Skip to content
Post Views: 186
அத்தியாயம் 29:
“பொம்மு எழுந்திருடி. மணி ஆறு ஆயிடுச்சி. மாமா எழுந்து குளிச்சிட்டேன் பாரு”
புரண்டு படுத்து அவனை பார்த்தவள் “நைட் என்னன்னமோ பண்ணி என்ன தூங்கவிடாம நாலு மணிக்கு தூங்கவிட்டுட்டு ஆறு மணிக்கு எழுப்புறீங்களே. இது உங்களுக்கே அநியாயமா தெரியலையா மாமா” என்றாள்.
“இப்ப எழுந்திரிடி பொம்மு. உங்கம்மா வீட்டுக்கு போறோம்ல. அங்க போய் தூங்குவியாம். குட் கேர்ள் இல்ல. குளிச்சிட்டு கீழ போலாம். ரொம்ப லேட்டா போக முடியாது டி. கௌரி அருண்லாம் வேற இருக்காங்க” என்றதும் மெதுவாக எழுந்து அமர்ந்தவள்
Advertisement
“ஆனா எனக்கு உடம்புல அங்கங்க வலிக்குது மாமா” என்று அவனின் மேல் சாய்ந்து கொண்டாள்.
“அதுக்குதான் மஞ்சள் தேச்சி ஹாட் வாட்டர்ல குளிச்சா வலியெல்லாம் போய்டும் டி பொம்மு. மாமாவே குளிப்பாட்டி விடறேன்” என்று
அவளை அப்படியே தூக்கி கொண்டு போய் பாத் ரூமில் விட்டு , அவளை குளிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவனும் அவளோடு சேர்ந்து குளித்துவிட்டு வந்தான்.
Advertisement
சந்தியா புடவை கட்ட அலுப்பாக இருந்ததால் ஒரு சுடிதாரையே எடுத்தாள் போட்டு கொள்ள.
Advertisement
“என்னடி பொம்மு. சுடிதார் போடற. சாரி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லு. மாமா கட்டி விடறேன்” என்றதும்
“வேண்டவே வேண்டாம் மாமா. அப்படித்தான் குளிக்க ஹெல்ப் பன்றேன்னு சொல்லி உள்ள அந்த அலும்பு பண்ணீங்க. இப்ப மறுபடியும்லாம் என்னால தாங்க முடியாது சாமி” என்றுவிட்டு சுடிதாரை போட்டு கொண்டு கீழே ஓடிவிட்டாள்.
நேராக இன்று சாமி ரூம்க்கு அவளே சென்று விளக்கேற்றிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.
Advertisement
அவளை பார்த்த சித்ராதான் “கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் புடவை கட்டின. ரெண்டாம் நாளே இந்த போர்வைய போத்திட்டு வந்துட்டியா” என்றதும்
மருமகளை திரும்பி பார்த்த சிவகாமி “விடு சித்ரா. சும்மா புள்ளைய நோண்டாத” என்றார்.
சந்தியா சித்ராவிடம் “நல்ல மாமியாரா எப்படி இருக்கதுன்னு எங்க அத்தைய பாத்து கத்துக்கங்க அத்தை. இப்ப ஒழுங்கா உங்க பையன் எழுந்து வரதுக்குள்ள காபி கொடுங்க” என்றவளிடம்
“போடி. நேத்து ஒருநாள் குடுத்தேன். இன்னைக்கெல்லாம் முடியாது. என்ற பையன்கிட்ட யாரு பதில் சொல்றது”
“அத்தை இது என்ன அநியாயம். உங்க பையன் மட்டும் காபி குடிக்கிறார். எங்களையெல்லாம் குடிக்க கூடாதுன்னு சொல்றார்”
“அது அவன் நம்மள மாதிரி ரெகுலரா காலைல மாலைலன்னு குடிக்க மாட்டான். எப்பவாவது டென்ஷன் டயர்ட் ஆனா குடிப்பான். ஆனா அவனுக்கு தெரியும். உடம்ப எப்படி வச்சுக்கிறதுன்னு. உங்களுக்கெல்லாம் தெரியுமா. அதான் தம்பி தங்கச்சிகிட்ட கண்டிப்பா இருப்பான்”
“சரி லெக்ச்சர் குடுத்தது போதும். இப்ப ஒரு காஃபி குடுங்க” என்று வம்பு பண்ணியபடி நின்றவளை கூப்பிட்ட சிவகாமி “கண்ணு. இந்தா இத நீ குடிச்சிட்டு உன்ர வூட்டுக்காரனுக்கும் எடுத்துட்டு போ” என்று இரண்டு பெரிய டம்ளரை கொடுத்தார்.
என்னவென்று பார்த்தால் மட்டன் சூப். “என்னத்தை. காலைலயே மட்டன் சூப்” என்று கேட்டவளுக்கு “உடம்புக்கு நல்லது கண்ணு. மேல போய் அவனுக்கும் குடுத்துட்டு நீயும் குடிச்சி போடு” என்றதும் மறுக்காமல் எடுத்துக்கொண்டு மேலே சென்றாள் .
சித்ரா “உன்னட்ட மட்டும் இவ்ளோ பணிவா இருக்கா இவ’ என்றார்
“என்ர மருமக நெம்ப புத்திசாலி. அவளுக்கு யார்ட்ட எப்படி நடந்துக்கோணும்ன்னு கரெக்டா தெரியும்” என்றார் சிவகாமி.
“அது இருக்கட்டும். காலைலயே மாமாவை நொச்சி பண்ணி கறி எடுத்துட்டு வர சொன்னது, உன்ர மருமகள கவனிக்கத்தானா”
“ஆமா. பின்ன உன்ன கவனிக்கன்னு நினைச்சியாக்கும். சின்ன புள்ள. குடும்ப பாரத்தை தாங்க வலு வேணும். பின்னாடி குழந்தை குட்டி பெக்கறத்துக்கும் தெம்பு வேணுமல்லோ” என்று பேசி கொண்டிருக்கும் போது, எழுந்து அங்கு வந்த கௌரி “சந்தியா எங்கம்மா” என்றாள்.
சித்ராதான் “அவ அவ புருஷனுக்கு காபி குடுக்க போயிருக்கா. நீ போய் குளிச்சிட்டு வா. போ” என்று விரட்டினார்.
பிறகு “ஏன்க்கா. இன்னைக்கு வித்தியாசம் தெரியுதுல்ல சந்தியாகிட்ட. பேசாம ஹனிமூன் போயிட்டு வர சொல்லலாம்க்கா ரெண்டு பேரையும். இங்க இருந்தா கௌரி கூடவே சுத்துவா இவ. ஆதிக்கும் சங்கடமா இருக்கும்” என்றார்.
“நேத்தே சொல்லிட்டேன் சித்ரா ஆதிகிட்ட. அவன் பாத்துக்குவான்”
“ம் இருந்தாலும் என் அண்ணன் மக குடுத்து வச்சவதான். உன்ன மாதிரி மாமியார் கிடைக்க. நம்ம கௌரிதான் என்ன பண்ண போறாளோன்னு பயமா இருக்கு”
“அதுக்கு எதுக்கு பயப்படறவ. அவளுக்கு அவ மனசுக்கு புடிச்சபடி வாழ்க்கை அமையும். அவ அண்ணன் ஆதி இருக்கும்போது இத பத்தில்லாம் நீ என்னத்துக்கு கவலை படற” என்று பேசிகொண்டிருந்தார்கள்.
பிறகு ஒன்பது மணிவாக்கில் சந்தியாவும் ஆதியும் கிளம்பி சந்தியா வீட்டிற்கு சென்றார்கள். சந்தியா இப்பொழுது பிரவுனில் ஆரஞ்ச் பார்டர் வைத்த சேலை கட்டி, சிம்பிளாக கோல்டில் நகை அணிந்து சென்றாள். கூடவே சித்ராவும் சுந்தரமும் சென்றார்கள்.
முறையாக பெண் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்பு காலை விருந்து பரிமாறினார்கள். நல்ல நாளிலே சூப்பராக சமைப்பார் பத்மா. இன்று மருமகனுக்காக ஆந்திரா, தமிழ் நாடு டிஷ் என்று ஏகப்பட்ட ஐட்டம் செய்து வைத்திருந்தார். அதிலும் நேற்று கோயிலில் மருமகன் தன பெண்ணை எப்படி பார்த்து கொண்டார் என்று செல்வமும் பத்மாவும் கவனித்து கொண்டுதானே இருந்தனர்.
அதனால் ஓவர் கவனிப்புதான் ஆதிக்கு. அவனுக்குத்தான் சாப்பாட்டை பார்த்து மூச்சு முட்டியது.
விழி பிதுங்கி போய் சுந்தரத்தை பார்த்தான்.
“என்ன ஆதி. அப்படி பாக்கிற. உன்ர சித்தி மாதிரி இல்ல. பத்மா சூப்பரா சமைக்கும். நீ நம்பி சாப்பிடலாம்” என்று அவர் வேறு காமடி பண்ணி கொண்டிருந்தார்.
பிறகு ஆதியே பத்மாவிடம் “அத்தை. இவ்ளோ ஐட்டமெல்லாம் வேண்டாம். கொஞ்சம் குறைச்சிடுங்க” என்று சிலவற்றை எடுக்க சொன்னான். பத்மாதான் “என்ன சந்தியா. உங்களுக்காகத்தான் இவ்ளோ பண்ணி வச்சிருக்கேன். யாரு சாப்பிடறது எல்லாம்” என்று தன் மகளை பார்த்தார்.
அவளும் “ஆமாம்மா. இவ்ளோல்லாம் வேண்டாம். அங்க அத்தை வேற மட்டன் சூப் நாட்டு கோழி முட்டைன்னு சாப்பிட கொடுத்துதான் அனுப்பினாங்க. நீங்க எல்லாத்தையும் பேக் பண்ணுங்க. முரளியை கூப்பிட்டு குடுத்து அனுப்பறேன். அவன் காலேஜ்க்கு எடுத்துட்டு போயிடுவான் . மதியமும் கொஞ்சமா பண்ணுங்கம்மா” என்றாள்.
ஆதிதான் அவர் வருத்த படுவதை பார்த்து “அத்தை இதே ஊர்லதான் இருக்க போறோம். எப்ப வேணாலும் நினைச்சா உங்க கையால கேட்டு வாங்கி சாப்பிடுவேன். நீங்க வருத்தபடாதீங்க” என்றதும் பத்மா சந்தோஷமாகிவிட்டார்.
அனைவரும் சாப்பிட்டதும் ஆண்கள் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
சந்தியா கிச்சனில் இருந்த பத்மா சித்ராவிடம் வந்து தூங்க போவதாக சொன்னதும் “மாப்பிள்ளையையும் வேணா கூப்பிட்டு போ சந்தியா” என்றார் பத்மா.
அதற்கு சந்தியா மனதிற்குள் அவங்கள கூட்டிட்டு போனா நா எங்க தூங்கறது என்று நினைத்து கொண்டு வெளியில் “இல்லம்மா . அவங்க இங்கவே அப்பா மாமாட்ட பேசிட்டு இருக்கட்டும்” என்றுவிட்டு சென்றாள்.
அவள் சென்றதும் சித்ராதான் பத்மாவிடம் “இப்படிதான் அண்ணி இவ. ஆதியை கண்டுக்கிறது இல்ல. எப்போதும் கௌரி கூடவே சுத்திட்ருக்கா. சிவகாமி அக்காட்ட சொன்னா, சின்ன புள்ளதான விடுங்கிறாங்க” என்றதும் சிரித்தர் பத்மா.
அதை பார்த்து ஆச்சரியமான சித்ரா “என்ன அண்ணி. சிவகாமி அக்கா மாதிரியே நீங்களும் சிரிக்கறீங்க” என்றதும்
“ரெண்டு பேருமே புத்திசாலிங்க அண்ணி. அவங்க வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு அவங்களுக்கு தெரியும். அதிலையும் தம்பி என் பொண்ண நல்லா சமாளிக்கிறார். நேத்து கோயில்லதான் பாத்தேனே” என்றார்.
இங்கு ஆதியிடமும் செல்வம் கேட்டார். “மேல சந்தியா ரூம்க்கு போறீங்களா மாப்பிள்ளை” என்றதும் “இல்ல மாமா. நா இங்கவே பேசிட்டு இருக்கேன்” என்றவன் தீபனை பற்றி அவரிடமும் விசாரித்து பார்த்தான்.
அவரும் அவனை முன் பின் தெரியாது என்று கூறி விட்டார்.
மதியம் சாப்பிடும் நேரத்திற்கு சந்தியா ரெப்ரெஷாகி வந்ததும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் சிறிது நேரம் படுக்க சென்றனர். சுந்தரம் மட்டும் அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
சந்தியாவும் ஆதியை அவள் ரூமிற்க்கு அழைத்து சென்றாள்.
உள்ளே சென்றதும் கதவை வேகமாக மூடியவன் அவளை கைகளில் அள்ளி கொண்டு போய் கட்டிலில் போட்டு , அவள் மேலேயே விழுந்து அவளை கலைத்தான்.
சந்தியா அவனை மறுக்காமல் “மெதுவா மாமா” என்று மட்டும் சொல்லி பார்த்தாள். ம்ஹும் வேலைக்கு ஆகவில்லை. சரி என்று அவளும் எதிர் வினை புரிய ஆரம்பித்து விட்டாள். அவன் வேலை முடிந்து அவள் கழுத்தில் தலை புதைத்திருந்தவன் “பொம்மு எனக்கு பத்தவே இல்லடி. நாம ஹனிமூன் போலாம் டி” என்றான்.
“சரி மாமா எந்த ஊர் போகலாம். கேரளா போலாமா. நா போனதில்ல. நிறைய இருக்கும் பாக்கிறதுக்கு” என்றதற்கு தலை தூக்கி அவளை வினோதமாக பார்த்தவன் “நாம என்ன டூருக்காடி போறோம். எனக்கு உன்னதான் முழுசா பாக்கணும். எந்த டிஸ்டபன்ஸும் இல்லாம. அப்புறம் நீ காலேஜ் போக ஆரம்பிச்சிட்டீன்னா உன்ன டிஸ்டர்ப் பண்ண முடியாது. அதுக்கப்புறம் செம் ஹாலிடேல உன்ன கேரளா கூட்டிட்டு போறேன் டி. இப்ப ஊட்டிக்கே போயிட்டு வரலாம்” என்றதும் “சரி மாமா” என்று ஒத்து கொண்டாள்.
அன்று இரவு மட்டும் சந்தியா வீட்டில் தங்கியவர்கள் காலையில் ஆதி வீட்டிற்கு சென்று அங்கிருந்து சிறிது நேரத்தில் ஊட்டிக்கு கிளம்பிவிட்டனர் காரில்.
ஆதியே டிரைவ் பண்ணினான். முழுதாக நான்கு நாட்கள் ஊட்டியில் இருந்தார்கள். வெளியே எங்குமே செல்லவில்லை. சந்தியாதான் ஒருநாள் அடித்து பிடித்து அவனை சுற்றி பார்க்க அழைத்து சென்றாள்.
“பொம்மு இங்க என்னடி சுத்தி பாக்க இருக்கு. ஓராயிரம் டைம் நா பாத்துருக்கேன் டி. காலேஜ் படிக்கும்போது போர் அடிச்சா இங்கதான் வருவோம் பிரன்ஸோட. டைம வேஸ்ட் பண்ணாத டி”
“அநியாயம் பண்ணாதீங்க மாமா. நம்ம ஹனி மூன் வந்ததுக்கு அடையாளமா ஒரு போட்டோ கூட எடுக்கல” என்று சில போட்டோக்களை எடுத்து கொண்டவள், சிறிதாக ஷாப்பிங்கும் பண்ணி கொண்டாள்.
பிறகு ஊர் திரும்பியவர்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். லீவ் முடிந்து சந்தியா கல்லூரி சென்ற இரண்டாம் நாள் மாலை சந்தியாவும் கௌரியும் காலேஜ் சென்றுவிட்டு திரும்பும் வழியில் நின்றான் தீபன்.
அவர்கள் ஸ்கூட்டியின் வழியை மறைத்து நின்றான். சந்தியா வண்டியை நிறுத்தியதும் “தேங்க் காட். அட்லாஸ்ட் நா உன்ன பாத்துட்டேன் பார்பி டால்” என்றான் சந்தியாவின் வண்டியை பிடித்து கொண்டு.
சந்தியாவிற்கு அவனை அடையாளமே தெரியவில்லை. அவனிடம்
“சாரி எனக்கு உங்கள தெரியல. நா உங்கள இதுக்கு முன்ன பாத்துருக்கனா” என்றாள்.
அதற்கு முகத்தை பாவமாக வைத்தவன் “நிஜமா என்ன தெரியலையா டாலி” என்று கேட்டு அவள் முகத்தையே பார்த்தான். அதற்குள் பின்னிருந்து கௌரி சந்தியாவின் காதை கடித்தாள். “இவன் அன்னைக்கு அந்த ரமேஷ் கூட கோயிலுக்கு வந்தானே தீபன் அவன் டி” என்று.
அதற்கு பிறகு சந்தியா அவனிடம் “ஹலோ மிஸ்டர். உங்களுக்கு என் ஹஸ்பண்ட் கூட பிரச்சனைன்னா அவர்ட்ட போய் பேசுங்க. எதுக்கு அனாவசியமா எங்க வழிய மறிச்சிட்டு நிக்கிறீங்க” என்றதும்
கோபமாக “தயவு செய்து அவன உன் புருஷன்னு சொல்லாத டாலி. ஏன்னா நான்தான் உன் புருஷன்” என்றான் மிரட்டலாக.
அதை கேட்டதும் திடுக்கிட்டு போனாள் சந்தியா.
“என்ன உளறீங்க. இதுக்கு முன்ன நா உங்கள முன்ன பின்ன பாத்தது கூட இல்ல. பைத்தியமா உங்களுக்கு” என்றாள்.
“ஆமா. பைத்தியம்தான். உன் மேல பைத்தியம் டாலி” என்றவன் “அப்புறம் நா உன் புருசனும் கூடத்தான். பேங்ளூர்ல பீனிக்ஸ் மால் ஆப்போஸிட்ல நடந்த ஆக்சிடண்ட்ல ஒருத்தன காப்பாத்துனியே. அவன ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் பண்ணி அவனோட பொண்டாட்டி நீதான்னு சொல்லி ட்ரீட்மெண்ட் பாக்க வச்சியே நியாபகம் இருக்கா டாலி” என்றதும் சந்தியாவிற்கு நினைவு வந்தது.
அன்று அவன் முகம் முழுவதும் ரத்தமாக இருந்ததால் சந்தியாவிற்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான்.
error: Content is protected !!