுந்தன் எடுத்து கொண்டான்.
Advertisement
நர்மதாவுக்கு எதுவும் தெரியாது. அவளை பொறுத்த வரை முன்பிருந்தே நிரஞ்சன் கணக்கு சொல்லி செலவு செய்தது கிடையாது. இது தேவை என்றால் வீட்டில் இருக்கும். அவள் தேவைக்கு அவள் வருமானம் இருக்கே…
ஆக, எதுவும் தெரியாமல் முகுந்தன் தலைமையில் வீடு ஓட… வித்யாவுக்கு, தன் கணவன் முதுகில் சவாரி செய்யும் குடும்பமாக நிரஞ்சன் குடும்பம் தெரிந்தது.
நர்மதா அளவுக்கு கட்டு திட்டம் வித்யாவுக்கு வர வில்லை. முழு சுதந்திரத்தில் இருந்தவளுக்கு, கூட்டு குடும்ப கட்டுப்பாடு மூச்சடைத்தது. அன்று இரவு சமையல் வேலை தொடங்கும் போதே வித்யா சொல்லி விட்டாள்.
Advertisement
“ நீங்க குருமா வைங்க… நான் சப்பாத்தி போடுறேன்…”
சரி என்று நர்மதா குருமா வைக்க, வித்யா அவசரமாக சப்பாத்தி தேய்த்து எடுத்தாள். அளவாக தான் செய்தாள். ஆட்களை கணக்கு பண்ணி பரிமாற, நர்மதா குருமா எடுத்து வந்தாள்.
வித்யா எல்லோருக்கும் வைக்க, சஸ்டி தட்டில் இருந்த சப்பாத்தியை பார்த்த நர்மதா,
“வித்யா மாவு மீதம் இருக்கா…”
“ ம்ம், இருக்கு… ஏன் கேக்குறீங்க…”
“சும்மா தான்…” என்றவள் உள்ளே சென்று சென்று ரெண்டு சப்பாத்தி தேய்த்து எடுத்து வந்து, மகள்கள் இருவருக்கும் வைக்க,
இட்லி சண்டை போய் அடுத்த சப்பாத்தி சண்டையா என்று பார்க்க,
“எனக்கு தெரியல…” என்று வித்யாவும் ஒப்பு கொண்டாள்.
“பரவாயில்லை விடுங்க. எம் பிள்ளைக சாப்பிடுற அளவு எனக்கு தான் தெரியும். அதனால் என்ன, நீங்க வயசை கணக்கு பண்ணி சப்பாத்தி செஞ்சு இருப்பீங்க…” என்றாள் நர்மதா.
முகுந்தன் சொன்னான், “நீயா இருந்தா எம் பிள்ளைக்கு சாப்பாடு கொஞ்சமா கொடுத்தாங்கன்னு சொல்லி பிரச்சனையை கிளப்பி இருப்பா…”
வித்யா முறைத்தாள்.
“உண்மையிலேயே நர்மதா பரவாயில்ல. எவ்வளவு பணம் எந்தம்பி விட்டுட்டான் தெரியுமா… ஆனா, அந்த பொண்ணு ஒரு வார்த்தை சொல்லலை. வேலையே போனாலும் பரவாயில்லை, நீங்க இருந்தா போதும்ன்னு நினைக்கிறா… உண்மையாவே அவன் கொடுத்து வச்சவன் தான்…” என்று முகுந்தன் சொன்னதும்.
கணவனை ஒரு மாதிரியாக பார்த்த வித்யா, “உங்களுக்கு நர்மதாவ ரொம்ப பிடிக்குமோ?…”
“பிடிக்கும் தான் வித்யா. நர்மதா ரொம்ப நல்ல பொண்ணு…”
“அப்படி என்ன என்னை விட நல்ல பெண்…” என்று வித்யா கேட்ட பின் தான் முகுந்தன் மனைவி முகம் பார்த்தான்.
“நர்மதா நிரஞ்சன் மனைவி. நீ முகுந்தன் மனைவி. ரெண்டும் ஒன்னு கிடையாது…” என்று முகுந்தன் விளக்கம் சொல்ல,
வித்யா மனம் விட வில்லை, “நாம வெளிநாட்டுல இருக்கும் போது நீங்க வார சம்பளம் போதும், சொந்த ஊருக்கு போகலாம்ன்னு சொன்னீங்க. ஆனா நான் தான் செட்டில் ஆகிட்டு போலாம் சொன்னேன்…”
“ஆமா…” என்று முகுந்தன் சொல்ல,
“இன்னைக்கு நர்மதாவ என்ன சொன்னிங்க. பணம் போனாலும் புருசன் மட்டும் போதும்ன்னு நினைக்கிறா, நல்ல பொண்ணு சொல்றீங்க. அப்ப நான் என்ன கெட்ட பொண்ணா?…”
“ஏய் அறிவு கிடையாது உனக்கு. எதை எது கூட இனை கூட்டுற…”
“உங்களுக்கு தான் எனக்கு முன்னவே நர்மதாவ பிடிக்குமே…”
“வாய மூடு… என்னா பேச்சு பேசுறா… நர்மதா என் தம்பி பொண்டாட்டி. ரெண்டு பிள்ளை இருக்க, எந்த அர்த்ததுல பேசுற… உன் வாய் பேசுறது இது தான் லாஸ்ட்…” முகுந்தன் மிரட்டி விட்டு சென்றான்.
வித்யாவுக்கு அவ்வளவு கடுப்பு. என் சௌகரியத்தை எல்லாம் விட்டு உங்களுக்காக விட்டு கொடுத்து போன நான் உங்க கண்ணுக்கே தெரியல…
நிரஞ்சன் வீட்டோடு இருந்து மனைவியை அவதனித்தான். அவனை பொறுத்த வரை அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணம் தான் மிகுந்து இருந்தது. இத்தனை வருடம் சேர்ந்து வாழ்ந்தாலும், ஊன்றி கவனித்தா தான் உள் குணம் தெரியும் போல…
மனைவியின் பேச்சை, அவள் போதனையை கேட்டு ஆசை போட தொடங்கினான். அவளும் சாதாரண பேச்சு வாக்கில் ஏதாவது தத்துவம், கதை மாதிரி சொல்ல… தற்போது நிரஞ்சன் தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்து கொள்வான்.
“வேலையை விட்டாச்சு அடுத்து என்ன பண்ண நம்மு…” என்று கணவன் புலம்ப,
“அமைதியா உடலை தேத்தி வாங்க… கடவுள் ஏதாவது வழி காட்டுவார்…”
“என்னத்த வழி. எனக்கு எப்படி எல்லாம் நடக்கும்ன்னு கணவுல கூட நான் நினைக்கல.. எல்லாம் சரியா தான் போச்சு. எங்க மாறிபோனேன்னு தெரியல போ… எப்படியே வாழ்க்கை போகும்ன்னு நினைச்சேன். அந்த தைரியம் தான் யாரையும் குறைவா நினைச்சேன் போல…” சங்கட பட்டான் நிரஞ்சன்.
என்னங்க, நமக்கும் மேல ஒருத்தர் இருக்கார். நம்ம வாழ்க்கை சரியா கொண்டு போக அவருக்கு தெரியும். பெரியவங்க சொல்லுவாங்க கடவுள் மேல பாரத்தை போட்டு நடந்து போன்னு… அப்படியே நினைங்க. ஏதாவது வழி கிடைக்கும்…”
“எங்க வழி கிடைக்குது. கடவுள் கை விட்ட உணர்வு தான் எனக்கு நர்மதா. முன்ன மாதிரியே வாழ்க்கை போயிருக்கலாம். ஒரு இடத்துலேயே முடங்கி போயிட்டேன் நம்மு..”
“ஏன் அப்படி நினைக்கிறீங்க. எல்லாம் ஒரு அனுபவம் தான் நிரஞ்சன். பிறந்த குழந்தை ஒரு ஆறு மாசம் வரைக்கும் பால் குடிக்கும். அது மட்டும் தான் உணவு. அதுவே குழந்தை வளர வளர பால் மட்டும் தான் குடிப்பேன்னு அடம் பிடிச்சா. அது சரியா?… முதல்ல பருப்பு, காய், சாதம். சப்பாத்தின்னு, கறி, மீன் என்று பழக்குவோம். ஆரம்பத்துல செரிமானம் இல்லாம வயிற்று போக்கு ஏற்படும் தான். அப்புறம் சரியா போகும். எழுந்து, நடந்து ஓட ஆரம்பிச்சிருவாங்க…”
“ நம்ம வாழ்க்கை கூட அந்த மாதிரி தான். நமக்கு வசதியான சூழலை விட்டு வெளிவர மறுக்குறோம். அடுத்து வர போற கஷ்டத்தை நினைச்சு பயப்படுரோம். ஆனா, ஒரு பாடு அப்புறம் வர அனுபவம். அது குடுக்குற முதிர்ச்சி. அதுல இருந்து கத்துகிற திறமை. காலத்துக்கும் நம்மை வழி நடத்தும் நிரஞ்சன். தயங்காம கஷ்டத்தை எதிர்த்து வாங்க. அதுக்கப்புறம் தான் அமைதியான வாழ்க்கை இருக்கு…” என்று நர்மதா சொல்ல,
“உன்னை மாதிரி எல்லா நீ தான் யோசிக்க முடியும். நான் எல்லாம் பணம் போயி, வேலையும் போயி, உடகும் கெட்டு போச்சுன்னு வருதட தான் செய்வேன். உன்னை மாதிரி யோசிக்க மாட்டேன். நீ வணங்குற கடவுள் தான் என்னை தூக்கி விடணும்…” நிலை தாழ்ந்ததும் வரும் விரக்தி அவனுக்கு…
“உங்களை ஏன் தூக்கி விடணும். தத்து பித்து ன்னு எட்டு வைக்கும் பாருங்க ஒரு குழந்தை. அது விழும் போது ஓடி வந்து பெத்தவ தூக்குவா… அதுவே அந்த பிள்ளைக்கு பத்து வயசு இருக்கும் போது கீழ விழுந்த, அதன் தாய் என்ன சொல்லுவா, மெதுவா எழுந்து, கை கால்ல இருக்குற மண்ணை தட்டி விட்டு ஓட்டுன்னு சொல்லுவா… சும்மா கடந்து போனதை நினைகாம கீழ விழுந்தாச்சு, எப்படி எழுந்து ஓடலாம்ன்னு பாருங்க. ஆமை மாதிரி மெதுவா போன கூட பிரச்சனை இல்லை. ஒரே இடத்துல தேங்கி தான் நிற்க கூடாது நிரஞ்சன்…”
“நம்மு என்னமா பேசுற நீ… நான் படிச்ச படிப்பு, பார்த்து வேலை எல்லாம் என்ன மதிப்பு.. உன் வார்த்தை இருக்கே, சொல்ல தெரியல… பேசவே யோசிக்கிற என் நார்மதாவ இது? ஆச்சர்யமா இருக்கு…” என்று மனைவியை தட்டி கொடுக்க,
“ என்ன சொல்றீங்க. நான் ஏதோ சொல்ல, நீங்க என்னமோ பேசுறீங்க. பேசாம ரெஸ்ட் எடுங்க…” மனம் திறந்து பாராட்டுகிறார் கணவன். ஒரு சங்கடமான வெட்கம் வந்தது.
நர்மதா நீண்ட நாள் பள்ளி வராததால். அவள் நண்பி தீபா மட்டும் பார்க்க வந்து இருந்தாள். நர்மதா உபசரித்து எல்லாம் பார்க்க, வித்யா எதையும் கண்டு கொள் வில்லை.
தோழிகள் சாதரணமாக பேசி கொள்ள,
“உன் சின்ன பொண்ணு ரொம்ப அமைதி. ஆனா நல்ல மெர்சூட் போ…” கேலி போல தீபா சொல்ல,
“சஸ்டி அப்படியே அவங்க பாட்டி மாதிரி. நல்ல விவரம். எதையும் விட்டு கொடுக்க மாட்டா… ஆனா, இந்த சின்னது இருக்கே. அப்படியே எங்க பெரிய மாமா மாதிரி. ரொம்ப அமைதி. நல்லா புரிஞ்சு நடக்கும். பேச்சு, குணம் எல்லாம் எங்க பெரிய மாமா மாதிரி தான். சான்வி மாதிரி பத்து பிள்ளைகளை கூட வளர்க்கலாம்…” என்று பேசி கொண்டிருந்தவள், வித்யாவை கவனிக்க வில்லை.
மாலை ஆறு மணி ஆனதும், “வித்யா, இட்லி ஊத்தி வைப்போமா…” என்று ஆரம்பிக்க,
“ ம்ம், பண்ணலாம் நர்மதா. அதுக்கு முன்ன எனக்கு ஒரு கேள்வி. உங்க சின்ன பொண்ணு பத்தி ரொம்ப பெருமை போல…”
“ என்னவாம் வித்யா?…” நேராகவே கேட்டாள்.
“பொதுவா எல்லாரும் அவங்கவங்க புருசன் மாதிரி குழந்தை பிறந்தால் சந்தோச வருவாங்க. நீங்க என்னன்னா என் புருசன் மாதிரி குழந்தை பிறந்ததுக்கு சந்தோச படுறீங்க…”
“வித்யா…” அதிர்ந்து போய் பார்த்தால் நர்மதா.
“அதுல என்ன பெருமை. எனக்கு புரியவே இல்லை…”
“இதுல சிறுமை எங்க இருக்கு… என் பிள்ளை எம் மாமியார் மாதிரி, நாத்துனார் மாதிரி , மாமனார் மாதிரி ன்னு சொல்லுவோம் தான. அதே மாதிரி தான் எம் பொண்ணு பெரிய மாமா மாதிரி இருக்கான்னு சொன்னேன்…” ஒரு மாதிரி படபடக்கும் மனதை அடக்கினாள்.
சிறுமை தான். புருசன் முடியாம வீட்டோடு இருக்கான். ரெண்டு பிள்ளை வேறு இருக்கு… நீ.வேலை பார்த்தாள். பார்த்தாலும், எங்க அளவுக்கு உங்களுக்கு வசதி கிடையாது. அதனால் உம் பிள்ளைக கடமையை எம் புருசன் மேல வைக்கிரின்க. எம் புருசனை வச்சு உங்க வாழ்க்கையை செட்டில் பண்ண நினைக்கிறீங்க…”
“வித்யா …” கத்தினாள் நர்மதா.
error: Content is protected !!