“போச்சா”, என்று கேட்ட படி அவளிடம் இருந்து விலகி அமர்ந்தான். சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் வினோதினி. அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் பிஸியாக தான் சென்றது. திருமண வேலைகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்கள். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வினோதினி வீட்டினர் வந்து விட்டனர். ஒரு வழியாக இன்பா வினோதினி திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு விஜியும் குடும்பத்துடன் வந்திருந்தாள். வினோதினிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க நேராக அங்கே வந்த விஜி அங்கே யார் இருக்கிறார்கள் […]
அத்தியாயம் 15 உன்னைக் காண்கையில் மலரப் பழகிக் கொண்டது எந்தன் கண்களும்!!! என்ன செய்ய என்று தெரியாமல் கதிர் டிரைவர் சீட்டில் ஏறி அமர சிதம்பரமும் பாமாவும் வினோதினி தங்கி இருக்கும் வீட்டை நோக்கிச் சென்றார்கள். “அப்பா, நில்லு பா. நில்லுன்னு சொல்றேன்ல? நான் சொல்றதைக் கேளுங்க பா”, என்று புலம்பிக் கொண்டே சிதம்பரம் பின்னே சென்றான் இன்பா. அவன் கை பிடியில் இருந்த வினோதினியும் அவன் பின்னே சென்றாள். அவர்களுக்கு பின்னே பார்வதியும் சண்முகநாதனும் செல்ல […]
அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் கலங்கி சிவந்து இருந்தது. அதைப் பார்த்த அவளுக்கு கஷ்டமாக இருந்தது. எப்போதுமே கம்பீரமாக சுற்றிக் கொண்டிருப்பவனின் அந்த கண்ணீர் தனக்கானது என்று எண்ணி அவள் நெஞ்சம் விம்மியது. தான் பசியில் இருந்த போது உணவு கொடுத்து ஒரு அன்னையாக தன்னைக் கவனித்துக் கொண்டவன். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் தோழனாக தோள் கொடுத்தவன். விஜி வீட்டில் மூச்சு முட்டிப் போய் இருந்தவளுக்கு விடுதலை கொடுத்தவன். தான் இது வரை பார்த்தே […]
எந்த பாதிப்பும் இல்லாதவள் போல “சரி நான் போய்க் கிளம்பனும். நான் போறேன்”, என்றாள். “ஒரே ஒரு நிமிஷம்”, என்று அவன் சொன்னதும் “ஏன் டா இப்படி படுத்துற? கண்டிப்பா நான் இப்ப உண்மையை உளறத் தான் போறேன்”, என்று எண்ணிக் கொண்டு நின்று அவனைப் பார்த்தாள். “உனக்கும் தீவிரமா உங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்கல்ல?” “ஆமா” “அப்படின்னா வேற ஒருத்தனை நீ கட்டிக்குவ அப்படித் தானே?” “ஆமா” “நமக்குள்ள நடந்ததை எல்லாம் மறந்துருவியா டி?”, என்று […]
வேறு வழியில்லாமல் அறைக்குள் வந்தான் கதிர். சோகமாக இன்பா அமர்ந்திருக்க அவன் அருகில் வந்து “என்ன மச்சான் கிளம்பலையா?”, என்று கேட்டான். “வெறியேத்தாத கதிர். என்னால முடியலை டா” “வா இப்பவே மாமா கிட்ட பேசுவோம்” “அவர் என் பேச்சைக் கேக்க மாட்டார்” “கேக்கலைன்னா வீட்டை விட்டு போறேன்னு சொல்லு” “வீட்டை விட்டு போனா எங்க டா போய்த் தங்குறது?” “காதலிச்ச பொண்ணைத் தவிர வேற பொண்ணைக் கட்டிக்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் மச்சான். ஒழுங்கா […]
அத்தியாயம் 14 பார்வை பரிமாறும் நேரம் தான் நேசம் கொண்ட நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகிறது!!! நாட்கள் எப்போதும் போல கடக்க இன்பா தான் உள்ளுக்குள் தவித்துக் கொண்டே இருந்தான். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கும் நிம்மதி இல்லை. இன்பா சரியாக உண்பதில்லை, சரியாக உறங்குவதுமில்லை என்பதை கதிர் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். என்ன தான் மாப்பிள்ளை மச்சான் என்று அழைத்துக் கொண்டாலும் இன்பா அவனுடைய உயிர் நண்பனாயிற்றே. “வினோதினி என்ன தான் டா சொல்றா? அவ […]
அவள் தந்த ஒற்றை முத்தத்தில் அவன் தவிப்பு அனைத்தும் மறைய கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான். அப்போது அங்கே வந்த பார்வதி அவன் முதுகில் சுளிரென்று ஒரு அடி வைத்தாள். “ஆ”, என்று அலறியவன் “ஏன் கிழவி அடிச்ச?”, என்று பாவமாக கேட்டான். “நான் வந்தது கூட தெரியாம என்ன கனா கண்டுட்டு இருக்க டா?” “ஏதோ ஒரு கனவு. அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. நான் வீட்டுக்கு போறேன் போ”, என்று சொல்லி […]
அத்தியாயம் 13 பிரிந்த போதும், வாழப் பழகிக் கொண்டோம் காதலின் நினைவுகளோடு!!! ஒரு ஆணின் தொடுகை வினோதினிக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது மட்டும் நிஜம். கம்பீரமே உருவாக இருந்த அவனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மயக்கியது. செதுக்கி வைத்த ரோமானிய சிற்பம் போல இருந்தவனின் கம்பீரம் அவள் மனதை அசைக்க அவன் மார்பில் சாய்ந்து கொள்ளும் என்ற ஆசை அவளுக்கே வந்தது. அந்த ஆசையால் எழுந்த முகச்சிவப்பை அவனுக்கு காட்ட மனதில்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு […]
இன்பா வண்டியை எடுக்க அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் இளவரசி. ஊரைத் தாண்டியதும் “கதிர் கூட போறியா டி? அவனை வரச் சொல்லவா? வீட்ல யாருக்கும் தெரியாம நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னான் இன்பா. இப்போது அவளுக்கே கதிருடன் வண்டியில் அமர்ந்து தனியே போவது ஒரு மாதிரி வெட்கமாக இருக்க “வேண்டாம் அண்ணா. உன் கூடவே வரேன்”, என்று சொல்லி விட்டாள். அன்றைய பகல் பொழுது இன்பாவுக்கு வேலையில் கடந்தது. இன்று மாலை எப்படியாவது அவளிடம் பேச […]
“பெரிய கண்டு பிடிப்பு. போடா. ஆமா போட்டு தான் வாங்கிட்டு இருக்கேன். நீ விரும்புற பொண்ணு யாருன்னு சொல்லு” “அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரியாம எப்படி சொல்றது?” “அப்ப அவ கிட்டயே இன்னும் சொல்லலையா? விளங்கிப் போச்சு. சரி இப்பவே அந்த பொண்ணு கிட்ட கேட்டுச் சொல்லு டா”, என்று சிதம்பரம் சொல்ல “கொஞ்சம் அமைதியா இரு சிதம்பரம்”, என்றார் பார்வதி. “இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தப்பா மா?” “யார் சொன்னா […]