Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 11 (2)

“அந்த ரெண்டு இன்சிடென்டுக்கும் நான் தான் காரணம்..” என்று தயங்கி சொல்ல மேக்னாவோ, “அடப்பாவி..” என்றாள் அதிர்ச்சியில் வாயில் கை வைத்து… “ஹே.. நான் எதுவும் பண்ணல ப்பா.. என்னை அறியாம நடந்தது..” என்று அவசரமாய் மறுத்தவள் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் கதையையும் கூற அதற்குள் தூங்கி எழுந்து வந்துவிட்டான் ஆரியன். “தூங்கினா எழுப்பி இருக்கலாம் தானே.. என் தலைவன் படம் மிஸ் ஆகிடுச்சு..” தங்கை ஓட்டுவாள் என தெரிந்து தானே முன் கூட்டியே சமாளிக்க, “அந்த […]


குழலிசை அழகே – 11

அத்தியாயம் – 11   ஆர்யன் கொடுத்த யோசனைபடியே தன் குழுவிடம் பேச அவர்களுக்கும் அதில் அத்தனை மகிழ்ச்சி..!! “சூப்பர் சக்தி.. நீ இல்லாமல் ஒரு கம்ப்ளீட் ஃபீல்லே இல்லை.. இதுவும் நல்ல ஐடியா தான்.. உனக்கான போர்ஷனை நீயே ஷூட் பண்ணி அனுப்பிட்டால் நாங்க இங்க எடிட் பண்ணிப்போம்..” என்று உற்சாகமாய் சொல்ல அவளுக்கும் ஆர்வம் வந்தது. அதிலும் யாமினியின் பேச்சுகள் அவளை குழம்பி கண்டபடி அலைபாய்ந்த எண்ணங்களை சற்று தெளிய வைத்தது எனலாம்.. அன்று […]


குழலிசை அழகே – 10

அத்தியாயம் – 10 இருவரும் மாடியில் இருந்து இறங்கி வந்தபோது ரம்யா ஹாலில் தான் அமர்ந்திருந்தார். “ரெண்டு பேருக்கும் டீ போட்டு வைச்சு இருக்கேன் சக்தி..” இவர்களை கண்டதும் சொல்ல, “சரிங்கத்தை..” என சக்தி எடுத்துவர உள்ளே போய்விட ஆரியன் அன்னையோடு அமர்ந்து அளவளாவினான். அவரும் எப்போதும் போல் தான் பேசினாரே தவிர, ‘இன்னைக்கு உன் பொண்டாட்டி என்ன பண்ணினா தெரியுமா..’ என்று குற்றம் படிக்கவில்லை. இப்பொழுது மட்டும் அல்ல.. என்றுமே சக்தியை பற்றி மகனிடம் குறை […]


குழலிசை அழகே – 9

அத்தியாயம் – 9 மிஸ். சக்திஸ்ரீ மிஸஸ். சக்திஸ்ரீயாக மாறி நாட்கள் சில ஓடியிருந்தது. ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு எத்தனை நாள் தான் முகம் திருப்ப முடியும்..? அதுவும் ரம்யாவுடைய குணத்திற்கு அப்படியெல்லாம் இருக்கவே முடியாது.. தங்கள் ஆசைப்படி மகன் திருமணம் நடக்கவில்லை.. சக்தி தான் மருமகள்.. நடந்த எதையும் மாற்ற முடியாது.. என்ற நிதர்சனத்தை உணர்ந்து அதை ஏற்க பழகி இருந்தார். சக்தியோடு கொஞ்சம் கொஞ்சமாய் பேசவும் தொடங்கி இருந்தார். அதிலும் பாதி சக்தியை […]


குழலிசை அழகே – 8

அத்தியாயம் – 8 ஜிம்மில் தொடர்ந்து ஒலித்த ஹிப்ஹாப் பாடலை ‘ஹம்’ செய்தப்படி வொர்க் அவுட் செய்துக் கொண்டிருந்தான் ஜெய். வியர்வை வழிய தீவிர வொர்க் அவுட்டின் இடையே தன் அருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவன் நிச்சயம் ஆரியனை எதிர்பார்க்கவில்லை. “டேய்..” என்ற அவனின் அதிர்ச்சியான விளிப்பில், “என்ன டா.. எங்கும் பிடிச்சுகிச்சா..” என்று கேட்டதோடு நில்லாமல் அவனை பார்வையாய் ஆராய்ந்தான். “எனக்கு எங்கேயும் பிடிக்கல.. உனக்கு தான் கிறுக்கு பிடிச்சு இருக்கு போல.. […]


குழலிசை அழகே – 7 (2)

இவ்வாறு வெவ்வேறு மனநிலையில் இருக்கும் மனிதர்கள் இடையே அவர்கள் திருமணமும் நடந்து முடிய இருவரின் தோழமைகளால் கேலி கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை. எல்லாம் ஆரியன் – சக்திக்கு பொதுவான நட்புகள் தான் என்பதால் இருவரையும் தரமாய் வைத்து செய்ய பதிலுக்கு இவர்களும் கவுண்டர் கொடுக்க என அங்கே நிலவிய இறுக்கம் தளர்ந்து கலகலப்பானது. “யப்பாடி.. ஸ்ரீ.. நீ இவ்வளவு பேசுவியா..?? உன்னை ரொம்ப சைலன்ட்னு தப்பு கணக்கு போட்டுட்டோமோ.. இல்லை எங்கள்ட்ட மட்டும் தான் அமைதியா..” என யோகி […]


குழலிசை அழகே – 7

அத்தியாயம் – 7 தன்னை சுற்றி நடக்கும் எதையுமே நம்ப முடியாமல் திகில் பிடித்து அமர்ந்திருந்தாள் சக்தி. ஹோம குண்டலத்தின் முன் கழுத்தில் பூமாலையும் மணபெண்ணிம் சர்வ அலங்காரத்தோடு அவளும் அருகே மணமகனாய் ஆரியனும் அமர்ந்திருக்க இன்னும் சில நிமிடங்களில் நடக்கவிருக்கும் தங்கள் திருமணத்தை பூரிப்போடு எதிர்நோக்க வேண்டியவளோ அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள். சுற்றி இருக்கும் யார் முகத்திலும் முழு மகிழ்ச்சி இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே வலம்வர அதுவே அவளையும் துவண்டு போக செய்தது. அந்த வலி […]


குழலிசை அழகே – 6

அத்தியாயம் – 6 கரும் போர்வை போற்றி நிலவும் உறங்க தயாராகிய வேளையில் தான் சக்தியை காண வந்தான். கதவை திறந்த மனோஜ் ஆரியனை கண்டதும், “வாடா.. விஷேஷம் நல்ல படியா முடிஞ்சுதா..” என்று விசாரிப்போடு வரவேற்க மைய்யமாய் தலையசைத்தவன் சக்தியையே விழிகளால் தேட அதனை உணர்ந்து, “ரொம்ப வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டாங்கல்ல.. அதான் மூணாவது ஆளை வீடியோ காலில் ஓரண்டை இழுத்துட்டு இருக்காங்க..” சிரிப்போடு யூ எஸ்ஸில் இருக்கும் மற்றோரு தோழி ஏஞ்சலினை […]


குழலிசை அழகே – 5

அத்தியாயம் – 5 பதில் சொல்லாமல் சக்தி தன்னையே பார்த்தப்படி நிற்கவும், “என்ன டா..” என பரிவோடு கேட்க மீண்டும் அவள் மார்பில் சாய்ந்து தேம்பி அழுதாள். “சக்தி.. நாம ஸ்டேஷன்ல நிக்கிறோம்.. அழாத.. ப்ளீஸ் கண்ட்ரோல் யூர்ஸெல்ப்.. எல்லாரும் நம்மை தான் பார்க்குறாங்க பார்..” என்று அவள் கவனத்தை திசை திருப்ப அது கொஞ்சம் வேலை செய்தது. அவனிடம் இருந்து விலகி கண்களை துடைத்து கொள்ள, “போகலாம்.. வா..” என்று அவள் கை பற்றி மறுக்கையில் அவள் […]


குழலிசை அழகே – 4

அத்தியாயம் – 4   இன்று மேக்னாவின் நிச்சயதார்த்த விழா..!! வீடு முழுவதும் பூக்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு  அதனை இன்னும் மெருக்கேற்றும் வண்ணம் சொந்த பந்தங்களால் நிறைந்து இருந்தது. அன்றைய நாளின் நாயகியான மேக்னா எதிர்பார்ப்பும் படபடப்பும் சந்தோஷமும் என கலவையான உணர்வுகளோடு தோழிகளின் உதவியில் தயாராகி கொண்டிருக்க வெளியே அனைவரையும் வரவேற்று உபசரிப்பதில் திருவும் ரம்யாவும் பரபரப்பாய் திரிந்தனர். அதிலும்  திருவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..!! அத்தனை பெருமிதம்..!! காரணம் இந்த வீடு தான்.. வீட்டின் […]