Skip to content
Post Views: 1,008
அலைவரிசை 4
நடுவீட்டில் கையில் மொபைலை வைத்துக்கொண்டு சிலை போல நிற்கும் தன் இன்பா அண்ணனை பார்த்துக்கொண்டு அருகில் வந்தான் பேச்சு – கந்தன் தம்பதி புதல்வன் குமரன்.
Advertisement
” அண்ணா போன் அடிக்குதுல அத அட்டென்ட் பண்ணாம என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க” என்றவன் தன்னைவிட உயரமாக இருந்தவனின் கையில் இருந்த போனை தன் கால்களை எக்கி அதனை ஆன் செய்து, “இப்படி ஆன் பண்றத விட்டுட்டு கானா கண்டுட்டு இருக்கீங்க, இப்ப பேசுங்கனா” என்றான் குமரன்.
அதில் உணர்வு பெற்றவன் “டேய் என்னடா பண்ற லூசு பயலே” என்ற இன்பாவின் கூச்சலில் மொபைலின் மறுமுனையில் இருந்தவன் “டேய் யார டா சொல்றடா நான் யாருன்னு தெரியுதாடா” என்றான் கடுப்புடன்
Advertisement
Advertisement
அதற்குப் பதில் சொல்லாமல் தன் எதிரில் நின்று இடுப்பில் இரண்டு கைகளை வைத்து ஆட்டி தன்னை கேலி செய்யும் குமரனை பார்த்து, ” சாத்தான்டா நீ ஒரு குட்டி சாத்தான் மரியாதையா போயிடு” என அவளை விரட்டி விட்டு மொபைலை பார்த்துவிட்டு “ஐயோ இவ்வளவு நேரமா இவர் லைன்ல இருந்தாரா” என காதில் வைக்க அந்தப் பக்கம் இருந்தவன் ” இன்பா நான் உனக்கு சாத்தானா அதுவும் குட்டிசாத்தானா, நெஸ்ட் வீக் நேர்ல வந்து உன்ன பேசிக்கிறேன்” என கோபமாக கத்தினான் மாறன்.
இளமாறன் இனியாவின் மாமா. அவள் தாயின் தம்பி மற்றும் அவள் தாத்தாவின் ஒரே தங்கையான பார்வதியின் மகனும் கூட.
Advertisement
” ஐயோ மாறன் அண்ணா நான் உங்களை சொல்லல” என்றவனின் வார்த்தைகள் அவனை சென்று சேரும் முன்னே மொபைலை கட் செய்து விட்டான் மாறன்.
” போன வச்சுட்டாரா போச்சி எல்லாம் போச்சி இவரை வச்சு தான் அந்த ராட்சசியே வழிக்கு கொண்டு வர முடியும் இப்ப அதுவும் போச்சா ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிற” என்றான் மேலே பார்த்து
” என்ன அண்ணா லூசு முத்திட்டா” என வந்த குமரனை பிடித்து தலையில் இரண்டு கொட்டு வைத்து “விஷம் விஷம் நீ தான்டா இங்க நடக்கிற எல்லாத்தையும் உன் அண்ணிக்கிட்ட சொல்றது” என்றான் கோபமாக
” என்ன சொல்லுறனா நான் ஏன் சொல்லப் போறேன் நானே ராப்பகலா பரீட்சைக்கு படிச்சிருக்கேன் ” என்றான் சோகமாக
” டேய் பொய் சொல்லாத உன்ன தவிர இங்க நடக்குற விஷயத்தை அவளுக்கு சொல்ல யாரும் இல்ல” என்றான் கடுப்புடன்
” நம்புனா நானே இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயா வெளியே வந்து இருக்கேன் இதுல நீ வேற” என்றான் தன்னை வெளியில் விளையாட விடாமல் படிக்க வைக்கும் தன் பெற்றோரை நினைத்து கவலையுடன்
” ஏன்டா என்ன ஆச்சி” என்றான் தன் பிரச்சனையை மறந்து
” நான் எட்டாவது தான படிக்கிறேன்னா ஆனா இந்த பேச்சி நான் ஏதோ டாக்டருக்கு படிக்கிற மாதிரி ஒரே படிபடின்னு தொல்லை பண்ணுது விளையாட கூட விடாம” என்றான் கவலையுடன்
” ஏன்டா படிக்கதான சொல்றாங்க அவங்கள மாதிரி நீயும் கஷ்டப்படக் கூடாதுன்னு சொல்றாங்க”
” அது புரியுதுன்னா ஆனால் லீவ் டேஸ் ல கூட விளையாட கூடாதுன்னு சொன்னாங்கனா “
” சரி விடுடா நான் பேச்சி அக்கா கிட்ட பேசறேன்”
” அதெல்லாம் வேண்டாம்னா நான் பாத்துக்குறேன்” என்றான் பெரிய மனிதனாக குமரன்
” அது சரிடா என்றவன், அது எப்படிடா உங்கண்ணிக்கு இங்க நடக்கிறது எல்லாம் தெரியுது” என்றான் மீண்டும் சந்தேகமாக குமரனை பார்த்துக் கொண்டு
” நான் சொல்லலனா ஆனா ஒருவேளை நீயே சொல்லி இருப்பீங்களோ ” என்றான் சந்தேகமாக இவன் இன்பாவை பார்த்துக் கொண்டு
” டேய் போடா, நானே சொல்லிட்டு உன்கிட்ட வந்து கேப்பனோ என்னை பாத்தா உனக்கு மெண்டல் மாதிரியே தெரியுது” என்றான் கோபமாக இன்பா
” சரி சரி கோச்சுக்காதீங்க சும்மா ஒரு கிளாரிட்டிக்கு கேட்டேன்” என்றான் சமாதானமாக குமரன்
” கேப்படா கேப்ப” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டு சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான் இன்பா.
அவன் நிலையைப் பார்த்து சோபாவின் பின்னே வந்து அவன் தலையை மெதுவாக பிடித்து விட்டான் குமரன்.
” என்னாச்சு அண்ணா ஏன் இவ்ளோ சோர்வா இருக்கீங்க “
” முடியலடா நடக்கிற பிரச்சினை எல்லாத்தையும் எப்படி சரி பண்றதுனே தெரியல இதுல ஆபீஸ்ல வேற ஓர்க் டென்ஷன், வீட்டுக்கு வந்து அம்மா வேற நிலைமை புரியாம ரொம்ப பேசுறாங்க. அமிழ்தினி வேற எப்பவும் கவலையா இருக்கா இது குழந்தைதான் பாதிக்கும் அவளுக்கு தெரியல அவள பத்திரமா பாத்துக்க வேண்டியவன் வீட்டுக்கு வராம இருக்கான் உங்க அண்ணி வேற ரொம்ப கோவப்படுறா அவளை எப்படி சமாதானப்படுத்தனே தெரியல கூடவே அவங்க வீட்டுல உள்ளவங்கள வேற சமாதானப்படுத்தனும். இதுல மாறன் அண்ணன் வேற வராங்க எல்லாரையும் ஒத்த ஆளா எப்படி தான் சமாளிக்க போறேன்னு தெரியலடா ரொம்ப டையடா இருக்குதுடா ” என்றான் சோர்வுடன் இன்பா.
அவனின் கவலையை பார்த்து அவர்கள் இருக்கும் திசைக்கு எதிராக உள்ள சுவரில் உள்ள ஓவியத்தை பார்த்துக்கொண்டே “விடுனா ரொம்ப பீல் பண்ணாத சீக்கிரம் எல்லாம் சரியாகும்” என்றான் குமரன் நம்பிக்கையாக
இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணமானவனோ எந்த கவலையும் இல்லாமல் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் அதிவேகமாக தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தான். ஆனால் அவன் பின்னே இருந்துவனோ
” டேய் கவின் மெதுவா போடா” என்றான் பயந்து போய் அமர்ந்து இருந்த அவன் நண்பன் சதீஷ்
சீறிக்கொண்டு செல்லும் காற்றின் வேகத்தில் ஹெல்மெட்டை தாண்டி அவன் பேசியது கேட்காதத்தால் “என்னடா சொன்ன” என்றான் கவின் என்ற கவித்தமிழரசன்.
” கொஞ்சம் மெதுவா போடா” என சத்தமாக சொன்னான் அவன் காதில் சதீஷ்
” டேய் இப்பவே டைம் ஆச்சுடா வேகமா போனா தான் அங்க போய் சேர முடியும்”என்றான் வேகத்தை குறைக்காமல்
” டேய் இப்ப நீ மெதுவா போகல அங்க போய் சேர முடியாது மொத்தமா போய் சேர வேண்டியது தான்” என்றான் பயத்தில்
” டேய் இன்னும் பத்து நிமிஷம் தான் கண்ண மூடிக்கிட்டு கெட்டியா என்ன புடிச்சுக்கோ” என்றவனிடம்
” ஆமா நான் உன் பொண்டாட்டி பாரு உன்னை கெட்டியா பிடிச்சுக்க” என்றான் கடுப்புடன்
அவன் சொன்ன வார்த்தையில் கோபம் கொண்டு தற்போது இருந்த வேகத்தைவிட இன்னும் வேகமாக சென்றான் கவின்
” டேய் உனக்கு கூட கல்யாணம் ஆகி இப்ப குழந்தை வரப் போகுது ஆனா நான் இன்னும் ஒரு பொண்ணைக்கூட லவ் பண்ணல டா மெதுவா போடா என்ன கொன்னுறாத. நான் பாவம் டா என்ன நம்பி இருக்குற என் வருங்கால பொண்டாட்டிய நான் இன்னும் பாக்க கூட இல்லடா” என கத்தி கொண்டு இருந்தவன் வண்டி நின்றதால் கண்ணை திறந்து பார்த்து கீழே இறங்கி தலையை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தான். அவன் முன்பு அசால்டாக நிற்கும் நண்பனை பார்த்து ” ஏன்டா இப்படி பண்ற அவனவன் கல்யாணம் ஆன உடனே பொண்டாட்டி கூட்டிட்டு ஹனிமூன் வருவாங்க நீ ஏன்டா என்னை கூட்டிட்டு வந்த” என்றான் கடுப்புடன்
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தனது முன்னே இருக்கும் ஹோட்டலுக்கு உள்ளே சென்றான்.
“அதான நான் கேட்டு நீ பதில் சொல்லிட்டா உன் தலையில உள்ள கிரிடம் இறங்கிடும் இல்ல” என அவனை திட்டிகொண்டே உள்ளே சென்றான் சதிஸ்.
“ஹலோ சார் வெல்கம் அவர் ஓட்டல் எத்தனை ரூம் வேணும் எவ்வளவு நாள் தங்குவீங்க” என்றாள் புன்னகை முகமாய் ரிசிப்ஷனிஸ்ட்
” ஹாய் பியூட்டி” என்ன சிரித்துக் கொண்டு வந்த சதீஷை நிறுத்திய கவின்
” நான் உங்க மேனேஜரை மீட் பண்ண முடியுமா”
” நீங்க யாரு சார் ஏன் மேனேஜரை மீட் பண்ணனும் சொல்லுறீங்க ஏதாவது ப்ராப்ளமா” என்றாள் பதட்டத்துடன்
“நான் பக்கத்து ஏரியா இன்ஸ்பெக்டர் என்றவன் பக்கத்தில் நின்ற சதிசை காட்டி இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஒரு கேஸ் விசயமா உங்க மேனேஜரை பாக்கனும்” என்றான் விறைப்பாக கவின்
என்ன நம்ம போலீசா என அதிர்ச்சி அடைந்து சதீஷ் ” டேய் நாம எப்படா போலீஸ் ஆனோம்” என கவின் காதில் மெதுவாக கேட்டான்.
“டேய் கொஞ்சம் நேரம் சும்மா இருடா உன்னால சும்மா இருக்க முடியலனா வெளிய போயிடு” என்றான் கோவமாக கவின்.
” என்னமோ பண்ற என்னன்னு சொன்னா நான் உன்ன விட அதிகமா பெர்பாமென்ஸ் பண்ணிருவேனு உனக்கு பயம் அதான் சொல்லமாட்டேங்குற” என்றவன் அவன் கோபமான முறைப்பில் “ரைட் விடு நான் பேசல” என்றான் வாயில் கையை வைத்துக் கொண்டான்.
இவ்வளவு நேரம் இருவரையும் சந்தேகமாக பார்த்துக் கொண்டே இருந்தவள் “உங்க ஐடி கார்டு கொடுங்க” என்றாள்.
“ஓ ஐடி கார்டு கொடுத்தால் தான் நம்புவிங்களா” என சொல்லிக்கொண்டு தனது பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து கொடுத்தான்.
இவன்கிட்ட எப்படி இந்த ஐடி கார்டு வந்துச்சு ஒருவேளை போலியா இருக்குமோ எதுக்கும் போய் வாசல் பக்கத்துல நிற்போம் என நடப்பதை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு வாசல் பக்கத்தில் போய் நின்றான் சதீஷ். தன்னைவிட்டு தள்ளி செல்லும் சதீஷ் பார்த்து முறைத்தான் கவின்.
அதற்குள் அந்த அடையாள அட்டையை பார்த்துவிட்டு போன் எடுத்து தனது மேஜேரிடம் பேசிவிட்டு,” நீங்க உள்ள போங்க சார்” என்றவள் பக்கத்தில் சென்றுக்கொண்டு இருந்தவனிடம் ” ராமு இவங்கள மேனேஜர் ரூம்க்கு கூட்டிட்டு போங்க” என்றாள் ரிசப்ஷனிஸ்ட்
“வாங்க சார்” என்றவன் ரிசப்ஷன் விட்டு கொஞ்சம் தள்ளி வந்தவுடன் “சார் என்னை உங்களுக்கு தெரியுதா” என்றான் ராமு.
அதில் குழப்பமாக கவின் சதீஷ் திரும்பி பார்த்துக்கொண்டே “இல்லயே ஏன் கேக்குறீங்க” என்றான் கவின்
” சார் நீங்க ஒரு அஞ்சி மாசத்துக்கு முன்னாடி இந்த ஹோட்டலுக்கு வந்தீங்க இல்ல” என்றான் இப்போது தான் வேறு யாரையும் நினைத்து கொண்டு தப்பாக சொல்ல கூடாது என ராமு
“ஆமா நாங்க வந்தோம் ஆனால் உங்களை எனக்கு தெரியலையே உனக்கு தெரியுதாடா” என்றான் சதீஷை பார்த்து
“இல்லடா இவர் யாருனே எனக்கு தெரியல வேற யாராவது நினைச்சுகிட்டு நம்மகிட்ட பேசுவாரா இருக்கும்” என்றான் சதீஷ் ராமுவை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு
” ஐயோ சார் மறந்தே போயிட்டேன் அன்னைக்கு நான் உங்களை பார்க்கும் போது நீங்க ஃபுல் போதையில இருந்தீங்க இந்த சார் வேற பக்கத்துல இல்ல நீங்க தனியா தான் இருந்தீங்க அதனால நான் தான் உங்களை ரூமுக்கு கொண்டுபோய் விட வந்தேன். ஆனா நான் உங்கள லிப்ட் பக்கத்துல விட்டுட்டு ஏதோ சத்தம் கேட்குதேனு அத போய் பாக்க போயிட்டு வந்தா அதுக்குள்ள உங்களுக்கு காணோம். உங்கள முதல்மாடில தேடிட்டு இரண்டாவது மாடிக்கு வந்தா நீங்க ஒரு பொண்ணுகூட ரூம்க்கு போனீங்க” என்றான் ராமு
அவன் சொல்வது புரியாமல் சதிஸ் இன்பா இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். பிறகு ஏதோ நியாபகம் வந்தவனாய் கவின் தனது கைபேசியில் உள்ள அமிழ்தினி புகைபடத்தை எடுத்து ராமுவிடம் காண்பித்து, “அது இந்த பெண்ணான்னு பார்த்து சொல்லுங்க” என்றான் டென்சனாக
“இந்த பொண்ணு இல்ல சார் ஆனா அந்த பொண்ணு இதே சாயல் தான் இருந்துச்சி” என்றான்.
இது என்ன புதுக்குழப்பம் என புரியாது கவின் சதிஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.
இங்கே சுற்றிலும் இருள் கவ்வும் ஒரு அறையில்,
“காற்றின் அலைவரிசை கேட்கிறதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர்
விடும் கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சம் நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா….”
என பிண்ணனியில் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க ஒரு மென்மையான கரம் தனது ஐந்து மாத கருவை மயில் இறகுபோல வருடிக்கொண்டு, “அப்பா நம்மள கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவார்டா செல்லம்” என கண்ணில் வழியும் நீரினைக் கூட துடைக்காமல் தனது வயற்றில் இருக்கும் சீசுவுக்கு சொல்லுவதுபோல தனதுக்கு தானே நம்பிக்கை ஊட்டிக்கொண்டு இருந்தாள் அவள்.
error: Content is protected !!