Skip to content
Post Views: 8,310
‘எப்படிப்பட்ட மனிதன் இவன்..!!! தன் தேவை.. தன் சுகம் தான் முக்கியம்.. என எண்ணும் ஆண்களுக்கு மத்தியில்,
தன்னை சுற்றியுள்ளவர்களை கவனத்தில் வைத்து ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படும் அவனின் இந்த நடத்தை..
Advertisement
இதை விட வேறு.. என்ன வேண்டும் எனக்கு..?’ என நினைத்தவள்,
கண்களில் காதல் மின்ன.. ஆசையாய் அவனை அணைத்து.. அவனின் நெற்றியில் அச்சாரமிட்டு, “சாரி.. உங்கள புருஞ்சுக்காம நானும்.. ரியல்லி சாரிங்க..” என சொல்ல அவனும் அவளை ஆசையாய் தழுவிக்கொண்டான்.
Advertisement
Advertisement
காமம் இல்லா.. காதல் மட்டுமே ஆட்சி செய்த அந்த அணைப்பில் இருவருமே மெய் மறந்து போயினர்.. சிறிது நேரம்.
எவ்வளவு நேரம் நீடித்ததோ இந்த நிலை.
Advertisement
“அக்கா.. எங்கிருக்கே..?” என்றபடி உள்ளே வந்த சம்யுக்தாவின் குரலில் அவசரமாக அவளை விட்டு விலகியவன்,
அதே வேகத்தில் அவளையும் இறக்கி நிறுத்திவிட்டு அவளின் காதருகே குனிந்து,
“பேஸ் வாஷ்.. பண்ணிட்டு உன்னை சரி பண்ணு. உன் ட்ரஸ் நடந்ததை அப்பட்டமா காட்டி கொடுத்திடும் போல.. அப்புறம் பேபி கேட்கறதுக்கு பதில் சொல்ல முடியாது..” என்றுவிட்டு,
“வா.. பேபி..” என இயல்பாக சம்யுக்தாவை வரவேற்றபடி ஹாலுக்கு சென்றான்.
அதற்குள் அவள் முகுந்த் அருகே சென்று அமர்ந்திருக்க, “மாமா.. அக்கா எங்கே..?” என்றாள் அவனை திரும்பி பார்த்து.
“கிட்சன்லடா.. நானும் ஹெல்ப் பண்ண போனேன்.. இப்ப வருவா..” என நாசுக்காக,
இருவரும் ஒரே இடத்தில் இருந்ததற்கான காரணத்தை விளக்கினான்.
‘ஆயிரம் இருந்தாலும் அவளின் வயதை வைத்து.. தாங்களும் சரியாக இருக்க வேண்டுமே..’ என்ற எண்ணத்தால் வந்த தெளிவு அதில்.
“வா.. சம்யூ..” என புன்னகையோடு வந்த அக்காவை கண்டு,
“உங்க பையன் எழுந்தாச்சு.. இன்னும் அந்த சிலுப்பிக்கு தூக்கம் தெளியலையோ..?” என்றாள் சிரிப்போடு.
“நானும் கேட்கனுமுன்னு நினைச்சேன்..பேபி. அது என்ன அவள சிலுப்பின்னு சொல்றே..! என்ன ரிஷன்..?” என்றான் ரியான் அறிந்து கொள்ளும் ஆவலில்.
“அதுவா மாமா.. இருங்க காட்டறேன்..” என்றவள்,
தனது போனை எடுத்து எதையோ செய்துவிட்டு.. தன்னை பின்தொடருமாறு சைகை காட்டிவிட்டு வெண்பா இருந்த அறைக்குள் சம்யுக்தா நுழைய,
அவளை பின்தொடர்ந்து ரியானும், முகுந்தும் ஆர்வமாக செல்ல..
‘என்ன நடக்கும்..?’ என்பது தெரிந்ததால் இனியாள் தனது வேலையை முடித்துவிடும் நோக்கில் கிட்சனுக்கு சென்றாள்.
அறைக்குள் வந்ததும் சம்யுக்தா தனது போனிலிருந்து, “தங்கலான்..” படத்தின், “அன்னக்கிளி..” பாடல் ஒளிக்க வைக்க,
முதல் சில வரிகளுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாத வெண்பா.. “சிலுப்பி.. சிலுப்பி..” என வரிகள் வரும் போது அவளின் கை கால்கள் தாளத்திற்கு ஏற்ப ஆடத்தொடங்க அப்படி ஒரு சிரிப்பு அவளை பெற்ற தந்தைக்கு.
அதில் தன் மகளின் சேட்டையும் புரிய அவளை அள்ளி முத்தாட கை கால்கள் பரபரத்தது.
அதை பார்த்த முகுந்தும் சிரிக்க அந்த சிரிப்பு சத்தத்தில் லேசாக விழிகளை திறந்தாள் வெண்பா.
அங்கிருந்தவர்களை கண்டு அவளுக்கு வெக்கம் வர போர்வையை எடுத்து தன்னை மூடிக்கொண்டது அந்த வாண்டும்.
“அச்சுக்குட்டீ..!!” என்ற கொஞ்சலோடு அவளை அப்படியே அள்ளிக்கொண்டான் அவளின் தந்தை.
முகுந்த் எப்போது அமைதி தான்.
ஒருவேளை அவனும் சாதாரண முறையில் வெளி உலகத்தோடு இணைந்திருந்தால்.. வெண்பா போல இருந்திருப்பானோ.. என்னவோ..!
அவன் விவரம் தெரியும் வரை.. அவனின் வாசம் மருத்துவமனையே..!
அவனின் உடலும், அவனை இதெல்லாம் செய்ய அனுமதிக்காதே..!
அதனால் இது போன்ற பிள்ளை குறும்பை.. சேட்டையை.. அந்த தந்தை இழந்து இருந்தானே இதுவரை..!!
அதை, அந்த ஏக்கத்தை.. தன் மகள் தீர்த்து வைக்க அவளை கொண்டாடி தீர்த்தான் இன்பமாய்.
இவர்கள் கலாட்டாக்கு மத்தியில், இனியாளும் வேலை முடித்து வந்திருக்க அங்கு நடந்ததை சிறு புன்னகையோடு ரசித்திருந்தாள்.
பின் அனைவரையும் சாப்பிட அழைத்தவள், “என்ன சம்யூம்மா.. வேலைக்கு போகாம இன்னும் இங்கே இருக்கே..?” என்று கேட்க,
“அந்த தாய்க்கிழவி இன்னும் சமைக்கவே இல்ல.. எப்படி போக வேலைக்கு..?
அதான் கட் அடிக்கலாமுன்னு ஐடியா பண்ணி.. மாமாவ தாஜா பண்ண வந்துட்டேன்..” என ஒற்றை கண்ணை சிமிட்டி அவள் சொல்ல,
இனியாள் ஒரு புறமும், ரியான் ஒரு புறமும் அவளின் காதை திருக, வெண்பாவுக்கு ஒரே கொண்டாட்டம்.
அவளுக்கு எப்போதும் போட்டி அவளின் சித்தா தானே..!
அதனால், “அப்பா.. சித்தாவ நல்லா அடி..” என்றாள் கைகளை தட்டி உற்சாகமாக.
“அடிங்க.. உனக்கு சப்போட்டுக்கு ஆள் வந்ததும்.. இந்த சித்தாவ அடிக்க சொல்லறே..?
அடியே சிலுப்பி.. ஆயிரம் இருந்தாலும்.. இந்த சித்தா தயவு உனக்கு எப்பவும் வேணும் டீ..” என்றாள் அக்கா மாமா கரங்களிலிருந்து விடுபட போராடியவளாக.
“எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்.. தனம்மாவ தாய்கிழவின்னு சொல்லாதேன்னு..” என இனியாள் கண்டிக்க,
“வேலைக்கு ஓப்பி அடிக்க என்னையே கூட்டு சேர்க்கற..!
உன்னை நம்பி இந்த வருஷம் டாப் டென்ல.. நம்ம கம்பெனி வந்திடுமுன்னு.. சந்தீப்கிட்ட பெட் கட்டியிருக்கேன்.. அதெல்லாம் வீணா..?” என ரியான் சொல்ல,
கொஞ்ச நேரம் அழகிய கலாட்டா தொடர்ந்தது.
“அக்கா பசிக்குது..” என சம்யுக்தா தனது வயிற்றை தடவ,
அவளை விட்டு விலகிய இருவரும், “வாடா.. சாப்பிடலாம்..” என பொறுப்பின் திலகங்கலாக மாற,
தன் கண்ணை சிமிட்டி, “எப்படி எஸ்கேப் ஆனேன் பாருங்க..!” என பழிப்பு காட்டினாள் அந்த சுட்டி பெண்.
சிரிப்போடு அனைவரும் உணவு உண்ண அமர, “ஆமா.. அதென்ன சித்தா..?
அதுக்கும் கதை இருக்கோ..?” என்றான் ரியான் தன் இருபிள்ளைகளோடு இனியாளுக்கும் முதல் வாய் எடுத்து கொடுத்தபடி.
“ம்ம்.. இருக்கு மாமா..” என்றாள் வாயில் பூரியை வைத்து மென்ற படி.
“அதென்ன கதை..?” என ஆர்வமானான் ரியான்.
“ஆரம்பத்துல அக்கா கூப்பிடறத பாத்து ‘சாமூ..’ ன்னு கூப்பிட்டு இருந்தா..
சித்தான்னு ஒரு மூவி வந்துச்சே. அதுல வர்ற, ‘உனக்கு தான்..’ சாங் வருமே.. அதை அக்கா ப்ளே பண்ணியிருக்கா பொட்டிக்ல.
அதுல இருந்து மேடம் பேவரேட்ல அதும் சேர்ந்திடுச்சு.
சித்தா மூவி சாங்ன்னு நாங்க பேசினதுல, மேடத்துக்கு சித்தா பேர் நல்லா நினைவுல இருக்க.. ஒரு நாள் நைட் திடீர்ன்னு சித்தான்னா என்னன்னு கேட்டா..
சித்தப்பாவோட ஷார்ட் ஃபார்ம்.. அப்பாவோட தம்பிய அப்படி சொல்வாங்கன்னு சொல்ல போய், அப்பா எங்கேன்னு கேட்டுட்டா.. என்ன பண்ணறதுன்னு அக்கா,
கூட பிறந்தவங்கள அப்படி சொல்வாங்கன்னு பொதுவா சொல்ல,
கூட பிறந்தவங்கன்னான்னு அடுத்த கேள்வி..
அதை எப்படி சமாளிக்கன்னு தெரியாம, இப்போ நானும் சம்யூவும் மாதிரின்னு சொல்ல..
அப்போ இவ எனக்கு சித்தாவான்னு ஆரம்பிச்சு அப்படியே கூப்பிட பழகிட்டா..
நாங்களும் விளக்கம் சொல்லும் நிலையில இல்லையே..!
சோ, அவளுக்கா புரியற வயசுல மாத்திக்கட்டுமுன்னு விட்டாச்சு..” என அவள் இயல்பாய் சொல்ல,
அதுவரை புன்னகையோடு கேட்டிருந்தவனின் முகம் நொடியில் கலையிழந்து போனது.
அதை உணர்ந்த இனியாள், மெல்ல அவனின் கரத்தின் மீது தன் கரத்தை பதித்து அழுத்த,
அவளை கண்டு வலியோடு புன்னகைத்தவன், “விழியாலேயே.. என் மகளை பற்றி எதுவுமே தெரியவில்லை.. என்பது சரி தானே..?’ என வினவ,
‘ஆம்..’ என தலையசைத்தவளுக்கு,
‘அவரின் எண்ணம் போல பிள்ளைகளை கொண்டு கொஞ்சம் இடைவெளி இருவருக்கும் புரிதல் உண்டாகும் வரை தேவை..’ என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள்.
error: Content is protected !!