Skip to content
Post Views: 4,923
வீடியோ காலில் இருந்தாள் ஜான்வி.
“நீங்க கண்டிப்பா வரணும் ஜான்வி, அதுக்குதான் நான் போன வாரமே விக்கி கிட்ட உங்கள இன்வைட் பண்ண சொல்லியிருந்தேன்.
நான் உங்களுக்காக வெயிட் பண்ணுவேன், நீங்க வந்தா தான் கேக் கட் பண்ணுவேன்னு விக்கிகிட்ட கூட சொல்லியிருக்கேன்” என்றாள், எதிர்முனையில் இருந்த அனுரேகா.
விக்கியின் பியான்சி.
Advertisement
அவளின் பர்த்டே பார்ட்டி, திருச்சி கண்டோன்மென்ட் அருகில் இருந்த உயர்தர ஹோட்டல் ஹாலில் மாலை நடக்க இருக்கிறது.
அதற்கு தான் ஜான்வியை அழைத்துக் கொண்டிருந்தாள் அனு.
ஏற்கனவே இதைப் பற்றி விக்கி ஜான்வியிடம் சொல்லி, “நீ வரலைன்னா அவ கோச்சுப்பா, அதனால, நீ உன் டூட்டிய அட்ஜஸ்ட் பண்ணி அன்னிக்கு ஆப் வாங்கிடு” என்றும் சொல்லியிருந்தான்.
Advertisement
“நான் கட்டாயம் வரேன் விக்கி, ஆனா, இந்த ஊரில் கேப் கிடைக்காது. என்னால டூ வீலரை அவ்வளவு தூரம் ஓட்டி வர முடியாது, அதான் பாக்குறேன்” என்றாள் ஜான்வி.
Advertisement
“அதெல்லாம் நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிட்டுப் போறேன், நீ ஷார்ப்பா பைவ்க்கு கிளம்பி ரெடியா இரு! பார்ட்டி முடிஞ்சதும், நானே உன்னை ட்ராப் பண்றேன், இல்ல ரொம்ப லேட் ஆயிடுச்சுன்னா, நீ என் வீட்டுல தங்கிட்டு மார்னிங் வந்திடு.
அப்பா அம்மாவும் சந்தோசப்படுவாங்க”
“அப்ப சரி. ஓகே நான் வரேன்” ஜான்வியும் வருவதாக ஒத்துக் கொண்டாள்.
Advertisement
ஜகதுவிடம் போய் அவரிடமும் விஷயத்தை சொல்லி அனுமதி கேட்டுக் கொண்டார்கள் விக்கியும், ஜான்வியும்.
ஜகது கூட கொஞ்சம் தயங்கிய போது, கனகு தான்,
“போயிட்டு வரட்டும் ஜகது, அவளும் இங்கேயே நம்ம ரெண்டு கிழவிங்க மூஞ்சியையே எத்தனை நேரம் பார்த்துட்டு இருப்பா!
அங்க அவ கூட படிச்ச பிள்ளைங்க நாலு பேரு வருவாங்க, நல்லா சிரிச்சுப் பேசி சந்தோசமா இருந்துட்டு வரட்டும்! ஏண்டாப்பா விக்கி, பொம்பளப் பிள்ளைங்க எல்லாம் வராங்க, வேற எந்த பார்ட்டியும் இல்லையே?” என்று வாய்க்கு அருகில் குடிப்பதுப் போல கையை வைத்து சைகை செய்து கேட்டார் கனகு!
“அய்யோ, கனகு டார்லிங், இந்த பச்சை மண்ணைப் போய் இப்படி சந்தேகப்படலாமா? எங்க பிரண்ட்ஸ் கேங் எல்லோருமே சுத்த டீடோட்லர்ஸ்!”
“அப்படின்னா?”
“தம்மு, தண்ணி எந்த பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்லப் பசங்க நாங்க! நீ கவலையே படாத டார்லிங், உன் பேத்திய நான் பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு, பார்ட்டி முடிச்சதும் பத்திரமா கூட்டிட்டு வந்து ஒப்படைச்சுடறேன்! டோன்ட் ஒர்ரி!” விக்கி கனகுவிடம் நம்பிக்கைக் கொடுத்தான்.
“யப்பா மணி, பார்த்துக்கோ, நீ தான் இதுக்கு சாட்சி! “என்று பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த மணியையும் கலாய்த்து விட்டே கிளம்பினான் விக்கி.
சொன்னது போல மாலை அவன் பைக்கை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.
ஆனால் அவன் வழக்கமாக வரும் பழைய பைக்கில் இல்லாமல், இன்று புது KTM பைக்கில் வந்திருந்தான்!
ஜான்வியும், அவள் சித்தி ஊர்மிளா பிரத்யேகமாக ஆர்டர் பண்ணி வாங்கி பரிசளித்து இருந்த ஒரு சிவப்பு நிற டிசைனர் சாரியில் ஒரு தேவதையைப் போல வெளியே வந்தாள்!
அன்றைய பார்ட்டி டிரஸ்கோட் ரெட்கலர் என்று ஏற்கனவே பேசி வைத்திருந்தார்கள் நண்பர்கள் அனைவரும்!
ஆண்களுக்கு ப்ளூ.
ஜான்வி ரெட் கலர் சாரிக்கு கான்ராஸ்ட் கலர் ஆக ஆரி ஒர்க் செய்யப்பட ப்ளூ கலர் டிசைனர் ப்ளவுஸ் அணிந்திருந்தாள்!
அவை அவளின் நிறத்திற்கு ஆளை அசத்தும் அழகைக் கொடுத்தது!
“வாவ்! யூ லுக் கார்ஜியஸ் ஜானு!” என்றான் விக்கியும் அவளைப் பாராட்டும் விதமாக!
அவனும் ப்ளு நிற சூட்டில் அவளுக்குப் பொருத்தமாகவே இருந்தான்!
இவர்கள் இருவரையும் கொஞ்சம் பொறாமையும் கோபமும் கொண்ட இரு கண்கள் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தன!
அந்த கோபத்தோடு கூடவே அவளை ரசிக்கவும் தவறவில்லை அவை!
அவை யாருடைய கண்கள்?
வேற யார் நம்ம பரணியின் கண்கள்தான்!
அவன் ஜான்வியிடம் ரொம்பவும் பொசசிவ் ஆகிவிட்டான், சமீப நாட்களாக!
இப்போது, விக்கியும் ஜான்வியும் வெளியே கிளம்புவதைப் பார்த்த அவனுக்கு அடக்க முடியாத கோபம் தான் வந்தது!
அவளுக்கு வீக் ஆப்! அவள் எங்கே போனால் அவனுக்கென்ன என்று அறிவு அவனையே கேள்விக் கேட்டாலும் மனசு வேற டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்துக் கொண்டு கோபம் கொண்டது!
அவன் அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் அறையின் பால்கனியில் இருந்துக் கொண்டு!
யப்பா என்னமா ஆளை அசத்தற அழகு! அப்புறம் இந்த சிரிப்பு!
“அப்படி அவன் என்னத்தை சொல்லிவிட்டான், இப்படி சிரிக்க? பார்த்து.. பார்த்து..பல்லு கில்லு சுளுக்கிக்க போவுது!
ஏண்டா, உனக்கு என்னை மாதிரி ஆண் பிள்ளைகளோட பேசவே வராதா? எப்பப் பாரு, இவ கிட்ட அப்படி என்ன தான் பேச்சோ, சிரிப்போ?
ம்ம். இவளுக்கும் ஆத்தாக்களிடம் பேசி சிரிக்க தெரியும், பரத், பவி, பாரதி கூட அரட்டை அடித்து சிரிக்கத் தெரியும், ஏன் மணி கிட்ட கூட சிரிச்சு சிரிச்சுப் பேசுவா, ஆனா என்கிட்ட மட்டும் பேச அவளுக்கு வராது, பேசினாலும் எஸ் சார், நோ சார் மட்டும் தான்!
அதுக்கு மேலே பேசிட்டா அப்படியே உன்னோட சொத்து போய்டும் பாரு!
பேசவே மாட்டா, அப்புறம் எங்க சிரிக்கிறது? என்கிட்ட வந்து சிரிச்சுப் பேசிட்டா, அப்படியே உன் முத்துப்பல் உதிர்ந்தா போய்டும்?”
இப்படி வகை தொகையில்லாமல், எந்த லாஜிக்கும் இல்லாமல், அவர்களை கோபமாகவே பார்த்துக் கொண்டிருந்தான் பரணி!
எதேச்சையாக அங்கு வந்த மணி, வாலண்டியராக அவனாகவே “ஜானும்மா பர்த்டே பார்ட்டிக்குப் போறாங்க, ஜங்சன் வரை!” ஹோட்டல் பேரை சொன்னான்!
“அவ்வளவு தூரமா? இப்பவே மணி ஐந்தரை ஆச்சு, இவங்க போய் சேரவே ஆறு.. ஆறரை ஆகிடும், அப்புறம் பார்ட்டி முடிஞ்சு இவங்க எப்படிடா ரிட்டர்ன் வரது? “பரணி மணியிடம் கேட்க,
“அதெல்லாம் விக்கியண்ணன் பத்திரமா கூட்டிட்டு வரேன்னு சொல்லிடுச்சு, அப்படி லேட் ஆயிட்டா, விக்கி அண்ணன் வீட்டுலேயே இருந்துட்டு காலையில வருவாங்க ஜானும்மா!”
இவ்வளவு சொன்ன மணி, அது யாருடைய பர்த்டே பார்ட்டி என்றும் சொல்லியிருந்திருக்கலாம்!
அவன் எப்போதுமே இப்படி தான், சொல்ல வருவதில் பாதியை மறந்து விடுவான்!
அவன் சொல்லாத அந்த விஷயத்தால், பரணியின் மனது அடித்துக் கொண்டது!
அவர்களைப் பார்க்க, பார்க்க கோபம் கோபமாக வந்தது!
இப்படி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஜான்வியிடம் விக்கி, அவன் பைக்கைக் காட்டி எதுவோ சொல்ல,
ஜான்வி அலுப்புடன் அவனின் தோளில் தட்டி விட்டு, மீண்டும் வீட்டின் உள்ளே சென்றாள்!
சென்றவள் ஒரு நல்ல அடர் சிவப்பு நிற டிசைனர் குர்த்தியும், ப்ளூ நிற ஜீன்ஸ் பாண்டும் அணிந்து வெளியே வர பரணி கொஞ்சம் அதிர்ந்தான்!
முதலில் ஜான்வியின் அழகைப் புகழ்ந்த விக்கி, தான் கொண்டு வந்திருக்கும் பைக்கின் நினைவு வந்தவனாக, “அய்யோ ஜான்வி, நீ எப்படி சாரி கட்டிட்டு இதுல உட்காருவ, கம்போர்டபிளா இருக்காதே! ப்ளீஸ், நீ போய் சல்வார் மாதிரி ஏதாவது போட்டுட்டு வரியா?” என்று கேட்க,
“அடப்போடா,” என்று சலித்துக் கொண்டவள் ,மீண்டும் உள்ளே போய் உடை மாற்றி வந்தாள்.
விக்கியின் பைக்கில் இரண்டு புறமும் காலைப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள், அவனின் தோளைப் பிடித்து கொண்டாள்.
பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன், அதிலிருந்தபடியே, வீட்டில் இருந்த ஜகது மற்றும் கனகுவுடன் “பாய் அம்மாச்சி!” என்று கையை அசைத்து விட்டு கிளம்பி சென்று விட்டாள் ஜான்வி!
“பத்திரமா போயிட்டு வாடிம்மா” என்றார்கள் பாட்டிகள் இருவரும்!
“வர வர, இந்த கனகு அத்தாவோட அட்ராசிட்டிஸ் ரொம்பவே அதிகமா ஆகிடுச்சு! கனடாவுக்குப் போயிட்டு வந்தாலும் வந்துச்சு, ரொம்ப அல்ட்ரா மாடர்ன் கிழவியா ஆகிடுச்சு இப்ப எல்லாம்!
அதெப்படி ஒரு வயசுப் பெண்ணை, ஒரு வயசுப் பையனோட இப்படி ரெண்டு சைடும் காலைப் போட்டுக் கொண்டு பைக்கில் போக விட்டு பார்த்துட்டு இருக்கு!
இது கெட்டதும் இல்லாம, ஜகது ஆத்தாவையும் அது மாதிரியே மாத்தி வச்சுருக்கு!”
பரணியின் கோபத்திற்கு பாட்டிமார்களும் தப்பவில்லை!
இப்படியே தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவன், அவர்கள் வீட்டில் எல்லோரும் எட்டரை மணி வாக்கில் டின்னர் முடித்து அவரவர் அறைக்குள் முடங்கி விட்ட பின், மேலும் பொறுக்க முடியாமல், அவன் தன் காரைக் கிளப்பிக் கொண்டு, பார்ட்டி நடக்கும் ஹோட்டலை நோக்கி புயல் வேகத்தில் சென்றான்.
அரை மணி நேரத்தில் அந்த ஹோட்டலை அடைந்தவன், ரிசப்சனில், எந்த ஹாலில் பார்ட்டி என்று அறிந்து கொண்டு , கதவைத் திறந்து பார்ட்டி நடந்து கொண்டிருந்த ஹாலுக்குள் நுழைந்தான்.
அவன் உள்ளே நுழைந்தவுடனேயே விக்கி பார்த்து விட்டான்!
அவனுக்கு ரொம்பவே ஆச்சர்யம்!
வேகமாக அவனருகே ஓடி வந்து, “வாங்க பரணி சார்!” என்று சத்தமாக அழைக்க, பரணி பேரைக் கேட்டவுடன், நண்பர்களுடன் அரட்டையிலிருந்த ஜான்வி, உள்ளுக்குள் ஒரு சின்ன சிலிர்ப்புடன் திரும்பினாள்!
அவளின் பெரிய கண்கள், இன்னும் பெரியதாக விரிந்தன ஆச்சரியத்தில்!
அவளும் அவன் அருகே ஓடி வந்து, “வாங்க சார்” என்றாள்.
“ம்ம். பார்டி முடிஞ்சிடுச்சா, முடிய எவ்வளவு நேரம் ஆகும்” என்று கேட்டான்.
“கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு சார்”.
“ஜான்வி சப்பிட்டுட்டாங்களா?”
“ம்ம்.ஆச்சு சார். வாங்க நீங்க சாப்பிடுங்க”, விக்கி அவனை சாப்பிட அழைத்தான்.
அதற்குள் ஜான்வி அவனுக்கு கேக்கும் கூல் டிரிங்ஸ்சை எடுத்து வந்திருந்தாள்.
கூல் ட்ரிங்கை மட்டும் வாங்கி , பார்மாலிட்டிக்கு ஒரு சிப் குடித்தவன், “போலாமா” என்றான் ஜானவியைப் பார்த்து!
ஜான்வி அவனைக் கேள்வியாய் பார்க்க, “இப்பவே நைன் தர்ட்டி! நாம வீடு போய் சேர வேணாமா?” பார்வையில் அழுத்தம்!
உடனே ஒன்றும் சொல்லாமல், விக்கியிடமும் அனுவிடமும் விடைப் பெற்றுக் கொண்டு பரணியுடன் கிளம்பி விட்டாள் ஜான்வி!
பார்ட்டி ஹால்லை விட்டு வெளியே வந்தவுடன் அவளின் கையைப் பற்றி வேகமாக நடந்தான் பரணி!
அவன் வேகத்துக்கு ஜான்வி அவனுடன் ஓட வேண்டியிருந்தது!
“சார், கையை விடுங்க வலிக்குது, நான் தான் கிளம்பிட்டேனே, அப்புறம் என்ன” என்று அவள் மெல்லிய குரலில் சொன்ன போதும் அவன் கண்டுக் கொள்ளவே இல்லை!
வேகமாகவே பார்க்கிங் வந்தவன், காரின் முன் பக்க கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளியவன், வேகமாக டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து அதே வேகத்தில் காரை எடுத்தான்.
இப்போது அவன் ஏதோ கோபமாக இருக்கிறான், அதனால் வீடு போனவுடன் என்னவென்று கேட்டுக் கொள்ளலாம் என்று, ஜான்வியும் அமைதியாகவே வந்தாள்.
வீட்டை அடைந்தவுடன், அவள் காரை விட்டு இறங்கிவுடன் மீண்டும் அவளின் கையைப் பிடித்துக் கொண்டே வேகமாக உள்ளே நுழைந்தான்.
இவன் வீட்டை விட்டுக் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பரத் எதேச்சையாக வெளியே வந்தவன், பரணியின் காரைக் காணாமல், இந்த நேரத்தில் அண்ணன் எங்க போய் இருக்கான் என்று நினைத்துக் கொண்டே, நடந்தவன், பக்கவாட்டில் இருந்த தோட்டத்தில் கிழவிகள் இருவரும் கயிற்றுக் கட்டிலைப் போட்டு உட்கார்ந்து கொண்டு கதைப்பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
நேரே அவர்களிடம் போய், பரணி எங்கு என்று கேட்க, அப்போது தான் அவர்களும் கார் இல்லாததைக் கவனித்தார்கள்!
“என்ன கனகு ஆத்தா, பெரிசா சொல்லுவ?, உன் கண்ணுக்குத் தப்பி எதுவும் நடக்காதுன்னு!” பரத் அப்போதும் கனகுவை வாரினான்!
“இல்லடா, நாங்க ரெண்டு பேரும் உள்ளே போனோம் தலைகாணி எடுக்க, அப்போ வெளியே போய் இருப்பான் போல!”
“சரி அவனுக்கு போனை போடு!” கனகு சொல்ல,
பரத் கால் பண்ணினான்.
டிரைவிங்கில் இருந்த படியே ஸ்பீக்கரில் பேசினான் பரணி!
“நான் ஜங்சன் வரை போனேன், இப்ப ரிட்டர்ன் வந்துட்டு இருக்கேன், இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம்” என்றான் பரணி!
“என்ன ஆத்தா, அண்ணன், இந்த நேரத்துக்கு எதுக்கு ஜங்சனுக்குப் போய் இருக்கு, அதோட வந்திட்டு இருக்கோம்னு வேற சொல்லுது, எனக்கு ஒண்ணும் புரியல, யாரை இந்நேரத்துல பிக்கப் பண்ண போய் இருக்கு!” கேட்டான் பரத் ரொம்பவும் குழப்பத்துடன்!
“நம்ம ஜானு தான் அங்க ஒரு பிறந்த நாள் பார்ட்டின்னு போனா, ஆனா அது கூட இவனுக்குத் தெரியாதே!”
“ஒரு வேளை அவளை தான் கூட்டிட்டு வரானா?”
“ஜான்வி எதுவும் போன் பண்ணி சொல்லியிருப்பாளோ?”
“ம்ம்க்கும். அவ தான் அவன் கிட்ட பேசவே கூச்சப் படுவா, அவ கேட்டிருக்க மாட்டா” என்றார் கனகு!
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே, காரில் வந்து இறங்கி விட்டார்கள் ஜான்வியும் பரணியும்!
“டேய் என்னடா இது இப்படி முரட்டுத் தனமா பிடிச்சு இழுத்துட்டு வர, விடுறா அவ கைய!” சத்தம் போட்டார் ஜகது, அவன் ஜான்வியின் கையைப் பிடித்து இழுத்து வருவதைப் பார்த்து விட்டு!
அவன் ஜகது அதட்டிய பிறகே அவள் கையை விட்டான்!
“என்னடா ஆச்சு உனக்கு? என் இப்படி இவளை வேகமா கூட்டிட்டு வர!
ஏய் ஜானும்மா, நீயாவது சொல்லு!” பாட்டிகள் இருவரும் கோரசாகவே கேட்டார்கள்.
“எனக்கும் ஒண்ணும் புரியல அம்மாச்சி” என்றாள் ஜான்வியும் குழப்பத்துடன்!
“என்ன ஒண்ணும் புரியல! ஆமா உனக்கு ஒண்ணும் புரியவே புரியாது! இதென்ன புது பழக்கம், கண்டவனோட பைக்குள பார்ட்டிக்குப் போகிற பழக்கம்? இது ஒண்ணும் சிட்டி இல்ல உன் இஷ்டம் போல இருக்க, இது கிராமம்!” பரணி பல்லைக் கடித்துக் கொண்டு அவளை அடித்து விடுபவன் போல கிட்டே வந்தான்!
“கண்டவனோட ஒண்ணும் அவ போல, விக்கி தான் கூட்டிட்டுப் போனான், அதுவும் எங்க கிட்ட சொல்லிட்டு தான்!” ஜகது சொல்ல,
“யார் ஆத்தா அந்த விக்கி, நம்ம அப்பாவுக்கு பிசியோ கொடுக்க வந்தவன், அவன் கூட எப்படி நீங்க அனுப்பி வைக்கலாம்?” அவருடனும் பரணி எகிறினான்.
“அண்ணா நீ என்ன சொல்ற, விக்கி ஒரு எம்ப்ளாயி ன்னா ஜான்வியும் ஒரு எம்ப்ளாயி தானே, அவங்களோட வீக் ஆப்ல அவங்க எங்க வேணா போவாங்க வருவாங்க அதில் உனக்கு என்ன ப்ரோப்ளம்? நீ அவங்க கிட்ட இப்படியெல்லாம் ரூடா நடக்கிறது சரியில்ல!” பரத் அண்ணனைக் திட்டினான்.
பரணி கொஞ்சம் திணறினான்.
பின் சமாளித்துக்கொண்டு. “ம்ம்.. அவங்களும் ஒரு எம்ப்ளாயின்னாலும், இப்ப நம்ம வீட்டுல, நம்ம கேர் ஆப்ல தானே இருக்காங்க, அப்ப நாம தானே அவங்கள ஜாக்கிரதையா பார்த்துக்கணும்!”
“ஏன் இதுக்கு முன்னாடி கூட ஒருத்தவங்க ஜான்வி கூட தங்கியிருந்தாங்க, அவங்க இப்படி அன் டைம்ல வந்து போனப்போ, நீ ஒண்ணும் கேக்கலையே? இப்ப மட்டும் என்ன?”
“ம்ம். அவங்களும் ஜான்வியும் ஒண்ணா” என்று கேட்டே விட்டான் பரணி.
பின் சுதாரித்துக் கொண்டு, “நம்ம ஆத்தாங்க ரெண்டு அவங்கள பேத்தியை மாதிரி பார்க்குறாங்க இல்ல அத தான் சொல்ல வந்தேன்!” என்றான் மழுப்பலாக!
“நாங்க பார்க்குறோம் தான் இல்லைங்கல, அதுக்காக அவளை இப்படி நீ நடத்துறது, எங்களுக்கு ஒண்ணும் சரியா படல! ஜானும்மா நீ பேசாம குவார்ட்டர்ஸ்ல போய் தங்கிக்கோ” என்றார் ஜகது!
“டேய் பரணி, விக்கி அவன் கட்டிக்கப் போற பொண்ணோட பர்த்டே பார்ட்டிக்கு தாண்டா, அதுவும் அந்த அனு பொண்ணு ரொம்ப ஆசைப்பட்டான்னு தாண்டா ஜானுவை கூட்டிட்டு போனான்” என்று ரொம்ப சரியாக அவனின் பொசசிவ்நெசை கண்டுக் கொண்டு அவனை சமாதானப் படுத்தும் வகையில் சொன்னார் தே கிரேட் கனகு!
இதைக் கேட்டவுடன் அப்படியே கூல் ஆகி விட்டான் பரணி! அவனுக்குள் கொஞ்சம் நிம்மதி!
“இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்வளவோ கோவப்படுற ஆத்தா, இப்படி அன்டைம்ல வெளில போக வேணாம்னு சொன்னேன், அதுக்குப் போய் ஏன் இப்படி பெரிய முடிவு எல்லாம் எடுக்கிற, போ. போய் படுத்து தூங்கு!”
பஞ்சாயத்தைக் கலைத்து விடும் வடிவேல் போல டக்கென்று மாற்றி பேசினான் பரணி!
“யப்பா இது உலக மகா பல்ட்டிடா சாமி!” என்று கமென்ட் அடித்து சிரித்த படி உள்ளே சென்று விட்டான் பரத்!
கனகுவும் ஜகதுவும் கூட உள்ளே போக, ஜான்வி மட்டும் இன்னமும் ஒன்றுமே பேசாமல் மவுனமாகவே நின்றுக் கொண்டிருந்தாள்!
“சாரி..” என்றான் பரணி மெல்லிய குரலில் அவளிடம்.
“ம்ம். இட்ஸ் ஓகே” என்றாள் ஜான்வியும், இதுவரை மலர்ந்து இருந்த அவள் முகம் அவன் சாரி கேட்டவுடன் சுணங்கி போய் விட்டது!
என்ன இது இவ்வளவு நேரம் உரிமையாய் கத்தி விட்டு, இப்போது தேர்ட் பர்சன் போல சாரி கேக்கிறான் என்று!
“ஆமா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசிட்டா உன் வாயில இருக்கிற முத்து உதிர்ந்திடும்!” அவன் உள்ளுக்குள் அவளைத் திட்டினான்!
“போடா அது தான் சாரி கேட்டு என்னை அந்நியப் படுத்திட்டல்ல? அப்புறம் என்ன உன்கிட்ட பேச்சு!”
இது தான் அவர்கள் இருவரின் மைன்ட் வாய்ஸ் கான்வர்சேசன்ஸ்!
வெறுமனே தலையை மட்டும் ஆட்டி விட்டு உள்ளே சென்று விட்டான் பரணி!
ஜான்வியும் அவள் அறைக்குள் வந்து உடை மாற்றி கட்டிலில் விழுந்தாள்.
பரணி இறுக பிடித்துக் கொண்டு வந்திருந்ததில் அவளின் கை மணிக் கட்டு அருகே அப்படியே கன்றி சிவந்து போய் விட்டிருந்தது!
அதுவும் அவளின் நிறத்திற்கும் தோலின் மென்மைக்கும் ரொம்பவும் அச்சு விழுந்து சிவந்து போய் இருந்தது!
அவள் அதையே சந்தோசத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் காதல் கொண்ட மனது, அவனின் அந்த முரட்டு அத்து மீறலை, ரசிக்கவே செய்தது!
ஆனால் அந்த வீட்டின் இன்னொரு மூலையில் இன்னொரு ஜீவன் அழுதுக் கொண்டிருந்தது!
ஜகது தான்!
இன்றைய நிகழ்வுகள், பரணி ஜான்வியை ரொம்பவே விரும்புவதை எடுத்து சொல்லி விட்டது!
ஆனால் ஜான்வியும் அப்பா முட்டுக்கட்டைப் போடுகிறார்!
“நாம தேவையில்லாம இந்த பிள்ளைங்க மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டோமேடி கனகு” என்று அவர் அழவே தொடங்கி விட்டார்!
கனகு இப்போது ஒரு முடிவிற்கு வந்து இருந்தார்.
தான் ஏதாவது தில்லு முல்லு செய்தாவது இவர்களை சேர்த்து வைத்து விட வேண்டும்!
இதில் ரொம்ப முக்கியமானது, இந்த ஆபரேசனில் ஜகதுவைக் கூட்டு சேர்க்க கூடாது, சிங்கிள் வுமன் ஆர்மியாக இருந்து இதை நடத்தவேண்டும்!
ஏதாவது சொதப்பினாலும் கூட தன்னோடவே போய்விடும்!
அவரின் முடிவை இன்னும் தீவிரப்படுத்தின, அடுத்து வந்த ஜான்வியின் செயல்கள்!
Go ahead கனகு என்று!
error: Content is protected !!