“வர மாட்டேன் போ, வந்தா என்னைத் திட்டுவ” “திட்ட மாட்டேன் வா டி அம்மு”, என்று சொன்னதும் அவன் அருகே வந்து அமர்ந்தாள். அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “நான் அன்னைக்கு உன் கிட்ட சொல்லிட்டு போற மாதிரி சிட்டுவேசன் அமையலை டி. அப்புறம் சொல்லிருக்கணும். சொல்லாம விட்டுட்டேன். அதுக்காக நீ இவ்வளவு பெரிய விஷயம் என் கிட்ட இருந்து மறைக்கலாமா? நம்ம குழந்தை டி”, என்று ஆதங்கமாக கேட்டான். “அதை உன் கிட்ட சொல்ல தான் […]
“ஆனா அப்ப உன் மனசு எப்படி இருக்கும்னு இப்ப யுக்தாவை லவ் பண்ணின அப்புறம் என்னால புரிஞ்சிக்க முடியுது ரேவதி. சரி அந்த முரளி போனா போகட்டும். வேற நல்ல பையன் கிடைப்பான். இப்ப வேலைக்கு என்ன பண்ண போற?” “அது தான் தெரியலை. அம்மா வீட்ல தையல் தைக்கிறாங்க. தங்கச்சி பன்னிரெண்டாவது படிக்கிறா. சாப்பாடுக்கு பிரச்சனை இல்லை. ஆனா கடன் அடைக்க என்ன பண்ண தெரியலை. இத்தனை நாள் என் சம்பளம் உதவியா இருந்துச்சு. இனி […]
அத்தியாயம் 14 எந்தன் இதயம் பத்திரமாக சிறை செய்கிறது உந்தன் புன்னகை முகத்தை!!! தேனிலவு முடிந்து திரும்பி வந்ததும் அவர்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள் என்று முதலில் புரிந்து கொண்டது ஈஸ்வரன் தான். அவருக்கு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. அவர்கள் ஒற்றுமையாக பேசிக் கொள்வதைக் காணும் போது சுந்தரிக்கும் சந்தேகம் வந்தது. ஆனால் அவள் மனது இருவரும் ஒன்றாக கடைசி வரை வாழவே மாட்டார்கள் என்று நம்பியதால் அந்த சந்தேகத்தை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. […]
அவள் செய்கையில் அவனும் உற்சாகமானான். தன்னுடைய மார்பில் இருந்து அவனை விலக்கி அவளுடைய கன்னத்தில் தன்னுடைய முதல் முத்திரையை பதித்தான். அவள் கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலக நினைக்க அவள் செய்கையை தடுத்தவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். முதல் முறையாக அவன் கையணைப்பிலே கண்ணயர்ந்தாள் யுக்தா. அவனுக்குள்ளும் சிறிது தயக்கம் விடை பெற்றுச் சென்றிருந்தது. அவர்கள் லண்டன் கிளம்பும் நாளும் வந்த்து. யுக்தா இங்கே இருப்பாள், அவளை டார்ச்சல் செய்து இங்கே இருந்து ஓட விடலாம் என்று […]
அன்றோடு அவன் புராஜெக்ட் வேலை முடிந்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த புராஜேக்ட்க்கான டெமோ கொடுப்பதற்காக அவன் லண்டன் செல்ல வேண்டியது இருந்தது. இன்று வேலை முடிந்ததால் அறையில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தான். அப்போது உள்ளே வந்த யுக்தா பாத்ரூமுக்குள் சென்று குளித்து முடித்து இரவு உடையில் வெளியே வந்தாள். அவளையே பார்த்த படி அமர்ந்திருந்தான் யுவன். கண்ணாடி முன்பு போய் நின்றவள் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்துக்கு போட்டு விட்டு தன்னுடைய தலை முடியை எடுத்து கொண்டை […]
அத்தியாயம் 13 கால நேரம் தெரியாமல் சேகரித்துக் கொண்டே திரிகிறேன் உந்தன் மாயப் புன்னகையை!!! அடுத்து வந்த நாட்களில் யுக்தா மற்றும் யுவனுக்கு ஒரு மாதிரி தான் கடந்தது. ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு விரிசல் வந்தது போல தான் இருந்தது. என்ன தான் பழைய படி இருக்கலாம் என்று இருவரும் எண்ணினாலும் இருவராலும் சில விஷயங்களில் சகஜமாக நடந்து கொள்ள முடியவில்லை. யுக்தாவிடத்திலும் விவரிக்க முடியாத பல மாற்றங்கள் வந்திருந்தது. அவளது […]
தாமரையும் தைரியம் சொன்னதும் அரை மனதாக யுவனுடன் கிளம்பிச் சென்றாள் யுக்தா. அவள் சென்றதும் செல்வம் தாமரையை மிரட்ட ஆரம்பிக்க “நீங்க பண்ணுறது எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? இனி ஒழுங்கு மரியாதையா இருக்கலைன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இப்ப ரிசப்ஷன் கிளம்பனும் வாங்க. நீங்க வந்தா தான் என் பொண்ணுக்கு மரியாதை. அதுக்கு தான் கூப்பிடுறேன். இல்லைன்னா உங்களை எக்கெடோ கெட்டுப் போங்கன்னு விட்டுருப்பேன்”, என்றாள் தாமரை. “உனக்கு பயம் விட்டுப் போச்சுல்ல? எவ்வளவு திமிர் […]
அத்தியாயம் 12 நிஜத்தில் மட்டும் அல்ல நிழலிலும் உன்னையே பின் பற்றிச் செல்கிறது எந்தன் மனம்!!! தாமரை என்ன தான் செல்வத்திடம் சமாளித்தாலும் “இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் இருக்கு எல்லாருக்கும். அந்த யுவனுக்கும் சேத்து தான். யுக்தா கல்யாணம் முடிஞ்ச அப்புறம் அவன் எப்படி யுக்தா கிட்ட பேசுறான்னு பாக்குறேன்”, என்று அவர்களை திட்டி விட்டே அங்கிருந்து சென்றார் செல்வம். அந்த ஒரு வாரம் எப்படிக் கடந்தது என்று கேட்டால் யாராலும் தெளிவாக சொல்ல […]
“உனக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுரு யுவன். இதெல்லாம் கட்டாயப் படுத்த கூடாதுன்னு எனக்கு புரியுது. ஆனா என் மகளுக்காக தான். ஆனா உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம். நீ உன் வழியை பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பா” “இல்லை ஆண்ட்டி, வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சேன்? வேற ஒண்ணும் இல்லை” “என்னை மன்னிச்சிரு பா. என் மகளைப் பத்தி யோசிச்சு உங்க வீட்டைப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன். கண்டிப்பா உன் வீட்ல சம்மதிக்க மாட்டாங்க தானே? அதுவும் ஒரு […]
“இது எந்த ஊர் மா? வீடு எல்லாம் அந்த பக்கம் இருக்கு. நீ காட்டுல வந்து நிப்பாட்ட சொல்லிருக்க?” “இது காடு இல்லை பாப்பா. நம்ம இடம் தான். விவசாயம் செய்ய ஆள் இல்லாம தரிசா கிடக்கு” “சரி இங்க எதுக்கு வந்துருக்கோம்?” “இங்க நம்ம குல தெய்வம் கோவில் இருக்கு” “இங்கயா?” “ஆமா, கொஞ்சம் உள்ள போகணும். வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்தது […]