என் காதல் கனா – epilogue ஒன்னரை வருடங்கள் கழித்து, நியுயார்க் நகரம் – Dec 31 மாலை 6 மணி பனிப்போர்வை போட்டு மூடப்பட்டிந்த அந்த ரெட் ஸ்டோன் பில்டிங்கின் ஆறாவது மாடியின் பால்கனியில் சுஜினி நின்றிருந்தாள். சக்கரை துகள்கள் போல் பனி தூவிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த ஸ்வெரட்டரை இன்னமும் உடம்புடன் இருக்கிக் கொண்டாள். குளிருக்கு இதமாக ஹாட் சாக்லேட் பருகியபடிக்கு பால்கனியில் வேடிக்கை பார்ப்பது அவ்வளவு பிடித்தமாயிருந்தது சுஜிக்கு. கல்லூரி முடித்ததும் முன்னரே முடிவெடுத்திருந்தபடிக்கு […]
என் காதல் கனா 32 கடலூர் வீட்டிற்கு சுஜி வந்து அன்றோடு மூன்றாம் நாள் முடிந்திருந்தது. பழைய காலத்து ஓட்டு வீடு தான். பெரிய தாழ்வாரமும் அதனைச் சுற்றி மூன்று அறைகளும். ஒன்று சமையல் அறை. மற்ற இரண்டும் படுக்கை அறைகள். பெண்கள் உள்ளறையில் படுத்துக் கொள்ள, ஒரு அறை “விவேக் அண்ணாவிற்கு” உண்டானது. சுஜி பெண்கள் உறங்கும் அறையில் தங்கவைக்கப்பட்டாள். பெட்டி மற்றும் சாதனங்கள் அறையில் இருந்த போதும், மற்ற சிறுவர்களுடன் தாழ்வாரத்தில் பொழுது கழிக்கவே […]
என் காதல் கனா 31 மயங்கி சரிந்த சுஜி கண்விழித்த போது, அவளது கட்டிலில் படுத்திருந்தாள். எம்மாவும் வித்யாவும் வேகமாக பெட்டியில் தேவையான துணிமணிகளை எடுத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தனர். ஆண்கள் மூவரையும் காணவில்லை. சுஜி மெல்ல கட்டிலில் எழுந்து அமர்ந்தவளின் முகத்தைக் காணச் சகிக்கவில்லை. முந்தினம் அழுததால் வீங்கியிருந்த கண்களும், முகமும் என பார்க்கவே பாவமாக இருந்தது. எழுந்ததும் தனது கைப்பேசியை எடுத்து வேகமாக மாமாவின் எண்களைத் தொடர்பு கொண்டாள். “மாமா, அம்மா எப்படி இருக்காங்க.. என்னாச்சு […]
என் காதல் கனா 30 அந்த வீட்டின் நடுமத்தியில் வீற்றிருந்த சோஃபாவை சுற்றிலும் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். பீர் பாட்டிலைச் சுற்றவிட்டு, அது நிற்கும் நபரிடம் “ட்ரூத் ஆர் டேர்” விளையாடி, ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு ரகளை செய்து கொண்டிருந்தனர். விவேக்கும் ஆவலாக என்ன நடக்கிறது என விளையாட்டை கவனிக்கலானான். சதீஷிற்கு பெரிய ஆர்வம் தோன்றவில்லை. “ஆமா, எவன் முதல் யாருக்கு முத்தம் குடுத்தான்? யாரோட காதலியை வேணும்னே சைட் அடிச்சான்னு” இவனுக கேட்கற கேள்வியும், இவனுகளும்..” […]
என் காதல் கனா 29 ரான் சொன்னது போலவே தடபுடலான பார்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான். அவனது நண்பன் ஒருவனின் வீட்டில் ஓர் சனிக்கிழமை இரவு கேளிக்கைக்கு ஏற்பாடானது. இந்த இரண்டு வார இடைவெளியில் மூவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமாக இருந்தது. தங்களைப் பற்றி சதீஷ் தன் நண்பனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டிந்தான் என்றே சுஜி திடமாக நம்பினாள். சதீஷோ விவேக்கிடம் தன் மனதைச் சொல்ல சமயம் பார்த்துக் காத்திருந்தான். சொல்லிவிட வேண்டும் என்று நிறைய முறை மனதில் தோன்றிய […]
என் காதல் கனா 28 சுஜியின் கண்களில் கொப்பளித்த மகிழ்ச்சியுடன் சேர்ந்து அவளது மனக்குழப்பங்கள் ஓரளவு சதீஷிற்குப் புரிந்து தான் இருந்தது. ஆனபோதும் அவனது மனமே நிலையாக ஓரிடத்தில் இருக்கவில்லை எனும் போது சுஜியை சமாதானப்படுத்தும் எண்ணம் அரவே எழவில்லை. “என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? அந்த பொண்ணுக்கு நீ பொய்யான நம்பிக்கை கொடுக்கறியேடா? கையை பிடிக்கிற, டிரஸ் மாத்தாதன்னு சொல்லற, சேலை உனக்கு அழகா இருக்குனு பாக்கறப்போலாம் சொல்லற?இதெல்லாம் என்னடா நினைச்சு பண்ணாற?” என அவனது மனசாட்சி […]
என் காதல் கனா 27 மாலை தேநீர் அருந்திவிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். சதீஷ் வீட்டினுள் இருக்கும் வரையிலும் சுபாஷினி அந்த இடத்திற்கு அருகில் கூட வரவில்லை. ஆனால் வேண்டுமென்றே போகும் பொழுது சுஜி நேராக மதுமிதாவிடம் சென்றவள், மதுவை சற்றே தனியே அழைத்தாள். “மது உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். ஆக்ட்சுவலி நானும் சதீஷும் லவ்வர்ஸ் இல்ல மது” “என்ன சொல்லறீங்க? இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி..” […]
என் காதல் கனா 26 சுபாஷினி அத்தோடு தன் பேச்சை நிறுத்தியிருக்கவில்லை. “இப்போ இவங்க கூட வந்திருக்காளே ஒருத்தி, அவ யாரா இருக்கும்?” என சுஜி யாரென தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொப்பளித்தது. தன்னுடன் பழகிய நான்கு வருடங்களில் இப்படி ஒருத்தியின் பெயரை சதீஷ் ஒருமூறை கூட உச்சரித்ததில்லை. அப்படியிருக்க இவ்வளவு உரிமையுடன் சதீஷின் கைகளைப் பற்றி இழுத்துச் சென்றவள் யாராக இருக்கும் என தெரிந்து கொள்ள நினைத்தாள். “நமக்கு எதுக்கு அதெல்லாம் சுபா. அதுதான் ஃபேமிலி […]
என் காதல் கனா 25 சுபாஷினி என அறிமுகப்படுத்தப்பட்ட பெண்ணை சுஜி சற்றே கூர்ந்து நோக்கினாள். “ஒருவேளை சதீஷ் லவ்வரா இருக்குமோ? அந்தப் பேரைத் தானே விவேக் ஒரு முறை சொல்லியிருக்கான்” என்ற அசட்டுத் தனமான எண்ணம் தோன்றியது. “ஊர்ல ஆயிரம் சுபாஷினி இருப்பாங்க.” என தனக்குள் எண்ணிக் கொண்டாள். நிஷா தன் தோழிகளிடம் சுஜியை அமர்த்தி விட்டு வெளியே சென்று விட்டிருந்தாள். அந்த பெண்கள் இருவரும் சுஜி இடம் சம்பிரதாயமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். “எந்த […]
என் காதல் கனா 24 அன்றைய இரவு பீசா பர்கர் என தருவித்து அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து உணவு உண்டனர். அடுத்த தினம் அதிகாலையிலேயே கிளம்பி நியூஜெர்சி செல்ல வேண்டியிருந்ததால் உணவு முடிந்ததும் பெரியவர்கள் இருவரும் உறங்கச் சென்று விட்டிருந்தனர். கீழே படுத்து உறங்குவது பெற்றோர்களுக்கு வசதியாக இருக்காது என்று எண்ணிய கிஷோர் இருவரையும் பெட்ரூமில் படுத்துக் கொள்ளும்படியும், பெட்ரூமில் சிறிய மெத்தை விரித்து அங்கேயே சுஜியும் படுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான். ஹாலின் சோபாவில் […]