அத்தியாயம் – 19 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கதிரின் வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது. அன்று சந்தியாவிற்கு வளைகாப்பு. தன் திருமணப் புடவையில், தாய்மையின் பொழிவால் சந்தியா ஜொலிக்க, கதிர் அவளை விழி எடுக்காமல் பார்த்து ரசித்தான். லக்ஷ்மியும், வேதவல்லியும் முகத்தில் பூரிப்போடு விருந்தினரை வரவேற்க, பெரியசாமியும், துரையும் தங்கள் குலம் தழைக்க வாரிசு வருவதை எண்ணி மகிழ்ந்தனர். கதிருக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை. ஒரு வீட்டையும், காரையும் வாங்கி விட்டு, அதற்கு லோன் கட்டியே காலம் […]
“என்னம்மா நீங்களா சிரிக்றீங்க?” என்றதும், வேதவல்லி மறைக்காமல் காலையில் நடந்ததைச் சொல்ல, சித்தார்த் “ரொம்பப் பீல் பண்ணாளா…” என்றான் கவலையாக. “அதெல்லாம் இல்லை. அவளுக்கு அவங்க அப்பா எப்பவும் அவளைத் தான் தாங்கனும்… இப்ப போட்டிக்கு நீ வந்திட்டேன்னு பொறாமை… அதே சமயம் உன்னை விட்டும் கொடுக்க மாட்டா… நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில நீ வந்திட்டியான்னு போன் பண்ணுவா….” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீட்டின் தொலைபேசி ஒலித்தது. வேதவல்லி புன்னகையுடன் சென்று போனை […]
அத்தியாயம் – 18 மறுவாரம் சனிக்கிழமை விடியற்காலையிலேயே வந்த கதிர் கதவை திறந்த தன் அம்மாவிடம் “நான் போய் அத்தையை பார்த்துட்டு சந்தியாவைக் கூட்டிட்டு வர்றேன் மா…” என்று சொன்னவன், அவர் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து விரைய, ‘இப்ப கதிர் நிஜமாவே வந்தானா இல்லை கனவா…’ என்ற குழப்பத்திலேயே லக்ஷ்மி உள்ளே சென்றார். “யாரோ வந்த மாதிரி இருந்ததே யாரு?” என்று கேட்டபடி பெரியசாமி வர, “எல்லாம் உங்க பிள்ளை தான். வந்தவன் உள்ளே கூட […]
திடீரென்று எதிர்பாராமல் கதிரை பார்த்ததும் சந்தியா அப்படியே நின்றாள. முகம் சிவக்க கண்களில் கண்ணீரோடு நின்றவளை பார்த்த கதிர் “காரை ஷெட்ல விட்டுட்டு வர்றதுக்குள்ள எதுக்குடி இங்க ஒரு அலப்பரைய ஆரம்பிச்சு வச்சிருக்க. உங்க அப்பா என்னைக் கூப்பிடலைன்னு உனக்குத் தெரியுமா. தெரியாம எதுக்குப் பேசுற?” என்று அவன் சந்தியாவைத் திட்ட, தன் மகள் திட்டு வாங்குவதைப் பொறுக்க முடியாத துரை “அதுக்குத் தெரியாது இல்ல… நீங்க இங்க இல்லைன்னதும், என்னமோ ஏதோன்னு நினைச்சுடுச்சு. நீங்க கை […]
கதிர் மருத்துவமனை அருகில் இருந்த ஹோட்டலில் ஒரு அறை எடுக்க, அதில் அவனும் துரையும் இரவு தங்கிக்கொண்டனர். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்படி வருபவர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவார்கள். மூன்று நாட்கள் சென்ற பிறகுதான் வேதவல்லியால் எழுந்து உட்கார முடிந்தது. அவருக்கு அடிவயிற்றில் தையல் போட்டிருந்ததால், ரொம்பவும் வலி இருந்தது. அவர் வலியில் துடிக்கும் போது எல்லாம் சந்தியாவும் அழுவாள். ஐந்து நாட்கள் ஆனதும் வேதவல்லிக்கு வலி குறைந்தது. இந்த ஐந்து நாட்களும் […]
அத்தியாயம்- 17 இவர்கள் அனைவரும் மதுரையைச் சென்று சேர்ந்த போது, வேதவல்லியின் ரத்த போக்கு நிறுத்தப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் தயார் செய்து கொண்டிருந்தனர். வேதவல்லி இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை. அவரைத் தனி வார்டில் வைத்திருந்தனர். அவரை அந்த நிலையில் பார்த்த சந்தியா மயங்கி விழுந்தாள். அவளும் ஒரு மருத்துவர் என்றாலும் முதலில் அவள் தன் தாய்க்கு மகள். மயக்கத்தில் இருந்து தெளிந்த சந்தியாவிடம் கதிர் ஒரு குளிர்பானத்தைக் கொடுக்க, சந்தியா அதைக் குடிக்க […]
சந்தியா வண்டியில் இருந்து கீழே இறங்கி நின்றவள் “உங்களுக்கு என்னோட பேசணும், என்னைப் பார்க்கனும்ன்னு எல்லாம் ஆசையே இல்லை. நான்தான் உங்களையே நினைச்சிட்டு இருக்கேன். நீங்க இங்க வர்றத கூடச் என்கிட்ட சொல்லலை.நான் இன்னைக்கு எதேச்சையா வந்ததுனால உங்களைப் பார்த்தேன். இல்லன்னா என்னைப் பார்க்கமேலே போய் இருப்பீங்க அப்படித்தானே மாமா.” என்று சந்தியா கதிரை குற்றம் சொல்ல, கதிர் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவன் கொண்டு வந்த பையை அவளிடம் கொடுக்க, எதற்கு என்று புரியாமல் […]
அத்தியாயம்– 16 மறுநாள் கல்லூரிக்கு வந்த சந்தியாவின் முகத்தில் அத்தனை சோகம். எப்போது கதிரை விட்டு பிரிந்து வந்தாலும் இரண்டு நாட்களுக்குச் சந்தியா அப்படித்தான் இருப்பாள் என்பதால் சித்தார்த் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் சந்தியா அப்படியே இருக்க, சித்தார்த் அவளிடம் தனிமையில் விசாரித்தான். கதிரிடமே சொல்லவில்லை சித்தார்த்திடம் சொல்லும் விஷயம் இல்லை என்பதால், சந்தியா வேறு எதோ காரணம் சொல்லி சமாளித்தாள். சித்தார்த்துக்கு அவள் எதோ காரணம் சொல்லி சமாளிக்கிறாள் என்று […]
சந்தியா குளித்து முடித்து வெளியே வந்த போது, கதிர் மெத்தையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். கதிர் சந்தியாவைக் கண்டுகொள்ளவேயில்லை. பேப்பர் படிப்பதிலேயே கவனமாக இருந்தான். சந்தியா ஈராமான கூந்தலை விரித்து விட்டவள், முகத்திற்கு ஒப்பனை செய்து நெற்றியில் பொட்டை வைத்துக்கொண்டே கதிரை பார்க்க, அவன் அப்போதும் பேப்பர் தான் படித்துக்கொண்டிருந்தான். சந்தியா நைட்டியில் இருந்தாள். புடவை மாற்ற வேண்டும். கதிர் இருந்ததால், கீழே சென்று மாற்றுவோம் என்று நினைத்துக் கையில் புடவையை எடுத்துக்கொண்டு திரும்ப ஒரு அடி எடுத்து […]
“நான் சமையல் கத்துக்கிட்டா, நீங்க உடனே சென்னைக்கு மாத்திட்டு வந்துடுவீங்களா….” என்று சந்தியா கேட்டதிலேயே, விட்டால் இவள் இன்னும் ஒரு வாரத்தில் சமையல் கற்றுக் கொண்டு விடுவாள் என்பதை உணர்ந்த கதிர், இவளிடம் என்ன சொல்வது என்பது போல் பார்க்க, சந்தியா அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்தாள். “சந்தியா பாலா என்னைவிட நாலு வருஷம் சீனியர். நீ அவங்களையும் நம்மையும் கம்பேர் பண்ணாத. நான் இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கல்யாணம் பண்றதாவே இல்லை. உங்கப்பா பிரச்சனை […]