உயிரே 11 முழு உணவையும் ஊட்டி முடித்த பின்பு தான் அவளை விட்டு விலகினான். அவன் காட்டிய அக்கறையில் உள்ளம் உருகிப் போனவள் அவன் மீதான விழியை மட்டும் எடுக்கவில்லை. அதை உணர்ந்தாலும், பிடி கொடுக்காமல் காலித் தட்டோடு நகர்ந்தவன் கைப்பிடித்தாள். திரும்பாமல் அப்படியே மைவிழியன் இருக்க, “தேங்க்ஸ்!” என்றாள். அவ்வார்த்தைக்கு அவன் திரும்ப, “அன்னைக்கு நீ ரோட்ல விட்டுட்டுப் போனது ரொம்ப வலிச்சுது. வேற யாரு இதைப் பண்ணி இருந்தாலும், அவ்ளோ […]
Readmoreஉயிரே 10 எந்த அலங்காரங்களும் இல்லை அந்த முகத்தில். நேராகக் கோடு போட்டது போன்ற புருவத்தில் நீர்த்துளிகள் பட்டுக் கலைந்திருந்தது. நெற்றிக்கு நடுவில் வைத்த பொட்டு ஈரமாகி, அவளைப் போல் அழகாக இருந்தது. இமை முடிகள், கருங்கூந்தல் போல் துடைத்து விட ஆளில்லாமல், இன்னும் நனைந்த நிலையில் அப்படியே இருக்க, அவள் விழிகள் அழுத்தமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கருவிழிகளுக்குள் தன் உருவத்தைக் கண்டவன் மெய்சிலிர்த்து இன்னும் முகத்தை அவளை நோக்கி நகர்த்தினான். […]
Readmoreஉயிரே 9 “சாப்பிடு…” “வேண்டாம்.” “அட, சும்மா சாப்பிடு.” “வேண்டாம்னு சொல்றேன்ல.” “நீ சாப்பிடாம நான் எப்படிச் சாப்பிடுறது?” என்றதும் தாடைகள் முறுக்கேறும் அளவிற்குப் பல்லைக் கடித்து, “இது என்ன புதுசா?” என்று கேட்டாள். “இதுல புதுசு பழசுன்னு என்ன இருக்கு… பொண்டாட்டி சாப்பிடாம புருஷன் எப்படிச் சாப்பிடுறது?” “இப்ப எதுக்கு என்னை வெறுப்பேத்திட்டு இருக்க…” “என்ன சொல்லிட்டன்னு இவ்ளோ கோபப்படுற.” “விழியா…” […]
Readmoreஉயிரே 8 இருவருக்கும் புதுப் பொழுதானது இந்த விடியல். நேற்று வரை ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருந்தவனுக்குத் துணையோடு பிறந்த காலைப்பொழுது இவை. மஞ்சள் கயிற்றோடு, தனியாக ஒரு வீட்டில் குடும்பத் தலைவியாகச் சந்தித்த சூரிய உதயம் இது சிலம்புக்கு. முதலில் கண்விழித்தவள் நினைவில் நேற்று இரவு நடந்த சம்பவங்கள். அதனோடு சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தவள் அனைத்தையும் ஒரே மூச்சில் விரட்டி அடித்து விட்டு எழுந்தாள். சாற்றிய கதவு இப்போது திறந்திருந்தது. எட்டிப் பார்த்தவளுக்குத் […]
Readmoreஉயிரே 7 பஞ்சு மெத்தை இருவரையும் பதமாகப் பாதுகாத்தது. கீழே அவள் இருக்க, சுருட்டிக்கொண்டு மேலே விழுந்தவன் சுதாரித்து எழுவதற்குள் ஒரு வழி ஆக்கிவிட்டாள் கட்டியவள். அதில் திண்டாடிப் போனவன் எழ முடியாமல் அவளோடு உருண்டு புரண்டான். இந்த முறை சிலம்பழகி மேலிருக்க, அவளையும் தாங்கிக் கொண்டு மெத்தையில் படுத்திருந்தான் மைவிழியன். “டேய்!” “பிசாசே இருடி.” “விடுடா என்னை…” “அதைத் தான்டி நானும் பண்றேன்… வாய மூடிட்டுச் சும்மா இரு.” […]
Readmoreஉயிரே 6 “சரி!” ஆத்திரத்தில் பேசிக் கொண்டிருந்தவன் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அவளை ஏறிட, “என்ன பார்க்குற? இதுக்கு மேலயும் உன்கூட ஒண்ணா இருக்க எனக்கும் விருப்பமில்லை. நீயே சொல்லலைனாலும் நான் இங்க இருந்து போகத்தான் போறேன்.” என்றாள். ‘எப்போது முட்டட்டும்’ என்று எதிர் எதிர் திசையில் வளர்ந்து வளைந்திருந்த புருவங்கள் இரண்டும், முட்டிக் கொள்ளாத குறையாக நெருங்கி நின்று கேள்வியோடு அவளை நோக்க, ‘எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள்’ என்றுவிட்டு வேலையைக் […]
Readmoreஉயிரே 5 எவ்வளவு வசதிகள் இருந்தாலும், இன்னும் வேண்டுமென்று என்னும் ஒரு நகரத்தில் தான் இருக்கிறாள் சிலம்பழகி. அவள் நினைத்தது ஒன்று, வரிசையாக நடந்து கொண்டிருப்பது ஒன்று. எந்த இடத்தில் என்ன தவறு செய்கிறோம் என்பது இன்னும் விளங்கவில்லை. என்ன இருப்பினும், தன்னுடைய திருமண வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது என்பது மட்டும் விளங்கியது. அத்தை, மாமாவைச் சமாளித்தவளால் தாத்தாவைச் சிறிதும் சமாளிக்க முடியவில்லை. பேத்தி எண்ணத்தை அறிந்து கொண்ட அடுத்த நொடியே முற்றிலும் […]
Readmoreஉயிரே 4 மைவிழியன், சிலம்பழகி தம்பதிகளுக்குத் திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவர்களுக்குள் சிறுதுளி மாற்றம் கூட நிகழவில்லை. இரவு வரை அந்த அறையில் இருப்பவன், மொட்டை மாடியே தன் படுக்கை என்று விடியும் வரை இருக்கிறான். யாரும் பார்ப்பதற்குள் அறைக்கு வருபவன், சிறிது நேரம் அவளைப் பார்த்துவிட்டு உறங்குகிறான். ஏன் பார்க்கிறாய்? என்ற கேள்விக்குப் பதில் இல்லை அவனிடம். இரவெல்லாம், அத்தை மகனின் நினைவில் தூங்கா இரவாகக் […]
Readmoreஉயிரே நீ விலகாதே உயிரே 3 பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே அமர்ந்து கொண்டிருக்கும் மனைவியைக் கண்ணாடி வழியாக வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாக ஓட்ட ஆரம்பித்தான். அதன் அசைவில் நினைவு திரும்பியவள் கண்ணில், நிலைகொண்டிருந்த கண்ணீர் வேகமாகத் தரையிறங்கி அவள் மேனியில் விழுந்தது. துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் அவள் கண்ணீர் காட்சி அளித்தது மைவிழியனுக்கு. ஓட்டும் வேகத்தைக் குறைத்தவன், “இப்ப எதுக்கு அழுதுட்டு வர?” என்று கேட்க, பயந்து கண்ணீரைத் துடைத்தாள். […]
Readmoreஅத்தியாயம் 2 “எதுக்கு இப்படிப் பேசுற. அப்படி என்னதான் கோபம்?” “கோபம் இல்ல, வெறுப்பு! இன்னைக்கு நேத்து இல்ல, நினைவு தெரிஞ்சதுல இருந்து…” “ஏன்?” “ஏன்னு உனக்குத் தெரியாதா?” என எழுந்தமர்ந்தவன், “எல்லாத்துலயும் உனக்குத்தான் முதல் இடம். வீட்ல இருக்க எல்லாரும் உன்னத்தான் தூக்கி வச்சி ஆடுறாங்க. பெத்த பிள்ளையோட சந்தோஷத்தை விட உன்னோட சந்தோஷம் முக்கியம்னு தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காங்க.” என்றவன் வார்த்தைகள் எல்லாம் பெரும் அதிர்வைக் கொடுத்தது சிலம்பழகிக்கு. “என் அம்மா, […]
Readmore