Skip to content
Post Views: 5,636
அத்தியாயம் 34:
எல்லோரும் ஹாஸ்ப்பிட்டலிலிருந்து கிளம்பினார்கள். விஜய் சிறிது நேரத்திற்கு முன்பே கிளம்பிவிட்டான்.
ஆதியுடன் வசந்தன் மட்டும் அவன் வீட்டிற்கு விட சென்றான். அரவிந்த் சந்தியாவிடம் பதில் சொல்லி சமாளிக்க முடியாது என்று ஓடிவிட்டான்.
ஆதி வீட்டிற்கு வந்ததும் அவனின் சட்டையில் இருந்த ரத்த கறையை பார்த்து அனைவரும் பதறி விட்டனர். ஈஸ்வரன்,சிவகாமி, சித்ரா, சுந்தரம், செல்வம், பத்மா அனைவரும் இருந்தனர்.
Advertisement
ஈஸ்வரன்தான் “என்னப்பு . காயம் பட்டுருக்கு . இந்த அருணு சொல்லவே இல்ல . இவ்ளோ நடந்திருக்கு. வீட்ல எங்ககிட்டயெல்லாம் சொல்லணும்ன்னு தோணலையா உங்களுக்கு” என்றார். சிவகாமி அழவே ஆரம்பித்து விட்டார். அவர் அருகில் சென்ற ஆதி
“அம்மா எனக்கு ஒண்ணுமில்லீங். நா நல்லாத்தான் இருக்கேன்.சின்ன காயம்தான். அப்பா. எல்லாரையும் பயப்படுத்த வேண்டான்னுதாங்கப்பா யார்கிட்டயும் சொல்லல” என்று அவன் எல்லோரையும் சமாதான படுத்தி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் சந்தியாவை தேடியது.
சந்தியா கார் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தவள், ஆதியின் கோலத்தை பார்த்து பாதியிலேயே நின்றுவிட்டாள்.
Advertisement
காலையில் அவனை வேட்டி சட்டையில் பார்த்து நாம்தான் கண் வைத்துவிட்டோம் போல என்று அழுகையாக வந்தது அவளுக்கு. ஆனால் அமைதியாக வந்து ஒரு ஓரமாக நின்றாள்.
Advertisement
அவளை பார்த்த சிவகாமிதான் ஆதியிடம் “நீ மேல போ கண்ணு.போய் படு முதல்ல. அம்மா டிஃபன் குடுத்தனுப்புறேன். பிறகு மருந்து சாப்பிட்டுட்டு அப்புறம் தூங்கு” என்றவர் சந்தியாவை பார்த்து
“நீயும் கூட போ கண்ணு” என்றதும் இருவரும் மேலே சென்றனர்.
ரூமிற்க்கு சென்று கதவை சாற்றிய ஆதி, சந்தியா அமைதியாகவே நிற்பதை பார்த்து அவள் அருகில் சென்று அவள் முகத்தை நிமிர்த்தினான். வெறும் பனியன் மட்டும் அணிந்திருந்தவனின் தோள் காயத்தை பார்த்தாள் .
Advertisement
“பொம்மு என்னடி. பயந்துட்டியா. சின்ன காயம்தான். மாமாவுக்கு இதெல்லாம் ஒரு காயமே இல்ல” என்றவனின் நெஞ்சில் மெதுவாக சாய்ந்தாள் காயத்தை தொந்திரவு செய்யாமல்.
அவனும் திரும்ப அணைத்து கொண்டு அவளின் தலையில் முத்தம் வைத்தான். அவனிடமிருந்து விலகியவள்
“சரி வாங்க மாமா. வந்து படுத்துக்குங்க” என்றாள்.
“இல்லடி பொம்மு. நா பஸ்ட் குளிச்சிடறேன்” என்றுவிட்டு பாத்ரூம் நோக்கி சென்றவனை நிறுத்தியவள் “மாமா இருங்க. காயத்தில தண்ணி பட கூடாது. நா வந்து ஹெல்ப் பண்றேன்”
“பரவால்லடி. நா பாத்துக்கிறேன்” என்று சொன்னவனிடம் கேட்காமல் அவளும் உள்ளே சென்று உதவி செய்தாள்.
குளித்துவிட்டு அவனை படுக்க சொன்னவளிடம் “பொம்மு. எனக்கு ஒன்னும் இல்லடி. என்ன என்னமோ பெரிய நோயாளி மாதிரி ட்ரீட் பண்ற” என்று கூறிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தான்.
“மாமா. சின்ன காயமா இருந்தாலும் அது க்யூர் ஆகறவரைக்கும் நீங்க கேர்ப்புல்லாதான் இருக்கணும்” என்றுவிட்டு நகர்ந்தவளை “நீ எங்கடி போற” என்று கையை பிடித்தான்.
“மாமா உங்களுக்கு டிபன் எடுத்துட்டு வரேன்” என்றாள்.
“நீ என் பக்கத்துல இருடி”
“இல்ல மாமா, சாப்ட்டுட்டு நீங்க டேப்ளெட்ஸ் எடுத்துக்கணும். லேட் பண்ண கூடாது. இல்லன்னா உங்களுக்கு பெயினும் வந்துடும், பீவரும் வந்துடும்” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே கௌரி கதவை தட்டி இருவருக்கும் டிஃபனை கொடுத்துவிட்டு சென்றாள்.
இட்லியை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட வந்தவளிடம் “பொம்மு எனக்கு இடது பக்கம் அதுவும் ஷோல்டர்லதான் அடிபட்ருக்கு . என்னால தானே சாப்பிட முடியும்”
“ஏன் என் கையால சாப்பிட மாட்டீங்களா” என்று முறைத்தவளிடம் ஒன்றும் சொல்லாமல் வாயை திறந்து இட்லியை வாங்கி கொண்டான்.
அவளும் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை கீழே வைக்க போனாள். போனவள் அங்கு பேசி கொண்டிருந்த வசந்தனிடம் இன்று நடந்த எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.
பிறகு வசந்தன் கிளம்பிவிட்டான். செல்வமும் பத்மாவும் பெண்ணையும் மருமகனையும் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்றவுடன் சித்ரா சந்தியாவிடம் “எவன் செத்தா உனக்கென்னன்னு போகாம, உன்ன யாரு தேவையில்லாத வேலை பாக்க சொன்னது. இப்ப பாரு எவ்வளவு பெரிய பிரச்சனைல சிக்கிருக்க” என்று திட்டினார். அதற்கு சிவகாமி
“புள்ள நல்லது நினைச்சி பண்ணிருக்கு. அந்த ஆகாவளி பய புரிஞ்சிக்காம அக்கப்போர் பண்ணா என்ன பண்றது”
“ஆமாக்கா. நீங்க எதுக்கெடுத்தாலும் இவளுக்கு இப்படியே சப்போர்ட் பண்ணிட்டே இருங்க. எதுவும் சொல்லிடாதீங்க” என்றதும் ஈஸ்வரனும்
“விடு சித்ரா. புள்ளய ஒண்ணும் சொல்லாத. கண்ணு நீ போய் உன்ர புருஷன பாரு” என்றதும்
“சரிங்க மாமா” என்றுவிட்டு மேலே வந்தாள் சந்தியா.
தூங்காமல் படுத்திருந்த ஆதி சந்தியா வந்து பக்கத்தில் படுத்ததும்,
“இருந்தாலும் ஒரு மாதிரி இருக்குடி. ஒரு வயசுக்கப்பறம் யாரும் ஊட்டிவிட்டதும் இல்ல. இப்படி குளிப்பாட்டி விட்டதும் இல்ல. அருண் கௌரில்லாம் இப்பவும் அம்மாட்ட ஊட்டிக்குவாங்க. ஆனா நா டீனேஜ் ஆரம்பிக்கும்போதே விலகிட்டனனோன்னு இப்ப தோணுது”
“நீங்க விலகல்லாம் இல்ல மாமா. உங்க கேரக்டர் அதுதான். ஏன் அருண் அத்தைட்ட ஊட்டிக்குறத பாத்தா உங்களுக்கு பொறாமையா இருக்குமா?”
“ச்ச ச்ச பாக்கவே ஆசையா தாண்டி இருக்கும்”
“ம் அதான். அவன் கேரக்டர் அது. எவ்ளோ வளந்தாலும் அம்மா கோண்டாவே இருக்கறது. நீங்க வேற மாமா. உங்களுக்கு எல்லாருக்கும் செய்றதுதான் பிடிக்கும். உங்களுக்கு யாரும் செய்றது பிடிக்காது. ஆனா அந்த எல்லாரும்ங்கிறதுல பொண்டாட்டி விதி விலக்கு மாமா. அதிலையும் ஆதி மாமாக்கு சந்தியா ஸ்பெஷல் இல்லையா” என்று தலையை சாய்த்து கேட்டவளை பார்த்து மனசு நிறைந்து போனது ஆதிக்கு.
“நல்ல வேளை பொம்மு. என்ன விடாம கல்யாணம் பண்ணிக்கிட்டடி. நீ என் லைஃப்ல இல்லாம போயிருந்தீன்னா, என் வாழ்க்கையே வறண்டு போயிருக்கும் டி”
“எனக்கு மட்டும் என்ன மாமா. பேங்ளூர்லயே இருந்து உங்களையும், நம்ம குடும்பத்தையும் பாக்காம போயிருந்தேன்னா, வாழ்க்கையும் மனிதர்களும் இவ்வளவு அழகானவங்கன்னு எனக்கும் தெரியாமலே போயிருக்கும் மாமா. என்றவள்
“ஆதி நீயே …ஏ…ஏ
என் ஆயுள் நீயே ஏ….ஏ…
ஆணி வேரை….
நீங்…காது மண்ணே..
எங்கே இருள் என்றாலும். ம் ம்…
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே”
என்று அழகாக பாடி ஆதியை கட்டிக்கொண்டாள்.
ஆதியும் அவளை கட்டி கொண்டவன் “எனக்கு இத மாதிரி படலாம் வராது டி பொம்மு. ஆனா வேற விதமா என் காதல காட்ட தெரியும்” என்றுவிட்டு அணைப்பை இறுக்கியவனிடமிருந்து விலகியவள்,
“மாமா ஒண்ணும் வேண்டாம். பேசாம தூங்குங்க” என்றதும் அதிர்ச்சியானான் ஆதி.
“அடிப்பாவி பொம்மு. கிண்டல் பண்றியா. இதுக்குதான் பாட்டெல்லாம் பாடினியா டி. சும்மா இருந்தவனை போனை போட்டு உசுப்பேத்திவிட்டுட்டு இப்ப தூங்குங்கன்னு சொல்ற” என்றதும் கடுப்பான சந்தியா
“ம் அப்படியே நீங்க காலைல இருந்து நடந்தது எல்லாத்தையும் பொண்டாட்டிட்ட சொல்லிட்டீங்க பாருங்க. இப்ப வரைக்கும் வாய தொறக்கல. நா உங்கட்ட பேசும்போது உங்களுக்கு அடிபட்ருக்கது எனக்கு தெரியுமா. அதனாலதான் அப்படி சொல்லிட்டேன். எனக்கு இப்ப தான தெரியும் உங்களுக்கு அடிப்பட்ருக்கிறது. இந்த அருணும் கௌரியும் ரெண்டும் வாய தொறக்கல. காலைல இருக்கு ரெண்டுத்துக்கும் கச்சேரி”என்றதும்
“ஏய் பொம்மு. நான்தாண்டி அவங்கள உன்கிட்ட சொல்ல வேண்டான்னு சொன்னேன். அவங்கள ஒன்னும் சொல்லாதடி” என்றான் ஆதி.
“ஏன் ஒன்னும் சொல்ல கூடாது. ஓ உங்க தம்பி தங்கச்சிக்கு ரொம்ப சப்போர்ட்டோ. இருக்கட்டும். இருக்கட்டும்”
“சரி நா சப்போர்ட்டுக்கு வரல. நீ எது வேணாலும் பண்ணு. ஆனா இப்ப எதுக்குடி தூங்க சொல்ற. எனக்கு தூக்கம் வராது பொம்மு”
“மாமா சொன்னா கேளுங்க. தையல் போட்ருக்கு. நீங்க ஸ்ட்ரைன் பண்ண கூடாது. உங்களுக்கு ஏதும் மெதுவாவும் வராது. அதனால தையல் பிரிக்கிற வரை ஏதும் கிடையாது. பெயின் கில்லர் இருந்தது டேப்ளெட்ல. நல்லா தூக்கம் வரும். ஒழுங்கா தூங்குங்க”
“என்ன தையல் பிரிக்கிற வரையா. இதெல்லாம் அநியாயம்டி பொம்மு. பத்து நாள் ஆகும்டி” என்று புலம்பியபடி தூங்கினான்.
மறுநாள் காலையில் ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ஆதிக்கு. பக்கத்தில் சந்தியா இல்லையென்றதும் பதறி எழுந்தான். பிறகு பாத்ரூமில் இருந்து தண்ணீர் சத்தம் வந்ததும் தான் நிம்மதியானான்.
சந்தியா குளித்துவிட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக அவளிடம் விஜய் கொடுத்த ஜிபிஎஸ் மெஷினை எடுத்து கொடுத்து ட்ரெஸ்ஸில் பொருத்தி கொள்ள சொன்னவன் “உன் காலேஜ்ல நா பேசிடறேன் டி. எக்ஸாம்க்கு மட்டும் போனா போதும். வீட்டை விட்டு எங்கயும் வெளில போகாதடி. முக்கியமா இந்த மெஷின், நீ தூங்கும்போதும் உன் கூடவேதான் இருக்கணும். கழட்டவே கூடாது” என்றதும்
“எல்லாம் சரிதான். ஆனா எவ்ளோ நாள் வீட்டுக்குள்ளவே இருக்கறது மாமா. போர் அடிக்கும்”
“அதான் கௌரியும் கூட இருக்கால்ல பொம்மு. அப்புறம் என்ன. கொஞ்ச நாள். அந்த தீபனுக்கு ஒரு முடிவு கட்ற வரைக்கும் பொறுமையா இருடி. ப்ளீஸ் டி”
“சரி மாமா. பரவால்ல. வெளில சுத்தாம இந்த செம் நல்லா படிக்கிறமாதிரி கடவுள் வாய்ப்பு குடுத்துருக்காரு. யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்” என்று விட்டு கீழே சென்றாள்.
அடுத்த பத்து நாட்கள் சந்தியா கௌரியுடன் பாடம் படிப்பது, விளையாடுவது என்று பொழுதை போக்கினாள். அருண் மட்டும் காலேஜ் சென்று வந்தான்.
ஆதியும் கையில் கட்டுடன் அவ்வப்போது அவன் வேலையை பார்க்க வெளியே சென்று வந்தான். கூடவே வசந்தனும் அவன் எங்கு சென்றாலும் சென்றான். சந்தியாவின் கட்டளை அது. இரண்டு நாட்கள் முன்புதான் ஆதிக்கு தையலை பிரித்திருந்தார்கள். காயம் நன்றாக ஆறியிருந்தது. சிறு பிளாஸ்டர் மட்டும் ஒட்டியிருந்தான்.
விஜய்யும் தீபனை எதில் சிக்க வைக்கலாம் என்று காத்திருந்தான். ஏனென்றால் அவன் தொழிலெல்லாம் சுத்தமாக இருந்தது. அதனால் அவன் அப்பா செய்த தப்பு ஏதும் இவன் மேல் வருமாறு செய்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
அன்று ஒரு ஞாயிற்று கிழமை. சந்தியா வீட்டில் ஆதியிடம் அடம் பண்ணி கொண்டிருந்தாள்.
“மாமா. ரொம்ப போர் அடிக்குது வீட்டுக்குள்ளேயே இருக்கறது. வாங்க எங்காவது குடும்பத்தோட வெளில போயிட்டு வரலாம்” என்றதும்
“ஏண்டி. நாங்களே அந்த கிறுக்கன் எப்ப என்ன பண்ணுவான்னு பயந்துட்டிருக்கோம். அவன் வேற உன்ன கண்ணிலேயே பாக்க முடியாம வெறியோட சுத்திட்டிருக்கானாம். நம்ம ஊர் பக்கம் வேற வந்து வந்துட்டு போய்ட்ருக்கான் ஜாக்கிரதையா இருன்னு விஜய் சொல்லிருக்கான். இந்த நிலமைல உனக்கு பிக்னிக் கேக்குதா” என்றவன் பிறகு யோசித்துவிட்டு “சரி வா நாம தோட்ட வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என்றான்.
அப்பா கொஞ்சம் வெளி காத்து வாங்கலாம் என்று சந்தியாவும் ஆசையாக கிளம்பினாள்.
வீட்டில் ஆதியுடன் செல்வதால் பத்திரம் மட்டும் சொல்லி அனுப்பி வைத்தனர்.
வெளியில் வந்து ஆதி பைக்கை எடுத்ததும் சந்தியாவின் முகம் இன்னும் மலர்ந்தது. “மாமா உங்களோட பைக்ல போய் எவ்ளோ நாளாச்சு. நா போய் வேற டிரஸ் போட்டுட்டு வரேன் மாமா. அப்பதான் டபிள் சைட் கால் போட்டு வரலாம்” என்று உள்ளே செல்ல போனவளை தடுத்தான்.
இப்பொழுதெல்லாம் சந்தியா, ஆதிக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக சேரி தான் அணிகிறாள். முடியும் ஒரு மூன்று மாதமாக வெட்டாமல் விட்டிருந்ததால் முதுகு வரை வளந்திருந்தது. பத்து நாட்கள் வீட்டில் இருந்ததாலும் சிவகாமியின் கவனிப்பிலும் இன்னும் மினுமினுப்பாக இருந்தாள்.
ஆதி “பொம்மு. இது கிராமம் டி. டபிள் சைட் கால் போட்டு கட்டி பிடிச்சிட்டெல்லாம் வரமுடியாது. வேணுன்னா அங்க வீட்ல மாமாவை இறுக்கி கட்டி பிடிச்சிக்குவியாம்” என்று சொல்லி அழைத்து சென்றான்.
error: Content is protected !!