Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 4

கீதம் 💜 4

அன்று மதியம் வேகமாக பணிக்கு வந்தவளை பார்த்தவுடன் ஜெகநாதனும், அவரின் மனைவியும் புன்னகை செய்தனர். டாக்டரிடம் பேசி விட்டு அவர்களை உள்ளே வரும்படி அழைத்தாள். நந்துவும் டாக்டரின் எதிரே இருந்த சீட்டில் அமர்ந்து இருந்தாள்.



Advertisement

” இப்போ எப்படி சார் உங்களுக்கு இருக்கு என பரிசோதனையை ஆரம்பித்தவர். குட், இப்போ நார்மலா இருக்கு. இனிமேல் டென்ஷன் ரொம்ப ஆகாம பார்த்துக்கோங்க. அதே டேப்லெட் தொடர்ந்து சாப்பிடுங்க. இப்போ இவங்க உங்கட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னாங்க. பதட்டப்படாம அமைதியா கேளுங்க. உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருந்தா தெளிவு படுத்திக்கோங்க என்றப்படி நந்துவிடம் கண் காட்டினார்.

பொதுவான விசாரிப்புகளை கேட்டு கொண்டு ” உங்களுக்கு கல்யாணம் ஆகி, எவ்ளோ வருஷம் ஆகுது ” என கேள்வியை தொடங்கினாள்.

Advertisement

Advertisement

” பத்து வருஷம் ஆச்சும்மா..,” இவள் எதற்காக இதனை கேட்கிறாள் என்கின்ற யோசனை அவர் முகத்தில்.

“இதனை வருஷம் ஆகியும் உங்க மனைவி மேல உங்களுக்கு இன்னும் முழு நம்பிக்கை வரலியா..,” உண்மையை சொல்லிட சொல்லி அவரின் விழி பார்த்திட.

Advertisement

” இப்போ அவளை முழுசா நம்புறேன்மா. அவ மத்தவங்க சொன்ன மாதிரி இல்லைம்மா..” சிறு பெண்ணிடம் பதில் கூற வேண்டிய நிலைக்கு தான் வந்ததை எண்ணி, மனதின் வேதனை அவர் முகத்திலும் தெரிந்தது.

” நான் பேசுறத பொறுமையா கேளுங்க, தப்பா நினைக்காதீங்க. அப்பதான் இன்னும் சில விஷயம் உங்களுக்கு நல்லா புரியும். சந்தேகம் இருந்தா தெளிவுபடுத்திக்கோங்க..,” என்றவள் அவர் முகம் காண சம்மதமாய் தலையசைத்தார்.

” இருப்பதஞ்சு வயசு வரை வளர்த்த அம்மா சொல்றத நம்புற நீங்க, ஏன் உங்களையே உலகம்னு நம்பி கல்யாணம் பண்ணிட்டு வந்து, உங்களுக்காகவே எல்லாம் செய்து., மிச்சம் இருக்க போகின்ற நாற்பதோ, ஐம்பதோ வருஷம் , உங்க கூடவே இருக்க போற மனைவி மேல நம்பிக்கை வைக்க மாட்டேங்கிறீங்க.., உங்களை நினைச்சி, உங்க சுக துக்கம் , உங்களை சுமக்க மட்டும் உங்க மனைவி வேணும். ஆனால்.., அவங்க உணர்வு கூட உங்களுக்கு சுமையா தெரியுது.

குழந்தைகளை வளர்த்து, வீட்டு வேலை செஞ்சு நிற்க கூட நேரமில்லாமல் வேலைக்கும் போய், அவங்கள பத்தி சிந்திக்க கூட நேரம் இருக்கறது இல்லை. பத்து வருஷம் கழிச்சு தான் அவங்க பாழாகி போன உடம்பு, மனசு ரெண்டும் அவங்களுக்கு புரிய ஆரம்பிக்குது. முப்பத்தஞ்சு வயசுல முதுகு வலி வந்து துடிக்கும் போது தான் முதுகெலும்பா நீங்க இல்லைன்ற உண்மை அவங்களுக்கு தெரியுது. பாசம் மட்டுமே இருந்தா போதும்னு வாழ்ந்த நெஞ்சத்துல அழுத்தம் அதிகமாகி எத்தனையோ நோய்கள் அவங்களுக்கு வர ஆரம்பிக்கும் போது தான், இது கூட அவங்களுக்கு தெரிய ஆரம்பிக்குது, இல்லைனா அதுவும் உணர மாட்டாங்க.

 உங்க அம்மா மட்டும் தாயில்லை…, உங்க மனைவியும் ஒரு தாய் தான்..,. அவங்கள குறையோட ஏத்துக்க தெரிஞ்ச, உங்களுக்கு உங்க மனைவியை ஏன் ஏத்துக்க முடியல…,

யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாதீங்க. அதுல உண்மை எதுன்னு, யோசனை பண்ணி பார்த்தாலே ,அழகா உங்களுக்கே புரிந்து இருக்கும். உங்க வாழ்க்கை இன்னும் எவ்ளோ சந்தோசமா இருந்து இருக்கும்.

அவங்க அழுதது என்னால் தாங்க முடியவில்லை. உங்களையும் சின்ன வயசுல இருந்தே பார்க்குறேன். அதான் இப்படி பண்ண சொன்னேன். அதை புரிய வைக்க எவ்ளோ வேலை பார்க்க வேண்டியதா போச்சி. இனியும் நீங்களே அவங்க துணைக்கு போய் எல்லா செலவும் பண்ணுங்க. நிலவரமும் புரியும், பொண்டாட்டி அருமையும் தெரியும். நான் உங்கள விட சின்ன பொண்ணு. எதுவும் தப்பா பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிருங்க , இனிமே நீங்க தப்பு பண்ண மாட்டிங்கன்னு நினைக்கிறேன் சார், என நீண்ட மூச்சில் அனைத்தையும் பொறுமையாய் எடுத்து சொல்லி முடித்தாள்.

சிறிது நேரம் அவர் எதுவும் பேசவே இல்லை. கண்ணில் மட்டும் விழுந்து விடுமோ என கண்ணீர் தொக்கி நின்றது. தன் தப்பை அறிந்து கொண்டு மனம் கலங்கி நின்ற நிலையில், இவளின் பேச்சு அவரின் ஆண் எனும் ஈகோவை தட்டி தூக்கி எரிந்து இருந்தது. முழுதும் மனம் திருந்தி விட்டார் என்பதை அவரின் கண்ணீரே தெள்ள தெளிவாய் எடுத்துரைத்தது. குரலை செருமி கொண்டு, கண்ணீரை விழுங்கி கொண்டு ” தேங்க்ஸ்மா, நீங்க பண்ணது பெரிய உதவி…, இவ…இவ.. உடம்பு முடியாம படுத்ததும் தான் எனக்கு நிதர்சனம் புரிந்தது. எங்களுக்குல்ல சண்டை மூட்டி விடுற யாரும் ஒரு உதவி கூட பண்ணல. த..தள்ளி தான் நின்னாங்க. அப்போவும் இவ தான் கஷ்டப்பட்டா. எனக்கு வாழ்க்கையின்னா என்னனு இப்போ நல்லா புரியுது. இனி இவ தான் என்னை மன்னிச்சு ஏத்துக்கணும்..,” என மனைவி புறம் திரும்பி தயங்கியபடி கை கூப்பினார்.

” என்னங்க, என்கிட்ட.., போய் மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க..,” என பதறி கையை பற்றி கொண்டு, ” நீங்க மாறினதே போதும். அதுவே பெரிய நிம்மதியா இருக்கு..,” என கண்கலங்க கூறினார்.

” பார்த்திங்களா இதான் பொண்ணோட மனசு. கஷ்டப்பட தான் தெரியும். கஷ்டத்தை கொடுக்க தெரியாது. உண்மையான பாசத்தை புரிஞ்சு, அவங்களையும் மனுஷியா நடத்துங்க , அமைதியா இருக்கிறா, என்ன பண்ணிட போறான்னு குறைவா நினைக்காதீங்க. உங்களை எதிர்பார்க்கறது கடமைக்காக மட்டுமில்ல. அவங்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை வைத்து தான் மத்தவங்க உங்க மனைவிக்கும் கொடுப்பாங்க. அதை பார்த்து தான் உங்க குழந்தையும் வளருறாங்க. நீங்க திட்ற வார்த்தைகள் எல்லாம் அவங்க மனசுல பசுமரத்தாணி போல பதியும்.

குடும்பங்கிறது அழகான கூடு. அதுல சந்தேகம்கிற கல்லை விட்டு எறிஞ்சி கலச்சிராதீங்க. கொஞ்சம் உங்க ஈகோ விட்டு வெளியே வந்து தான் பாருங்களேன். அழகான குடும்பம், சொர்க்கமா உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கிறது புரியும். அவங்க நம்பிக்கையை தயவு செய்து காப்பாத்துங்க. உங்க மனசை திறந்து பேசுங்க. அவங்க எப்பவும் உங்க கூட நிற்பாங்க..,.” என்றவாறு அவர்களை விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

அவரை அனுப்பிவிட்டு நந்துவை மெச்சுதலாய் பார்த்து ” வெல்டன் மை கேர்ள். என் குட்டி பொண்ணு என்னமா பேசுது? விளையாட்டு பிள்ளைனு நினச்சா பக்குவமா பேச கத்துகிட்ட, பேச்சுல நல்லா இம்புருவ் ஆகிட்ட. தியரியை விட ப்ராட்டிகல் தான் உனக்கு நல்லா புரியும். இப்போ பக்கத்துல ஒரு இடம் வருது. பேசாம உனக்கும் ஒரு கன்சல்டிங் ரூம் தனியா போட்டு விடுவோமா? நல்லா பிக்கப் ஆகிரும்..,” என மனமார்ந்த சந்தோசத்தோடு அவளிடம் கேட்டார்.

” நான் இன்னும் படிச்சுட்டு தான் இருக்கேன் சார். மாஸ்டர் முடிச்ச அப்புறம் கூட எங்கேயும் போக மாட்டேன். இங்கே தான் இருப்பேன். நீங்க துரத்தி விட்டாலும் போக மாட்டேன்..,” என்றால் சிரித்து கொண்டே.

ஹா.., ஹா., கல்யாணம் ஆகுறவரை எல்லாரும் இப்படி தான் சொல்விங்க. அப்புறம் புருஷன் கூட சேர்ந்து நான் யாருன்னு கூட தெரியாம, என்னையே திரும்பி கூட பார்க்காம போவீங்க ..,. எத்தனை பேரை பார்த்து இருக்கேன்?” என அவரும் விளையாட்டாய் கேட்க.

“நான் எப்படியும் இப்போ கல்யாணம் பண்ண போறதே இல்லை. அதனால் கவலை படாதீங்க சார். அப்போ பார்த்துக்குவோம். என்னை வெரட்டி விடுறதுலயே குறியா இருங்க சார். நான் போக மாட்டேன். இங்கே தான் இருப்பேன்..,” என வீம்புக்கு பேச

” இப்படியே பேசிட்டு இருந்து இங்கேயே திருப்பி டேரா போடவா , எக்ஸாம்க்கு நல்லா படிக்கணும்.. இப்போ வீட்டுக்கு கிளம்புங்க நந்திதா ஸ்ரீ.., மேடம்..,” என அவளை வீட்டுக்கு அனுப்பியும் வைத்தார். பகுதி நேர வேலையில் மருந்தக உதவியாளராக சேர்ந்து, படிப்பையும் தொடர்ந்து, கிளினிக்கில் அனைத்து வேலைகளும் கற்று இன்று ரகுவின் வலது கரமாய் செயல்படுகிறாள். இங்கு மட்டுமல்ல அவரது வீட்டிலும் ரம்யாவின் செல்ல நட்புக்கரம்.

*******

ஆரவ்விடம் காதலை சொல்லி விட்டு நக்கலாய் தர்ஷினியை பார்க்க, ” “ஆத்தி ஜோலி முடிஞ்சது. பக்கிகளா, என்ன மாட்டிவிடவே இப்படி பண்றிங்களா.., ” என எண்ணி முடிப்பதற்குள் அவளை பார்த்தவன் பார்வையில் ” இதுவும் உன் திருவிளையாடல் தானா ” என்ற கேள்வியில், தானாய் அவளின் இமை குடை சாய கண்டு, குரலினை செருமி கொண்டு,

” என்ன ட்ராமா ரிகர்சல் பாக்குறீங்களா..” என அவனும் நக்கலாய் கேட்டான்.

“இல்லை, எங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். அதான் சேர்ந்து சொன்னோம். உனக்கு யாரை பிடிச்சுருக்கோ நீ லவ்க்கு எஸ் சொல்லு. மத்தவங்க விலகிடுவோம்..,” மார்க்கெட்டில் கத்திரி விலையை கேட்பது போல பதில் சொன்னாள் நிரவி.

” லுக், காதல் என்ன நீங்க ஆன்லைன்ல ஆர்டர் போடுற ட்ரெஸ்சா. எல்லோரும் ஒரே மாதிரி போட்டுக்க. யாரை பிடிக்குதோ அவங்களுக்கு எஸ் சொன்னா, மத்தவங்க என்ன பண்ணுவீங்க.., திருப்பியும் இப்படி இன்னொருத்தன் கிட்ட மொத்தமா போய் சொல்விங்களா..,” என நெற்றியில் தட்டி கொண்டு, மூச்சை இழுத்து விட்டு கொஞ்சம் நிதானித்தான்.

” லுக்.., காதல்ங்கிறது ஒரு ஆழமான பீல். ஒருத்தங்களை பார்த்த உடனே அது சொல்லிட முடியாது. அப்படி யாருக்காவது மட்டும் தான் அமையும். மனசுல ஆழமா பதிஞ்சு நிற்கனும். அவங்க இல்லைனா எதுவும் இல்லைனு தோணனும். என்ன வேண்டுமானாலும் செய்ய தோணும். அப்படி உங்க ஆழ்மனசை யார் தட்டி எழுப்புறாங்களோ அவங்க தான் உங்க லைவ்.

அவங்கட்ட மட்டும் போய் உங்க காதலை சொல்லுங்க. இப்படி கோரஸ் பாடி கொச்சைப்படுத்தாதீங்க.., டெய்லி ஒருத்தர் கூட டேட்டிங்னு சுத்தற உங்களுக்கு இது புரியிறது கொஞ்சம் கஷ்டம் தான்.

எனக்கு யார் மேலயும் அந்த பீல் வரல. அதுவும் உங்க மேல சத்தியமா வரவே வராது. டிஸ்டர்ப் பண்ணாம வேற வேலை இருந்தா போய் பாருங்க..,” என்றப்படி தர்ஷியை முறைத்து கொண்டே அவளை பின்னே வருமாறு கண்காட்டி வேக நடையில் வெளி சென்று விட்டான்.

” அச்சோ சும்மாவே திட்டுவானே, இப்படி தேரை இழுத்து தெருவுல நிப்பாட்டிட்டேனே. என்ன எல்லாம் கத்த போறானோ. இவள்கட்ட வேணாம்னு சொல்ல வரதுக்குள்ள குட்டையை போய் குழப்பிட்டாள்களே..,” என புலம்பிய படி அவன் பின்னே ஓட தான் முடிந்தது. அத்தனை வேகம் அவன் நடையில்.

கார் பார்க்கிங் சென்று வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்த வேகத்தில் இவளின் நெஞ்சம் தடக்தடகென எசப்பாட்டு பாடியது.

” முருகா! இன்னைக்கு மட்டும் இவன்கிட்ட நான் தப்பிச்சேன். உன் சன்னதியில் இவனை கூட்டி வந்து மொட்டை போடுறேன் ப்ளீஸ் சேவ் மீ..,” என அந்த நிலையிலும் தப்பாவே வேண்டி, தலையில் தட்டி கொண்டு ” ஆத்தி, இப்போவும் சொதப்புறேனே சாரி சாரி..,” என வேகமாக தலையில் அடித்து கொண்டவளை பார்த்தவன் முகத்தில் இள முறுவல்.

ஆனாலும் அதை மறைத்து அவள் புறம் திரும்பி,” அவங்கட்ட என்ன சொன்ன..,” என கேட்க, “அது..,” என தயங்கினவளை கண்டு” ம்ம்., ஒழுங்கா சொல்லு..,” என அழுத்தி கேட்க

” நீ என்னையே லவ் பண்ணல, அவங்களையும் பண்ண மாட்டேன்னு சொன்னேன். அவங்க உன்னை பிடிக்கலை , நாங்க அவனை லவ் பண்ணி காட்டறோம்னு சொன்னார்களா. அதான் அவங்கட்ட புரூவ் பண்ணி காட்ட தான் உன்னை இங்கே கூட்டி வந்தேன். சாரி தப்பு தான்..,”

” ஓஒ., அது தப்புன்னு மேடத்திற்கு புரிஞ்சிருச்சா, இப்போ எப்படி புரிஞ்சது? “என சிரிப்பை உள்ளிதழில் அடக்கி கொண்டு கேட்க,

” டேய்., காலேஜ்ல இருக்கிற மாறி அவங்க இங்கே இல்லை. ஐயோ., ச்சே., பிள்ளைகளா இதுங்க., பார்த்த உடனே கன்னத்துல சேர்த்து ரெண்டு அறையணும்னு தோணுது. கர்மம்., பொண்ணுங்க கூட இங்கே ட்ரிங்க்ஸ் எல்லாம் குடிப்பாங்கன்னு, நான் என்ன கனவா கண்டேன். பசங்கள பார்த்து இருக்கேன். இதுங்க ஒவ்வொண்ணும் பண்றத பார்த்தா பக்குனு இருக்கு. மொடா குடிகாரிக மாறி இருக்காள்களா.., என்னடி இதுன்னு கேட்டா ., என்னையும் இதை குடிச்சி பாருன்னு கொடுத்தா, மூஞ்சியில விட்டு எரியிற மாதிரி தூக்கி கீழே போட்டு அடிச்சுட்டு வெளியே ஓடி வந்தேன்., தெரியுமா ? ” என்றவள் முகமே கூறியது அவளின் பிடித்தமின்மையை.

“உனக்கு இதெல்லாம் செட்டாகுதுன்னு தான் நான் தனியா வெளியே விடுறது இல்ல., உங்க ஊர் மாறி இங்கே இருக்க முடியாது. இங்கே இதெல்லாம் சகஜம்.., ஜஸ்ட் உனக்கு இதுவும் புரியணும்னு தான் வேணும்னே உன்னை கூட்டி வந்தேன். உனக்கு பிடிக்காத இடத்தில, இருக்க பிடிக்காம ஓடி வந்துட்ட பார்த்தியா.., இதான் நீ., இனி நீ யார் கூப்பிட்டாலும் போக மாட்ட.., ” சொன்னது புரிந்ததா என்ற தோரணையில் பார்த்தவன் கண்களை கண்டு இவளும் தலையசைத்தாள்.

” இதே மாதிரி உனக்கு பிடிக்காத விஷயத்தை, யார் பண்ண நினைச்சாலும் அவங்கள விட கூடாது. ஊருக்கு போனாலும் எதுக்கும் பயப்படாம தைரியமா எதிர்த்து நிற்கணும். அம்மாக்கும், உனக்கும் எப்பவும் நான் துணையா இருப்பேன். சரியா..” என்றதை கேட்டு இப்போ எதுக்கு இதை சொல்றான் என எண்ணினாலும் தலையாட்டினாள்.

சிறிது நேரம் அமைதியில் கழிய, அவளையும் அறியாமல் கண்களில் கங்கை பிரவாகம்.” மச்சி, என்னை விட்டுட்டு போறது உனக்கு கஷ்டமா இல்லையா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். உன்கூடவே இருக்கணும்னு தான் ஆசைபட்டு லவ் பண்றேன்னு சொன்னேன். என்னையும் வேணாம்னு சொல்லிட்டா.”

” இங்கே பாருடா, உனக்கு வந்தது லவ் இல்லை, இல்லைனா நான் வேணான்னு சொல்லியும் இத்தனை வருசமா என்கூட உன்னால இவ்ளோ பிரீயா பழக முடியுமா? யோசித்து பாரு, உனக்கு அண்ணன், தம்பின்னும் யாருமில்லை, வீட்ல எந்த ஆணும் இல்லை. அதனால உன்கூட நான் இருக்கறது ஒரு நம்பிக்கையை உன் மனசில் உருவாக்கி இருக்கு, உனக்கு தேவையான அப்பா பாசம் என்கிட்ட உணர்ந்து இருக்க, அந்த ஈர்ப்பு தான் வேற ஒண்ணுமில்ல. மனசை போட்டு குழப்பிக்காம ஒழுங்கா வீட்டுல போய் யோசிச்சு பாரு, உனக்கே எல்லாம் புரியும், அப்புறம் நீயே சிரிச்சு கலாய்ப்ப…,” கிண்டலாய் தான் அவளுக்கும் பதில் உரைத்தான்.

ஆழ்ந்த அமைதி மட்டுமே அவளிடம். எதுவும் கூறாமல் மௌனம் காத்திட நாளை காலையில் ஊருக்கு கிளம்புவதை சொல்லிவிட்டு இருவரும் விடை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!