Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Intersteller Love

Audio Puzzles

INTRO :   FIRST PUZZLE :   SECOND PUZZLE :   FOURTH PUZZLE :   FIFTH PUZZLE :  


Vinto’s Interstellar Kaadhal Episode 32(Epilogue)

அத்தியாயம் – 32   சில வருடங்களுக்குப் பிறகு…. கிரகம் : பூமி     அந்தத் திருமண மண்டபம் முழுவதும், உறவினர்களால் நிரம்பி வழிந்தது. அங்கு வைத்திருந்த பெரிய ஃப்ளெக்ஸில், ‘ஆரியன் வெட்ஸ் மதுமதி’ என்று அலங்காரத்துடன் எழுதப்பட்டிருந்தது.    ரிசப்ஷனில் நின்றிருந்த சுந்தரம்- ஜெயந்தி தம்பதியினர், திருமணத்துக்கு வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர்.    உள்ளே அமர்ந்திருந்த உறவினர்களுக்குத் தேவைக்கேற்ப உதவி செய்து கொண்டிருந்தனர் கண்ணன், துர்கா, ஸ்ரீதர் மற்றும் சித்ரா. ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் அந்த […]


Vinto’s Interstellar Kaadhal Episode 31(Final)

அத்தியாயம் – 31   நந்தினிக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்ப தொடங்கியது. தனது உடலின் எடையைக் கூட உணர முடியாத weightlessness நிலையில் இருந்தாள் அவள். முதலில், தான் ஏதாவது நினைவுகளுக்குள் இருக்கிறோமா என்று எண்ணியவளுக்கு, டைட்டனுடன் சண்டை போட்டது நினைவுக்கு வர, தன்னிடம் ஈரின் கல் இல்லாததை உணர்ந்தாள். அந்த காற்றின் வேகம் அவளைத் திருப்பி விட, அவள் கண்களுக்கு ஓர் எரிமலை தெரிந்தது.  அதைக் கண்டு அதிர்ந்த நந்தினி, தன் கயா கிரக […]


Puzzles Parchments codes

1   .– . ……. … .. -..- ……. -.– — ..- ……. .– .. .-.. .-.. ……. … . . ……. ..- -. .. –.- ..- . – …. . ……. … .. -..- ……. – …. .- – ……. .– .. .-.. .-.. ……. -.-. — — . ……. ..-. — .-. . […]


Vinto’s Interstellar Kaadhal Episode 30 Prefinal

அத்தியாயம் – 30   முதல் நாள் :   பொசய்டன் (டைட்டன்) விண்கல விமானத்தில் அமர்ந்து, “நந்தினி இறுதிக் கட்டத்தின் பார்ச்மென்ட்டை எடுத்து வந்து விடுவாளா ?” என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில், அவருடைய கடந்த கால நினைவுகள் அவரைத் தங்களுக்குள் இழுத்துக் கொண்டன.  அவர் டைட்டனாக இருந்த காலத்துக்குச் சென்றார். அப்போதே, அவருக்குப் பலம் மீது பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. அது உடல் சார்ந்த விஷயம். ஆனால், அறிவு […]


Vinto’s Interstellar Kaadhal Episode 29

அத்தியாயம் – 29     நந்தினிக்கு அவளது உலகமே இருண்டது போலிருந்தது. தான் பிறக்கும் போதே, தன்னுடைய பெற்றோரை இழந்து, பின்னர் தன்னை சொந்த மகளாகப் பாவித்து அன்பூட்டி வளர்த்த பெற்றோரைப் பிரிந்தவள், பொசய்டனின் உண்மை சொரூபத்தைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கினாள். தான் அவரை தந்தைக்குச் சமமாகக் கருதி இருக்க, பொசய்டனோ அவளை அவருடைய விளையாட்டில் ஒரு காயாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் மேலாக தன்னுடைய ஜென்ம விரோதி என்று கருதிய ப்ரொமேத்தியஸ், உண்மையில் […]


Vinto’s Interstellar Kaadhal Episode 28.1

அத்தியாயம் – 28.1 நந்தினியின், ‘மூமூ’ என்ற அலறலைக் கேட்டு, ஆதி, ஆரியன் மற்றும் லூனா அதிர்ந்தனர். சில நொடிகள் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதற்குப் பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது மூமூ தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்து விட்டதென்று.  ப்ரொமேத்தியஸின் முகத்தில் கூட சிறிது அதிர்ச்சியின் சாயல் தென்பட்டது. நந்தினிக்குத்தான் தன்னுடைய இதயத்தை யாரோ பிழிவது போல இருந்தது. தாய், தந்தை, பூமி கிரகத்தில் இருக்கும் தனது பெற்றோர், இவர்கள் வரிசையில் […]


Vinto’s Interstellar Kaadhal Episode – 27

அத்தியாயம் – 27 அந்தக் கோட்டையை நெருங்க நெருங்க, அதன் முழு அழகைக் கண்டு பிரமித்துப் போனார்கள் நால்வரும். அந்த விலங்குகள் அவர்களை அந்தக் கோட்டைக்கு அருகே இறக்கி விட, அவர்கள் கோட்டையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் அந்தக் கோட்டைக்குள் புகுந்து, சுற்றிலும் பார்த்தபடி செல்ல, பலநூறு ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இல்லாமல் வசித்து வந்த உயிரினங்கள் அனைத்தும் அவர்கள் நால்வரையும் கண்டு பயந்து ஓடத் தொடங்கின. அதையெல்லாம் கண்டு கொள்ளாது, அவர்கள் வேகமாக தங்கள் […]


Vinto’s Interstellar Kaadhal Episode – 26

அத்தியாயம் – 26 அந்த விண்கலம் ஆர்ட்டர் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருக்க, நால்வரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். லூனாவுக்கும் அந்தக் கிரகத்தின் பெயர் மட்டுமே தெரியுமே ஒழிய, அதைப்பற்றிய விபரம் ஏதும் தெரியாது. இப்போது அவர்களது கண்களுக்கு முன் அந்த அதிசயம் விரிந்திருந்தது. ‘ஆர்ட்டர்’ என்பது ஒரு கிரகமாய் அல்லாமல் ஐந்நூறு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது போல அவர்களுக்கு தென்பட்டது. இதில் எந்த இடத்தில் இறங்கி, எங்குச் செல்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. சிறிது […]


Vinto’s Interstellar Kaadhal Episode 25

அத்தியாயம் – 25 அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவியது. நந்தினி, ஆரியன், ஆதி மூவரும் சிறிதளவு கூட அசையாமல் நின்றிருந்தனர். அந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது என்று நினைத்த நந்தினி, ஓரடி முன்னால் எடுத்து வைக்க, வீரர்களும் தங்களது ஆயுதங்களைத் தூக்கினர். அதைக் கண்ட நந்தினி பின்வாங்கினாள். ஆரியன், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது ?” என்று கேட்டு சலிக்க, ஆதி, “ஏன் […]