Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Minnal Mazhaiyaagi Vaa

சமீராவின் மின்னல் மழையாகி வா – 6

அத்தியாயம் 6   அந்த கலந்தாய்வு அறையின் ப்ரொஜக்டர் திரை அருகில் நின்று க்ரியேட்டிவ் குழுவை சேர்ந்தவன் மிக தீவிரமாய் புதிதாய் வடிவமைக்க போகும் கேமின் திட்டத்தினை பற்றி விளக்கி கொண்டிருக்க நீண்ட மேஜையை சுற்றி இருந்த இருக்கைகளில் ஆர்.எக்ஸின் முக்கிய மேலாளர்கள், அந்தந்த குழு தலைவர்கள் என அமர்ந்திருந்தவர்களுள் ஒருவளாய் உட்கார்ந்திருந்தாள் ஜென்சி. மேஜையில் கையூன்றி விரல் இடுக்கில் வைத்திருந்த பேனாவை  குறிதாளில் லேசாய் தட்டியபடி அவன் கொடுத்த விளக்கங்களை கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். மேலோட்டமாய் […]


சமீராவின் மின்னல் மழையாகி வா – 5(2)

“மேனர்ஸ் இல்ல.. அடுத்தவங்க பேசுறதை இப்படி தான் ஒட்டு கேப்பியா..?? அதுவே கேவலம்.. இதுல கமெண்ட் வேற சொல்ற.. அசிங்கமா இல்ல..” “ஹலோ நான் ஏன் ஒட்டு கேட்கணும்.. நீங்க பேசுறது பக்கத்து டேபிளில் இருந்த என் காதில் தானா வந்து விழுந்துச்சு.. சரி தெரிஞ்ச பொண்ணாச்சே… ஒரு ஹாய் சொல்வோம்னு பின்னாடி வந்ததுல உன்னை இங்க தான் பிடிக்க முடிஞ்சுது…” என்று அவன் சொல்லவும் அவனை முறைத்துவிட்டு அவள் முன்னே செல்ல, “ஆமா.. கண்ணு நல்லா […]


சமீராவின் மின்னல் மழையாகி வா – 5(1)

அத்தியாயம் 5   அந்த மருத்துவமனை வளாகத்தில் தன் காரினை நிறுத்தி இறங்கிய ஜென்சி சந்தன நிற டாப்,ப்ளூ ஜீன்ஸில் ஒற்றை போனி டெய்ல், கண்ணாடி என வழக்கமான தோற்றத்தில் இருந்தாள். இது தாமஸ் வேலை செய்யும் மருத்துவமனை. ஜென்சி எவ்வளவு முயன்றும் எஸ்தர் இம்முறை திருமண விசயத்தில் உறுதியாக இருக்க வேறுவழியில்லாமல் தாமஸினை சந்திக்க ஒத்துக் கொள்ள அவனே இவளை தொடர்பு கொண்டான். ஆனால் இருமுறை திட்டமிட்டும் கடைசி நேரத்தில் இவளால் வரமுடியாமல் போய்விட்டது. அவள் […]


சமீராவின் மின்னல் மழையாகி வா- 4

அத்தியாயம் 4   “ரே… ஒரு தடவ கேட்டு பாரேன்… உன்னால முடியாதது எதாவது இருக்கா சொல்லு.. சும்மா ஒரு ட்ரை.. ரே.. ரே..” ஜென்சியின் அறைவாயிலில் நின்று ரேச்சலை தாஜா செய்துக் கொண்டிருந்தான் அக்‌ஷய். அள்ளும் பகலும் அயாராது உழைத்த அவர்களின் தற்போதைய ப்ராஜெக்ட் வெற்றிகரமாய் முடிந்து அவர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் நன்றாக ரீச்சாகிவிட எல்லோருக்கும் ஒரு ஆத்ம திருப்தி. அது தந்த உற்சாகம் அடுதடுத்த வேலைகளையும் முனைப்பாய் செய்ய வைக்க இதனிடையில் இவர்கள் குழு […]


சமீராவின் மின்னல் மழையாகி வா – 3

அத்தியாயம் 3   ஜென்சியை பார்த்ததும் அனிச்சையாய் எழுந்து நின்றவன் முகம் ஏகத்திற்கு பதட்டத்தை தத்தெடுக்க அந்த பார்வை அவனுள் குளிரை பரப்பியது. “ஜென்..” என்று நிஷாந்த் ஏதோ சொல்லவர, “என்னைவிட வயசும் அதிகம்..!! இந்த கம்பெனில எக்ஸ்பிரியன்ஸூம் அதிகம்..!! அப்படி இருந்தும் உன்னை லீடா போடாமல் ஏன் எனக்கு அந்த அபர்ச்சூனிட்டு கொடுத்தாங்கன்னு நீ கேட்டுட்டே இருந்த இல்லையா..!! திஸ் இஸ் த அன்சர்.. உன்னோட இந்த சின்ன புத்தியால தான்.. நீ இங்க இருக்க.. […]


சமீராவின் மின்னல் மழையாகி வா 2

அத்தியாயம் 2 ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்குமளவு அத்தனை நிசப்தம் அந்த பிரம்மாண்டமான ஹாலில்.. அமல்ராஜ் மேத்தியூ,இருதயராஜ் மேத்தியூ ஒரு பக்க சோபாவிலும் ஜோசஃப் தனி சோபாவிலும் அமர்ந்திருக்க சற்று பின்னால் அமல்ராஜின் மனைவி மற்றும் ஜோசஃபின் தாய் தேவிப்ரியா நின்றிருக்க அவர் அருகில் இருதயராஜின் மனைவி மரியாவும், அவர்கள் மகள் ஜெஸிகா நின்றிருக்க இவர்களுக்கு அடுத்து நின்றது அனீ. புதிதாய் திருமணம் முடிந்து வந்திருக்கும் ஜோசஃபின் மனைவி..!! அனைவர் முகத்திலும் பல்வேறு உணர்வுகள் டன் டன்னாய் […]


சமீராவின் மின்னல் மழையாகி வா

அத்தியாயம் 1   எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்தே யோசிக்கிறேன் அதை தவனை முறையில் நேசிக்கிறேன் இருள் படர்ந்த இரவு வேளையில் வானின் விண்மீண்களுக்கு போட்டியாய் வண்ண வண்ண விளக்குகள் ஒளி வீச பகல் போலவே மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்த மும்பை மாநகரத்தின் கோரிகான் பகுதி அது..!! சாலையில் வாகனங்கள் பறந்துக் கொண்டிருக்க கடைவீதிகள் எங்கும் மக்கள் கூட்டம் தென்பட கண்ணிற்கும் காதிற்கும் எட்டும் தொலைவில் எங்கும் வட […]