Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Dum Dum En Kalyaanam

டும் டும் என் கல்யாணம் – 27(2)

இரு ஜோடி தினங்களுக்கு பிறகு…. அதிகாலை 5.30ஐ தாண்டிய நேரம் அடுக்களைக்குள் இருந்து பெரிய பாத்திரம் ஒன்றை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் நீலா. “பார்த்து பொறுமையா வாங்க அண்ணி” என்ற விஜயா, அவர் அருகே வந்ததும், அவரிடம் இருந்ததை வாங்கி கீழே வைக்க, “ஐஞ்சு வகை சாதமும் ரெடி… வெல்லம் பச்சரிசி தயார் ஆகிட்டா கிளம்பிடலாம்” என்றார் நீலா. விஜயா, “பழம், பூ, இலை எல்லாமே நானும் எடுத்து வச்சுட்டேங்க அண்ணி… நீங்க மஞ்சள் கயிறு மத்த […]


டும் டும் என் கல்யாணம் – 27 (1)

மின்விசிறியில் புடவையை கண்டதுமே அடிவயிறு பகீரென்றிருந்தது மூவருக்கும். மின்னல் வேகத்தில் கண்கள் அவ்வறையை அலச, கட்டிலின் ஓரம் தன்னை ‘N’போல சுருட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்த அஷ்டாவை கண்டதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டனர் மூவரும். அவளை முழுதாய் பார்க்கும் வரை உயிரோடு செத்துக்கொண்டிருந்த வீரா, அவளை கண்ட மாத்திரத்தில் அந்த கட்டிலேயே அயர்ந்துப்போய் அமர்ந்துவிட்டான். சண்முகம் அத்தனை தெய்வங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இன்னமும் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிற்க, அத்தனை நேர பரிதவிப்பு […]


டும் டும் என் கல்யாணம் – 26

26   மொட்டை மாடி தரையில், சுவரில் சாய்ந்து தொடுவானத்தை வெறித்துக்கொண்டிருந்தார் சண்முகம். அவர் எதிரே அமர்ந்து, அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க அஞ்சியவராய் அவரது கால் விரல்களில் கண்பதித்திருந்தார் நீலா. ‘உனக்கு பிடிக்காம தான் அஷ்டா பொறந்தாளா?’ என சண்முகம் கேட்டதும் அதிர்ந்து போய் பதிலற்று நீலா நின்றிருந்த இரு நிமிடங்களில் தன் பொறுமை அத்தனையும் வடிய, விறுவிறுவென மாடியில் வந்து அமர்ந்தவர் தான்!!! பொழுதிறங்கியும் அவர் இறங்கி வரவில்லை. “ஏங்க! இப்படி ஒரு வாய் தண்ணி […]


டும் டும் என் கல்யாணம் – 25

25   கூட்டமான சாலையில் புகுந்து புதுந்து சென்றுக்கொண்டிருந்தது அந்த மூன்று சக்கர வண்டி. ‘ஊரா இது? எங்கப்பாரு குண்டும் குழியும்! தோண்டுறானுங்களே தவிர மூடித்தொலைக்க மாட்டேங்குறானுங்க!’ சலிப்பும் புலம்பலுமாய் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் ஆட்டோக்காரன். அவன் புலம்பல் எல்லாம் காதில் கேட்டால் தானே? காது ஜவ்வை கிழிக்கும் அளவு ஒலித்துகொண்டிருக்கும் பேருந்தின் தொடர் ஹாரன் கூட அவள் செவிப்பறையை தாண்டி மூளைக்கு சென்றிராத போது, ஆட்டோ ஓட்டி பேசுவதெல்லாம் அவள் காதின் அருகே கூட சென்றிருக்கவில்லை. ‘ஊரு […]


டும்! டும்! என் கல்யாணம் – 24

நீலா பேசியதை இரவெல்லாம் யோசித்து யோசித்து தூக்கமின்றி போனது அஷ்டாவுக்கு. தூக்கமின்மையில் கண்கள் எரிய, மணியை பார்த்தால் விடியற்காலை ஐந்தை தாண்டிவிட்டிருந்தது. ‘இவ்வளவு நேரமாவா முழிச்சுருக்கேன்?’ என வியந்தவள், ‘இன்னேரம் அவர் எழுந்துரிச்சுருப்பாரே!’ என்று எண்ணினாள். நீலா பேசியதில் வீராவின் பக்கம் உள்ள அவளது சம்சயம் எல்லாம் விலகியிருக்க, ‘நம்ம பண்ணதும் தப்புதானே?’ என உணரும் அளவு, அறிய ஜென் நிலையை அடைந்திருந்தாள். அதன் விளைவாய், தன் மொபைலை எடுத்தவள் காலையிலேயே அவனுக்கு அழைப்பு விடுக்க, மறுப்பக்கம் […]


டும் டும் என் கல்யாணம் – 23

டும் டும் என் கல்யாணம் – 23 நீலா அன்றைய சமையலுக்காக காய்களை அவசர அவசரமாய் நறுக்கிக்கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் காலை உணவுக்கு வந்து அமர்ந்துவிடும் கணவருக்கு அவர் சுட சுட உணவை பரிமாறியிருக்க வேண்டும். அதில் கொஞ்சம் முன்னே பின்னே பிசகினாலும் சண்முகம் பார்வையால் எரித்தால், மங்களம் வார்த்தையால் பொசுக்கிவிடுவார். நான்காவது முறையாக ‘நான் இருக்கிறேன்’ என குக்கர் சத்தம் கொடுக்க, பருப்பு வெந்திருக்கும் என்ற அனுமானத்தில் அடுப்பை நிறுத்திவிட்டு, சாம்பார் வைக்க […]


டும் டும் என் கல்யாணம் – 22

வாசலை நோக்கி கையை நீட்டிக்கொண்டு வீரா நிற்க, சண்முகமும் நீலாவும் முகம் முழுக்க பிரகாசத்துடன், “வீரா…!!!” என அழைத்துக்கொண்டு வந்து நின்றனர். அந்த நேரம் இப்படி இவர்கள் வந்து நிற்ப்பார்கள் என கிஞ்சித்தும் அவன் நினைக்கவில்லையே! இறுகிய அவன் முகம் வந்தவர்களை கண்டதும் வேறு வழியின்றி தளர, பிடிவாதமாய் இழுத்துப்பிடித்துக்கொண்டு வந்த புன்னகையுடன், “வாங்க” என்றான் உள்ளே கொதிக்கும் மனதை மறைத்துக்கொண்டு. அவன் தான் தெளிந்தானே ஒழிய, அவன் ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கியவள், இன்னமும் அப்படியே தான் […]


dum dum en kalyaanam 21

Episode 21   “அடிச்சீங்களா?” அதிர்வா? திகைப்பா? என பிரித்தறிய முடிவா பாவனையில், அவளது சுளித்த முகத்தை கேள்வியாய் பார்த்து அவன் நிற்க,   “ம்ம்ம்” என முனகினாள் அஷ்டா.   ‘இல்லை’ என அவள் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு, அவள் ‘ஆம்’ என்றதும் எப்படி இருந்தது என்பதை சொல்லி விளக்க இயலாது.   முழுதாய் ஒரு நிமிடம்! நீண்ட அறுபது நொடிகள் தன்னை சமன் படுத்தி, குரலை செருமி, நிதானத்துக்கு கொண்டு வர முயன்று, […]


dum dum en kalyaanam 2o

Episode 2o   படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான் வீரா. மணி நள்ளிரவு பன்னிரண்டை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.   அருகே எவ்வித சலனமும் இன்றி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்த அஷ்டாவை நொடிக்கொருதரம் பார்வை தழுவ, அவளது நித்தரை அவனை சலிப்படைய வைத்தது.   இரவு படுக்கைக்கு வந்தது முதல் ஒருவித எதிர்ப்பார்ப்புடனே காத்திருந்தான். பன்னிரண்டு மணியடிக்க, தன்னை எழுப்பி ‘பிறந்தநாள் வாழ்த்து’ சொல்வாள் என, அவன் காத்திருக்க, பகல் பன்னிரண்டு அடித்தாலும் இவள் எழுந்து வாழ்த்த போவதில்லை என […]


டும் டும் என் கல்யாணம் 19

Episode 19   அதிகாலை பனிபெய்யும் பொழுதில், லேசாக எட்டிப்பார்த்த சூரியனால் இருள் விலக ஆரம்பித்திருந்த நேரத்தில், “போயே ஆகணுமா?” என முறைத்துக்கொண்டு நின்றான் வீரகேசரி.     அவன் முறைப்பை கிடப்பில் போட்டவராய், “போய்தான் ஆகணும்!” என பிடிவாதமாய் தர்க்கம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா.   கடந்த இரு நாட்களாகவே இப்பேச்சு நடந்துக்கொண்டு தான் இருக்க, இறுதியாய் ‘யெஸ்! ஆர் நோ’ சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.   “நீயும் ஹனிமூன் போக மாட்ட! நானாவது நாலு […]