Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathal Kaanaang Kuruvigal

காதல் கானாங்குருவிகள்..! – 21 (நிறைவுப் பகுதி)

காதல் 21: மகாவை மீண்டும் நேரில் பார்த்த பிறகு தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. பாண்டியனோ மகளின் பிடித்த கையை விடவேயில்லை. காயத்ரி ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தாள். “எனக்கு ஒண்ணுமில்லை காயத்ரி. எதுக்கு அழுதுகிட்டு இருக்க..? முதல்ல அழுகையை நிறுத்து..” என்றாள் மகா. “இருந்தாலும் நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா..?” என்றாள் காயத்ரி. “ரொம்ப நன்றி மகா. காயத்ரியையும் அவங்க கடத்தியிருந்தா, இந்நேரம் ஊருக்குள்ள பல மாதிரி பேசியிருப்பாங்க. வயசுப் பொண்ணு பேர் கெட்டுப் போயிருக்கும்..” […]


காதல் கானாங்குருவிகள்..! – 20

காதல் 20:   கோயம்புத்தூர் சிட்டியை விட்டு வெளியே இருந்த அந்த கெஸ்ட்ஹவுசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகா பத்ராவிற்கு அப்போது தான் லேசாக மயக்கம் தெளிந்தது. பலவீனமாய் கண்களைத் திறந்தவளுக்கு தன்னைச் சுற்றிலும் இருந்த இருட்டு ஒரு அச்சத்தைக் கொடுக்க, தனக்கு முன்னால் இருந்த எதுவும் அவளின் கண்ணிற்கு தெரியவில்லை. இதயம் சுவாசத்திற்கு ஏங்க, சில வினாடிகளில் கொஞ்சம் சிரமமின்றி மூச்சு விட்டாள். தான் கடத்தப்பட்டிருப்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அரைகுறை மயக்கத்தில் அசோக்கின் பேச்சு சத்தம் […]


காதல் கானாங்குருவிகள்..! – 19

காதல் 19: அடுத்து வந்த மூன்று நாட்களும் ஈஸ்வரன் ஒரு இடத்தில் இல்லை. தீவிரமாய் எதையோ செய்து கொண்டிருக்கிறான் என்று மட்டும் மகாவிற்கு தெரிந்தது. ஆனால் என்ன செய்கிறான் என்று தான் தெரியவில்லை. அவள் கேட்டாலும் அவன் சொல்லும் நிலைமையிலும் இல்லை. ஆனால் அவன் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மகாவிற்கு பிபி ஏறியது தான் மிச்சம். அவன் லேப்டாப்பில் எதையாவது செய்து கொண்டிருக்க, இவள் அதை எட்டிப் பார்க்க, ஈஸ்வரன் இவளை முறைக்க என்று தான் நேரம் […]


காதல் கானாங்குருவிகள்..! – 18

காதல் 18:   “வாங்க மாப்பிள்ளை..! என்ன இவ்வளவு தூரம்..? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு..?” என்றார் பாண்டியன், அஷோக்கைப் பார்த்து. “ஒரு முக்கியமான விஷயம் பேசணும் மாமா..! அதான் நேர்லயே பார்த்து பேசிட்டு போயிடலாம்ன்னு வந்தேன்..” என்றான் அசோக். “என்ன விஷயம் மாப்பிள்ளை..? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..” என்றார். “இதையெப்படி உங்ககிட்ட சொல்றதுன்னே தெரியலை மாமா. ஆனா, சொல்லாமலும் இருக்க முடியாது..” என்றான். “முதல்ல விஷயம் என்னன்னு சொல்லுங்க மாப்பிள்ளை..” என்றார் பாண்டியன். […]


காதல் கானாங்குருவிகள்..! – 17

காதல் 17:   இரண்டு நாட்கள் என்ற நிலையில், ஈஸ்வரனின் உடல்நிலை சரியாக, ஒரு வாரம் ஆகியது. இந்த ஒரு வாரத்தில் மகாவிடம் நல்ல மாற்றம் தெரிந்தது அவனுக்கு. வாய் ஒன்று தான் குறையவில்லையே தவிர, ஓரளவிற்கு அவனுடன் பொருந்திப் போக முயன்றாள் மகா. இந்த ஒருவார காலமும் அவனை சீண்டிக் கொண்டு தான் இருந்தாள். “இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகணும் மகா..” என்றான் ஈஸ்வரன். “எதுக்குங்க..?” என்றாள். “உனக்கு இன்னைக்கு செக்கப் போகணும். எனக்கும் காட்டனும்..” என்றான் […]


காதல் கானாங்குருவிகள்..! – 16

காதல் 16:   கதவைத் திறந்த வசுந்தரா, கைகால்களில் கட்டுடன் வந்த ஈஸ்வரனைப் பார்த்து பதட்டமடைந்து விட்டார். “என்னாச்சு ஈஸ்வர்? எப்படி அடி பட்டது..?” என்று அவனை ஆராய்ந்தவர், அடுத்தநிமிடம் கண்ணீர் விட, “அம்மா அழாதிங்கம்மா..! சின்ன ஆக்சிடென்ட். வேற ஒண்ணுமில்லை..” என்றான் சமாதானமாய். “சின்ன ஆக்சிடன்ட்டா..? இவ்வளவு பெரிய கட்டுப் போட்ருக்கியேப்பா..?” என்றார் வசுந்தரா. “அம்மா, நிஜமாவே சின்ன காயம் தான். ரெண்டு நாள்ல சரியா போய்டும். கட்டு தான் பெருசா தெரியுது..” என்றான். “என்னமோ […]


காதல் கானாங்குருவிகள்..! – 15

காதல் 15: “என்ன ஈஸ்வரா..? தோட்டத்துக்கு போறேன்னு சொல்லிட்டு, அதுக்குள்ளே வந்துட்டிங்க..?” என்றார் வசுந்தரா. “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா..! மகா வீடு வரைக்கும் போயிருந்தோம். அதான் அப்படியே வீட்டுக்கே வந்துட்டோம். இவளை வீட்டுல விட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்ம்மா..” என்றான். “என்னப்பா மறுபடியும் உங்களுக்குள்ள சண்டையா..?” என்றார். “சண்டையெல்லாம் ஒண்ணுமில்லைம்மா…” என்றான். “சரி, நீ உள்ள வந்து சாப்பிட்டு போ ஈஸ்வரா..” என்று வசுந்தரா சொல்லவும், “அதுவும் சரிதான்..” என்றபடி உள்ளே சென்றான். “நான் தான் சொன்னேன்ல வசுந்தரா, பணக்காரன் […]


காதல் கானாங்குருவிகள்..! – 14

காதல் 14: ஈஸ்வரனின் போன் அடித்துக் கொண்டிருக்க, அவனோ மும்முரமாய் மனைவிக்கு இளநீர் வெட்டிக் கொண்டிருந்தான். ‘இந்த போன் அடிச்சுகிட்டே இருக்கு. காது கேட்குதான்னு பாரு..செவிட்டுப் பயலா இருப்பான் போல..’ என்று அவள் மனதிற்குள் நினைக்க, “காதெல்லாம் கேட்குது. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்.. நீ சும்மா தான இருக்க..? அந்த போனை எடுத்து பேசவேண்டியது தான..?” என்றான் ஈஸ்வரன். அவன் சொல்லவும் போனை எடுத்தவளுக்கு, அதில் அவள் வீட்டு நம்பர் தெரியவும் ஒரே யோசனையாக இருந்தது. […]


காதல் கானாங்குருவிகள்..! – 13

காதல் 13: இரவெல்லாம் முழித்திருந்தவள் காலையில் தான் லேசாக கண்ணயர்ந்தாள்.  ஈஸ்வரன் எழுந்து பார்க்கும் போது மகா தன்னை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். விட்டால் கீழே விழுந்துவிடும் அளவிற்கு கட்டிலின் ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். “அவ்வளவு பயம் இருக்குல்ல..? அப்பறம் என்ன வீர வசனம் வேண்டி கிடக்கு..?” என்று சிரித்துக் கொண்டவன், வெளியே வந்தான். “ஈஸ்வர், மகாவை என்ன இன்னமும் காணோம்..?” என்றார் வசுந்தரா. “நல்லா தூங்குறாம்மா..!” என்றான். “பொழுது விடுஞ்சு எட்டு மணி […]


காதல் கானான்குருவிகள்..! – 12

காதல் 12: ஊருக்கு வந்து நிவேதாவைப் பார்த்த மகாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி. புதிதாய் கல்யாணம் ஆன எந்த ஒரு மகிழ்ச்சியும் அவள் முகத்தில் இல்லை. முகத்தில் பேருக்கு இருந்த புன்னகையைக் கண்டு கொண்டாள் மகா. “நிவி உண்மையை சொல்லு..! நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கியா..? உன்னைப் பார்த்தா அப்படி தெரியலையே..?” என்றாள் மகா. “உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் தான் மகா. எனக்கென்ன குறை? நான் நல்லாத்தான் இருக்கேன். ஒரு பிரச்சனையுமில்லை. நீ எப்படி இருக்க? வேலையெல்லாம் […]