இல்லை என்றவர். மூச்சை உள்ளீழுத்துவிட்டு என்னுடைய தோழி , பிரெண்ட் என்றார்.
ஓரே காலேஜா.
ஆமாம் என்றவர்.நீ நல்ல இருக்கீயாமா.
நல்ல இருக்கேன் அங்கிள் என்றவள். உங்க கூட பேசலாமா அம்மாவை பத்தி.
சரி என்றவர்.இப்போ வேணாம்மா என்று தன்னுடைய ரைஸ் மில்லின் விசிடிங் கார்டை கொடுத்தவர். உனக்கு எந்த உதவியினாலும் கேளுமா என்று சொல்லிவிட்டு கனத்த மனதுடன் கோவிலை விட்டு சென்றார்.
ஸ்ரீஜெயத்திற்கு நினைவுகள் எங்கோ போகின.
முதல் முதலில் மஞ்சுவை காலேஜில் பார்த்தது ஞாபகம் வந்தது. தன் தந்தையோடு இரட்டை சடையுடன், பாவாடை தாவணியில் பார்த்த முதல் சந்திப்பை நினைத்த மனம் 25 வருஷத்துக்கு முன் நடந்ததை நினைவு படுத்தியது.
ஸ்ரீஜெயம் கடைசி வருடம் காலேஜ் பிடித்துக்கொண்டு இருந்தார். மஞ்சு பஸ்ட் இயர் காலேஜ் சேர்ந்திருந்தாள்.
மஞ்சு காலேஜ் சேர்ந்த முதல் நாளே ஸ்ரீஜெயம் அவளை பார்த்திருந்தான். நம்ம ஊரு பொண்ணு என்று மட்டும் தெரியும்.மற்றபடி ஒன்றும் தெரியாது.
அந்த காலேஜ் படிக்கும் சில மாணவர் மஞ்சுவை பத்தி பேசுவதை கேட்டு இருக்கிறான்.நல்ல பொண்ணு, ஊர் தலைவரோட பொண்ணு, அழகா இருக்கா, நல்ல படிக்குறா, நான் அவளை லவ் பண்ண போறேன் என்று அவன் காது படவே சில மாணவர் பேசுவதை கேட்டும் , கேட்காதவன். போல சென்றுவிடுவான்.
தினமும் மஞ்சு காரில் தான் காலேஜ் வருவாள், போவாள். அவள் தந்தையோ இல்லை அவர்கள் வீட்டின் டிரைவரோ கொண்டு வந்துவிட்டு கூட்டி செல்வார்கள்.
ஸ்ரீஜெயம் லைப்பிரரியில் புக் படித்துக்கொண்டு இருந்தான். சன்னல் வழி பார்க்க .
மஞ்சு அவளின் தந்தைக்காக காத்து இருப்பது தெரிந்தது.
அழகான பெண், நன்றாக படிப்பாள்,ஆண்களிடம் பேச மாட்டாள் அவளை பற்றி நண்பர்கள் சொல்லியதை நினைவு படுத்தியவன். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு படித்துக்கொண்டு இருக்க.ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க.
மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மஞ்சுவை கேலி்பண்ணி சிரித்து கொண்டு இருந்தார்கள் சத்தம் கேட்டு ஸ்ரீஜெயம் மஞ்சுவின் அருகில் வந்து. என்ன இங்க சத்தம் என்று கேட்க.
ஒன்னும் இல்லண்ணா, இந்த பொண்ணோட கார் வரல போல இங்க இந்த பொண்ணு ரொம்ப நேரம் நிக்குது அதான் ட்ராப் பண்ணலாமா என்று கேட்டோம்.
சரி நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க என்றவன். மஞ்சுவை பார்க்க. அவளோ பயந்து போய் இருந்தாள்.
என்ன ஆச்சு பயந்துட்டீயா என்றவன். பயப்பட கூடாது தைரியமா இருக்கனும் என்றவன். திரும்பி பார்க்க.
காலேஜ் ஆபிஸ் ரூம்பில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து. மஞ்சுவிடம் உங்க கார் ரிப்பேர்ரம்மா. கார் வராதாம் போன் பண்ணாங்க நீங்க பஸ் பிடிச்சு வருவீங்கலாம் வீட்டுக்கு
வா என்று அவளை பஸ் ஸ்டாப் அழைத்து வந்தான். மாணவர்களின் கூட்டம் பஸ் ஸ்டாபில் அதிகமாக இருந்தது..
அவளாள் ஏற கூட முடியவில்லை அப்படி ஒரு கூட்டம்.
இருவரும் இரண்டு மூன்று என்ற பஸ் களை விட . அப்பவும் கூட்டம் குறையவே இல்லை.. எப்படி இவளை பஸ் ஏத்தி விடுவது லைட்டாக இருட்டுவது போல இருக்க எப்படி என்று நினைத்தவன்.
மஞ்சுவிடம் என்னோட வண்டில வர்ரீயா.உன்னை ஊர் பக்கத்தில் யாருக்கும் தெரியாம விடுறேன். பஸ்சில் கூட்டமா இருக்கு ஏற முடியாது.
அவளோ ஸ்ரீஜெயத்தின் முகத்தை பார்க்க.அந்த முகத்தில் உன்னை பத்திரமாக வீட்டில் விடுவேன் என்று செய்தி மட்டுமே தெரிய.அவளுக்கு தயக்கமாக இருந்த போதும் சரி என்றாள்.
அவளை அழைத்து கொண்டு வண்டியில் மெயின் ரோடு செல்லாமல் குறுக்கு வழியில் சென்றவன்.யாருக்கும் தெரியாமல் ஊர் எல்லையில் அவளை விட்டு.வீட்டுக்கு பத்துறமா போ என்றவன்.எல்லையே நிற்க.
அவனை திரும்பி ,திரும்பி பார்த்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். பிறகு தான் ஞாபகம் வந்தது.அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே என்று நினைத்தவள்.அடுத்த நாள் ஸ்ரீஜெயதிடம் நன்றி சொல்ல அவனை தேட. அவனை பார்க்க முடியவில்லை,ஒருவாரமாக நன்றி சொல்ல மஞ்சு ஸ்ரீஜெயத்தை தேடிக்கொண்டு இருந்தாள்.
மஞ்சுவுக்கு அவனின் அமைதியான முகமும், அளவான பேச்சும், முதல் சந்திப்பிலே அவனை பிடித்து விட. அன்றைக்கு அவர் மட்டும் உதவி செய்யலன்னா என்ன ஆகியிருக்கும் ரொம்ப கஷ்ட பட்டு வீட்டுக்கு போயிருப்பேன் என்று நினைத்தவள்.இன்று எப்படியாவது அவனை பார்க்க வேண்டும் என்று நினைத்து. சாயங்காலம் காரை காலேஜுக்கு லேட்டாக வர சொல்லிவிட்டவள். அவனை முதல் முதலில் சந்தித்த அந்த இடத்திலே அமர்ந்து கொண்டு அவனை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருந்தாள்.வேகுநேரமாகியும் ஸ்ரீஜெயம் வராமல் இருக்க.ஏனோ அவளுக்கு மனம் பாரமாக இருந்தது. ஒரு முறை அவனை பார்க்க மாட்டோமா என்றிருந்தது. தன் பின் யாரோ வந்து நிற்பது போல திரும்பி பார்க்க.
விரிந்த புன்னகையுடம் நின்று இருந்தான் ஸ்ரீஜெயம்.
மஞ்சு அவனை பார்த்தவுடனே தன்னையும் மீறி ஸ்ரீ என்று அழைத்து இருந்தாள்.
ஸ்ரீஜெயம் லைப்பிரரி சென்று வரும் வழியில் மஞ்சுவை பார்த்தவன் இன்றும் கார் வரல போல என்று நினைத்து அவளின் அருகில் வந்தான். அவளின் ஸ்ரீ என்ற அழைப்பு அவனுக்குள் ஏதோ செய்ய, என்னம்மா என்று இருந்தான்.
அவளோ ஸ்ரீ என்றவள் அதற்கு மேல் பேச முடியவில்லை.அவனின் கைபிடித்துக் கொண்டவள். ஸ்ரீ என்றாள் கலங்கிய கண்களோடு.
அவனோ என்னாச்சுமா என்றவன்.உடம்பு சரியில்லையா, கார் வரலியா , ஏன்டாம்மா அழற யார்ராவது உன்ன திட்டினாங்களா, இல்லை கேலி பண்ணாங்களா சொல்லு என்று கேட்க.
அவளோ அப்படி ஒன்று இல்லை என்று தலையாட்ட.
அப்போ ஏன் அழற கண்கலங்கி இருக்கு என்றான்.
அவளுக்கே புரியவில்லையே? நான் ஏன் அழறேன் என்று அவனிடம் இருந்து தனது கைகளை உருவி கொண்டவள். கண்களை துடைத்து விட்டு.அன்றைக்கு எனக்கு உதவி பண்ணுனதுக்கு நன்றி என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் பின் சென்றவன் மஞ்சு நில்லு என்றான்.
அவளோ நிற்காமல் நடக்க.
ஏய் மஞ்சு சொல்லிட்டு போ. ஏன் அழுத.
அவளோ உன்னை என் மனம் தேடுது,அதை உன்னிடம் எப்படி சொல்வேன்.அதற்கு என்ன அர்த்தம் என்று அவளுக்கு இப்போது புரிய, கண்ணுல தூசி விழுந்துருச்சு என்றாள்.
பொய் சொல்லாத. உன் கண்ணும், , உன் தவிப்பும் எனக்கு வேறு கதை சொல்லுது. அவளின் அமைதியை பார்த்தவன். இது படிக்குற வயசு முதல்ல படி. மனசு சொல்லுறத கேக்காத , மூளை சொல்லுற கேளு. படிப்புதான் முக்கியம் என்று கூறியவன். அவளின் கார் வருவதை பார்த்தவன். உனக்கு எப்போதும் நான் ஒரு பிரெண்டா இருப்பேன் சரியா என்றவன். அவளை கடந்து செல்ல.
தன்னை கண்டு கொண்டான் என்று நினைத்தவள்.காரில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டாள். மனசு லேசாக இருந்தது.
தினமும் இல்லை வாரம் இருமுறையாவது ஸ்ரீஜெயத்தை பார்த்துவிடுவாள்.ஒரு புன்னகை , சில வார்த்தைகள் என்று நாட்கள் சென்றன. அவளுக்கு எதாவது உதவி தேவைப்பட்டாள் தயக்காமல் ஸ்ரீஜெயமிடம் கேட்பாள். அவனோ தயங்காமல் செய்து கொடுப்பான்.
அன்று மஞ்சுவின் பிறந்த நாள் காலேஜ் முடிந்தவுடன் வீட்டில் செய்த இனிப்பை எடுத்து கொண்டு ஸ்ரீ ஜெயத்தை தேடினாள். அவன் எங்கே என்று காலேஜ் முழுவதும் தேடியவள் லைப்பிரரி வந்தாள். அவள் நினைத்தது போலவே அவளின் ஸ்ரீ ஒரு புத்தகத்தை தீவிரமாக படித்துக்கொண்டு இருந்தான்.
இவள் வந்ததை கவனிக்காதவன். அவன் பாட்டிற்கு படித்துக்கொண்டு இருக்க.
அவளும் லைப்பிரரியில் இருந்து ஒரு புக்கை எடுத்துக் கொண்டு. அவனின் எதிரில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்திருந்தாள்.
புக்கை திருப்பும் போது எதிரில் இருந்த மஞ்சுவை பார்த்தவன். ஹே பாப்பு என்று அழைக்க.
அவளோ புக்கை மூடி வைத்து விட்டு செல்ல.
அவளின் பின் சென்றவன். ஹே மஞ்சு என்ன ஆச்சு. ஏன் பேசாம போற.
அது என்ன எப்ப பார்த்தாலும் என்னைய பாப்புவுன்னு கூப்பிடுறீங்க.
ஏன் நான் பாப்புன்னு கூப்பிட்டா உனக்கு பிடிக்கலயா.
ஆமாம் என்றவள். நான் என்ன சின்ன பொண்ணா இன்னையோட எனக்கு 19 முடிஞ்சு 20 தொடங்குது என்றாள்.
என்ன என்றவன். உனக்கு 19 முடிஞ்சத. அப்போ இன்னை உனக்கு பிறந்தநாளா.
ஆமாம் என்று தன்னிடம் இருந்த இனிப்பை அவனிடம் நீட்ட.
அதை வாங்கியவன் டப்பாவை திறந்து பார்க்க பால்கோவா இருந்தது. கொஞ்சம் எடுத்து வாயில் போட்டவன். சூப்பரா இருக்கு எங்க வாங்கின.
எங்கேயும் வாங்கல நானே செஞ்சேன்.
அப்படியா என்றவன். சூப்பர் மஞ்சு நல்லா இருக்கு. நீ சாப்டியா.
இல்லை என்று தலையாட்ட.
டப்பாவில் இருந்த கொஞ்சம் பால்கோவாவை அவனின் கையில் எடுத்தவன். மஞ்சுவின் வாய் அருகே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இனிப்பை ஊட்டி விட.
அவன் குடுத்ததை உண்டவள். தாங்யூ என்றாள்.
உனக்கு தான் நான் தாங்யூ சொல்லனும் பால்கோவா கொண்டு வந்ததுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று இனிப்பை உண்டு கொண்டே பேசியவன். அவளுக்கு கொஞ்சம் குடுக்க.
வேண்டாம் என்றவள். அவன் சாப்பிடும் அழகை பார்க்க.
என்ன மஞ்சு.
ஒன்னும் இல்லை என்றவள். அவனை பார்த்துக்கொண்டே இருக்க.
ஸ்ரீ ஜெயம் மஞ்சுவிடம் என்ன வேணும் பெர்தடே பேபிக்கு.
அவளோ ஒன்னும் வேண்டாம் ஸ்ரீ என்றாள்.
சொல்லு மஞ்சு வாங்கி தர்ரேன்.
இல்லை வேண்டாம் என்று மறுக்க.
சொல்லு டா என்றான் பாசமாக.
அவளோ நீங்க இதே மாதிரி எப்பையும் என் கூட இருப்பீங்களா என்றாள்.
ஸ்ரீ ஜெயம் தலையாட்டி இருப்பேன் என்றவன். நீ என்னை மறந்துராத என்றான்.
அவளோ நானா உங்களையா மறக்க மாட்டேன் என்றவள். நான் எப்படி இருக்கேன் என்று அவளின் பிறந்தநாள் உடையை காட்டி கேட்க.
எப்பையும் விட இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க பாப்பு என்றான். அவளை கேலி செய்வது போல.
அவளோ ஸ்ரீ என்று அவனின் தோளில் அடிக்க.
அடித்த கையை பிடித்து கொண்டவன். மஞ்சு என்றான்.
அவளோ அவனின் முகம் பார்க்க.
நாளையோட எனக்கு எக்ஜாம் முடியுது. உன்னை இனிமேல் பார்க்க முடியாது. நல்லா படி என்று சொல்ல.
அவளோ அவன் முகத்தையே பார்த்து இருந்தாள்.
மஞ்சு வீட்டுக்கு செல்வதற்கு கார் வந்து கொண்டு இருப்பதை பார்த்தவன். பாய் பாப்பு என்று சொல்லி விட்டு சென்றான்.
அவளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் தானா ஸ்ரீ யை பார்க்க முடியும் பிறகு பார்க்க முடியாத என்று நினைத்தவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
நாளைக்கு எப்படியாவது மனதில் உள்ளதை ஸ்ரீ ஜெயத்திடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள். காலையில் எழுந்தவுடன் அவளின் தாயிடம் இன்னைக்கு எனக்கு காலேஜில் பெஷல் கிளாஸ் இருக்கு எப்போ முடியுமுன்னு தெரியாது அதனால கார் ஈவ்னிங் வரவேண்டாம் நானே பஸ்சுல வந்துருவேன் என்றாள். அவளின் அம்மாவோ சரிடா பாத்து வா என்று சொல்லி சென்று விட்டார்.