இவன் வசம் வாராயோ! – 4 நிரஞ்சனாவின் கணவனை எங்கு பார்த்தோம் என்ற கேள்வி மனதின் ஒரு மூலையில் குறுகுறுத்தபடி இருக்க, தமிழ் தன் அலுவல்களை கவனத்துடன் செய்து கொண்டிருந்தான்! திடீரென்று நிரஞ்சனாவின் கணவன் அந்த மின்தூக்கியில் தன் கைப்பேசியை எடுக்கும் போது, தவறவிட்டு தான் எடுத்துக் கொடுத்த அந்த அடையாள அட்டையைப் பற்றிய நினைவு வந்தது தமிழுக்கு! அதில் எழுதியிருந்த நிறுவனத்தின் பெயரை நன்றாக பார்த்துவிட்டே அவனிடம் திருப்பித் தந்திருந்தான் தமிழ். தன்னுடைய தொழில் கொடுத்த […]
3. வெலவெலத்துப் போய் ஓடி வந்தவள் அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைத் தாழிட்டுக் கொண்டு அப்படியே கதவில் சாய்ந்து நின்றாள்! “ஒரு வேளை நா சொன்னது அவனுக்கு கேட்டிருக்குமோ.. நல்ல வேளை நா அவன லூசுன்னு சொன்னதுக்கு அவன் என்னை எதும் சொல்லல..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்! ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது! வேக வேகமாக மூச்செடுத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சில நிமிடங்கள் கதவில் சாய்ந்தபடியே நின்றிருந்து […]