Loading...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 21(இறுதி அத்தியாயம்)

உயிரே 21    இரவெல்லாம் தூங்காமல் பொழுதை வரவேற்ற காத்தவராயன், கசந்த மனதோடு அமர்ந்திருக்க, தந்தையைப் பார்க்க வந்த தாமரை எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் காசியும் அவர்களோடு நின்றுகொண்டு, தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்துக் கவலை கொண்டிருந்தார்.    “என்னப்பா, முடிவு பண்ணி இருக்கீங்க?”   “அவங்கதான் முடிவு பண்ணிட்டாங்களே!”   “இன்னொரு தடவை பேசிப் பார்க்கலாமா?”   “எந்தப் பிரயோஜனமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.”   […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 20

உயிரே 20    அதிகாரமே இவன் மொழியாக இருக்க, அதை ஒத்துக் கொள்ள மறுத்தவள் விலகப் பார்த்தாள். சிறிது கூட இடம் கொடுக்காமல் அவள் பங்கிற்கும் சேர்த்துத் தானே அணைத்து முத்தத்தை வாரி வழங்கியவன்,    “எங்கயும் போக வேண்டாம். உன்னை நான் எங்கயும் அனுப்ப மாட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது. என்னை விட்டுப் பிரியணும்னு, நீ இப்ப முடிவெடுத்து இருக்கக்கூடாது. நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்திருக்கணும். என் பொண்டாட்டி ஆனதுக்கப்புறம் எல்லாமே என்னோட உரிமை. […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 19

உயிரே 19   அடிக்கும் காற்றை நிறுத்தும் வல்லமை, அசாத்தியச் சக்திகளுக்கும் இல்லை. என்ன இழப்பு நேர்ந்திட்ட போதிலும், அடிக்கும் காற்று அடித்துக் கொண்டுதான் இருக்கும். அளவு கடந்த மகிழ்வில் எப்போதாவது அதிகமாக ஆடிவிட்டு, ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை ஆட்டிப் பார்க்கும். அப்படியான நிலையில் தான் இருக்கிறான் இந்தக் கதையின் நாயகன்.    எதற்காக இங்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு, அவன் இஷ்டத்திற்கு அவளை வளைக்க நினைக்க, புத்தி இல்லாது செய்த தவறுக்காக அவனைத் தேட […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 18

உயிரே 18   கதவைத் திறந்த தாமரைக்கு நெஞ்சே அடைத்தது. விடிந்தும், விடியாததுமாய் வந்து நிற்கும் மகனைக் கண்டு உறைந்து நின்றார். அன்னையின் அதிர்வதற்குப் பெரிதான பாவனைகளைக் கொடுக்காமல்,    “எப்பம்மா வழிய விடுவ?” என்று கேட்டான்.    “விழியா…”   “சொல்லுமா.”   “என்னடா, இப்படிச் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற”   “ஏன், வரக்கூடாதா?”   “டேய்… திடீர்னு வந்து நிக்கிற. உடம்புக்கு ஏதாச்சும் முடியலையான்னு கேட்டேன்.”    “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. உங்களைப் […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 17

உயிரே 17   “எந்திரிடா…”   கேட்ட ஓசைக்குப் பதில் கொடுக்க விழி திறப்பதற்கு முன்னால், அவன் மேனியை மூடி இருந்த போர்வையை விலக்கிய மைதிலி,    “உனக்கு என்ன, நான் அலாரமா? டெய்லி எந்திரிக்கத் தெரியாதா உனக்கு. என்னமோ பச்சைக் குழந்தை ஆழ்ந்து தூங்குற மாதிரி, தினம் என்னை எழுப்பி விடச் சொல்லி அனுப்பி வைக்கிறாங்க.” என்ற தங்கையின் முகத்தில் தான் விழித்தான்.    நிலத்தின் வளத்தால், விதை போட்டதுமே கண்ணிமைக்கும் நேரத்தில் வளர்ந்து விடும் […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 16

உயிரே 16   கோபம் தணியாது தூக்கத்தில் இருந்தவன் பின் முதுகை, யாரோ பலமாக அடித்தார்கள். பொறுக்க முடியாத வலியில் எழுந்தமர்ந்தவன் விழிகள், நின்றிருக்கும் தாமரையைக் கண்டு அகண்டு விரிந்தது. எழுவதற்கு முன்னால் அடித்த அடியை விடப் பல மடங்கு பலத்தைக் கூட்டி அவன் தோளில் ஒன்று வைத்தவர்,    “ஏன்டா, அவளை அடிச்சிருக்க?” கேட்டார்.    நேற்று, தான் அடித்ததை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி இரவோடு இரவாக வர வைத்திருப்பதாக எண்ணியவன், “அவள…” என எழுந்து […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 15

உயிரே 15   அன்று நடந்த சம்பவத்திற்குப் பின், இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் குறைந்தது. போதுமென்றவரை தனிமை சொந்தம் கொண்டாடியது. விடுமுறை தினத்தில் கூட, வாய் பேசாத தம்பதிகளாக மட்டுமே தங்கள் நாள்களைக் கடத்தினார்கள். யாராவது ஒருவர் கோபத்தில் விலகினால், மற்றொருவர் சேர்த்துப் பிடிப்பதே இருவருக்குள்ளும் இருந்த ஒரே நல்ல விஷயம்.    அதுவும் கெட்டுப் போய் இரு வாரங்களுக்கு மேல் ஆகிறது. காலை எழுந்து மனைவியாகச் சமைத்து, தன் கடமையை அவன் கையில் கொடுப்பவள் […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 14

உயிரே 14   தாலி கட்டிய முதல் நாள் போல் இப்போது இல்லை. இருவரும் சகஜமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். இருவருக்குள்ளும் கணவன், மனைவி உறவு அவ்வப்போது வந்து மறைந்தாலும், நல்ல நண்பர்களாகப் பயணத்தைத் தொடர்கிறார்கள். சண்டை மட்டும் ஓய்ந்த பாடில்லை. அவன் சிடுசிடுத்து வார்த்தையை விடுவதும், பதிலுக்குப் பதில் வார்த்தையை வீசி இவள் பழி வாங்குவதையும் விடத் தயாராக இல்லை.    கட்டியவள் மீதிருந்த எண்ணம் சிறிது மாறிவிட்டது விழியனுக்கு. அவனும் இதைத்தான் எதிர்பார்த்தான். பெரும்பாலும் […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 13

உயிரே 13    குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டிருந்தவன் நாசியை எதுவோ தொந்தரவு செய்தது. முதலில் அதைச் சரியாகக் கவனிக்காதவன், மூக்கைச் சுருக்கி அந்த வாசத்தை நுகர்ந்து விட்டுச் சமையலறைக்கு ஓடினான். பாத்திரத்தில் இருந்த காய்கறிகள் அனைத்தும் கருகி, வீட்டையே புகைமண்டலமாக மாற்றிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் அறியாது பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள் சிலம்பழகி.   வேகமாகச் சென்று அடுப்பை நிறுத்தியவன், “ஏய், பக்கத்துல தான நின்னுட்டு இருக்க. கருகுற வாசனை வரல, என்னடி யோசிச்சிட்டு இருக்க?” […]

Readmore

உயிரே நீ விலகாதே -அத்தியாயம் 12

உயிரே 12   “எங்க இருக்க?”   “கீழ பார்க்ல.”   “அங்க என்ன பண்ற? உன்னத் தூங்கத்தான சொன்னேன்.”   “ரொம்ப போர் அடிக்குது விழியா. எவ்ளோ நேரம் படுத்தே இருக்குறது. நீயும் வேலை இருக்குன்னு ரூமுக்குள்ள போயிட்ட.”    இரண்டு நாள்களாக மனைவிக்காக விடுப்பு எடுத்தவனுக்கு, ஏகப்பட்ட வேலைகள். வீட்டிலிருந்தாவது அதைச் செய்து கொடுக்கும்படி நிர்வாகம் கோரிக்கை வைக்க, மதிய உணவை அவளோடு சேர்ந்து சமைத்து உண்டவன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டான். தொலைக்காட்சி, […]

Readmore
error: Content is protected !!