Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

En Kaathal Kanaa

Aruna Kathirs En Kaathal kanaa 23

என் காதல் கனா 23 ஆர்கன் அருகில் இருந்த போர்ட்லாண்ட் விமான நிலையத்திலிருந்து பிலடெல்பியாவிற்கு ஆறு மணி நேரம் பயணம். தன் தாய் தந்தையுடனும் சுஜியுடனும் தன் தமையன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான் சதீஷ். விமான நிலையம் சென்று இமிகிரேஷன் முடித்து விமானத்தில் ஏறி அமரும் வரையில் வேறு எந்த வித நினைவுகளும் சதீஷ்க்கு எழவில்லை.அவன் தாயுடன் சுஜி அமர்ந்து கொண்டிருந்தாள். சதீஷ் அவனது தந்தையுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். சுஜி அவ்வப்போது அவனது தாயுடன் பேசிக் […]


Aruna Kathirs En Kaadhal Kanaa 22

என் காதல் கனா 22 அடுத்த தினம் அவனது பெற்றோரை அழைத்து வர விவேக்கும் சதீஷும் சென்றிருந்தனர். விமான நிலையத்தில் தன் பெற்றோரை கண்டதும் சதீஷ் பெரிதாக ஓடி சென்று அவர்களை கட்டிப்பிடித்து எல்லாம் கொஞ்சம் விடவில்லை. இயல்பாக புன்னகைத்து வரவேற்று, அவர்கள் அருகில் வந்ததும் “ ஹாய் பா, ஹாய் ம்மா.. அப்பா கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க போல.தொப்பை எல்லாம் வெளிய தெரியுது” என சாதாரணமாகவே வினவினான். விவேக் சதீஷின் அன்னையிடமிருந்து கைப்பையை பெற்றுக்கொண்டவன், “எப்படி […]


Aruna Kathirs EN Kaathal kanaa 21

என் காதல் கனா 21 “ரிவோக் பண்ண மறந்துட்டேன்..சாரிடா..இப்போ சொல்லு உன் வருங்கால வைஃப் பத்தி…என்ன பண்றாங்க?” என தமையனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் பேச்சைத் தொடர்ந்தான். “உன் மேல தப்புனா அது சின்ன விஷயமாக தூசுதட்டி.. அடுத்த விஷயத்துக்கு போயிடுவடா நீ..” என மொழிந்த கிஷோர், “இதே தப்ப நான் பண்ணி இருந்தா சும்மாவா விடுவ நீ?” என சதீஷிடம் சிரிப்புடன் வினவினான். “சரிடா சரிடா.. நாளைக்கு நமக்குள்ள சொத்து தகராறு வந்தா, நம்ம […]


Aruna Kathir En kaadhal kanaa 20

என் காதல் கனா 20 “இதே மாதிரி விவேக்கிட்டையும் பேசலாமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன்..” என தலையை சற்றே சாய்த்தவாக்கில் சுஜி மொழிய சதீஷிற்கு திக்கென்று ஆகிப்போனது. “அய்யய்யோ அப்படி இப்படி ஏதாவது உளறிவச்சியா என்ன?”என சற்றே படபடப்புடன் வினவினான். “நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை. அப்படி பேசலாமான்னு யோசிச்சேன்னு தான் சொன்னேன். அப்படி பேசினேன்னா சொன்னேன்?” என சுஜி மொழிந்த பின்பு தான் சாந்தமானான். “குட்.. விவேக் என்ன மாதிரி இந்த விஷயத்தை ஈஸியா […]


Aruna Kathirs En kaathal kanaa 19

என் காதல் கனா 19 “குட்… யு அண்டர்ஸ்டுட்.. ஈகோங்கற வார்தையை யூஸ் பண்ணாம புரியவைக்க இன்னும் எவளோ நேரம் கிளாஸ் எடுக்கணுமோன்னு நினைச்சேன்… சோ, இதுக்கு எதாவது சொல்யூஷன் இருக்கா? இந்த ஈகோ வியாதிக்கு? எனக்கு தெரிஞ்சு இல்லை..” என நகைத்தவள் சத்தீஷை ஸ்னேகமாகப் பார்த்தாள். “எனக்கும் தெரியலை சுஜி. உண்மையா ஃப்ரேங்கா ஐ லைக் டாக்கிங்க் அண்ட் பீயிங்க் வித் யு.. என்னோட கவலையெல்லாம் விவேக் பத்தி மட்டும் தான். அவனோட உயிர் நண்பனா […]


Aruna Kathirs en kaathal kanaa 18

என் காதல் கனா 18 சுஜினிக்கு, ஏன் சதீஷிற்குமே விவேக்கின் குரலைக் கேட்டு கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டிருந்தது. “ஏதேணும் கேட்டிருப்பானோ”என பயம் சதீஷின் முகத்தில் அப்பட்டமாக மிளிர்ந்தது. சுஜினி அவன் நிட்டிய காபி கோப்பையை, சிறிய நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள். அவளது கண்கள் இன்னமும் சதீஷின் முகத்திலேயே படிந்திருந்தன. சதீஷோ சுஜினியின் பக்கம் தலையைத் திருப்பாமல், சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தன் கவனத்தை மாற்றியிருந்தான். சுஜினி மெல்லமாக தன் மனதை ஒரு நிலைபடுத்திக் கொண்டு, […]


Aruna Kathirs En Kaadal Kana 17

என் காதல் கனா 17 பெரும்பாலான  சமயங்களில் மனதிற்கு பிடித்த முடிவினை எடுக்க முடியா வண்ணம் சந்தர்பங்கள் வாய்த்துவிடும். இதுவும் சதீஷைப் பொறுத்தவரையில் மனதிற்குப் பிடிக்காத முடிவு என்றாலும், சரியான முடிவு. இந்த எண்ணத்துடன் புரண்டவனுக்கு மனதில் சுஜினியும், தன் பழைய காதலி சுபாவும் வந்து சென்றனர். சுபாவை மூன்று வருடங்கள் நானா காதலித்தேன் என்ற அளவிற்கு மூளை கேள்வி கேட்டது. இதற்கும் மேல், சுபாவுடன் திருமணம் என்னும் அளவிற்குக் கூட சென்றுவிட்டதை நினைக்கையில் ஒருவித பிரமிப்பே […]


Aruna Kathirs En Kaadhal Kanaa 16

என் காதல் கனா 16 சதீஷ் இயல்பாக தலையை தட்டுவதையும், அதற்கு மறுபேச்சில்லாமல், சுஜினி சிரித்துக் கொண்டிருப்பதையும், வாக்கிங் சென்று முடித்து திரும்பியிருந்த விவேக்கின் கண்கள் நிறைய எரிச்சலுடன் பார்த்தன. “இதப்பத்தி சதீஷ்ட்ட இன்னைக்கே பேசணும்…சுஜினிட்ட இருந்து அவனை விலகியிருக்க சொல்லணும்…எனக்கு சுஜினி எவ்வளோ முக்கியமானவன்னு சதீஷ்க்கு புரியற மாதிரி எடுத்து சொல்லிடணும்….என்ன இவன்? இப்படி நடந்துக்கறான்?” “ப்ரேக்கப் ஆகி ரெண்டு மாசம் முடியறதுகுள்ள இன்னொரு லவ்வா? இப்படியெல்லாம் நடந்துக்கற டைப் இல்லையே இவன்….அதை விடவும் இந்த […]


Aruna Kathirs En Kaadhal Kana 15

என் காதல் கனா 15 சுஜினியின் கண்கள் சதீஷின் முகத்தை அளவெடுக்கத் துவங்கியிருந்தன. தீட்சன்யமான கண்களை சதீஷின் நீல ஃப்ரேம் கண்ணாடி சிரைபடுத்தியிருக்க, கூரான நாசியின் கீழ் அழுந்தப் படிந்த உதடுகள். அதன் மேல் அளவான மீசை. இரட்டைப் பிளவு கொண்ட முகாவாய்கட்டை என சுஜினி சதீஷின் முகத்தின் அனாட்டமியை மனதில் பதிந்து கொண்டிருக்க, சதீஷின் பேச்சு சட்டென தடைபட்டு நின்று போனதை அப்போது தான் கவனித்தாள். சதீஷிற்கும் சுஜினியின் மனமும் தன் ஆசைகளும் புரிந்து தான் […]


Aruna Kathir En Kaadal kanaa – 14

என் காதல் கனா 14 “சதீஷ் தண்ணி அடிப்பாங்கற விஷயத்தை சுஜினிட்ட சொல்லியிருக்க வேண்டாமோ. அவனைப் பத்தி தப்பா நினைச்சிருப்பாளோ…”என்று விவேக்கிற்கு யோசித்துக் கொண்டே நண்பர்களுடன் உணவருந்தச் சென்றான். அடுத்து வந்த இரண்டு வாரங்களும் இதே கதை தொடர்ந்தது. பகலில் கல்லூரி முடிந்ததும், மதிய உணவிற்குப் பின், நண்பர்களுடன் ரோனால்டின் காரில் பகுதி நேர வேலைக்கு ஒன்றாக சென்றனர். வேலை முடிந்ததும், சதீஷும் ரோனால்டும் காரில் கிளம்பிவிட, விவேக், சுஜினிக்காக “சிம்பிளி ஏஸ்யா”வாசலில் காத்திருப்பான். ஒன்பது மணிவாக்கில் […]