Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – Epilogue : 2

மகனும், மருமகளும் வாடிய முகத்துடன் செல்வதை பார்த்த சிவகாமிக்கு மனசு தாளவில்லை, “கோவிலுக்கு போலாம்னு தான் சொன்னேன்டா… வேறு எதுவும் தப்பா நான் சொல்லலையே.” என்று இளையவனிடம் முறையிட,   “நீ விடுமா. இன்னைக்கு வந்த அந்த கடைசி வீட்டு ஆன்ட்டி செய்த கூத்து அவனை இப்படியெல்லாம் பேச வச்சிடுச்சு.”   “இல்லைடா… அவன் தப்பா நினைச்சிட்டான். இனியா இல்லைனா இன்னைக்கு இதயன் நம்ம முன்னாடி பேசி, சிரிச்சி, நடமாடிட்டு இருக்க மாட்டான். அதனால் இனியா தப்பே […]


கள்வனே கள்வனே – Epilogue : 1

கள்வனே கள்வனே – Epilogue   ஐந்து வருடங்கள் ஓடிட…    அனைத்தும் சீராகி இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை  திரும்பியிருந்தது. இவர்களுடையதும் தான். இரு ஐ-ஸ்கொயரும் சென்னைக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. தற்போது இதயன் பகுதிநேர பேராசிரியனாகவும், மீதிநேரம் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே நோயாளிகளுக்கு சிகிச்சையும் கொடுக்கிறான்.   “வாங்கக்கா…” இதழ்கள் பரந்து விரிந்து முகம் கொள்ளா புன்னகையுடன் வந்த பெண்மணியை அழைத்தார் சிவகாமி. இப்போதெல்லாம் அந்த புன்னகை ஒருசில நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இணைபிரியாததாய் […]


கள்வனே கள்வனே – 37.2

“சரி சரி போதும். இதுவரைக்கும் போனது போகட்டும். இனி அடுத்து என்ன செய்யப் போறீங்கன்னு இனியன் கேட்டான், அந்த கேள்வி உங்க எல்லோருக்குமே இருக்கும்னு எனக்குத் தெரியும்.” என்றவன் குறிப்பாய் ரமேஷை அழுத்தமாய் பார்த்துவைத்தான்.  “ஆறுவருடம் எதுவுமே செய்யாமல் ஸ்டில்லா இருந்தது மட்டுமில்லாமல் அதற்கு முன்பும் எனக்கு பெரிதாக அனுபவம் கிடையாது. கொஞ்ச நாள் தான் வேலை செய்தேன் சோ உடனே மருத்துவம் பார்க்கவெல்லாம் போய்விட முடியாது. அதுவரை இங்கேயே ஏதாவது கல்லூரியில் முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.” […]


கள்வனே கள்வனே – 37.1

கள்வன் – 37 இன்னும் ஒழுங்குப்படுத்தப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெரிய பைகள் கிடத்தப்பட்டிருந்த தங்களின் அறையினுள் நுழைந்தவன் பார்வை சுவரோரம் தரையில் கிடந்த மெத்தையில் அமர்ந்து தன் அலைபேசியில் மூழ்கியிருக்கும் இனியாவின் மீது படிந்தது. அரவமின்றி அறைக்கதவை தாழிட்டவன் பூனை நடையிட்டு அவளை நெருங்கி, அவள் தோளில் கைபோட்டு அவளை அணைத்தபடி அமர்ந்தான். தன் தோளில் திடுமென அவனது கரம் வந்து விழுந்திருந்தாலும் அவனாகத்தான் இருக்கும் என்ற யூகத்தில் பட்டென்று அவனது கரத்தினை தட்டிவிட்டாள் அவள். “எல்லாம் […]


கள்வனே கள்வனே – 36

கள்வன் – 36 “எப்படி இருக்கீங்க மிஸ்டர். அஜய்? நாம பேசியே பலவருடம் ஆச்சே?” அஜயின் அறையில் அவனுக்கு எதிரே சுவாதீனமாய் அமர்ந்து அசிரத்தையாய் கேள்வி எழுப்பினான் இதயன். “இப்போ உனக்கு என்ன வேணும்?” அஜயின் முகம் இறுகியிருக்க அவன் என்ன நினைக்கிறான் என்று இதயனால் யூகிக்க முடியவில்லை.  “பரவாயில்லை. நேராவே விஷயத்துக்கு வந்துட்டியே.” பேச்சை வளர்க்கவென இதயன் தூண்டிலைப் போட, அதில் விழுவேனா என்று போக்கு காட்டினான் அஜய். “நீ தான் சுத்தி வளைத்து பேசிட்டு […]


கள்வனே கள்வனே – 35.2

தாடை எலும்புகள் புடைக்க, பற்களை அழுந்த கடித்தவன் தன் அலைபேசியை எடுத்து வேகமாக அழைத்தான். மறுமுனையில் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கான அரவம் விழவும், “என்ன மிஸ்டர். அஜய் எப்படி இருக்கீங்க?” சிங்கமென கர்ஜித்தது இதயனின் குரல். “ஹலோ யார் பேசுறது?” இதயனின் குரலை இனம்காணத் தெரியாதவன் கேள்வி எழுப்ப, நக்கலாய் பதில் கொடுத்தான் இதயன். “அதுதானே என் குரல் எப்படி நியாபகம் இருக்கும் மிஸ்டர். அஜய்?” “புல்ஷிட்.” “ஆறு வருடம் ஆச்சே எப்படி என் குரல் எல்லாம் நியாபகம் […]


கள்வனே கள்வனே – 35.1

கள்வன் – 35 கிளம்பும்போது செல்வியாக சென்றிருக்க திரும்பி அந்த மண்ணில் கால்பதிக்கும்  போது திருமதியாக வந்திறங்கினாள் இனியா. முதல் முறை வந்தபோது இருந்த நெருடல், குழப்பம், பயம் என்று எதுவுமின்றி உற்சாகமாய் இறங்கியவளை அந்த மண்ணும் வாஞ்சையாய் தன்னகத்தே வரவேற்றுக்கொண்டது. “இன்னைக்கும் மருத்துவமனை காரையே வரச்சொல்லி இருக்கியா?” தங்களை அழைக்க ஏற்பாடு செய்திருந்த வண்டி வரத்தாமதமாக, ரயில் நிலையத்தின் வெய்டிங் ஹாலில் இருவரும் அமர்ந்திருக்க கேள்வி எழுப்பினான் இதயன். “ஆமா, அவங்க காரே வந்தால் அறைக்கு […]


கள்வனே கள்வனே – 34.2

வீழ்ந்தவன் எழவே மாட்டான், வாழ்க்கையில் தோற்று ஒன்றுமில்லாமல் போய்விடுவான் என்று இதயனை பற்றி அவனின் சொந்தங்கள் நினைத்திருக்க, நேரம் காலம் கூடிவந்து இன்று தெம்பாய் சக்கரநாற்காலியில் நிமிர்ந்தமர்ந்து வருபவர்களை எல்லாம் புன்னகை மாறாது இருகரம் கூப்பி, வாய்நிறைய முறைசொல்லி அழைத்து வரவேற்று தன் மனைவியை அனைவரிடமும் பெருமையாய் அறிமுகப்படுத்தி வைக்க, அவனின் உறவினர்கள் மத்தியில் உயர்ந்து போனாள் இனியா. அவளால் அவனின் மதிப்பும் சபையில் உயர்ந்தது. எளிதாய் எள்ளல் பேசிட இனி இதயன் தனியாள் இல்லையே,  மனைவியின் […]


கள்வனே கள்வனே – 34.1

கள்வன் – 34 “அங்கேயே நில்லு,” வீட்டின் உள்ளே அடிஎடுத்து வைத்து நுழையும் முன்னே அன்னையின் கட்டளையில் திடுக்கிட்டு நின்றவள், பீதியுடம் நிமிர்ந்து கீதாவைக் காண, “எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாமே,” என்று இனியாவுடன் வந்திருந்த சிவகாமி சங்கடத்துடன் வேண்டினார். அதை கண்டுகொண்டது  போல காட்டிக்கொள்ளாமல், இனியனை அழைத்தவர், “கார் எடுத்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாடா.” என்று அவனை அனுப்பிவைத்துவிட்டு திகைப்புடன் தன்னை நோக்கிய இருவரிடமும் மலர்ந்தும் மலராத முகத்துடன், “கல்யாணம் […]


கள்வனே கள்வனே – 33.2

இனியாவை அழைக்கவென வந்திருந்தவன், இவர்களின் இந்த பரிமாற்றங்களை தொலைவிலிருந்தே பார்த்துக்கொண்டே அவர்களை நெருங்கி, “அக்கா…” என்றழைத்தாலும் அவனின் பார்வை முழுதும் இதயனிடம் தான் இருந்தது. “என்ன அப்படி பார்க்குற? உன்னோட விருப்பத்தில் பாதியையாவது நிறைவேற்றிட்டனா இனியன்?” முதலும் கடைசியுமாக கொச்சி செல்லும் முன்னே இனியன் யாசித்ததற்கான பதிலாய் இதயன் பேச, “ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமா,” மகிழ்ச்சியில் இதயனை நெருங்கி அவனின் கைகளை பற்றிக்கொண்டான் இனியன். “உனக்கிருக்கும் தெளிவும் சாமர்த்தியமும் உன் அக்காக்கு இல்லை இனியன்.” என்று […]