Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

manam virumbuthae

மனம் விரும்புதே – final 2

“யெஸ், ஐ ஆம்!” என்றவன், அவள் தோள் தொட்டு முன்பக்கமாய் தள்ள, இரண்டடி நகர்ந்து பின் அப்படியே நின்றவள், “போடா, உனக்கு எல்லாம் கனிமொழி தேன்மொழின்னு எவளாவது வாய்க்கா வரப்புல திரிவா! அவளை தேடித்தேடி லவ் பண்ணு! நான் எல்லாம் உனக்கு செட்டே ஆவமாட்டேன்!” மெலிதாய் தேம்பிக்கொண்டே அவள் சொன்னதும், அடிவயிற்றில் இருந்து கிளம்பிய சிரிப்பை மறைக்க, முகத்தை தேய்ப்பவன் போல குனிந்துக்கொண்டான் அவன். அங்கிருந்த காவலாளி வேறு அவளை அழைக்கவே, கடுகடுவென உள்ளே சென்றாள். செக் […]


மனம் விரும்புதே – final 1

டிரென்டியான ஜம்ப்சூட்டில் தயாராகி ஏற்கனவே பேக் செய்து ரெடியாய் இருந்த ட்ராலியை தாண்டி குறுக்கும் நெருக்குமாய் தன் அறைக்குள் நடந்துக்கொண்டிருந்தாள் ஜனனி. பூட்டாமல் இருந்த கதவை திறந்து எட்டிப்பார்த்த பரசுராம், “நேரமாச்சு ஜனனி! நான் வேணுனா ஒருக்க ஷியாம் கிட்ட பேசி பார்க்கவா?” என்றார். “வேண்டாம் ப்பா” உடனே மறுத்தாள். “எனக்கு ஷியாம் தான் ப்பா முக்கியம்! அவர் வராம நான் போகல!” “ஒருமுறை பேசிப்பார்க்குறேனே ஜனனி மா” மனம் கேளாமல் மீண்டும் அவர் கேட்க, அவரை […]


மனம் விரும்புதே – 12

ஷியாமளனுக்கு மனமெங்கும் பாரம் ஏறி கிடந்தது. இதுநாள் வரை மனம் அறியாமல் கூட யாரையும் புண்படுத்தியதில்லை அவன். இன்றோ அவன் மனதில் அழுத்தமாய் அமர்ந்துக்கிடப்பவளை அதிகமாய் வதைத்துவிட்டான். நியாயமாய் அவள் மீதிருக்கும் கோபத்திற்கு அவன் பேசிவிட்ட பேச்சில் நிம்மதி தான் கிடைத்திருக்க வேண்டும்.   மாறாக, அவளுக்கு இணையாய்… ஏன் அவளை விடவே அதிகமாய் வேதனை அவனை அப்பிக்கிடந்தது.   அங்கே அவள் வேலைக்கு என்று வந்துவிட்ட நாள் தொட்டு ஒவ்வொரு நிமிடமும் இவனை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தாள். […]


மனம் விரும்புதே – 11

தன் முன்னே வந்து நின்றவளை அவன் பார்த்துக்கொண்டே இருக்க, அவன் முகத்தின் முன்னே சொடுக்கிட்டவள், “அலோ சார்!?” என்றாள். கண்ணை சிமிட்டு நிதானித்த ஷியாமிற்கு அவளை பார்க்க பார்க்க ஒரு வித வேகம்! “உனக்கெல்லாம் சூடு சுரணையே இல்லையா?” என்றான் சூடாக. சிரித்துக்கொண்டிருந்தவள் முகம் அப்படியே கூம்பிப்போக, அதை காண சகியாமல் முகத்தை திருப்பினான் ஷியாம். “சார்?” அவள் மீண்டும் அழைத்தபோது, கை நீட்டி தடுத்தவன், “பேசாத! இன்னும் ஒரு வார்த்தை பேசாத! இன்னும் எதெல்லாம் சொல்லி […]


மனம் விரும்புதே – 10

ஒருவழியாய் ஷியாமளனுக்கு காரை நிறுத்த இடம் கிடைத்துவிட்டது. லாவகமாய் போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கியவனுக்கு என்னவோ மலையே புரட்டி போட்ட அயர்வு. நகரின் முக்கியமான இடத்தில் பிரம்மாண்டமாய் மண்டபம் பிடித்து ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்தால், அத்தோடு முடிந்ததா? வருபவர்களின் சௌகர்யம் பேண வேண்டும் அல்லவா? நிரம்பி வழிந்த மண்டபத்தில் காரை உட்செலுத்த கூட இடமில்லை. பார்கிங் ஏரியா கூட நிரம்பி இருக்க, வேறுவழியின்றி மார்த்தாண்டத்தை மண்டப வாசலில் இறக்கிவிட்டுவிட்டு இவன் வண்டியை நிறுத்த போக, […]


மனம் விரும்புதே – 8

ஷியாமளன் ஷோரூமில் இருந்தான். முழுக்க தெளியா விட்டாலும் ஓரளவு தெளிந்துவிட்டான். அவன் மேசை மீது அவன் கண் படும் இடத்தில் அவன் அன்னை ஜானகியின் படம் வீற்றிருந்தது.   அவரை காணும்போதெல்லாம் ‘அன்னை போல நானும் ஏமாறக்கூடாது’ என்ற எண்ணம் தலைத்தூக்க, அவன் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு பிரதி கொண்டு வந்து வைத்துவிட்டான். கண்ணாடி கதவு தட்டப்பட, நிமிர்ந்தும் பாராமல் ‘வாங்க’ என்றவன் முன்னே, “சார்… சேல்ஸ் மேளா’ நாளையோட முடியுது! எக்ஸ்டென்ட் பண்றதை பத்தி […]


மனம் விரும்புதே 7

Episode 7 பரசுராம் வந்துப்போன பிறகு ஷியாமளன் சிந்தனைவயப்பட்டவனாகவே சுற்றினான். ஒரு வாரமாய் தன்னை கட்டாயப்படுத்தி இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டவனுக்கு இப்போது அப்படி நடிக்க கூட வராமல் போக, மதியத்திற்கு மேல் ஷோரூம் வந்த மார்த்தாண்டம் அவனை கண்டுகொண்டுவிட்டார். “மறுபடியும் அந்த பொண்ணு நினைப்பா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டார். “ச்ச… ச்ச… இல்ல மாமா” என்றவனை அவர் நம்பாமல் பார்க்க, “நிஜமா இல்ல மாமா” என்றான் ஷியாமளன். “இதுவரைக்கும் என்கிட்ட எதையும் மறைச்சதே இல்ல… இந்த […]


மனம் விரும்புதே – 6

ஷியாமளன் எப்படி அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தான் என்பது அவனுக்கே தெரியாது. கிட்டத்தட்ட பித்துப்பிடித்த நிலையில் இருட்டிப்போன நேரத்தில் அவன் வீட்டிற்குள் நுழைய அவனுக்காக காத்திருந்த மார்த்தாண்டத்துக்கு அவன் வரும் நிலை கண்டு நெஞ்சமே பதறியது.   “ஷியாமா… என்னடா ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்க?” வாசலுக்கே சென்று அவன் கையைப்பிடித்துக்கொண்டு அவர் விசாரிக்க, அவரை உணர்வின்றி வெறித்தவன் கையை உருவிக்கொண்டு தளர்ந்த நடையோடு உள்ளே சென்றான். மார்த்தாண்டத்துக்கு உயிரே இல்லை. ஷ்யாமளனுக்கு ஏதாவது பிரச்சனை […]


மனம் விரும்புதே – 5

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் பார்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அந்த கட்டிடத்தை பார்த்தாள் ஜனனி. இதற்குமுன் இதுபோன்ற இடத்திற்கு எல்லாம் அவள் வந்ததே இல்லை. வர தோன்றியதும் இல்லை. இன்று வெற்றிகரமாக அவளது ‘தீசிஸை’ சப்மிட் செய்துமுடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்ததுமே அவளுக்கு அழைத்தான் ஷியாமளன். இந்த ஹோட்டல் பெயரை சொல்லி, “ஈவனிங் ஏழு மணிக்கு வந்துடு! உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்!” என்றிருந்தான். வீட்டிற்கு சென்று நிதானமாய் யோசித்தவளுக்கு ஏதோ விபரீதமாகவே தோன்ற, ‘போகாமல் […]


மனம் விரும்புதே – 4

4 “நான் கூப்பிடும்போதெல்லாம் கிளம்பி வந்துடுறீங்களே… அவ்ளோ வெட்டி ஆபீஸரா சார் நீங்க?!” கடற்கரை மணலில் வீடு கட்டிக்கொண்டே வினவியவளிடம் பொய் கோபம் காட்டிய ஷியாம், “இனி வரவே மாட்டேன் பாரு” என்றான் கோபம் போல. “வராதீங்க…” என தோள் குலுக்கியவள், “நானே உங்களை தேடி வருவேன்… வீட்டுக்கு, ஷோரூம்’க்கு.. இன்னும் எங்க எல்லாம் போறீங்களா… அங்க எல்லாம்” என்று குறும்பாய் கண்ணடிக்க, ‘கேடியாயிற்றே இவள்… செய்தாலும் செய்வாள்!’ என்று நினைத்தவன், கடமை தவறாது அவள் கட்டும் […]