Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 19ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 20. சோழத்தின் கரையில் போர்மேகம் வான் தேவதை வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்தது போன்ற காலநிலை. காந்தளூர்ச்சாலை எங்கும் பன்னீர் தெளிக்கும் பெருமழை பருவம். தூவி பெய்யும் மாரி உடல் தழுவும் போது சிலிர்த்துப் உண்டாகும் உடல் துள்ளலை, அனுபவிக்கும் போது ஏற்படும் மனநிலை அற்புதமானது. மணிமுத்தாற்றின் கரைகள் தழுவியபடி, மாரி நீர் மண்ணில் புரண்டோடி  பயணிக்கும் அழகு, காண்பவர் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.  ஆற்றின் இருக்கரைகளையும் அணைக்கும் நீரின் பிரவாகத்தை, கரை […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 18ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்)  18. ஆண் அன்னமும், பெண் அன்னமும் நீலத்தை அள்ளியிறைத்த தெள்ளிய நீரலைகளாக காட்சித் தந்த ஏஜியன் கடற்பரப்பில், ஆனந்தம் கூத்தாடிய ரினீவா தீவை, பார்க்க நாமும் செல்வோம். கோட்டை கதவுகள் தொட்டு, ஸ்கெட்ஸ் மரக்கலன் நின்றிருந்த இடம் வரை, கடலில் உருவாகியிருந்த கல் திண்டில் ரினீவாவாசிகள் திரண்டனர்.  ஒவ்வொருவரும் தங்கள் கையில் வைத்திருந்த இசைக்கருவிகளை இசைத்தும், பாடியும், ஆடியும் எழுப்பிய உற்சாக குரல் ரினீவாவின் தீவெங்கும் எதிரொலித்து திரும்பியது.  ஸ்கேட்ஸ் மரக்கலனிலிருந்து […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 17ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 17. அசுர கோட்டையை அழித்த போரிடஸ்….  ஓங்கி உயர்ந்த மலைமுகடுகளை ஒய்யாரமாக தொட்டுத் தடவி, காதலுடன் தழுவிய முகிலினங்கள். மலைவெளியிலிருந்து சறுக்கி வழிந்த நீர்வீழ்ச்சிகள்.  நீலமும், பச்சையும் கலந்து உண்டான நிறத்தை ஊடுருவி கலந்து நின்ற பனித் திவலைகள். சிறுக்கிய பாறைகளை தடுத்தி நிறுத்தி, கட்டியணைத்திருந்த பருத்த மரங்கள்,  அவற்றின் இடையே புதராக பூரித்து வளர்ந்திருந்த செடிகள் பலதும், சஞ்சீவ மூலிகைகளாகவும், உயிர்குடிக்கும் நஞ்சு உற்பத்தி ஆலைகளாவும் வியாபித்து விரித்திருக்க,  குதிரைமலை […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) சிறப்புப் பதிவு

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) சிறப்புப் பகுதி கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் I. கதாநாயகன் பக்கத்து கதாபாத்திரங்கள்: 1. இளமாறன்: @. சோழ தனிப்படை தளபதி. @. சோழ இளவல் நலங்கிள்ளி, பாண்டிய அரசன் நன்மாறனின் உயிர் தோழன். @. கதையின் மையப்புள்ளி இந்த கதாபாத்திரம் தான். 2. சோழ இளவல் நலங்கிள்ளி: @. ஆவூர் கோட்டையின் தலைவன். @. கரிகால சோழனின் இளைய மகன் என்று வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுபவன். @. வேல்விழி தேவியின் […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 16- ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 16. திறந்த சுரங்கம்… விரிந்த வழி இரவின் கொடூர பார்வையிலும், மேகங்கள் இருண்டு வானில் பரவியதால் எழுந்த குளிர்காற்றும் குடந்தையை எச்சரித்து சமிக்கை செய்தன. அடுத்து வரப்போகும் மணித்துளிகள், பெருமழையை மட்டுமல்ல, பெருத்த மாற்றங்களையும் குடந்தைக்கு கொண்டு வரப்போகின்றது என குறிப்பு கூறின. குடந்தைவாசிகள் யாவரும் உறக்கத்தில் மூழ்க ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரண்டாம் ஜாமத்தின் தொடக்கம். வானில் அவ்வப்போது எழுந்த மின்னல் கீற்றுகளும், இடியின் ஓசையும் குடந்தை மீது கோபத்தில் […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் – 15

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்)  15. மூன்று பெண்கள் மூன்று திசையில்… விடிவெள்ளி கடல் பஞ்சணையில் துயில் கொண்டு கண்விழித்த அற்புதமான தருணம். வெண்மதிக்கு உறக்கம் கண்ணை தழுவ, விண்மீன்கள் பவனியோடு ஏஜியன் கடல் மெத்தைக்கு சென்று கொண்டிருந்தாள். ரினீவா தீவின் மீது செக்க சிவந்த சூரிய ஒளி பட்ட போது, தீவின் கொள்ளையழகு கடலில் வந்து கொண்டிருந்த சவ்ஜித்தாவின் மரகலனுக்கு நன்கு புலப்பட்டது.  ரினீவா தீவு, கடற் கொள்ளையர்களின் சொர்க்கபுரி. செலூக்கியஸ் கையிழுப்பிய ஒரு செயற்கை […]


கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 14

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்)  குதிரை மலையில் முளைத்த அரக்கன். “மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது”. (மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி) மும்மாரி குறைவின்றி கொட்டினாலும், சமுத்திரத்தின் பேரலைகளை செங்கதிரோன் மொத்தமாக குடித்து தீர்த்தாலும், முக்கூடல் நதியலைகள் கடலில் சேர்வதால் கடலலைக்கு தாகம் தீராது என்பது போல மருத மரக்காடுகளின் நடுவே அமைந்த முத்து நகரம் மதுரை.  மதுரையை சுற்றியெழுந்த கோட்டை மதில்களை எட்டிப்பிடிக்க துள்ளியெழும் […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்)13ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 13.ரகசியமும், ராஜதந்திரமும். தெளிவான வானிலையோடு, அரபிக்கடலின் அசுர அலைகளை ஆக்கிரமித்து அடக்கி நின்ற, “ஸ்கேட்” மரக்கலனின் மேற்பகுதியில் கழுத்தில் கத்தி வைக்கப்பட்ட நிலையில், முழந்தாளிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த மனிதன், விழிகளில் கலவரம் காணப்பட்டது.  பச்சை சட்டையணித்து, கறுப்பு சீராயின் இடையே வார்ப்பட்டை கொண்டு இறுக்கி கட்டியிருந்த உடுக்கை இடையை, காக்கும் கருவி போல நீண்டு தொங்கிய உடைவாளை, இடக்கையால் அசட்டையாக தள்ளி விட்டு விட்டு… எதிரே முழந்தாள்படியிட்டு மிரண்டபடி இருக்கும் மனிதனின், […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 12-ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 12. சதுரங்க கட்டத்தில் இளமாறனுக்கு தடை… “காரிருளை விலக்கிவிட்டு ஞாயிற்றை வரவேற்க காத்திருந்த கருக்கல் வேளை”… “மெல்ல மெல்ல வான்மகள் தன் நீல முகத்தில் குங்குமப்பூவின் நிறத்தை பூசிக்கொள்ள துவங்கியிருந்தாள். அவளின் அழகை இசையாக பாடத் துவங்கியிருந்த பறவைகள், கரையைத் தழுவி தழுவி ஆலாபனை செய்த குமரிக்கடலின் பேரழலைகள், இவற்றோடு காந்தலூர்ச்சாலையின் புரவிகள் எழுப்பிய குளம்படி ஓசைகள், ரம்மியமான புது பொழுதை முன்னறிவிப்பு செய்ய… மகேந்திரகிரி மலையின் மீது காதலுடன் பரவிப்பாய்ந்த […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 11ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 11. இளமாறனின் ஆட்டம் ஆரம்பம் “வங்கத்தின் கடலலை கொஞ்சி தாலாட்டி குளிர்விக்கும் புகார் “. “அரிசிலாறு” பொன்னியுடன் சேர்ந்து பொங்கி கலந்து, கடல் தாயை கட்டிபிடிக்கும் புகாரின் ரம்யமான மாலை நேரம். ஆடிமாத்தின் காற்று நீரலைகளில் மோதி, மேலெழுந்து கரையை நோக்கி வீசிக் கொண்டிருந்தது. கடலும், ஆறும் ஒன்று கூடும் இடத்தில் அமைந்திருந்த பரதவர் குடியிருப்புகள் வழக்கம் போல உற்சாகத்தில் திளைத்து இருந்தது. கடலுக்கு புறப்படும் அவர்களின் கட்டுமரங்களும், கடலிலிருந்து கரை […]