Skip to content
Post Views: 10,430
திடீரென தன் தந்தையை யாரோ, தனக்கு ஆதரவாக பேசி.. திட்டுவது புரிந்த குழந்தையும் அழுகையை நிறுத்தி அவளின் புறம் பார்க்க துவங்கியது.
ரியானுக்கு அங்கு சுடிதார் அணிந்து கொண்டு நின்றிருந்த பெண்ணை இதற்கு முன் பார்த்ததாக நினைவில் இல்லாததால், “ஹூ யார் யூ..? வாட் ஆர் யூ டூயிங் கியர்..?” என்றான் கேள்வியாக.
Advertisement
“மைதா மாவு கலர்ல இருக்கும் போதே நினைச்சேன், தமிழ்ல திட்டறோமே புரியுமான்னு..! தலை முடிய பாத்து ஏமாந்துட்டேன்..!
கண்ணுல இருந்து, உடம்பு முழுக்க வெள்ளாவில வச்சு வெளுத்த மாதிரி இருந்தாலும், கருப்பா இருக்கே முடி..?!
Advertisement
Advertisement
ஃபாரீன் காரனுக்கு இந்த கலர்ல முடி இருக்குமா..? மீச கூட கருப்பா இருக்கே..!!!
ஒரு வேள டை அடுச்சு இருப்பானோ..?” என வாய் விட்டு பேசிய படி, எதிரில் இருப்பவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவளை கண்டு கடுப்பானவன்,
Advertisement
“டூ யூ நோ ஹூ ஏம் ஐ..?” என்றிட,
“ஏன் தெரியாது..! ஐ நோ யூ வெரி வெல்..” என்றாள் அசால்ட்டாக.
‘பார்த்தா இங்கே வேலை பார்க்கற பொண்ணு போல தெரியுது. எம்டி ன்னு தெரிஞ்சுமா இப்படி பேசுது..?!” என ஆச்சரயமாக மனதில் நினைத்தவன்,
“ஹோ..! டூ யூ நோ வெரி மச் ஆன் மீ..! சோ, டெல் மீ ஹூ ஐ ஏம்..?” என்றான் அதிகாரமாய்.
“நீ என்ன இந்த கம்பெனி எம்டியா..? அதிகாரமா பேசறே..! நீ சாதாரண ஆய ப்பா தானே..?” என்றாள் கேலியாக.
ரியானுக்கு எட்டிய தமிழ் அறிவு வரை அவள் சொன்னதன் அர்த்தம் புரியவே இல்லை..
அதனால் விளைந்த குழப்பத்தில், “வாட்.. ஆய ப்பா..! இட் மீன்ஸ்..?” என்றான் குழப்பத்தோடு.
“இவனுக்கு விளக்கம் சொல்லியே வயசாகிடும் போல.. எப்பா பீட்டரூ.. குழந்தைய பாத்துக்கற லேடி பேபி சிட்டருக்கு எங்க ஊருல பேரு ஆயம்மா..
நீ ஜென் பேபி சிட்டர் தானே.. சோ, ஆய ப்பா..” என்று சொன்னதும்..
‘ஏப்பா.. என்ன அறிவுடா சாமீ.. இந்த புள்ளைக்கு.. எனக்கு தமிழே தெரியாதுன்னு நினச்சு இவ பண்ணற அலப்பறைக்கு அளவில்லாம இருக்கே..
இப்ப நா தமிழ்ல பேசினா அதுக்கு அவ ரியாக்க்ஷன் எப்புடி இருக்கும்..! ” என தான் நக்கலாக தோன்றியது ரியானுக்கு.
ஆனாலும் அவனுக்கு தமிழ் தெரியும் என்பதை இப்போதைக்கு அவளிடம் வெளிப்படுத்த விரும்பாமல் அமைதி காத்தான் ரியான்.
இவர்களின் பேச்சு புரிந்தும் புரியாமலும் இருவரையும் மாறி மாறி பார்த்த முகுந்த் இறுதியில், அந்த பெண் தன் தந்தையை ‘பேபி சிட்டர்..’ என்று சொன்னது புரிந்து,
அவசரமாக தனது பிஞ்சு கரம் கொண்டு.. ரியானின் கன்னத்தில் வைத்து தன்புறம் திரும்பி தன்னை பார்க்க செய்தவன்,
“ஸீ ஈஸ் டெல்லிங் ராங்.. யூ ஆர் மை ஃபாதர்..” என்றான் கிசுகிசுப்பாக,
“எஸ் மை பாய்.. ஸீ ஈஸ் ராங்.. ஸீ டஸ்இன்ட் நோ எபவுட் அஸ்..” என்றான் ரியானும் மெல்லிய குரலில்.
அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது சரியாக கேட்காது போனாலும் அவர்கள் பேசும் விதம் ஒரு வித பிணைப்பை காட்ட,
“என்ன இப்போ இதுங்க ஒண்ணு கூடிக்குச்சுங்க.. இதுக்கு தான்டீ இந்த மாதிரி குட்டீஸ்ஸ நம்பி களத்துல இறங்க கூடாதுன்னு சொல்றது.. சமயம் பாத்து கட்சி மாறிடுங்க.
நம்ம சிலுப்பீ கூட காரியம் ஆக மட்டும் கூட்டு சேர்வா.. காரியம் முடிஞ்சா தள்ளி நில்லு.. யார் நீ..? ன்னு கேட்பா..! எத்தன பட்டாலும் உனக்கு புத்தி வராது.
இதுங்க பஞ்சாயத்து நமக்கு எதுக்கு.. நம்ம வந்த வேலைய பாப்போம்..” என அவளாகவே பேசிக்கொண்டு, ரியானையும் முகுந்தையும் தாண்டி செல்ல போனாள் சம்யுக்தா.
அவள் தனக்குதானே பேச ஆரம்பித்த போதே தங்களின் பேச்சை நிறுத்திவிட்டு அவளை கவனிக்க தொடங்கியிருந்த அப்பாவும் மகனும் அவள் அவர்களை கடந்து செல்ல முற்பட்டதும்,
‘இந்த பொண்ணுக்கு அந்த பக்கம் என்ன வேலை..?’ என்ற எண்ணம் கொடுத்த தாக்கத்தால் அவளை நிறுத்த வேண்டி அவளின் கையை பற்றிய ரியான், “வெயிட் ஏ மினிட். வாட் ஈஸ் யுவர் ஜாப் ஆன் தட் சைட்..?” என்றான் கராராய்.
அவன் கையை பிடித்ததும் அந்நிய ஆணின் தொடுகையில் முதலில் அதிர்ந்து போன சம்யுக்தா, அவனின் கேள்வியை கவனிக்காமல், “ஹெவ் டேர் யூ.. விடு கைய.. இல்ல சவுட் பண்ணி ஆள கூப்பிடுவேன்..” என்று கையை உதறிகொண்டு சொல்ல,
முகம் இறுக பல்லை கடித்த ரியானுக்கு தமிழ்நாட்டு கலாச்சாரம் புரியும் என்பதால், ‘அவசரப்பட்டு அந்த பெண்ணை தொட்டது தவறு..’ என்பது விளங்க,
அவளின் கரத்தை விடுவித்து விட்டு, “சாரி.. மிஸ் ஆர் மிஸ்ஸஸ்..??” என்றான் கேள்வியாய்.
“மிஸ் சம்யுக்தா..” என்றிட,
“ஓகே மிஸ் சம்யுக்தா.. சாரி ஒன்ஸ் எகென்.. திஸ் சைட் ஈஸ் ஃபார் பிரைவேட் யூஸ் அண்ட் நோ ஒன் எல்ஸ் ஈஸ் அலவ்டு கியர்..” என்றான் திடமான குரலில்.
அது ‘பிரைவேட் ஃப்ளேஷ்..’ என்பதால் தான், தன்னை தடுக்க கையை பிடித்திருக்கிறான்.. என்பது இப்போது தெளிவானது சம்யுக்தாவிற்கு.
அதில் லேசான புன்னகையை தந்தவள், “இந்த ஃப்ளோர்ல தான் சொன்னாங்க..” என தனக்கு தானே சொல்லி கொண்டு யோசிக்க,
“வாட் டூ யு வாண்ட், ஐ வில் ஹெல்ப் யூ ஈஃப் ஐ கேன்..?” என்று வினவினான் ரியான்.
முதலில் தயங்கினாலும் இவ்வளவு நேரம் வாதாடும் போது தெரியாதது இப்போது அவளை அவதிக்கு உள்ளாக்க, ‘ஃபாரின்ல இருக்கறவங்க இதை பெருசா எடுத்துக்க மாட்டாங்க..’ என நினைத்த படி, “ஐ ஹேவ் டூ கோ ரெஸ்ட் ரூம்..” என்று விட்டு தயங்க,
அவளின் அவசரம் அவளின் முகத்திலிருந்த அசௌகரியத்திலேயே புரிய, அவள் தவறான பக்கம் வந்திருப்பது புரிந்தது ரியானுக்கு.
அவள் மீண்டும் திரும்பி வந்த வழியே சென்று அடுத்த பக்கத்தின் இறுதிக்கு செல்ல வேண்டும். அதுவரை அவளின் நிலை..! இங்கே ஏற்கனவே வேலை பார்த்தால் இது தெரியாதா..? என்ற எண்ணத்தால்,
“ஹியர் யூ ஆர் ஃபிரஷ்..?” என கேட்க,
“ம்ம்..” என்ற தலையசைப்பை தந்தவளின் கண்கள் அந்த இடத்தை அலசுவதிலேயே புரிந்து கொண்டவன்,
அவள் தவறான பாதையில் வந்திருப்பதை சொல்லிவிட்டு,
“ஈஃப் யூ டோண்ட் மைண்ட், யூ கேன் யூஸ் தி டாய்லெட் இன்சைட் திஸ் ரூம்..” என்று அறை பக்கம் கை காட்ட,
ஒரு வித தயக்கம் எழுந்தாலும் கையில் குழந்தையோடு இருக்கும், அதிலும்.. தன் கைபிடித்ததும் திட்டிய அடுத்த நொடி மன்னிப்பை கேட்டு, தவறான இடத்திற்கு வந்தது நீ.. என குத்தி காட்டாமல் தனக்கு உதவ முன் வந்தவனை,
தன்னோடு இவ்வளவு நேரம் பேசியும், தனது முகம் தாண்டி பார்க்காத அவனின் கண்ணியமும்.. அவளை நம்ப ஆழ்மனம் வலியுறுத்த, சிறு புன்னகையோடு தலையசைத்துவிட்டு.. அந்த அறைக்குள் சென்றாள்.
error: Content is protected !!