Skip to content
Post Views: 8,882
காதல் அன்று
தன்னை ரொம்ப பிடிக்கும் என்று இவ்வளவு தைரியமாக அத்தனை பெரிய மனிதர்கள் நடுவில் ஒருத்தி சொல்லியிருக்கிறாள் என்றால், அவள் எவ்வளவு ஸ்ட்ராங்காக பீல் பண்ணியிருக்க வேண்டும்!
ஆண்பிள்ளையான தனக்குக் கூட இவ்வளவு துணிச்சல் வந்திருக்குமா என்று தெரியாது!
பரவாயில்ல துணிச்சல்காரி தான்!
Advertisement
ராகவின் சித்தி ஈஸ்வரி அவன் அப்பாவை ஆட்டிப் படைப்பதைப் பார்த்த பின், அவனுக்கு கல்யாணத்திலேயே கொஞ்சம் நாட்டம் இல்லாமல் போய் விட்டது!
பெண்கள் பற்றிய மதிப்பு குறைவும் கூட!
ஆனால் இந்த வித்யா கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறாள். அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று மனதில் ஒரு க்யுரியாசிட்டி எழ, அவன் அவள் வீட்டை விசாரித்துக் கொண்டு கிளம்பி விட்டான்!
Advertisement
கிளம்பி விட்டானே தவிர, எப்படி அவர்கள் வீட்டுக்குள் போவது, என்ன காரணம் சொல்லிப் போவது என்று பயங்கர குழப்பம் ஏற்பட,
Advertisement
அவர்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் டீக்குடித்து விட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் அருகில் ஒருவன் நின்று ஒருவன் போன் பேசிக் கொண்டிருந்தான், அங்கிருந்த ஒரு ரூபாய் காயின்பாக்சில் இருந்து!
பேச்சில் வித்யா என்ற பெயர் அடிபட, தன்னிச்சையாக அவன் பேச்சைக் கவனித்தான் ராகவ்!
Advertisement
போனில் பேசியவன் வித்யாவின் அண்ணன் வாகீசனின் பிரன்ட் தான்!
“உன் தங்கச்சிக்கு எப்பவுமே மனசுக்குள்ள மதர் தெரசான்னு நினைப்பு!
அதான் அம்மா இல்லாத பையன் மாப்பிள்ளைன்னு சொன்னவுடனே சம்மதிச்சு இருப்பா!
அவளைப் பத்தி உனக்கு தெரியாதாடா, ஊரில் உள்ள பிள்ளைங்க எல்லாத்தையும் தூக்கி தூக்கி வச்சுப்பா!
இப்ப கூட பாரு பக்கத்து வீட்டு பாப்புவுக்கு சோறு ஊட்டிக்கிட்டு தான் இருக்கா!
கேட்டா அம்மா இல்லாத குழந்தை அவன், பாவம்னு சொல்லுவா!
நான் கூட, இந்த பாப்புவை, அப்புறம் அடுத்த தெரு ஆருவ எல்லாம் வளர்த்து ஆளாக்குற பொறுப்பு இருக்கிறதால அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டாளோன்னு கூட நினைச்சு இருக்கேண்டா!
ஏதோ இப்ப கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டான்னு சந்தோசப்படுடா!
அவளை பத்திதான் நமக்கு தெரியுமே!
அவள் சின்னப் பிள்ளையா இருக்கும் போதிலிருந்தே அப்படிதான்!
எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு! ஒரு நாள் இப்படி தான் லாரிக்காரன் ஒரு நாய்க்குட்டியோட அம்மா நாயை அடிச்சுப் போட்டுட்டு போய்ட்டான்னு ஒரு தெரு நாய்க்குட்டியை எடுத்துட்டு வந்திட்டு,
பாவம்மா, இதுக்கு அம்மா இல்ல, நாமதானே பார்த்துக்கணும் சொல்லி கெஞ்சி அழுதது!
விடு, அவ நேச்சர் அதுதான்!”
அவன் பேசி முடித்து போனை வைத்துவிட்டுப் போய் விட்டான்.
அவனுக்கு ராகவனைத் தெரியாது!
இப்போது அவளைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் வந்து விட்டது ராகவனுக்கு!
அதோடே அவள் வீட்டை நோக்கி பார்வையைத் திருப்பியவன், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்த வித்யாவைப் பார்த்தான்.
இவன் பார்ப்பதை அவள் கவனிக்க வில்லை!
அந்த குழந்தைக்கு வேடிக்கைக் காட்டுவதில் முனைப்பாய் இருந்தாள்!
அவளிடம் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு தாயன்பு தெரிவதை அவன் மனப்பூர்வமாக உணர்ந்தான்!
உடனே அங்கிருந்த போனிலேயே அவன் பெரியப்பா பார்த்தசாரதியை அழைத்து, “பெரியப்பா, நான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன் இல்ல, இப்ப சொல்றேன்,
எனக்கு நீங்க பார்த்து இருக்கிற அந்த பெண் வித்யாவை ரொம்ப பிடிச்சுருக்கு! அவங்க வீட்டுல நீங்க பேச வேண்டியத பேசிடுங்க!”
“ரொம்ப சந்தோசம்ப்பா, உன் அப்பன் இப்ப பார்த்து டெல்லி ஆக்ரா டூர் போய்ட்டான் பாரு, காலம் போன காலத்துல தாஜ்மஹால்ல டூயட் பாட!
அவன் வரட்டும், நான் மேற்கொண்டு அடுத்தத பேசிடுறேன்” என்று சொல்லி போனை வைத்தார் அவர்.
——–
மறுநாள் மாலை.
ராகவ் தனியாக தங்கியிருக்கும் ஒரு தனி வில்லா டைப் வீட்டின், பக்கவாட்டில் இருக்கும் மாடிப் போர்சன் வீட்டில் இருக்கும் லான்ட் லைன் போன் அடித்தது!
எடுத்துப் பேசினான்.
அந்த பக்கம் யாரோ ஒரு சிறு பெண் குழந்தை பேசியது!
“ராகவ் மாமா இருக்காங்களா?”
“ராகவ்தான் பேசுறேன்”
“நான் வித்யா பேசுறேன்”
ஒரு கணம் அவனுள் இன்ப அதிர்ச்சி!
இவள் எப்படி, எங்க இருந்து கொண்டு..? அவனுள் கேள்விகள்!
“ம்ம் சொல்லு”
“ரொம்ப தாங்க்ஸ் மாமா, என்னை உங்களுக்குப் பிடிச்சு இருக்குன்னு பெரிய மாமாகிட்ட சொல்லிட்டீங்கன்னு சொன்னாங்க!
அதான். நான் உங்கள நேரில் பார்க்க முடியுமா? என்னை உங்களுக்கு நிஜமாவே பிடிச்சுருக்கா?
நான் உங்களைப் பார்த்து இருக்கேன், நீங்க என்னைப் பார்த்ததே இல்லையே அதான் ஒரு டவுட்!
நாம நேரில் பார்த்துக்கலாமா?”
“நேரிலா, ம்ம். நீ எங்க இருக்க இப்ப? நான் எங்க வரட்டும்?”
“நீங்க ஒண்ணும் வர வேண்டாம், நானே இங்கதான் இருக்கேன், அப்படியே உங்க ரூம் ஜன்னல் வழியா கீழே பாருங்க
நான் இந்த எதிர்புறம் இருக்கிற மாணிக்கம் ஸ்டோர்ஸ் கடையில இருந்து தான் ஒரு ரூபாய் காயின் போனில் இருந்து தான் பேசுறேன்!
அவன் கீழே எட்டிப் பார்த்தான்.
சைக்கிளை ஒரு கையில் பிடித்தவாறு ஸ்கூல் யுனிபார்ம் அணிந்தபடி வித்யா நின்றிருந்தாள்!
மேலே அவனைப் பார்த்து சிரித்தபடி!
“அடிப்பாவி!” என்று ஆச்சர்யப்பட்டவன், “ம்ம், சரி.. மேலே வா” என்று அவளை வரச் சொல்லி விட்டு,
போனை கட் செய்தவன், ரொம்பவும் யோசனையுடன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.
“இவள், ஏன் இப்படி நேரில் வருகிறாள், ஒரு வேளை ப்ளஸ் டூவில் பெயில் ஆகிவிடுவோம்னு பயந்து விட்டு, தெரியாமல் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டு, இப்போது ஏதும் செகன்ட் தாட்ஸ் வந்திட்டதோ?” அவனுள் ஏகப்பட்ட கேள்விகள்!
அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில், காலிங் பெல் அடித்தது.
கதவைத் திறந்தான்.
வெளியே சிரித்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
“உள்ள வா” என்று சொல்லி, கதவைத் தாழிட்டான்.
தாழிட்டு விட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவள் முகத்தில் கொஞ்சம் கூட பயமேயில்லை!
என்னமோ அடிக்கடி அங்கு வந்து போகிறவள் போல காசுவலாகவே இருந்தாள்!
“உட்கார்!” அவளை உட்கார சொல்லி விட்டு,
“எதுக்கு என்னைப் பார்க்கனும்னு சொன்ன? என்ன ப்ளஸ் டூவில் பெயிலாகி விடுவேன்னு பயந்துகிட்டு தான் கல்யாணத்திற்கு சம்மதிச்சேன், ஆனா இப்ப வேண்டாம்னு சொல்ல வந்தியா?”
“கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வந்தேனா? யார் சொன்னா?
அது இருக்கட்டும், நான் நல்லா படிக்க மாட்டேன்ற விஷயத்தை உங்களுக்கு யார் சொன்னா?
எங்க ஸ்கூல்ல இருந்து யாராச்சும் அப்படி சொன்னாங்களா?
ம்ம். சொல்லியிருப்பாங்க! சுத்த நன்றி கெட்ட ஸ்கூல்!
என்னமோ ரிவிசன் டெஸ்ட்ல பெயிலாயிட்டேன்னு ஓவரா பேசுதுங்க. என்னால் தான் அவங்க ஸ்கூலுக்கே அவமானம்னு!
இதே வாய், கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, நான் வெளியில் ப்ரைவேட்டா படிச்சு , யோகா ஸ்டேட் லெவல் காம்பெடிசன்ல வாங்குன கப்பை, அசெம்ளிக்கு கொண்டு வரச் சொல்லி பீத்திகிட்டாங்க!
இப்ப இப்படி சொல்றாங்க! அத விடுங்க மாமா, நான் எப்ப சொன்னேன் இந்த கல்யாணமே வேண்டாம்னு!
அதெல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம் தான்!” பட படவென மூச்சு விடாமல் பொரிந்து தள்ளியவள்,
“ஆமா, நான் இருக்கிறப்ப, என் முன்னாடியே இப்படி சிகரெட் பிடிக்கறீங்க? கொஞ்சம் கூட பயமில்லாம?” என்று அவனையும் திட்டி விட்டாள்!
அப்படியே அசந்து போய் விட்டான் ராகவ்!
“அப்பாடி.., வாயா இது!”
“ஏன் உன் முன்னாடி பிடிச்சா என்ன? நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?”
“இல்ல என் அப்பாவும் யாருக்கும் தெரியாம மாடியில் இருந்துட்டு திருட்டு தம் எப்பவாச்சும் அடிப்பார்!”
“ஆனா அம்மாவோ,நானோ இல்ல அக்காவோ வந்திட்டா, கீழேப் போட்டு விடுவார்!
ஆமா, நீங்க ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க?” அவள் கேட்டாள்.
“ஏன்? ஒரு பாக்கெட்!” ராகவ் சொல்ல,
“அப்ப அதில் பாதி இனிமே எனக்கு!”
“என்ன உனக்கா?”
“ஆமா எனக்கு தான், நான் உங்க பெட்டர் ஹாப் ஆகப் போறேனே!
அப்ப உங்களோட நல்லது கேட்டது ரெண்டுலயும் எனக்கும் பங்கு உண்டு!
இது கெட்டது! இப்படி சிகரெட் பிடிச்சா உங்க லங்க்ஸ் சீக்கிரம் கெட்டுப் போய்டும்.
அப்ப, என்னோட லங்க்சும் கெட்டுப் போகட்டும்! அதான் பாதியைக் கேக்குறேன்!”
“ஏய்! இப்பவே என்னை கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்றியா? போடி!”
“என்ன, போடியா..? ம்ம்ம். “ என்று குறும்பாக சிரித்துக் கொண்டே இழுத்தவள், “ரொம்ப நல்லாயிருக்கு..மாமா, ப்ளீஸ் நீங்க இனிமே இப்படியே என்னைக் கூப்பிடுங்க!”
அவனை மேலும் மேலும் ஆச்சரியப் படுத்திக் கொண்டே இருந்தாள் அவள்!
“ஹேய்.. உண்மைய சொல்லு, உனக்கு நிஜமாவே என்னைப் பிடிச்சுருக்கா?” அவனுக்கு இன்னும் சந்தேகம்!
“ஆமா. இதுல என்ன டவுட் உங்களுக்கு?
உங்கள எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்!
உங்களுக்கு, என் அக்காவைப் பெண் கேட்டு வந்தப்போ, சரி நம் அக்காவும் நல்லவதான்னு இருந்தேன். உள்ள கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்!
ஆனா, எங்க வீட்டுல அதுக்கும் ஒத்துக்கல! அதுவும் இல்லாம, உங்க சித்தி வேறே வர சம்பந்தத்தை எல்லாம் தட்டி விடுதுன்னு வேறே சொன்னாங்க!
அப்ப தான் நான் முடிவு செஞ்சேன், என்னால மட்டும் தான் உங்கள நந்தினி அத்தை மாதிரிபார்த்துக்க முடியும்னு!
நந்தினி அத்தை உங்கள எவ்வளவு செல்லமா வளர்த்தாங்கன்னு எனக்கும் தெரியும்!
நான் அப்ப சின்ன பொண்ணு தான், ஆனா எங்கயாச்சும் விசேஷ வீட்டில் உங்க ரெண்டு பேரையும் பார்த்து இருக்கேன்!
என்னால் மட்டும் தான் உங்கள நந்தினி அத்தை மாதிரியே பார்த்துக்க முடியும்!
வேறே யாராலையும் முடியாது!” அவள் சொல்லிக் கொண்டே போக,
அவனோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் இருந்தான்.
அவன் அம்மாவின் நினைவு வந்து ரொம்பவும் கலங்க அடித்துக் கொண்டிருந்தது!
எழுந்து அவள் அருகில் போனவன், அவள் முகத்தைக் இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு, “போதும் நிறுத்துடி. இதுக்கு மேலே பேசிட்டே போகாத, இப்பவே எனக்கு உன்னை அப்படியே கிஸ் பண்ணனும்னு தோணுது!”
அவள் முகத்தில் எல்லையில்லா அன்பைத் தேக்கிக் கொண்டு,
“கிஸ் தானே மாமா, ம்ம் இந்தா பண்ணிக்கோ!” என்று அவள் கொழு கொழு கன்னத்தைக் காட்டினாள்!
அவன் முகத்தில் இப்போது புன்னகை!
அது அப்படியே குறும்பு சிரிப்பாக மாறி, டக்கென்று அவளின் இதழ்களைக் கவ்விக் கொண்டான் உணர்ச்சி ததும்ப!
இதை அவள் எதிர்பார்க்கவில்லை!
கொஞ்சம் திமிறினாள்! அப்புறம் அமைதியாகி விட்டாள்!
கொஞ்சம் நேரம் சென்று அவளை அவன் விட்ட போது, அப்படியே அரை மயக்கத்தில் அவன் மேல் சாய்ந்து விட்டாள் வித்யா!
“ஏய்..ஏய். என்ன இது? ராகவ் பதறியபடி, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டே நடத்தி சென்று, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் மெல்ல தெளித்தான்!
கண் விழித்தாள் அவள்!
“மாமா.. என்ன மாமா நீங்க, கன்னத்தில் கிஸ் பண்ணுவீங்கனு நினைச்சா, இப்படி இங்கிலீஷ் கிஸ் கொடுத்துட்டீங்க!” அவள் செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
“ம்ம். கன்னத்துல கிஸ் பண்ண, நீ என்ன எல்கேஜி பாப்பாவா? போடி,. !
ஆனா, நீ வெறும் வாய்தான் போல, ஒரு கிஸ் பண்ணதுக்கே இப்படி மயக்கம் போடுற?” அவன் கிண்டல் செய்தான்!
“ம்ம் அது, உங்க கிட்ட இருந்த அந்த சிகரெட் நாத்.. சாரி அந்த ஸ்மெல் கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு முதல்ல!
அப்புறம் இது தான் நம் மாமா வாசனை, பழகிக்கணும் மைன்ட் செட் பண்ணிகிட்டேன்! வேணுமின்னா இன்னொரு வாட்டி ட்ரை பண்ணலாமா, அப்ப பாருங்க நான் இதுல பாசாகிவிடுவேன்!”
“ஏய். சீ.. போடி. என்று சிரித்தான் ராகவ்!
இப்போது ராகவுக்கே கொஞ்சம் ஒரு மாதிரி வெட்கமாகி விட்டது!
“இல்ல மாமா நிஜமா தான் சொல்றேன்!”
“ஏய். போடி, முதல்ல இங்க இருந்து, ஏது என்னை ரொம்ப பேட் பாய் ஆக்கிடுவ போல!”
“ஸ்ஸ். ஆமா மாமா எனக்கும் லேட்டாகிடுச்சு, நான் வீட்டுக்குப் போறேன், ஆனா நாளைக்கும் வருவேன்!” என்று அவள் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்!
அவளை கீழ் வாசல் வரைக் கொண்டு விட்டு, வீடு திரும்பியவனுக்கு, வீடே இப்போது வெறுமையாகி விட்ட பீல்!
“யாருடி நீ, இப்படி வந்த ஒரு மணி நேரத்தில என்னை அப்படியே திருப்பிப் போட்டுட்டு போய்ட்ட? “ என்று நினைத்துக் கொண்டே , பான்ட் பாக்கெட்டில் இருந்து சிகரட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்தவன் மீண்டும் அதிலேயே வைத்து விட்டான்!
அவன் செயல் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது!
அவள் இத்தனைக்கும் சிகரெட் பிடிக்காதே என்று ஒரு வார்த்தை
கூட சொல்லாமலே அவளுக்காக அவன் மாறத் தொடங்கி விட்டான்!
இன்னும் பல ஆச்சரியங்கள், இன்ப அதிர்ச்சிகள் கொடுத்து அவனை
அன்பால் கதி கலங்க வைக்கப் போகிறாள் வித்யா!
error: Content is protected !!