Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிரில் ஒரு சஞ்சாரம்

உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 4

அத்தியாயம் 4

கடலில் உள்ள பிளாங்கட்டான் நுண்ணுயிர் ஜொலிப்புத் தன்மையுயடையது. இரவு நேரத்தில் அதன் ஜொலிப்பு தண்ணீருக்குள் லேசர் ஒளி போல் ஜொலிக்க சில நிமிடங்கள் அவர்கள் அதன் அழகில் பேச்சற்று நின்றனர். பின்னர் வைஷ்ணவி ஒரு அடி எடுத்து வைக்க அவள் கால் பட்ட இடமெல்லாம் ஜொலித்தது. அசோக்கும் அவளுடன் இணைந்து கைகளை தண்ணீரில் இட்டு அலச மீண்டும் ஒரு ஒளிப்பிரவாகம் ஜொலித்து மறைந்தது. தூரத்தில் கூடியிருந்த பயணிகள் எல்லோரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்க அசோக் அவ்விடத்தை நோக்கினான். வைஷ்ணவியோ மகிழ்ச்சி மிகுதியில் அங்கும் இங்கும் ஓட அசோக் அதை ரசித்தவன் சிறிது நேரத்தில் அவள் உற்சாக மிகுதியில் நீருக்குள் விழப் ஓடி வந்து கைகளைப் பிடித்து நிறுத்தினான்.

“ஆழமில்லாத கடல்னாலும் உனக்கு கொஞ்சமாவது பயம் வேண்டாமா? விழுந்து தொலைச்சிராதே”

அசோக் அவளைப் பிடித்து நிறுத்த வைஷ்ணவி அவனது விழிகளைப் பார்த்து குறும்புப் புன்னகை செய்தாள். அசோக்கின் மனதில் முதன் முதலாக மதுவின் மயக்கத்தில் தலை சாய்த்து விழி உயர்த்தி பேசி தனது மனதை அவள் பால் சாய்த்த நொடி நினைவு வந்தது.



Advertisement

சற்று முன் உலகே இருண்டு விட்டதாக வேதனையில் இருந்தவள் ஒரு சிறு காட்சி மாற்றத்தில் மகிழ்ச்சியின் ஊற்றாக மாறுகிறாள். உணர்வுகளை மறைக்காது அப்படியே வெளிப்படுத்தும் குழந்தையாக என்னிடம் மட்டும் தான் பரிணமிக்கிறாளா? அவன் விழிகள் ஆழமாக நோக்க வைஷ்ணவி பேசினாள்.

“ஏன் புலிமூஞ்சி நீ உன் லவ்வரோட பீச் கு எல்லாம் வந்திருக்கியா?”

அசோக் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டே கரை நோக்கி வந்தவன் கரை வந்ததும் அவளது கரங்களை விடுவித்து பதில் சொன்னான்.

Advertisement

“நீயே அழகா கதை எழுதுவ! இதில என் கதை எதுக்கு உனக்கு?”

Advertisement

“சரி சரி கோவிச்சுக்காதே! சொல்லு அப்புறம் என்னாச்சு?” வைஷ்ணவி மீண்டும் வினவ கடற்கரை மெல்ல வெறிச்சோடத் தொடங்கியது.

“அப்புறம் அவளைப் பத்தி விசாரிச்சப்ப அவ என்னை விட இரண்டு வருச சீனியர் லாஸ்ட் இயர் படிக்கிறானு தெரிஞ்சது”

அசோக் சொல்ல வைஷ்ணவி மீண்டும் தான் சொன்னதை மறந்து மறுகேள்வி கேட்டாள்.

Advertisement

“ஓ! அக்கானு தெரிஞ்சதும் தெறிச்சு ஓடி வந்துட்ட”

அதைக் கேட்டதும் அசோக் நடப்பதை நிறுத்தி அவளை நோக்கித் திரும்பினான். உடனே வைஷ்ணவி தனது வாய் மீது கை வைத்து ஒன்றும் பேசாது இருப்பது போல் சைகை செய்ய அசோக் பெருமூச்செறிந்து பேசத் தொடங்கினான்.

“ஒரு வாரம் கழிச்சு அவளை காலேஜ் கேம்பஸ் ல பார்த்தேன். ஒரு மரத்துக்கு கீழே பெஞ்சில உட்கார்ந்திருந்தா. நேரே அவகிட்ட போய் நின்னேன். என் பேர் அசோக் பர்ஸ்ட் இயர் உன் டிபார்ட்மெண்ட் தான். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் னு சொன்னேன்”

அசோக் சொல்லி சிறிது இடைவெளி விட வைஷ்ணவி அவனை ஆர்வமாக நோக்கினாள். பயோலூமினன்ஸ் ஒளிக்கற்றையாக நீரில் அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.

“என்ன பிட் எழுத பேப்பர் வேணுமானு .? கேட்டா. நான் அவ திமிரை ரசிச்சுட்டே நானும் அதே திமிரா சிரிப்போட பேசினேன் நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு னு சொன்னதும்”

அசோக் சொல்ல சொல்லவே வைஷ்ணவி பேசினாள்.

“யாராவது பார்த்த முதல் நாளே ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேசுவாங்களா?”

“நான் பேசுவேன், கேட்பேன். இதை மட்டும் கேட்கலை. உன் ஃபோன் நம்பர் வேணும் கிடைக்குமா னு கேட்டேன்”

“ஓங்கி பளார்னு ஒரு அறை விட்டாளா?”

கேட்டு விட்டு தலை நிமிர்ந்த வைஷ்ணவி அசோக்கின் நடைத் தளரவும் அப்படியே நின்று வாய் பொத்தினாள். அசோக் அவளிடம் திரும்பி அவளது கேள்விக்கு சிறிது காட்டமாகவே பதில் கூறினான்.

“இல்லை. அவ உன்னை மாதிரி அவசரக்குடுக்கை எல்லாம் இல்லை. பதிலுக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காம என் கண்ணைப் பார்த்து, எதுக்கு லவ் மெசேஜ் அனுப்பவானு கேட்டா. நான் பதிலுக்கு இல்லை பிட் எழுதறது பத்தி டவுட் கேட்கணும்னேன்”

அதைக் கேட்டதும் வைஷ்ணவிக்கு வருண் தன்னைக் காதலிப்பதாக சொன்னது நினைவு வர வைஷ்ணவி தலையை சிலுப்பி நினைவுகளை உதறி அசோக் காதலியின் கற்பனை உருவத்தை உருவகிக்கத் துவங்கினாள்.

“இங்க பாரு வாழ்க்கையில ரொம்ப பெரிய பணக்காரியா வாழணும்கறது என் லட்சியம். இதில காதல் எல்லாம் சான்ஸே இல்லை. அதுவும் படிப்பு மட்டுமே தகுதியா வைச்சிருக்க மூணு வயசு சின்ன பையன லவ் பண்ற அளவுக்கு இம்மெச்சூர்ட் இல்லை நானு கெட் லாஸ்ட் அப்படின்னா”

அசோக் சொல்ல வழக்கம் போல் வைஷ்ணவி கேள்வி கேட்டாள்.

“இதுக்கு அப்புறமாவது உன் லவ்வுக்கு என்ட் கார்டு போடுவியா??”

அசோக் இல்லை எனத் தலையசைத்து கடற்கரை மணலில் அமர வைஷ்ணவி அவன் அருகில் அமர்ந்து நிலவை ரசித்துக் கொண்டே கதை கேட்கலானாள்.

“அதுக்கு அப்புறம் ஒரு வாரத்தில அவ நம்பரை ட்ரேஸ் பண்ணி அவ நம்பருக்கு கால் பண்ணேன். அவளும் எடுத்தா”

வைஷ்ணவிக்கு அவனது பேச்சு காட்சிகளாகத் தோன்றியது.

“ஹலோ நான் அசோக்?”

மறுமுனையில் எதுவும் பேச்சில்லை.

“ஹலோ”

“நான் அசோக் பர்ஸ்ட் இயர். அன்னைக்கு உங்ககிட்ட பேசினேனே”

“ம் சொல்லு. என் நம்பர் எப்படி?” அவள் கேட்க

“க்ளாஸ் ரெப் கிட்ட தான் வாங்கினேன்”

அசோக் சொல்ல அவள் குரலில் மெலிதான கோபம் இருந்தது.

“தட் இடியட். நான் உன்கிட்ட அப்பவே சொல்லிட்டேனே. ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட் னு”

“ஓகே. இன்ட்ரஸ்டட் இல்லைனா நான் அசோக் னு சொல்லும் போதே ஃபோனை கட் பண்ணிருக்கணும். பண்ணலையே?!”

மறுமுனையில் அமைதி நிலவியது. அசோக் தொடர்ந்தான்.

“காதலோ நட்போ உன்கிட்ட பழகணும் அவ்ளோ தான். இன்னும் ஆறு மாச காலேஜ் லைப் உன்னோடது”

அவன் பேச்சில் அவள் சிறிது நேரம் கழித்து சரி என்றாள்.

அசோக் அந்த காட்சிகளை விவரித்து விட்டு எழ வைஷ்ணவி பதட்டத்துடன் எழுந்தாள். அசோக் மணலைத் தட்டியவாறு நிற்க வைஷ்ணவி பேசினாள்.

“என்ன லவ் ஸ்டோரியை பாதியில நிறுத்திட்ட”

“அதுக்கு மேல என்ன சொல்ல? பேசினோம் லவ் பண்ணோம் ஆறு மாசம் கழிச்சு நல்ல ரிச்சான பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா. நான் தேவதாஸ் மாதிரி கொஞ்ச நாள் சுத்திட்டு இப்ப நாடு நாடா சுத்திக்கிட்டு இருக்கேன்”

அசோக் சொல்லி விட்டு நடக்க வைஷ்ணவி அவன் பின்னே நடைப்பயின்றவள் ஒரு நொடி ‘வெய்ட் எ மினிட்’ என வரும் மீம் போல் அப்படியே நடக்காது திகைத்து நின்றாள். ‘இவன் ஏழை ஆ இருந்தா எப்படி இவ்வளவு காஸ்ட்லியான டூர் எப்படி போவான். அதுவும் செஷிரின் சொன்னாளே இந்தியா வரும் போதெல்லாம் னு’

“ஏ! ஒரு நிமிசம்! இந்த கதை பொய் தானே?! புலிமூஞ்சி பொய் தானே சொல்ற?!”

அவள் அந்த காதல் கதை பொய் எனக் கண்டுபிடித்துவிட்டதை உணர்ந்தது போல் அசோக் வயிறு குலுங்க சிரித்தான்.

“ஏ அரைலூசு! இதைக் கண்டுபிடிக்கவே உனக்கு ஒரு மணி நேரமாச்சு. உலகத்தின் அதிசிறந்த முட்டாள் நீ மட்டும் தான். இதில தனியா வேர்ல்ட் டூர் வேற”

அசோக் தூரத்தில் மக்கள் கலைவதைக் கண்டு விரைவாக நடந்து அவளை வேகமாக வருமாறு சைகை செய்ய வைஷ்ணவி மனது முழுவதும் ஏமாற்றப்பட்ட கோபத்தில் நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

விடுதி வந்ததும் முகத்தைத் தூக்கி வைத்து நடந்து வந்த அவளிடம் வேண்டும் என்றே வம்பிழுத்தான் அசோக்.

“ஏ பிரசர்குக்கர்! என் மீதி லவ் ஸ்டோரி தெரிய வேணாமா?!”

அவன் கேள்வியில் அதுவரை அமைதியாக வந்துக் கொண்டு இருந்த வைஷ்ணவி அப்படியே கோபத்தில் பொங்கினாள்.

“நான் நீ சொன்னது எல்லாம் நம்பி. யூ சீட்டர். பொய் மூட்டை. உன்னை நம்மி நான் வந்து”

அவள் கோபத்தில் முகம் சிவக்க பேச அசோக் அதை சற்றும் பொருட்படுத்தாது தள்ளி நின்று பேசினான்.

“நான் ஏமாத்துக்காரன் இல்லை. நீ முட்டாள். உன்னை மாதிரி முட்டாள் தான், பத்து செகண்ட் முன்னாடி பார்த்த ஒருத்தன்கிட்ட காதல் கதையை சொல்லிட்டு, அறிமுகமே இல்லாத இடத்துக்கு தனக்கு சம்பந்தமே இல்லாத குறிக்கோளுக்கு டூர் வர்றது இதெல்லாம் செய்ய முடியும். உன்னை பத்தி எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் உளறிட்டு திரியாதே. உலகம் உனக்கு முட்டாள் னு தான் பேர் வைக்கும். உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்க னு நினைக்கிற மாதிரி ஒரு மூடத்தனம் உலகத்தில வேறு எதுவும் இல்லை”

வைஷ்ணவி ஒன்றும் பேசாது அறைக்குள் சென்று கதவை சட்டென்று சாத்தி விட்டுச் சென்றாள். அசோக் சற்று நேரம் கதவை வெறித்தவன் சோஃபாவில் அமர்ந்து சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.

மறுநாள் காலை ராதாநகர் கடற்கரை சுற்றிப் பார்க்க ஏற்பாடாகியிருந்தது. காபிரியல் இவர்கள் இருவரையும் பார்த்ததும் புன்னகைத்து அசோக்கிடம் நலம் விசாரித்தார். வைஷ்ணவி காலையில் இருந்து அவனிடம் பேசாது கோபத்தை முகத்தில் காட்டியவாறே அவன் பக்கம் நில்லாது தனித்து சென்றாள். காபிரியல் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அவனிடம் ஆங்கிலத்தில் கேட்டார்.

“seems the love quarrel still raging ? (என்ன சண்டை பெருசாயிடுச்சுப் போல)?”

அசோக் புன்னகை முகமாக பதிலளித்தான்.

“ஜஸ்ட் விமன் இஸ்யூஸ்(பெண்களின் தனிக்குணம்)”

அதைக் கேட்டதும் காபிரியல் புரிகிறது புரிகிறது எனச் சிரிக்க அசோக் அசடு வழிவது தெரியாதிருக்கக் கேசத்தை கோதி விட்டு நகர்ந்தான்.

அடலின் அவனைப் பார்த்து சிரிக்க அசோக் விடுவிடுவென நடந்து வைஷ்ணவி இருக்குமிடம் வந்தான். வைஷ்ணவி அவனைக் கண்டதும் கோபமாகத் திரும்பினாள்.

“லுக் மிஸ்டர் அசோக்!” வைஷ்ணவி சொல்ல

“மிஸ்டர் அசோக்கா?!.” அவள் சொன்னதைக் கேட்டு அசோக் வாய் பிளந்து நின்றவன் பின் அண்ணாமலை ரஜினி குரலில் பேசினான்.

“இந்த நாள் என் டைரியில குறிச்சு வைச்சுக்கறேன்” அசோக்கின் ரஜினி முகப்பாவனையைக் கண்டு சிரிப்பைத் தவிர்க்க முடியாது வைஷ்ணவி வாய் பொத்தி நிற்க அவளது உடல் சிரிப்பில் குலுங்கியதுக் கண்டு அசோக் புன்னகைத்தான்.

தூரத்தில் அவர்கள் இருவரும் சிரிப்பதைக் கண்டு அடலின் காபிரியலிடம் புன்னகையோடு உச்சரித்தார்.

“தட்ஸ் லவ் அண்ட் தட்ஸ் விமன் இஸ்யூஸ் (அது காதல் அது பெண்களின் தனிக்குணம்)”

அதே சமயம் வைஷ்ணவி புன்னகையை அடக்கிக் கொண்டு அவனிடம் பேசினாள்.

“மிஸ்டர் அசோக், நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன். நீங்க என் கூட இருந்து கஷ்டப்பட வேண்டாம். நான் தனியாவே இருந்துப்பேன்”

“யாரு நீ? தனியா சமாளிப்ப! சரி ஒரு பெட் வைச்சுக்கலாம் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு இந்த டிராவல் ல எந்த பிரச்சனையும் இல்லாம நீ கடந்துட்டீனா நானும் உன்னைக் காப்பாத்தற கண்ணப்பிரானா உன் கூட வரலை. ஓகேவா மிஸ் வைஷ்ணவி?”

வைஷ்ணவி உதட்டை சுழித்து முகத்தை வெடுக்கென்று திருப்ப அப்போது தான் அவர்களைக் கடந்து நடந்து வந்த காபிரியல் தனது மனைவியை மீண்டும் வம்புக்கிழுத்தார்.

“விமன் இஸ்யூஸ்”

அடலின் கொஞ்சம் கோபமாக அவரை முறைத்து விட்டு அந்த இளவயது ஜோடியை அன்புடன் நோக்கினார். மீண்டும் ஒரு சண்டை இருவருக்கும் நடக்க அது அவரது இளமைக் காலத்தில் காபிரியலிடம் சண்டையிட்ட நினைவுகளுக்கு அவரை இட்டுச் சென்றது.

புரிதல் பிறப்பது எல்லாம் இணையருக்கான இலக்கணம் இல்லையே பெரும் சண்டை பொறுக்க முடியாத வார்த்தைகள் பெற முடியாத மன்னிப்பு இவை அனைத்தும் தாண்டி நீயின்றி இயங்குதல் இயலாது என்பதே காதல்.

இருவரும் காதலர்களாக இருப்பர் என காபிரியல் இணையர் ஆருடம் சொல்ல அங்கே நண்பர்களாக மாறுவதற்கே வாய்ப்பில்லை என வைஷ்ணவியும் அசோக்கும் இருவருக்குமிடையில் வார்த்தை சுவர் எழுப்பிக் கொண்டு இருந்தனர்.

கடலின் அழகை ரசித்து முடிக்க அடுத்து எலிபன்ட் கடற்கரை செல்ல சிறிய டிரக்கிங் ஏற்பாடாகி இருந்தது. வாகனங்களில் பயணம் செய்ய வசதிகள் இருந்தும் ஜர்னி ஆஃப் சோல் குழுவினர் அனைவரும் குன்றை ஏறிக் கடக்கவே முடிவு செய்திருந்தனர். இருபது நிமிட மலையேற்றம் போல் சுற்றிலும் மரங்கள் இருக்க ஜோடிகள் தனி தனியே நடக்கத் துவங்கினர். வைஷ்ணவி திரும்பிப் பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை அசோக் தென்படவே இல்லை. வைஷ்ணவி தனியாகவே நடந்தாள். என்ன தான் சுற்றுலா பயணிகள் அங்கொருவர் இங்கொருவருமாகத் தெரிந்தாலும் அவளுக்கு மெலிதான அச்சம் இருந்துக் கொண்டே இருந்தது. தெரிந்த முகங்கள் ஒருவருமே தென்படாதிருக்க கையிலுள்ள பேக்கில் பெப்பர் ஸ்பிரே இருப்பை உறுதி செய்து விட்டு நகர்ந்தாள். யாரோ தன்னை பின்தொடர்வது போலிருக்க அசோக்கைத் தேடினாள் வைஷ்ணவி. பயணம் நெடுகிலும் அவளுக்கு பின்னே பாதுகாப்பாக அவன் இருந்துக் கொண்டே தான் இருந்தான். அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டே முன்னே அடி வைக்க சற்றே மேடான மலைப் பாதையில் கால் சறுக்கி விழுந்து கை முழுவதும் சிராய்ப்பாகி வலியில் எழ முடியாது தடுமாற அவள் முன் கைகளை நீட்டியயபடி நின்றிருந்தான் அசோக். முகத்தில் கோபமும் வலியும் நிறைய கண்களில் நீர் வழிய நிமிர்ந்தாள் வைஷ்ணவி.

கவிதை

பேசிப் புரிய வைக்க ஒன்றுமில்லை

போலிக் கோபம் ரசித்தலே

போதும் எனக்கு

போடி எனதழகே!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!