Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aagaayam Theeyaagavae

ஆகாயம் தீயாகவே..! – 21 (1)

ஆகாயம் 21: “என்னய்யா நடக்குது இங்க..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார் கருணைநாதன். “அது தான் தலைவரே எங்களுக்கும் ஒன்னும் புரியலை..? நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது, இப்ப இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கு..” என்று புலம்ப ஆரம்பித்தனர். “இதுல புலம்ப என்ன இருக்கு..? நாம தெளிவா காய் நகர்த்தினா… அவன் நமக்கு மேல தெளிவா காய் நகர்த்திட்டு இருக்கான். அந்த 23 பேர்ல 10 பேரை நமக்கு ஆதரவா மாத்தியிட்டா, நம்ம ஆட்சி தான்..” […]


ஆகாயம் தீயாகவே..! – 21 (2)

ஆதி அவளையே கூர்மையாய் பார்க்க, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, அப்போது வார்த்தைகள் வரவில்லை. “போகலாமா..?” என்றான். “இதோ வந்திடுறேன்…” என்றவள் மேலே செல்ல எத்தனிக்க, “எதுவும் வேண்டாம் வா.!” என்றான். “எதுவும் வேண்டாமா..? அவ பேர்ல இருக்குற ஹாஸ்பிட்டலும் வேண்டாமா..?” என்றார் நக்கலாய். “மன்னிக்கணும்..! அது இப்போ என்பேர்ல இருக்கு. அந்த ஹாஸ்பிட்டலை நான் விலைக்கு வாங்கியாச்சு..” என்றான். “அதெப்படி முடியும்..? நான் கையெழுத்துப் போடாம..?” என்றவர் கோபமாய் முறைக்க, […]


ஆகாயம் தீயாகவே..! – 20

ஆகாயம் 20: அடுத்த இருபது நாட்களும் எப்படி சென்றது என்று யாருக்கும் தெரியாது. தேர்தல் நடந்த தினத்திற்கும், ஒட்டு எண்ணிக்கை நாளுக்கும் இடையில் இருந்த அந்த இருபது நாட்களையும் ஆதி ஷூட்டிங்கிலேயே கழித்தான். இடையில் இருந்த படத்தை ஒரு வழியாக முடித்துக் குடுத்திருந்தான். அனைத்து அரசியல் கட்சிகளும் பீதியில் இருக்க, ஆதித்ய வர்மா மட்டும் மீண்டும் தன்னுடைய நடிப்பைத் தொடங்கியிருந்தான். அதுவே கருணைநாதனுக்கு எரிச்சலாக இருந்தது. ‘நடிக்கிறவன், நடிச்சுகிட்டு மட்டும் இருக்க வேண்டியது தான..? வீணா அரசியலுக்குள்ள […]


ஆகாயம் தீயாகவே..! – 19

ஆகாயம் 19:   தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல குழப்பங்கள், பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டிகள் அதிகமிருக்க, கண்டிப்பாக இந்த முறை மக்களின் ஓட்டுக்கள் ஒரே கட்சிக்கு விழ வாய்ப்பேயில்லை என்று தெளிவாக தெரிந்து போனது. கட்சிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதிக்கும் சுயேட்சையாய் நின்றவர்களின் எண்ணிக்கை தான், மற்ற கட்சிகளை தலை சுத்த வைத்தது. சுயேட்சையாய் நின்றவர்கள் ஒன்றும் சாதாரன மனிதர்கள் இல்லை, டிராபிக் ராமசாமியைப் போல். சமூகத்திற்காக […]


ஆகாயம் தீயாகவே..! – 18

ஆகாயம் 18:   அதிகாலையிலேயே தன் வீட்டின் முன்பு வந்து நின்ற காரை தன்னுடைய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் கருணைநாதன். ஆதிதான் துவாரகியை அழைத்து வந்திருந்தான். அவர் நினைத்தது ஒன்று. இப்போது நடந்து கொண்டிருப்பது ஒன்று. ஆதி வீட்டிற்குள் வராமல் அப்படியே நிற்க, “உள்ள வாங்க ஆதி..” என்றாள் துவாரகி. “பரவாயில்லை துவா, நீ போ. நான் கிளம்புறேன்..” என்றான் ஆதித்யா. அதற்குள் அருணா வெளியே வந்துவிட்டார். “என்ன மாப்பிள்ளை  நீங்க..? வாசல் வரைக்கும் வந்துட்டு […]


ஆகாயம் தீயாகவே..! – 17

ஆகாயம் 17: விக்ரமின் நினைவில் மூழ்கியிருந்த துவாரகியை நினைவிற்கு இழுத்து வந்தது ஆதியின் போன். போனின் திரையில் அவனுடைய நம்பரைப் பார்த்த துவாரகிக்கு முதலில் நம்ப முடியவில்லை. ஒருமுறை அடித்து நின்று மறுமுறை அடிக்கவும் தான், அவளால் நம்ப முடிந்தது. எதிர்பார்த்த நேரத்தில் வராத அவனுடைய போன், எதிர்பாராத நேரத்தில் வந்திருந்தது. “சொல்லுங்க..” என்றாள் எடுத்த எடுப்பில். “எங்க இருக்கீங்க டாக்டர்..?” என்றான் ஆதி. “டாக்டர் எங்க இருப்பாங்க..? ஹாஸ்பிட்டல் தான்..” என்றாள் கடுப்பாக. “என்ன பேச்செல்லாம் […]


ஆகாயம் தீயாகவே..! – 16

ஆகாயம் 16   தன் கண்முன்னால் இருந்த அனைத்து ரிப்போர்ட்டுகளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா. அவன் கேட்டதைப் போல், அவன் ஷூட்டிங் முடித்து வருவதற்கும் , உளவுத் துறை ரிப்போர்ட்டுகள் வருவதற்கும் சரியாக இருந்தது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதிற்குள் என்ன தோன்றியது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும். தீவிர சிந்தனையில் இருந்தவனை கலைத்தது கவினின் குரல். “சார், நீங்க கேட்ட எல்லா டீட்டைல்சும் பக்காவா இருக்கு சார். எல்லாமே போலீஸ் டிப்பார்மென்ட்ல […]


ஆகாயம் தீயாகவே..! – 15

ஆகாயம் 15: ஆதி, அதிகாலையில் கண்விழிக்க, அப்போதுதான் இரவில் நடந்த அனைத்தும் கண்முன்னே உலா போனது. “எப்ப தூங்கினேன்..?” என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவன், அருகில் பார்க்க, அங்கே துவாரகி இல்லை. “எங்க போனா..?” என்று சுற்றும் முற்றும் பார்க்க, ‘நான் இயர்லி மார்னிங் போய்டுவேன்’ என்று முந்தைய நாள் இரவு அவள் சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது அவனுக்கு. “எதுக்காக நைட் வந்தா..? வந்த உடனே போக வேண்டிய அவசியம் என்ன..? மின்னல் மாதிரி அப்பப்ப […]


ஆகாயம் தீயாகவே ..! – 14

  ஆகாயம் 14: நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. கட்சியை ஆரம்பித்த ஆதித்ய வர்மாவின் செயல்பாடுகள் அதிவேகமாக இருக்க, அவனை ஆரம்பத்தில் ஏளனமாய் பார்த்தவர்கள் இப்போது வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு வேகத்தை யாரும் எதிர் பார்க்கவில்லை. எதை, எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்கு இருந்ததாலும், அவனுக்கு ஏற்கனவே இருந்த செல்வாக்கும், அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சாதகமாய் அமைந்தது. சட்ட ரீதியாக வரும் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வை முன்பே […]


ஆகாயம் தீயாகவே..! – 13

ஆகாயம் 13: ஆதியின் அறிவிப்பைக் கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போனதைக் காட்டிலும் பார்கவி தான் அதிகமாக அதிர்ந்து போயிருந்தார். அவன் ஏதோ விளையாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறான் என்று அவர் நினைத்திருக்க, அவனிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை அவரால் நம்ப முடியவில்லை. “நீ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ஆதி. கண்டிப்பா இது தேவையில்லாத வேலை தான்..” என்றார் பார்கவி. “என்ன பார்கவி இது..? ஆதிக்கு அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு சொல்ல […]