Skip to content
Post Views: 1,346
கீதம்
19
இரண்டு வருடங்களுக்கு பிறகு
காலை ஐந்து மணிக்கு அலாரம் ஒலியெழுப்பி, அவள் தூக்கத்தை கெடுத்தது. மெதுவே கண்ணை திறந்து பார்த்தவள் தலைக்கு மேலே கையை தூக்கி, போனை எடுத்து, ஆப் செய்து விட்டு, பத்து நிமிஷம் கழிச்சு எந்திரிக்கலாம் என எண்ணி கொண்டு, இனிதே மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள். அரை மணி நேரம் கழித்து தான் நித்திரை அவளிடம் இருந்து விடை பெற்றது.
Advertisement
” அச்சோ, லேட்டாச்சு..,” என போர்வையை விளக்கி விட்டு அருகில் தேட அவனை காணவில்லை. ” ரொம்ப நல்ல பையனா மாறிட்டானே, நான் தான் ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன்..,,” முனங்கி கொண்டு குளியலறையில் புகுந்தவள், இருபது நிமிடத்தில் குளித்து முடித்து, தலையில் இறுக்க கட்டிய துண்டுடன் வெளிவந்தாள். பீரோவை திறந்து என்ன டிரஸ் போடலாம் என ஆராய்ந்தாள். ” புடவை கட்டலாம்னா அது சரி வராது. ஸ்கூல் வேற போகணும், பிள்ளைங்க எல்லாம் நம்ம மூஞ்சை பார்த்துட்டு நிற்பாங்க. வேண்டாம்., சுடிபோடுவோம் ” என அதை அணிந்து, ரெடியாகி வந்தாள். ஸ்கூட்டியில் கிளம்பும் போது அருகில் வாசலில் கோலம் போட்டவர்கள் இவளை பார்த்து சிரிக்க, தலையசைத்து புன்னகைத்து கிளம்பி விட்டாள்.
வேகமாக சென்றால் பத்து நிமிடத்தில் அடைந்து விட தூரம் தான். ஆனால் அன்று விடி காலை முகூர்த்தம் ஆகையால் டிராபிக்கில் மாட்டி கொண்டு லேட்டாக தான் உள்ளே நுழைந்தாள்.
அன்று ராஜியின் மகனுக்கு மொட்டை அடித்து, காது குத்து வைபவம். முருகன் கோயிலில் விசேஷம் முடித்து பக்கத்துக்கு மண்டபத்தில் பந்தி ஏற்பாடு செய்திருந்தனர். ஆறு மணிக்கு வர வேண்டும் என நினைத்தவள் உள்ளே செல்லும் போதே ஆறே முக்கால் ஆகிவிட்டது. வேகநடையுடன் உள்ளே செல்ல பையனுக்கு மொட்டை அடித்து, குளிப்பாட்டி கையில் தூக்கி கொண்டு எதிரே ராஜி கணவனோடும், குடும்பத்தோடும் வந்து கொண்டு இருந்தாள். இவளை பார்த்ததும் சட்டென்று முறைத்து ” ரொம்ப சீக்கிரம் வந்துட்ட வாடிம்மா மஹாராணி ..,”
Advertisement
“சாரிடி, கொஞ்சம் லேட்டாகிருச்சு “கண்ணை சுருக்கி கேட்டவளை பார்த்து, ” மேடம், பெரிய ஆள் ஆகிட்டாங்க., பார்க்க கூட இப்போ எல்லாம் அப்பாயின்மென்ட் வாங்கணும். போடி., “
Advertisement
” ஏண்டி, இப்படி பேசுற., ” பரிதவிப்புடன் கேட்டவளை பார்த்து.
” அவளுக்கு தான் நிறை மாசம், அவ மாமியா அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க, நீ மட்டும் தானே பிரண்டுன்னு இருக்க, சீக்கிரம் வந்தா என்னவாம்.,? “
” நைட் வெளியே போய்ட்டு வர லேட் ஆகிருச்சுப்பா., இல்லைனா வந்திருக்க மாட்டேனா., “
Advertisement
” இந்தா, வந்த புள்ளய ஏன் திட்டிகிட்டு இருக்க, சும்மா இரு, ” என அதட்டி ராஜியின் கணவன் அவளை பார்த்து சிரிப்புடன் தலையசைக்க.
அவன் கையில் இருந்த குழந்தையோ அழுகையுடன் இவளிடம் தாவ முனைந்தான். ” என் செல்லத்துக்கு மொட்டை போட்டுட்டாங்களா.?, அத்தையை தேடுனீங்களா? சமத்து அழுகாம இருக்கணும் ” செல்லம் கொஞ்சியபடி வாங்கியவளை பார்த்து
” இவன் ரொம்ப அழுது அடம்பிடிப்பானு தானே உன்னை கூப்பிட்டேன்., என்ன கத்து தெரியுமா., ? கொஞ்ச நேரம் வச்சிக்கோ. நான் வந்துறேன் ” அவளிடம் பிள்ளையை கொடுத்து விட்டு வந்த சொந்தங்களை எல்லாம் மண்டபத்துக்கு சாப்பிட அனுப்பி சிறிது நேரம் கழித்து களைத்து போய் வந்தாள் ராஜி.
” என்னடி, ரொம்ப வேலையா., ?
“விசேஷ வீட்டுல வேலைக்கா பஞ்சம்., ? அலுத்து கொண்டே” சரி நீயும் வந்து சாப்பிடு. கிளம்பணும்ல, அப்புறம் சாப்பிடாம கூட ஓடிருவ. ” இருவரும் இணைந்து செல்லும் போதே, ராஜியின் ஒன்று விட்ட சித்தி வந்து கொண்டிருந்தார். நலம் விசாரித்தபடி அவர்களோடு நடந்தவர், ராஜியின் புறம் குனிந்து ” ஏண்டி, உங்க அண்ணனுக்கு இந்த பொண்ணை பேசலாமா.,? என்கிறார் மெதுவே.
” நான் வேணா இவை புருஷன்கிட்ட கேட்டு சொல்றேன் சித்தி.., என்றாள் பட்டென்று ராஜி.
” ஆத்தி, கல்யாணம் ஆன பொண்ணா, தெரியாம கேட்டுண்டி,? விட்ரு..,” என்றவர் மேலும்
” குழந்தை இருக்கா.,” என்க.
” இல்லை.,” என்ற பதிலை மட்டுமே ராஜி உரைக்க முனுமுனுவென பேசினாலும், தெளிவாய் இவளின் காதில் அனைத்தும் கேட்டன. மனதில் தோன்றிய உணர்வை முகத்தில் காட்டாமல் சாப்பிட்டு கிளம்பி வரும்போது, அந்த பெண்மணி பேசியவற்றை எண்ணியபடி வந்தவளுக்கோ எப்போதடா அவனை காண்போம் என இருந்தது.
கையில் தனக்கு தேவையான கோப்பையை எடுத்து கொண்டு வந்தவன், அதை டீப்பாய் மேலே வைத்துவிட்டு, மணியை பார்க்க அது ஒன்பது மணியாக சில நொடிகள் என காட்டியது.
” ஏன் இன்னும் இன்னைக்கு வரல?..” வர வர லேட்டா வர ஆரம்பிச்சிட்டா. ” மீண்டும் எதிர்புறம் திரும்பி பார்த்தான்.
“முன்னாடி எல்லாம் டான்னு எட்டு மணிக்கு வருவா. இப்போ ரொம்ப வாலுத்தனம் பண்ண ஆரம்பிச்சிட்டா. ” டென்ஷனாய் மணியை பார்த்து விட்டு,
” நைட் சரியா தூங்குறதும் இல்ல. அதான் காலையில லேட் ஆகிறது. காக்க வைக்குறதே வேலையா போச்சு…, சே., ” உச்சபட்ச எரிச்சலில் கத்தி கொண்டிருக்க, அவன் தேவதையின் வருகை கண்ணில் தெரிந்ததும் அத்தனையும் மறந்து விட்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
அவனுக்கும் மிகவும் பிடித்த இள நீல வர்ண அனார்கலியில், தழைய தழைய பின்னிய கூந்தலில் மல்லிகை சரம் தொங்க, சற்றே பெரிய ஜிமிக்கி காதில் அசைந்தாட, வெண்சங்கு கழுத்தில் ஒற்றை நீள சங்கிலி ஆடையில் மறைக்கப்பட்டும், அழகாய் நடந்து வர ,அவளின் விழிகளின் அபிநயத்தில் மெய் மறந்து நின்றவன், எப்போதும் போல பார்வையாலே அவளை கபளீகரம் செய்தான். ரிசெப்சன் உள்ளே வந்தவுடன், குட் மோர்னிங் மேம் என்றவர்களுக்கு பதில் வணக்கம் கூறியபடி கன்னியவள் உள் நுழைந்தாள்.
இந்த இரண்டு வருடத்தில் நிறைய மாற்றங்கள் அவளிடம். பார்த்தவுடன் கண்ணியம் தரும் தோற்றம், மிடுக்கான நடை, அதிர்ந்து பேசாமல் அதட்டும் பண்பு, உதவி செய்யும் குணம் இன்னும் அதிகமாய் என மொத்தமாய் உருமாறி நின்றிருந்தாள். படித்து முடித்தவுடன் முழு நேரமும் ஹாஸ்பிடலிலேயே இருக்க ஆரம்பித்து விட்டாள். அட்மினிசேசன் பணிகளோடு, அவர்களுக்கான தனி அறையில், மிடுக்காய் அமர்ந்து கன்சல்டிங் தனியே பார்க்கவும் துவங்கி விட்டாள்.
தேடி தேடி போய் உதவி செய்தவளை, மக்களே தேடி வர ஆரம்பித்து விட்டனர். அவளின் பக்குவப்பட்ட பேச்சுக்கள் பலரின் மனதை மாற்றி, வாழ்க்கையை சீராக்க, வாய்வழி செய்தி மூலமே, மனநல சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இவளை நாடி வருகின்றனர். நித்தமும் ஒரு பள்ளியில் அவர்களே கூப்பிட்டு, இரண்டு மணிநேரம் கவுன்சிலிங் கொடுக்கும் அளவிற்கு செல்வாக்குடன் திகழ்கிறாள். ரவியும், ஆரவ்வும் அவளுக்கு பக்கபலமாய் இருக்க அனைத்தையும் துணிச்சலுடன் செய்து முடிக்கிறாள்.
தன்னவளை பற்றிய பெருமையை எண்ணி முகம் மலர்ந்தவன், மேஜையில் கைகளை ஊன்றி அதன் நுனியில் தன் முகத்தை முட்டு கொடுத்து அமர்ந்து இருந்தான். அவளின் ஓவ்வொரு அசைவையும் கண்ணிமைக்காமல் ரசித்த வண்ணம் இருந்தான். அறையில் நுழைந்தவளோ, எப்போதும் போல கப்போர்ட்டில் இருந்த மீனாட்சி சிலையை சுத்தம் செய்து, மல்லிகை மலர் சூடி, விளக்கேற்றி, கண் மூடி வணங்கினாள்.
” பாருடா, மேடம் பக்தி பரவசத்துல எங்க அம்மாவையே ஓவர்டெக் பண்ணிட்டு போறாங்க.” கிண்டலாய் சொல்ல
அதற்கு எதிர்புறமாய் சற்று தள்ளி இருந்த கப்போர்டு அருகே சென்றவளோ, அதை சாவியின் மூலம் திறந்து உள்ளிருந்து அவன் வாங்கிய தங்க பதக்கத்தை கையில் எடுத்து, அதை கைகளால் வருடி, ஆசையாய் தொட்டு பார்த்து முத்தம் கொடுக்க,
” நான் இங்கே கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கேன். எனக்கு கொடுக்கிறாளா? ஹ்ம்ம்., கண்டுக்க மாட்டேன்கிறாளே.., என கவுண்டர் கொடுக்க.
விழியுயர்த்தி பார்த்தவள் மெல்லிய சிரிப்பினை உதிர்த்து விட்டு, புன்னகை முகமாய் தங்கள் அறைக்கு சென்றாள். அவள் போகும் வழி பாதையிலே அவனின் கருவிழியும் பின் தொடர்ந்து சென்றது. கவுண்டரில் சென்று அன்றைய கணக்குகளை மேற்பார்வை பார்த்து, சில வேலைகளை செய்ய சொல்லியும் தங்கள் அறைக்கு சென்றாள்.
” ரெண்டு வருசமா பார்த்தாலும் டெய்லி புதுசா பார்க்குற மாதிரியே பீல் ஆகுதே, இவளை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே, கடவுளே!., திரும்பி பார்குறாளா பாரு., ” உஷ்ண பெருமூச்சு விட.,
சேரில் சென்று கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு, புருவம் உயர்த்தி அவனை நோக்கி விட்டு,
” டேய் புருஷா!.. பொழுதுக்கும் இப்படி சைட் அடிக்கிற வேலையை மட்டும் பார்க்குறியே, நீ திருந்தவே மாட்டியா ” நக்கல் செய்ய,
” நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்..,”
மெல்லிய குரலில் அவன் பாட,
சற்றே சரிந்து அமர்ந்து முகவாயை கையை ஊண்றி, அவனை இமைக்காமல் பார்த்த படியே
” பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற, பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க
கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன்
பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்.., “
பாடி முடித்தவளும் புருவம் தூக்கி காட்டி, இமையாலே சிரித்து, விரிந்த இதழ்களில் பல் வரிசை மின்னிட சிரிக்க,
” இன்னைக்கும் கவுத்துட்டா., அவ்வளவுதான், நான் அம்பேல்..,” என்றவன் ” யேய்!, நில்லு., டைம் ஆகல,” வாட்ச்சை பார்த்து விட்டு, ” ஐயோ அதுக்குள்ள பத்து மணியாச்சே ., இனி படுத்தி எடுப்பாளே! ஏய் நில்லுடி !, எந்திரிக்காதே!, உட்காருன்னு சொல்றேன்ல, “அவன் சொல்லி கொண்டே இருக்க, எதை பற்றியும் கவலைப்படாமல் ” வேலையே பதி!, கடமையே கட்டுன புருஷன்! என எந்திரித்தவள் மெதுவே நடந்து வர.,
” ப்ளீஸ்மா, என் செல்லம்ல, பட்டு குட்டி!, லட்டு குட்டி!, அம்மு குட்டி!, பொம்மு குட்டி!, வைரக்கட்டி!, ” என எத்தனை கொஞ்சி பேசினாலும் அதை காதிலேயே வாங்காமல் எழுந்து வந்தவளோ, அவன் அருகில் வந்து நின்று இமை சிமிட்டாது பார்க்க, பார்த்தபடியே நின்றனர் . சிறிது நொடி. பின் சட்டென்று சுயம் பெற்றவளோ, மெதுவே முகத்தின் அருகே கையை எடுத்து சென்று, நெற்றி, புருவம், இமைகள், நாசி, இதழ், கழுத்து என ஒவ்வொன்றையும் மெதுவே வருடி கடந்து வந்தவள் அவன் நெஞ்சை தொட்டு, அழுத்தி ” இந்த இதயம் துடிப்பது எனக்காக தான்” சிரித்த படி கூறியவள் செய்கையில் சிரிப்பு வந்தவனோ மலர்ந்து சிரிக்க, கன்னத்திலே அழகாய் குழி விழுந்தது.. குழியில் கையை அழுத்தி வைத்தவள், ” போடா! டைமாச்சு..,” என்க.
“முடியாது!” என தர்க்கம் செய்தான்.
” நான் உன் பேச்சை எல்லாம் கேக்க மாட்டேன், கிளம்பு, கிளம்பு காத்து வரட்டும், என்றபடியே பின்னோக்கி நகர
” போகாதே! சொல்றேன்ல, டென்ஷன் பண்ணாத, இருடி! ” என கத்தியவனை அலட்சியம் செய்து ” போய் உங்க வேலையை பாருங்க சார்., போங்க போங்க., ” கூறியவளை பார்த்து கொண்டே நின்றான்.
error: Content is protected !!