Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீலாமணிய நெடுநல்வாடை உன் நேசம்- final

நேசம் – 22           இருவரும் குளித்து விட்டு கீழே வந்த போது நேரம் நண்பகலைத் தொட்டது.      லிட்டில் ப்ளவருக்கு தன் மகன் மீண்டும் கிடைத்ததும் தான் ஆசைப்பட்டபடியே வின்னி மருமகளாக வந்ததும் புதுத்தெம்பைத் தர தானே சமைக்க ஆரம்பித்திருந்தார்.      காலையில் டிபன் சாப்பிட பத்து மணி வரை அவர்களுக்காக காத்திருந்தார். அவர்கள் வராமல் போகவே அவருக்கு கோபம் எல்லாம் வரவில்லை. மாறாக நிறைவு தான். இருவருக்கும் நடுவில் இடையே இருந்த சிறு விரிசல் […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-21

நேசம் – 21         பாதி இரவு வரை தூங்காமலே இருந்தாலும் ஜோனா விடிகாலையிலேயே விழித்து விட்டான்.      அதுவும் மல்லாந்து படுத்திருந்த அவன் மேல் மெத்தென்று எதோ கனக்க புரண்டு படுக்க முடியாமல் அதனால் கலைந்த தூக்கம். என்னவென்று பார்க்க கண்ணைத் திறக்க முயல அவன் கண்களை கறுப்பாக எதோ மறைத்தது.      அரைகுறை தூக்கத்தில் வலது கையை நகர்த்த முடியாமல் பாரம் அழுத்த இடது கையால் அதை நகர்த்த வின்னியின் கருங்கூந்தல் அவனுக்கு […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-2௦

நேசம் – 20 ஜோனா போவதையே பார்த்துக் கொண்டு இருந்த வின்னி மர்ம புன்னகை புரிந்தாள். களைப்பு தீர சுடுநீரில் குளித்து விட்டு துண்டோடு அறைக்கு வந்த வின்னி ஜோனா கொடுத்த கவரைப் பிரித்தாள். உள்ளே ஒரு சிவப்பு நைட் கௌனும் பாடி ஸ்ப்ரேயும் இருந்தது. அதைப் பார்த்து புருவம் உயர்த்தினாள். “ஒரு வாய் சோறு வாங்கித் தர கணக்கு பாப்பான். இப்ப என்ன? ஐயா ஓவர் ரொமான்ஸ் மூட்ல இருக்கார் போல. ம்ம்…கௌன் எப்படி இருக்கு […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-19

நேசம்-19 கிறிஸ்மஸ் அன்று மிட்நைட் மாஸுக்கு தான் அவர்கள் போவது வழக்கம். அதற்கு கிளம்ப தான் ஜோனா ஹீட்டர் போட்டு துண்டுடன் தண்ணீர் சூடாக காத்துக் கொண்டிருந்தான். வின்னி வந்து அம்மாவைப் பற்றி கேட்கவும் ஒன்றுமே புரியவில்லை. அவன் என்னவென்று கிரகித்துக் கொள்ளும் முன்பே அவள் ஆறுதலாக அணைத்துக் கொண்டு அழவும் இது அவன் அம்மாவின் வேலை என்று தெரிந்து விட்டது. உண்மையை சொல்லி விட்டால் முதலுக்கே மோசம் என்பதால் வாயைத் திறக்காமல் அவள் போன வழியிலேயே […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-18

நேசம்-18 வின்னிக்கு லிட்டில் பிளவர் தனக்கும் ஜோனாவுக்கும் திருமணம் என்று சொன்னதில் அதிர்ச்சியோடு ஜோனா எப்படி ஒத்துக் கொண்டான் என்று ஆச்சரியமும் தான். காதல் என்று பொய் சொன்னதற்கே அவ்வளவு கோபித்துக் கொண்டவன் அவளை கல்யாணம் செய்து கொள்வானா? வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இருவருக்கும் இடையே இருக்கும் பொருளாதார இடைவெளியை முகத்தில் அறைந்ததைப் போல சுட்டிக்காட்டுபவன் எப்படி பூ அத்தையே சொன்னால் கூட இதற்கு சம்மதித்தான்? அவன் இங்கே வரும் போது சொன்ன மாதிரி பழி […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-17

நேசம்-17   காரில் ஜோனா பக்கத்தில் லிட்டில் பிளவர் அமர்ந்து கொள்ள வின்னி பின்னால் அமர்ந்து கொண்டாள். ஜோனா கார் எடுக்க பல வருடங்கள் கழித்து நெடுந்தூரப் பயணம் அதுவும் மகனோடு என்பதால் லிட்டில் ப்ளவருக்கு மிகுந்த உற்சாகம்.. மகனோடு பழைய நினைவுகளை சலசலவென பேசிக் கொண்டே வந்தார். அது அவர்கள் குடும்பக் கதை என்பதால் வின்னிக்கு அது அம்மா மகன் இடையே ஆன பேச்சு என்று பட்டதால் அமைதியாக இருந்து கொண்டாள். ஜோனா கார் ஒட்டியபடியே […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-16

நேசம்-16 “ஏன் இன்னும் என்னைத் தள்ளியே வைக்கிறே வின்னி ? இன்னும் என்னை பழைய கண்ணோட்டத்தில் தான் பாக்கறியா? அதான் என் கிட்ட எந்த ஹெல்பும் வேண்டாம் என்று ஒதுக்கறியா?” ஜோனா வின்னியை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். ஜோனா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று வின்னி யோசிப்பதற்குள் ஜோனாவின் செல்  அடிக்க அவன் கவனம் அதில் போனது. லிட்டில் பிளவர் தான் அழைத்திருந்தார். ஜோனா அழைப்பை எடுக்காமல் வின்னியை தான் பார்த்தான். “அம்மா […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-15

நேசம்-15      ஜோனா ஹோட்டலுக்குள் போய் உட்கார்ந்த பிறகும் எதுவும் பேசவில்லை. எதோ சிந்தனையில் இருந்தான். அவனெதிரே அமர்ந்த வின்னிக்கும் என்ன சொல்லப் போகிறான் என்று யோசனை இருந்தாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.      அவனே சொல்லட்டும் என்று இருந்தாள். ஆனால் அவன் ஐந்து நிமிடங்கள் ஆகியும் தீவிர சிந்தனையில் இருக்க வின்னியே பேச்சை ஆரம்பித்தாள்.      “இன்னிக்கி மதியம் நீங்க ஸ்கூலுக்கு வந்து பசங்க ஏமாறாம உதவினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”      சம்பிரதாயமாக இருந்தது அந்த […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-14

நேசம்-14   ஜோனா அவன் சிவப்பு மெர்சிடஸில் தான் வந்திருந்தான். பள்ளியை விட்டு வெளியே வந்த இருவருமே பேசும் மனநிலையில் இல்லை என்பதால் அங்கே மௌனம் தான் நிலவியது. கார் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த ஜோனா பக்கத்து கதவைத் திறந்து விட வின்னி மெளனமாக ஏறி அமர்ந்தாள். ஜோனா அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு காரை எடுத்தான். கார் வீட்டுக்கு தான் போகிறது என்று நினைத்தாள் வின்னி. அங்கே போனதும் பூ அத்தையிடம் […]

Readmore

நீலாமணியின் நெடுநல்வாடை உன் நேசம்-13

நேசம்-13   அவன் சிட்டி லைப் பார்க்க வர வேண்டும் என்று கேட்டதை கவனியாதது போல வின்னி அவள் காரியத்தில் கவனமாக  “வெள்ளிக்கிழமை மதியம் ரெண்டு மணிக்கு தான் ப்ரோக்ராம். ஒரு மணிக்கு வந்தா ட்ரெஸ் பண்ணி ரெடியாக சரியா இருக்கும். நாம வழக்கமா க்ரிஸ்துமஸ் கரோல்ஸ் பாடுவோம் இல்லையா? அதை பாடிட்டு பிள்ளைகளுக்கு பரிசு குடுக்கணும்.. அவ்வளவு தான்….” என்று நிகழ்ச்சி நிரலை சொன்னாள். ஜோனா கவனமாக அதைக் கேட்டுக் கொண்டான். பின் யோசனையோடு எழுந்து […]

Readmore