Skip to content
Post Views: 1,085
அலைவரிசை 3
கதிரவனின் வெப்பக்கதிர்கள் பூமியின் மீது இருந்து விலகி சந்திரன் தன் ஒளியால் பூமியை காக்க வரும் அந்தி சாயும் பொழுதில் முகம் முழுவதும் வெறுமையாய் தாய்மை பூரிப்பு சிறிதும் இன்றி தனது 5 மாத கருவை சுமந்து கொண்டு, செந்நிறமாய் சிவந்து கிடக்கும் வானத்தினை முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்.
அவள் ஆனந்த அமிழ்தினி. ஆனந்தம் அவள் பெயரில் மட்டுமே இப்போது உள்ளது. வாழ்க்கையில் சிறு தவறை செய்துவிட்டு இப்போது அதை திருத்த முடியாமல் காலத்தை மாற்றவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பேதை பெண் அவள். அவளின் இந்த நிலைமையை புரிந்து கொண்டு தோள் கொடுக்க வேண்டிய கணவனும் அவன் அருகில் இல்லை. அவள் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவள் தாய்க்கும் தோணவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கும்
Advertisement
அவளின் காதில் காலை அவளின் அன்னை கூறியது கேட்டுக்கொண்டு இருந்தது.
” அமிழ்தினி செல்லம் இப்ப தான் உனக்கு புத்தி வந்து இருக்கு, இதோட விடாத இன்னும் இந்த இனியாவ
வச்சு செய்யணும். அவ அழுறது பார்த்து இங்க இருக்கிற எல்லா பெருசுகளும் ரத்தக்கண்ணீர் விட்டு சாகணும். ” என அவளைப் பேசக்கூட விடாமல் அவர் போக்கில் பேசிக் கொண்டிருந்த அன்னையின் வார்த்தைகளில் முகம் சுளித்து மொபைலை கட் செய்துவிட்டாள்.
Advertisement
Advertisement
5 மாத கருவை சுமந்து கொண்டிருக்கும் தனது மகளின் சௌகரியத்தை அறியாமல் அவர் போக்கில் பேசிக் கொண்டிருக்கும் தாயை நினைத்து ஒரு விரக்தி புன்னகை தோன்றியது. பாசமாக பார்த்துக் கொள்ளும் பெரியம்மாவின் நினைவில் கண்கள் கலங்கி கொண்டு வந்தது. இனி அவரின் முகத்தில் எப்படி முழிப்பது. சிறுவயதிலிருந்து அவர் குழந்தைக்கும் தனக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்ட தனது பெரியம்மாவை கலங்க வைத்த தன்னை நினைத்தே அருவருப்பாக தோன்றியது. தான் செய்த சிறு தவறு இவ்ளோ பெரிய காரியமாக மாறி தன் முன்னால் நிற்கும் என அவள் கனவு கூட கண்டது கிடையாது. அவளுக்கு மட்டும் காலத்தை மாற்றும் சக்தி இருந்தால் உடனே தனது வாழ்க்கையில் இந்த ஐந்து மாத காலத்தை நீக்கி இருப்பாள் ஆனால் முடியாதே என அவள் சிந்தனையில் நின்றவளை “அமிழ்தினி”என்ற சத்தம் நிகழ்க்காலத்திற்கு கூட்டி வந்தது.
சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தால் அங்கே நின்றவனை பார்த்து புன்னகைத்து,” எப்ப வந்தீங்க இன்பா மாமா” என்று அவனை நோக்கி நடந்து வந்தாள்.
Advertisement
அதில் அவளைப் பார்த்து சிரித்தவன் ” இப்பதான் வந்தேன்மா உன்ன பார்த்துட்டு காரை நிப்பாட்டிட்டு நேரா இங்கதான் வரேன்” என்றான் இன்பா
“ஆமாம் நீ ஏன் வெளிய நிக்க பனிக்காத்துல சளி பிடிச்சா உனக்கும் பேபிக்கும் கஷ்டம் இல்ல வா உள்ள போலாம்” என அவளின் கையைப் பிடித்து மாளிகை போன்று இருந்த அந்த வீட்டின் உள்ளே கூட்டி சென்றான்.
இருவரும் உள்ளே செல்ல அப்போது பட்டு சேலை சரசரக்க கழுத்தில் ஒரு பெரிய ஆரம் அணிந்து முகத்தில் எந்த மேக்கப் இல்லாமல் நெத்தியில் விபூதி மட்டும் பூசிக்கொண்டு தனது பருமனான உடலை தூக்கிக்கொண்டு படியிறங்கி வந்தார் இந்த வீட்டின் எஜமானி ஈஸ்வரி ரங்கராஜ். எதிராளியை பேச விடாமல் செய்வதில் வல்லவர்.
” வா இன்பா இப்பதான் வர்றியா” என்றார் ஈஸ்வரி
” ஆமா அம்மா என்றவன் நீங்க இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க அமிழ்தினி பார்க்காம “
“ஏன்டா வெளியே வாக்கிங் தான போனா” என்றார் லேசான அலட்சியத்துடன்
” ஏம்மா வெளியே பனிக்காத்து அடிக்குது உனக்கு தெரியலையா அதோட டைம் வேற ஆச்சு ஏதாவது பூச்சி கடிச்சி வச்சா என்ன பண்ணுவ” என்றான் அவர் அலட்சியத்தில் உண்டான கோபம் கொண்டு
” அட போடா காலையில இருந்து நைட் வரை அவளையே பாத்துட்டு இருந்தா மிச்ச வேலை எல்லாம் யார் பார்ப்பா” என்ற அன்னையை பார்த்து பெருமூச்சு விட்டான்.
அவனுக்குத் தெரியும் அன்னை வீட்டில் சிறு துரும்பை கூட நகர்த்துவது இல்லை என்று தந்தை இறந்த பிறகு அன்னை எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக இருந்து தனது உடலினை கெடுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தும் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கும் தனது நிலை எண்ணி வருந்தி கொண்டான். மீறி ஏதாவது சொன்னால் அடுத்து வீட்டில் நிகழும் அசம்பாவிதற்க்கு பயந்து தனது வாயினை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
அப்படி இருந்தும் அமிழ்தினியின் சோக முகம் பார்த்து “ஏன்மா இப்படி பேசுற” என்றான் கவலையாக
“பின்னே என்ன பண்ண சொல்ற என் பையன் வீட்டுக்கு வந்து நாலு மாசம் ஆகுது அவன் என்ன பண்றான்னு தெரியாம நான் இருக்கேன். அவன் வராம இருக்க காரணமான இவளுக்கு நான் ஊழியம் பாக்கணுமா ” என்றார் மருமகள் மீது உள்ள எரிச்சலுடன்
“அவன் திமிரெடுத்து வராம இருந்தா அதுக்கு அமிழ்தினி என்ன பண்ணுவா பொண்டாட்டி மாசமா இருக்கா அவள பாத்துக்க வேண்டாமா அத விட்டுட்டு ஊர் ஊரா பொறுக்கிட்டு திரியுறான் ” என்றான் கோவத்துடன் இன்பா
“அது அவன் குழந்தையா இருந்தா அவள கையில வச்சு தாங்குவான். இவ யார் குழந்தையோ சுமந்துட்டு என் பையன் கையில தாலி வாங்கிட்டு இருக்கா இதுல இவள வீட்ல வச்சி பார்க்கிறதே பெரிய விஷயம் இவ மூஞ்ச பாக்க முடியாம தான் என் பையன் வீட்டுக்கு வராம இருக்கான்” என்றார் அமிழ்தினி மீதுள்ள கோவத்தால்
அதுவரை வேதனையுடன் அவர் பேசுவதை பார்த்துக் கொண்டு நின்ற அமிழ்தினி ” அத்தை போதும் இது உங்க பையன் குழந்தை தான் இத நான் எத்தன தடவ சொல்றது வேணா உங்க பிள்ளைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க டெஸ்ட் பண்ணி பார்ப்போம்” என்றாள் தன்னை எப்படியாவது நிரூபிக்கும் முயற்சியில்
” ஆமா அடுத்தவங்கள ஏமாத்துறது எப்படின்னு உங்க வீட்ல சொல்லி கொடுத்து இருப்பாங்க. உங்க வாய் திறந்தா பொய் மட்டும் தான் வரும், உங்களால் ஒரு போலி டாக்டர் கிட்ட சர்டிபிகேட் ரெடி பண்ண முடியாதா என்ன” என்றார் அலட்சியத்துடன்
” அத்தை என்னை என்ன வேணாலும் பேசுங்கள் ஆனால் என் குடும்பத்தை பத்தி பேசாதிங்க” என்றாள் கோபமாக
ஈஸ்வரி அடுத்து பேசும் முன் “அம்மா போதும் இதுக்கும் மேல இதுப்பத்தி பேச வேணாம். உங்க புள்ள சொன்னானா அவனுக்கும் அமிழ்தினிக்கும் சம்மதம் இல்லனு. இனி இத பத்தி யாரும் பேச வேண்டாம். அமிழ்தினி உன் ரூமுக்கு போ ஜூஸ் கொடுத்து விடுகிறேன் குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என அவளை அனுப்பிவிட்டு
“அம்மா வர வர நீங்க பேசுறது ஒன்னும் சரியில்ல இப்ப இருக்குறது என் அம்மாவானு சந்தேகமா இருக்கு” என்றான் வேதனையாக
“என்னை என்ன பண்ண சொல்லுற இன்பா நீ ஆசை பட்ட பொண்ணையும் கல்யாணம் பண்ண முடியல உன் தம்பி கவின் கல்யாணம் நடந்ததேன்னு சந்தோசமா இருக்கவும் முடியல. அவன் வீட்டு பக்கமே வராம இருக்கான், ஆன இவ கர்ப்பமா இருக்கா. அதுவும் கல்யாணமாகி நாலு மாசத்துல ஐஞ்சி மாசமா இருக்கா, அவன் அவனுக்கும் இந்த குழந்தைக்கும் சம்மதம் இல்லாத மாதிரி திரியுறான். இவ வீட்டுக்கு வந்த நாளுல இருந்து இந்த வீட்டுல நிம்மதி இல்லாம எல்லாரும் இருக்கோம் ” என்றார் வேதனையாக
அவரின் வேதனையை காண முடியாமல் ” அப்பா நம்ம விட்டு போகும் போது கூட இவ்வளவு உடைச்சி போகாமல் இருந்தீங்கம்மா இப்ப என்ன ஆச்சு எல்லாம் நல்லா தான் முடியும் நீங்க உங்க மனசு போட்டு அழுத்திக்காம போய் சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க மா “
“ம் ம் சரிடா என்று நடக்க தொடங்கியவர் மீண்டும் திரும்பி வந்து “டேய் கவின் உனக்கு கால் பண்ணானா” என்றார்.
” இல்லம்மா ஏன் கேக்குறீங்க”
” நான் ஒரு வாரமா கால் பண்றேன் போன் போகல அதான் உனக்கு போன் பண்ணா நான் கேட்டேன்” என்றார் சின்ன மகனை பற்றி ஏதாவது தெரியுமா என்ற எதிர்பார்ப்போடு
காலையிலிருந்து மூன்று மீட்டிங் அட்டென்ட் பண்ணி, புதிதாக வந்த சிலரால் முடியும் தருவாயில் இருந்த ப்ராஜெக்ட்டில் சில குளறுபடியாகி அதை சரி செய்ய மதிய உணவை உண்ணாமல் வேலை செய்து, மாலை வீட்டுக்கு வர நேரமாகிவிடும் என காபி கூட குடிக்காமல் வேகமாக கிளம்பி வந்தான்.கலைத்து போய் வீட்டிற்கு வந்த அவனுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், தனது பொறுப்புக்களை அலட்சியம் செய்து தனது நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்று இருக்கும் சின்ன மகனைப் பற்றி கவலை கொள்ளும் தாயை பார்த்து எதுவும் சொல்ல முடியாமல் பெருமூச்சு ஒன்றை விட்டு, ” அவன் இப்போ நல்லா தான் இருக்கான் அவன் பிரண்ட்ஸ் கூட கொடைக்கானல் போயிருக்கான் சில இடத்துல போன் நெட்வொர்க் இல்லாம இருக்குமா” என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன் இன்பா.
” ஓ சரிடா அவனுக்கு இருக்கிற கஷ்டத்துக்கு இப்படி எங்கேயாவது போய் தான் ஆறுதல் தேட முடியும்”.
ம் என பெருமூச்சுவிட்டு “பொண்டாட்டி கிட்ட தான் எல்லோரும் ஆறுதல் தேடுவாங்க இங்க கஷ்டமே அவளால தான்” என மறுபடியும் ஆரம்பித்த தாயை நிறுத்தி
” அம்மா தேவையில்லாமல் பேசாம போய் ரெஸ்ட் எடுங்க” என அவரை பேச விடாமல் அவரின் அறைக்கு அனுப்பி விட்டு, சோர்வாக இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி ” அமி குறிச்சி தேதியில் நமக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்தா எப்படி இருக்கும் “என வாய்விட்டு புலம்பியவன் முன்பு
” தம்பி காபி இந்தாங்க” என்றாள் அந்த வீட்டில் ரொம்ப காலமாக வேலை செய்யும் பேச்சி. இந்த வீட்டில் சமையலறை எல்லாம் இவர் கண்ட்ரோல் தான்.
பேச்சி மற்றும் அவர் கணவர் கந்தன் இருவரும் இன்பா அப்பா ரங்கராஜ் காலத்தில் இருந்து இந்த வீட்டில் வேலை செய்பவர்கள். பேச்சி சமையல் வேலையும் கந்தன் தோட்டம் மற்றும் காவல் வேலையும் செய்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு பின் உள்ள சிறிய மரவீட்டில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் உள்ளான்.
மிகவும் சுட்டியான பையன். அவனுக்கு தன்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் கவினை விட தன்னோடு இணைந்து விளையாடும் இன்பாவை தான் ரொம்ப பிடிக்கும். இன்பாவின் சில கஷ்டமான பொழுதுகள் அந்த பையனிடம் தான் கழியும்.
அவளின் சத்தத்தில் கண்ணை திறந்தவன் ” பேச்சு அக்கா இப்பதான் ஒரு காபி குடிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றான் காபியை நுகர்ந்து கொண்டு புன்னகையுடன்
” தம்பி நீங்க இப்ப காப்பிய பத்தி தான் நினைச்சீங்க இல்ல” என்றாள் நீ சொன்னதை நான் கேட்டுவிட்டேன் என்ற கேலி சிரிப்புடன்
” அக்கா” என்றவன் வெட்கத்தில் சிவந்த தனது முகத்தினை மறைத்து, “காப்பியதான் அக்கா நான் நினைச்சேன்” என்றான் இனி நீங்கள் கிண்டல் பண்ண கூடாது என்ற அழுத்தமுடன்
” தம்பி சொன்னா சரிதான்” என சிரிப்புடன் இரவு உணவு செய்ய சமையலறையை நோக்கி நடந்தாள் பேச்சி
போகும் அவளை பார்த்துக்கொண்டு கையில் இருந்த காபியை குடித்து, “ஊரில் உள்ள எல்லோருக்கும் இவ மேல நான் வச்சிருக்க ஏக்கம் புரியுது ஆனால் எல்லாம் தெரிஞ்சும் இந்த ராட்சசி மட்டும் நமக்கு பதில் சொல்ல மாட்டா” என்றவன் காலையில் ஆபீஸில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தான்.
” மேரேஜ் அதுவும் உங்க கூடவா உங்க அம்மா பேசின எதுவும் நான் மறக்கவே இல்லை தப்பே பண்ணாம என் வீட்ல உள்ளவர்களை உங்க அம்மா பேசியனது இன்னும் என் காதுக்குள்ள கேட்டுகிட்டு இருக்கு.எப்படி எப்படி சொத்துக்காக உங்களை நான் மயக்க பார்த்தேனா அதுவும் வயசுல பெரியவர்னு கூட பாக்காம எங்க தாத்தாவை பார்த்து மாமா வேலை பாக்கியானு கேக்குறாங்க அத மறந்துட்டு நான் உங்க கூட கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு வரணுமா. எங்க தாத்தா யார் தெரியுமா உங்க அம்மாவுக்கு. நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு எங்க கிட்ட சொத்து இருக்கு. கிராமத்துல அவ்வளவு பெரிய வீட்ட எனக்காக விட்டுட்டு இங்க வந்து அந்தச் சின்ன வீட்ல வாழ்தாங்க. அவங்கள பாத்து உங்க அம்மா என்ன எல்லாம் பேசுறாங்க நான் உங்கள லவ் பண்ண ஒரே காரணத்துக்காக தான் உங்க அம்மா அவ்வளவு பேசியும் என்னோட குடும்பம் அமைதியா இருந்தது அவங்களுக்கு நான் மரியாதையை தேடி தர வேண்டாமா இப்ப கூட அமிழ்தினி ஒரு வார்த்தை சொன்னால் போதும் உங்க அம்மா தம்பியை தூக்கி உள்ள வச்சுருவேன் அவள உங்க அம்மா நடத்துறது எனக்கு தெரியாம இருக்கும் நினைச்சீங்களா அவ சொல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற ஒரே காரணத்துக்காக தான் உங்க அம்மா தம்பி ரெண்டு பேரும் ஆடுறத பார்த்துட்டு இருக்கேன் இல்ல மொத்தமா குடும்பத்தையே ஜெயில்ல புடிச்சு போட்டுருவேன் பாத்துக்கங்க. எந்த தப்பும் செய்யாமல் நீங்க உள்ள போக வேணாம்னு நினைச்சா இனிமே இந்த மாதிரி என்கிட்ட வாலாட்ட கூடாது. நீங்க பேச வேண்டிய வாய்ப்ப தவற விட்டுட்டீங்க இனி நான் பேசுறது மட்டும் தான் அமைதியா வேடிக்கை பாக்கணும் ஓகேவா” என சிங்கம் போல கர்ச்சித்து விட்டு வெளியே சென்றாள் இனிய அமிழ்தினி.
அவள் போன பின்பும் பேயறைந்தது போல சீட்டில் அமர்ந்திருந்தவனை அவன் நண்பன் தீபக் வந்து தெளிய வைத்து மீட்டிங்கு அழைத்து சென்றான்.
அதை இப்போது நினைத்து பார்த்தவன் “இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு எப்பதான் இவ கையை பிடிக்க போறேனோ தெரியலையே ஆண்டவா. இவளே இப்படி பேசுறா இன்னும் அவர் வந்தா என்ன பேசுவாரோ தெரியலையே” என தலையில் கை வைத்து புலம்பிக் கொண்டு இருந்தவனை மொபைல் ரிங் டோன் கலைத்தது. அதில் டிஸ்ப்ளே ஆன பெயரைபார்த்து “ஐயோ இவரா” என அதிர்ந்து காலை அட்டென்ட் பண்ணாமல் அப்படியே நின்றான் இன்பதமிழரசன்.
error: Content is protected !!