Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Meendum Vikramaathithyan

Vijay’s MV – Chapter 29 (Final)

அவர்களைச் சுற்றி இருந்த காட்சி அலையடித்து ஓய்ந்த போது அவர்கள் வாராங்கல் கோட்டைக்கு வெளியே நின்றிருந்தார்கள்.   அதைப் பார்த்தவுடன் திக்ரசூதனின் முகத்தில் குழப்பமும் கோவமும் தாண்டவமாடின.   விக்ரம் புன்னகைமாறாமல் திக்ரசூதனின் தோளில் வைத்த கையால் அவனை மெள்ள உந்தினான்,   “வா… திக்ரசூடா…”   விக்ரம் முன்னால் இருந்த தோரண வாயிலை நோக்கி நடக்க எத்தனிக்க, திக்ரசூதன் அசைந்துகொடுக்காமல் நின்றான்.   “தயங்காம வாப்பா… உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்… ஏதாச்சு பண்றதுனா கங்கைகொண்ட சோழபுரத்துல […]


Vijay’s MV – Chapter 28

கண்முன்னால் பெரியகோயில் மிக நேர்த்தியாக மிக அழகாகப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பதைப் பார்த்த அனைவரும் கண்களும் வியப்பில் விரிந்தன.   கடந்த சில நாள்களில் இது போன்ற மந்திர சாலங்களைப் பார்த்துப் பழகியிருந்த தேவி, அருண் போன்றவர்களுக்கே இது பெரும் வியப்பாக இருந்தபோது, இதற்கு முன் இப்படி ஒன்று சாத்தியம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திராத மற்றவர்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?   திக்ரசூதன் கூட அந்தக் காட்சியின் ஈர்ப்பில் சில நொடிகள் அசையாமல் வியந்து நின்றான். […]


Vijay’s MV – Chapter 27

விக்ரம் என்ன செய்வது என்று புரியாமல் விஷாலியையும் அருணையும் மாறி மாறிப் பார்த்தபடிக் கதவருகிலேயே நின்றான்.   “அண்ணாஆ…”   விசும்பியபடியே விஷாலி விக்ரமைக் கட்டிக்கொண்டாள்.   “வி… விக்ரம்… நா… நா எதுவுமே பண்ணல…”   அருண் திக்கித் திணறித் தன் நிலையை விளக்க முயன்றான்.   “நீ எதுக்கு டா இவ ரூம்கு வந்த?”   விக்ரம் விஷாலியின் முதுகில் தடவிக் கொடுத்தபடியே அருணை விரோதமாகப் பார்த்துக் கேட்டான்.   “இல்ல விக்ரம், பால்கனில […]


Vijay’s MV – Chapter 26

”எப்படி இவ்ளோ சீக்கிரம்? அது யுனெஸ்கோவோட வோர்ல்டு ஹெரிடேஜ் சைட் இல்ல? எப்படி இவ்ளோ ஈசியா அதுல கை வெக்க ஒத்துக்கிட்டாங்க?”   அருண் அதிர்ச்சி விலகாமலே கேட்டான்.   “நீ சொல்றது சரிதான் அருண், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மேல அவ்ளோ எளிதா கைவெக்க முடியாது, என்ன நடக்குதுனு உறுதியா தெரியல, ஒன்னு திக்ரசூதனுக்கு அரசியல்ல பெரிய தொடர்புகள் இருக்கனும், இல்ல சின்ன புணரமைப்புதான்னு இவன் அவங்களை நம்ப வெச்சிருக்கனும், எது எப்படினாலும் இவனுக்கு எப்படி […]


Vijay’s MV – Chapter 25

”வாட்?” தேவி அதிர்ச்சியும் குழப்பமும் கலந்த தொனியில் கேட்டாள்.   “ஆமா… சகர்களின் கடவுளும் நம்ம மாகாளியும் ஒரே கடவுள்தான்… பேருதான் வேற வேற, அது நாம நம்ம மொழில வெச்சுக்கிட்டது!” என்று வேதாளப் பட்டன் இலேசான அலுப்போடு சொன்னான்.   “எனக்கு ஒன்னுமே புரியல! விக்ரமையும் நம்மையும் இந்தச் சிக்கல்லலாம் மாட்டிவிட்டதே மாகாளிதான், நம்ம எதிரிக்கு வரம் கொடுத்தததும் அதே மாகாளியா? என்ன விளையாடுறாங்களா அவங்க?”   மாகாளி மீது எழுந்த கோவத்தை வேதாளப் பட்டன் […]


Vijay’s MV – Chapter 24

வலது தோளில் குருதி கசிய சக வீரனின் உடையில் உடல்நடுங்க குழப்பத்துடன் தேவியைப் பார்த்தபடி நின்றிருந்த விஷாலியைக் கண்டதும் அனைவரும் திகைத்தனர்.   தேவியின் கைப்பேசி ஒலித்து அவர்களின் திகைப்பைப் போக்கியது.   தேவி கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்,   “சொல்லுங்க தேவராஜ்… விஷாலியக் காணும், அதான? கவலைப்படாதீங்க அவ இப்ப எங்க கூடத்தான் இருக்கா… நோ நோ… நீங்க அங்கயே இருங்க, ஐல் அப்டேட் யு… ஆமா… ஆமா… சரி… சரி!” […]


Vijay’s MV – Part – III – Prologue

உஜ்ஜைனியின்  நெற்களஞ்சியங்களில் நெல் நிறைந்திருப்பதைப் போல அந்நகரத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பரபரப்பும் நிறைந்திருந்தன.   நாளை தை பிறக்கிறது. உஜ்ஜைனி மக்கள் அதனை ‘பௌஷ மாஸஹ’ என்பர். நாடெங்கும் அறுவடை முடிந்து சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.   மார்கழியின் பனியையும் குளிரையும் கூட பொருட்படுத்தாமல் பெண்கள் அதிகாலையிலேயே தம் வீடுகளையும் வாயில்களையும் மாடங்களையும் கோலங்களாலும் தோரணங்களாலும் வண்ணத் துணிகள் கொடிகள் பதாகைகளாலும் […]


Vijay’s MV – Part-II – Epilogue

அந்தப் பாசறையின் விளிம்புப் பகுதி அது, அங்குக் காவலில் இருந்த அந்த இரண்டு வீரர்களும் குளிர்காய மூட்டியிருந்த தீயில் முயற்கறியை ஆளுக்கொரு குச்சியில் சொருகி வாட்டிக்கொண்டிருந்தார்கள்.   தானாக வந்து சிக்கிக்கொண்ட அந்த முயலை அவர்கள் நாவில் நீரூற உற்சாகமாகப் பேசிக்கொண்டே வாட்டினர்.   சட்டென ஒரு ஓசை கேட்டது – காய்ந்த சருகுகளில் பாதம் படும் ஓசை!   அவர்கள் சட்டெனக் குச்சியைக் கீழே போட்டுவிட்டு வாள்களைக் கையில் எடுத்துக்கொண்டு கூர்மையான கவனத்துடன் அசையாமல் கவனித்தனர். […]


Vijay’s MV – Chapter 23

கோயிலின் சன்னதியை நோக்கி மெள்ள அணிவகுத்து நெருங்கிய சகர் படையின் தலைமையில் அவனைப் பார்த்ததும் விக்ரமின் முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சி பரவியது, கோவத்தினால் அவனது மூச்சு சற்றே விரைவானது.   சகர்களின் அரசனான திக்ரசூதன் விக்ரமை ஏளனப் புன்னகையுடன் பார்த்தபடி நெருங்கினான்.   விக்ரம் அந்த அர்த்த மண்டபத்தின் மேலிருந்து கீழே செல்வதற்கான வழி எங்கிருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை பார்வையைச் சுற்றவிட்டான்.   “விக்ரம், சம் திங் இஸ் நாட் ரைட்…”   என்று […]


Vijay’s MV – Chapter 22

”செல்லலாமா, மன்னா? எல்லாம் ஆயத்தமாக உள்ளன, சற்று நேரத்தில் பிரபுவும் வந்துடுவிடுவார்?”   பணிவுடன் கேட்டபடி நின்றவனைப் பார்த்து ‘செல்வோம்’ என்று கையசைத்தார் விக்ரமாதித்யர். அவன் அவரை குனிந்து வணங்கிவிட்டு முன்னால் சென்றான். உருக்கி வார்த்த தங்கத்தால் செய்ததைப் போல இருந்த அவனை வியப்புடன் பார்த்தபடியே பின் தொடர்ந்தார் விக்ரமாதித்யர். இங்கு வந்தது முதல் எல்லாமே வியப்பாகவும் விந்தையாகவுந்தான் இருந்தது அவருக்கு. இங்கு வந்ததே ஒரு விந்தைதான்!   எங்கும் பொன்மயமான அந்த மாளிகைக்குள் நடக்கவே கூச்சமாய் […]