Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Gokulathil Raaman

Epilogue

மாதங்கள் கடந்தன…   “எடேய், கொண்டம் தொடங்கிடுச்சு… வெடிய போடுங்கடே” வெள்ளைத்தலை பெருசு ஒன்றின் அறிவிப்பில், இளசுகள் விதவிதமான வெடிகளை வெடிக்கவிட்டு விளையாட, மேளதாளம் வெடி சத்தத்தையே மறைக்கும்படி, ஊர் எல்லை வரை கேட்குமளவு ஆரவாரமாய் ஒலித்தது.   “பாரியூர் கொண்டத்து மாரியம்மன் திருவிழா” தைமாத தொடக்கத்தில் கோபிசெட்டிப்பாளையம் முழுக்க கோலாகலமாய் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஒன்று! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு விமர்சையாய் இன்று நடைப்பெருகிறதென்றால், அதற்க்கு இன்னொரு காரணம் ஒண்டிவீரர் சிவகாமியின் “சதாபிஷேகம்”   கொண்டத்தில் […]


கோகுலத்தில் ராமன் final 2

காதருகே கேட்ட ‘ஹாய் பேபி’ என்ற குரலில் சுவாசம் அப்படியே நிற்க, திரும்பிக்கூட பாராமல் அசைவற்று மூச்சற்று நின்றாள் கோகிலா.  அவன் முன்னே வந்து நின்றவன், “எதிர்ப்பார்க்கலல… நான் திரும்பி வருவேன்னு எதிர்ப்பார்க்கலல…!!” என படபாணியில் சொல்லிவிட்டு “நல்லா மிமிக்கிரி பண்றேனா பேபி?” என்றான் அவளிடமே!   “கி…ஷோ..ர்” நடுங்கிக்கொண்டே அவள் கூற, “ஹோ! உனக்கு என்னை நியாபகம் கூட இருக்கா?” என்றவனின் குரலில் வெளிப்பட்ட வன்மத்தில், கண்களில் தெரிந்த குரூரத்தில் அவள் ரத்தம் உறைய தொடங்கியது. […]


கோகுலத்தில் ராமன் final 1

எரிந்து கருகியிருந்த அந்த ஐந்தடி இடத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் இன்பன். துக்கமோ, வருத்தமோ எதையும் அவன் முகத்தில் இருந்து கண்டுப்பிடிக்க இயலவில்லை.   நடுநிசியில் அவன் வீட்டு ஆவினங்கள் பெருங்குரலில் அலற, விருட்டென எழுந்த பேரின்பன், அறுவடை செய்த சோளப்பயிர் கட்டுகள் நெருப்பில் குளிப்பதை கண்டு பதறி, துரிதமாய் தண்ணீர் மோட்டரை ஆன் செய்தான். குழாய் வழியே தண்ணீரை அவன் பாய்ச்சி அடிக்க, எரிந்துக்கொண்டிருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட ஆரம்பித்தது. ஆரம்பக்கட்டதிலேயே கவனித்து துரிதமாய் வேலை […]


Gokulatthil Raman 16 B

தலையை கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் தன் மகனை பார்க்க பார்க்க சத்தியனுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. அவனை நெருங்கி அவன் தோள் தொட்டவரின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்டான் காண்டீபன்.   “அப்பா வேணுன்னு செய்யலடா” என அவர் ஆரம்பிக்க, “அப்பாவா? அப்பாக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” என்றான் எகத்தாளமாய்.   காண்டீபன், “சின்ன வயசுல என்கிட்ட பாசமா ஒட்டி ஒட்டி வந்தவனை நீங்க துரத்தி அடிக்கும்போது எனக்கு வலிக்கல… சொந்த அண்ணன்கூடவே சேரக்கூடாதுன்னு நீங்க சொன்னதைக் கேட்டு அவனை […]


Gokulatthil Raman 16 1

இன்பன் சென்றுவிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் வரவை எதிர்ப்பார்த்து கோகிலா ஆவலாய் வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நிமிடத்திற்கு இருமுறை அடிவயிற்றில் கைவைத்து பார்ப்பதும், தனக்குத் தானே சிரிப்பதுமாய் நேரம் கடத்திக்கொண்டிருந்தவளை கலைத்தது அவள் அலைபேசி.   அழைப்பது ‘அன்னை’ என தெரிந்ததும், இருந்த சந்தோச மனநிலையில், அவள் உச்சரித்த, “சொல்லும்மா!” கூட அவள் உவகைக்கு உதாரணமாய் தெரிந்ததோ!?   “என்ன கோக்கிமா? ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு? ஏதாவது நல்ல விஷயமா?” என்றார் செல்லம்.   ‘குரல்லயேவா […]


Gokulathil Raaman 15 2

 “ஒன்னும் இல்ல சுசீ, கொஞ்சம் வேலை அவ்ளோதான்” என்றவனை அதற்குமேல் நோன்டாது, “சரி நான் சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று எழுந்தாள் சுசீலா.   எழுந்தவளின் கரம் பிடித்து நிறுத்தியவன், “ஏய் காலேஜ் போலையா நீ?” என்றான் மீண்டும்.   “என் பிரண்ட்ஸ் ரெண்டு பேரு வரலை, அதான் நானும் போல” என்றாள்.   “பிரண்ட்ஸ் வரலன்னா போக மாட்டியா?”   “அது அப்படிதான் அத்தான்! எங்க கூட்டாளிங்க ஒருத்தர் லீவு போட்டாலும் நாங்க யாரும் காலேஜ் […]


Gokulathil Raaman 15 1

அத்தியாயம் பதினைந்து   சோளப்பயிர்கள் செழித்து நின்று ‘எங்களை அள்ளிக்கொள்’ என அரைக்கூவல் விட்டுக்கொண்டிருந்தன. சோளத்தை சாகுபடி செய்ய அள்ளி சொருகிய புடவையுடன் பெண்கள் களத்தில் நிற்க,   ‘களத்துக்குள்ள காலை வச்சு ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா ஏலங்கிடி லேலோ நெல்லுவேற வைக்கோல் வேற ஏலங்கிடி லேலோ வயித்துபசி மாட்டுக்கு வைக்கோல் தானே லேலோ’  என வாய்ப்பாட்டு தொடங்க, குதூகலமாய் வேலையில் இறங்கினர் பெண்கள்.   “அட, என்னக்கா நீங்க… என்னை பாட சொல்லுவீங்கன்னு பார்த்தா, நீங்களே […]