“ஹா ஹா இப்போ புரியுதா ஏன் சிரிச்சேன்னு.. என்னா ஒரு ஸ்டைல்..” என்றவன் மேலும் கிண்டலடிக்க, லஷ்மி இன்னும் அவனுள் ஒண்டிக்கொள்ள, ஈசனுக்கோ இன்னும் புன்னகை விரிந்தது…
லட்சுமி அப்படியே அவன் மீது சாய்ந்தபடி நின்றிருக்க, ஈசனின் கரங்களும் அவளை அணைத்தபடி இருக்க, கொஞ்ச நேரம் அமைதியாகவே அவர்களின் கொஞ்சல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்க, ஈசன் முழுக்க முழுக்க, சமாதானம் ஆகிவிட்டான் என்று தெரிந்ததும், லட்சுமி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நாளைக்கு போய் அனிதா வீட்ல எந்த பிரச்னையும் பண்ணக்கூடாது மாமா…” என்றாள் இறைஞ்சலாய்..
அவள் முகத்தில் இருந்த பாவனைக் கண்டு, “ம்ம்ம்..” என்றான் அமைதியாய். என்ன இருந்தாலும் இதை அப்படியே சும்மா விட அவனுக்கு மனதில்லை.
“என்ன மாமா ம்ம்ம்.. ப்ளீஸ்.. இப்போவே அவ பயந்திருப்பா. சோ நம்மளும் விட்டுடலாம்.. நம்ம திரும்ப ஏதாவது பேசினாதான் பிரச்சனை பெரிசாகும்.. அவ லைஃப் அவ வாழட்டும்.. ஆனா இப்போ அடுத்து ஒவ்வொரு நிமிசமும் அவளுக்கு பயமிருக்கும், நம்ம எதுவும் செய்வோமான்னு. அந்த பயமே நம்ம பக்கம் அவளை வர விடாது மாமா..”
“ஹ்ம்ம் பரவாயில்லையே.. என் லஷ்மி கூட இப்படியெல்லாம் யோசிக்கிறாளே…” என்றவன், “நீ சொல்றதுனால இதை இப்போ விடுறேன்.. ஆனா அடுத்து ஏதாவதுன்னா நான் சும்மாயிருக்க மாட்டேன்..” என்றான்.
“பின்ன.. எவ்வளோ பெரிய வேலை.. உங்களை சமாதானம் பண்றக்குள்ள.. யப்பா…” என்று வேண்டுமென்றே சோம்பல் முறிக்க,
“ஹ்ம்ம் அவளைப் போகவிட்டு என்கிட்ட வந்து ஜம்பம் பேசு…” என்றான் அவனும்.
“என் ஈஸ் மாமா எனக்கூட இருக்கிறப்போ அவக்கிட்ட நான் ஏன் சண்டை போடணும்.. அவ்வளோ வொர்த் இல்லையே…” என்று சொல்லி சிரித்தவளை வேகமாய் இழுத்து அணைத்துக்கொண்டான்..
“ஹ்ம்ம் இது தான் டி வேணும்.. என்ன நடந்தாலும் ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை இருக்கணும்…”
“அதெல்லாம் நிறையா இருக்கு.. இப்போ டயர்டா இருக்கு..” என்றவள் அவன் அணைப்பிற்குள்ளேயே உறங்கிவிட்டாள்.
ஆனால் ஈசனோ உறங்கும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.. ஆனால் சிறிது நேரத்திற்கு முன்னால் தவித்துத்தான் போனான். எங்கே மறுபடியும்லட்சுமி வேறுவிதமாய் யோசித்துவிடுவாளோ என்று. அப்படியெல்லாம் நடந்திருந்தால் நிச்சயம் அனிதாவை சும்மாவே விட்டிருக்கமாட்டான்.. ஆனால் இப்போது லட்சுமியும் அமைதியாகி அவன் மனதையும் குளிர்வித்துவிட, அந்த இதமே அவனை உறங்கவிடாமல் செய்தது.
“லஷ்மி…” என்று அவனே சொல்லிக்கொண்டவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளிடம் இன்னும் நெருக்கமாக ஓட்டிக்கொண்டு உறங்க முயற்சிக்க, கொஞ்ச நேரத்தில் ஈசனுக்கும் ஆழ்ந்த உறக்கம் தழுவியது..
லட்சுமி சொன்னது முற்றிலும் உண்மைதான்.. கணவனிடம் வந்து பேசட்டுமா என்றதுமே அனிதாவின் மனதில் ஒரு பயம் கவ்வியது நிஜம்தான்.. அப்படியொன்று மட்டும் நடந்தால் அவள் வாழ்வு என்னாவது. சூப்பர் மார்க்கட்டில் இருந்து கிளம்பிப் போனவளுக்கு மனம் ஒரு நிம்மதியில் இல்லை..
அவளது மனசாட்சியோ ‘உனக்கு இதெல்லாம் தேவையா.. தேடி போய் பிரச்சனை பண்ணனும் நினைச்சா இப்படிததான் இனிமேலாவது ஒழுங்கா இரு..’ என்று சொல்ல,
அவளுக்கு மனம் அடங்கவில்லை.. கண்டிப்பாய் இந்த விசயம் ஈசனுக்குத் தெரிந்தால் நிச்சயம் அவன் ஏதாவது செய்வான் என்று தோன்ற, இரவெல்லாம் உறக்கம் வரவில்லை.. இன்னும் ஒரேநாள் தான். கிளம்பிவிடுவாள். ஆனால் அதுவரைக்கும் எதுவும் ஆகக் கூடாதே என்றிருக்க, விடிந்த பிறகோ உள்ளே நடுங்கிக்கொண்டு இருந்தாள்.
அவள் கணவன் கூட கேட்டுவிட்டான் ஏன் இப்படி இருக்கிறாய் என்று.. அவளால் ஒன்றும் சொல்ல முடியாமல் போக, தான் முட்டாள்த் தனமாக நடந்தது புரிய, இத்தனை நேரம் ஈசனுக்கு இது தெரியாமல் போயிருக்குமா என்றும் தோன்ற, ஊருக்கு கிளம்பும் நொடி வரை அவளால் இந்த தவிப்பை தாங்க முடியும் போல் தெரியவில்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், ஒரு முடிவெடுத்தவளாய், மீண்டும் சூப்பர் மார்கெட் சென்றாள். அவள் எதிர்பார்த்தது போலவே லட்சுமி தான் அங்கே உள்ளறையில் இருந்தாள்.
நேராய் உள்ளே வந்தவளோ, “ரொம்ப ரொம்ப சாரி.. நான் முதல்ல இங்க வந்திருக்க கூடாது.. ஆனா லூசு மாதிரி பண்ணிட்டேன்.. ப்ளீஸ்.. என் லைஃப்ல எந்த பிரச்னையும் பண்ணிடவேணாம்..” என, லட்சுமிக்கு இது ஆச்சர்யம் தான். அட விட்ட டோஸில் ஒரே நாளில் இப்படியாகி போனாளே என்று..
ஒன்றும் சொல்லாமல் பார்க்க, “என்.. என்ன?? அப்படி பாக்குறீங்க.. நிஜமாதான் சொல்றேன்.. நான் சாரி கேட்கனும்னு தான் வந்தேன்.. ஈ.. ஈசன் கிட்ட சொல்லிடுங்க.. எனக்குத் தெரியும், நேத்து நான் பேசினது எல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நேரா எங்க வீட்டுக்கே வந்து எதுவும்…” எனும்போதே,
“போதும்.. இனி பேச எதுவுமேயில்லை.. நீங்க எங்க லைஃப்ல குறுக்கிடாத வரைக்கும் எங்கனால எந்த பிரச்னையும் வராது.. தைரியமா கிளம்பிப் போங்க….” என்று லட்சுமி சொல்ல, அனிதாவிற்கு அவள் சொல்வதை எந்தளவு நம்பலாம் என்று தெரியாததால், சந்தேகமாய் பார்க்க,
“நம்ப முடியலையா.. நேத்து நீங்க பேசின எல்லாமே ஈஸ் மாமாக்கு தெரியும்.. ஆனா இப்போ வரைக்கும் அமைதியா தானே இருக்கார்.. இதே அமைதி இனிமேயும் இருக்கணும்னா அது நீங்க நடந்துக்கிறத பொருத்து தான்..” என்றாள்.
“ம்ம் ரொம்ப தேங்க்ஸ்… நான் பண்ணது தப்புதான்…” என்றாள் அனிதா உணர்ந்து..
லட்சுமிக்கும் அனிதா உணர்ந்துவிட்டாள் என்று புரிய, “அப்போ சரி.. உங்க வாழ்கைய மட்டும் நினைச்சு வாழப் பாருங்க..” என அனிதாவும் சரி என்று மட்டும் சொல்லி கிளம்பிவிட்டாள்.
இப்போது தான் லட்சுமிக்கும் முழு நிம்மதி கிட்டியது. அனிதா என்ன நினைத்து இதெல்லாம் செய்தாலோ ஆனால் அவள் செய்ததின் பலன், முழுக்க முழுக்க ஈசனின் மனதை லட்சுமி அவளுக்குச் சொந்தமாய் மாற்றிக்கொண்டாள்.
நிம்மதியாய் பெருமூச்சு விட, சரியாய் பாலாவிடம் இருந்து அழைப்பு வந்தது….
“லச்சு மதினி…” என்றழைக்க, “டேய்…” என்று பல்லைக் கடித்தாள்..
“சரி பாலா.. நான் சொன்னதெல்லாம் சரிதான..??” என்றாள் ஆர்வமாய்,
“யம்மா காதல் கிளி.. உன்ற மாமா அல்ரடி மயங்கித்தான் இருக்கார்.. அதுனால இந்த ஐடியா போதும்.. வீட்ல இருக்கவங்க சொதப்பாம பார்த்துக்கோ..”
“அடேங்கப்பா.. இரு எனக்கும் டைம் வரும்.. அப்போ பார்த்துக்கிறேன்..”
“உன் டைம் தான் அல்ரடி அமோகமா இருக்கே.. அப்புறமென்ன…”
“போடா டேய் கண்ணு வைக்காத.. சரி கேமெரா எல்லாம் எடுத்துட்டு வர்ற தான.. மறக்கலைல.”
“யம்மா நீ போன வை.. தெரியாம உனக்கு பண்ணிட்டேன்.. எல்லாம் எடுத்து வச்சாச்சு…. பை…” என்று துண்டித்துவிட, லட்சுமியும் சிரிப்புடனே வைத்துவிட்டாள்.
நாளை வரும் அந்த நாளுக்காக கிட்டத்தட்ட ஒருமாதமாய் காத்திருக்கிறாள்.. யப்பா இந்த நாளை எதிர்கொள்ள, எத்தனை விசயங்களை தாண்டி வந்தாகவேண்டி இருந்தது. ஈசனுக்காக எல்லாம் என்று நினைக்கையில், அவனே அழைத்தான் “லஷ்மி… நான் மதுரைக்கு போறேன்.. வர நைட் ஆகும்…” என்று
“நைட்டாகுமா…???!!!”
“ஏன் டி?? அங்க ஸ்கூல் விசயமா ஒருத்தர பார்க்கணும்..”
“ஓ.. சரி மாமா போயிட்டு வாங்க.. பத்து மணிக்குள்ள வந்திடுவீங்களா” என, என்றுமில்லாத திருநாளாய் இத்தனை கேள்விகள் கேட்கிறாளே என்று ஈசனுக்குத் தோன்ற, “லஷ்மி எதுவும் விசயமா??” என்றான்.
“இல்ல இல்ல.. நீங்க போய்ட்டு வாங்க மாமா…” என, சரியென்று ஈசனும் கிளம்பிவிட்டான்..
நாளை வரும் அந்த நாளை எண்ணி அவளுக்கு முகத்தில் இருந்த சிரிப்பு மறையவில்லை. அப்படியே நிலைத்துவிட, “ஈஸ் மாமா…. (Ambien) ” என்று ஆசையாய் சொல்லிக்கொண்டாள்.