Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal

Mister Rascal Final

“ஏன்?” ஒற்றை வார்த்தை உதிர்ப்பதற்குள் மொத்தமாய் உடைந்து கீழே அமர்ந்தாள் ஷைலஜா. முன்பென்றால் எப்படியோ? இந்த இரு நாட்கள் நெருக்கத்தில் அவள் மனதை நெருங்கியிருந்தான் அவன். “ஏன்? கேட்கிறது ரொம்ப சிம்பிள்! பதில் சொல்றது கஷ்டம்” என்றவனும் அங்கிருந்த சிறு மரத்திட்டில் அமர்ந்தான். ஷைலஜாவிற்கு கண்கள் உடைப்பெடுக்கவெல்லாம் இல்லை. ஆனால், நெஞ்சே உடைந்தது போன்றதொரு வலி. இனி வாழ்க்கை அவனோடு தான் என முடிவு செய்துவிட்டதன் ஏமாற்றமா? என்னவோ ஒன்று! அவள் நெஞ்சை அழுத்தி பிசைந்தது. “முழுசா […]


Mister Rascal Pre Final

மணி இரண்டை தாண்டியபோது அந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் இருந்து வெளியே வர மனமே இன்றி வந்தனர் ஜெகனும், அவன் உடன் இருந்த யாமினி மற்றும் சிவா.   சிவா மெல்லிய பதட்டத்துடன், “அப்பா எட்டு தடவை கூப்பிட்டுருக்காரு ஜகா!” என்றான்.   ஜெகனை முந்திக்கொண்டு, “பார்ட்டி கொடுக்க வந்துருக்கோம்ன்னு தெரியும் தானே? எதுக்கு இப்படி இன்டீசென்ட்டா டிஸ்டர்ப் பண்ணணும்?” என்று முகம் சுளித்தவள்,   “என் அம்மாவும் தான் இருக்காங்க! ஹொவ் டீசென்ட் ஷி […]


Mister Rascal 13

அன்று வீட்டிலிருந்த ஷைலஜா காலை உணவுக்கும் வெளியே வரவில்லை, மதிய உணவு வேளை கடந்தும் வெளியே வரவில்லை என்றதும் துர்காவுக்கு அதீத கவலையாய் போனது.   சில நாட்களாய் அவளும் பார்க்கிறாள் தானே!? ஷைலஜா அவளாகவே இல்லை. அவளது நிமிர்வு, தெளிவு, கம்பீரம் எல்லாம் களவாடப்பட்டுவிட்டதை போல தோன்றியது.   என்னவென்று கேட்டாலும் சொல்லிவிடும் ரகமா அவள்? முறைத்தே துரத்தி விடுவாள்!   பொருத்து பொருத்து பார்த்தவள் மெல்ல அவள் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.   […]


Mister Rascal 12

‘எனக்கு தான் ஏற்கனவே தெரியுமே!’   அசராமல் சொல்லிவிட்டு அவளை பார்த்தவனை கண்டு அதிர்ந்துப்போய் ஷைலஜா நிற்க,   “இன்பேக்ட் யாருன்னு தெரிஞ்சு தான் ‘சூட் அட் சைட்’ ஆர்டர் வேணுன்னு பிடிவாதமா கேட்டு வாங்கிருக்கேன்!” என்று சொல்ல, என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றாள் ஷைலஜா.   “எப்படி?” இந்த ஒரு வார்த்தையை கேட்கவே அவளுக்கு அத்தனை சிரமமாய் இருந்தது. ஒருமுறையாவது அவனை ஜெய்க்க வேண்டும் என அவள் நினைக்க, ஒவ்வொரு முறையும் தன்னை மண்ணை கவ்வ […]


MR 11

காரில் மியூசிக் சிஸ்டம் தன் ஆக்கிரமிப்பை நிலைநாட்டியிருந்தது. ஐ.ஜியை நேரில் சந்தித்து, ‘ஷூட் அட் சைட்’ ஆர்டரை பெற்றுக்கொண்டு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர் ரகுனந்தபூபதியும், ஷைலஜாவும்!   பூபதி வழக்கத்தைவிட உற்சாகமாய் இருப்பதைப்போல தெரிந்தது ஷைலஜாவிற்கு.   பெண்குரலில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, உடன் சேர்ந்து,   “தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடு’டி’… என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடி’டி’…!”   ‘டி’யில் மட்டும் நன்கு அழுத்தமாய் அவளை பார்த்துக்கொண்டே அவன் பாட,   “பாட்டுல ‘டா’ தான் வருது…. […]


Mister Rascal 10

ஷைலஜாவிற்கு அன்றிரவு முழுக்க தூக்கம் ஒரு பொட்டுக்கூட வரவில்லை.   இவள் இந்த வழக்கை விசாரித்தபோது ஒரு இம்மி கூட ஆதாரமென இவளுக்கு கிடைக்காமல், இவன் பொறுப்பில் வந்ததுமே அத்தனையும் வந்து குவிவதே இவளுக்கு பெரும் மண்டை குடைச்சலாகி இருந்தது.   இதில் இருமுறை கொலை முயற்சி வேறு நடக்க… அதை அவன் கண்டுக்கொள்ளாமல் கூலாக இருந்ததில் வேறு இவளுக்கு ஏதோ உறுத்தலாகி போனது.   அவனை பற்றி பெரிதாய் எதுவும் தெரியாததால், அவன் யாரென தெளிவாய் […]


Mister Rascal 9

அன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே ரகுனந்தபூபதியை தேடி சென்றாள் ஷைலஜா.   அவன் அறை கதவை தட்டிவிட்டு, லேசாக திறந்து, “எக்ஸ்யூஸ் மீ சார்!” என்று அவள் கேட்க,   அவளை திரும்பியும் பாராமல், “வா ஷைலுமா!” என்றவனின் பார்வை எதிரே இருந்த மானிட்டரில் நிலைத்திருந்தது.   உள்ளே வந்து அவள் சல்யூட் வைத்தபோது கூட அவன் அவளை பார்க்கவில்லை. ஏதோ தீவிர சிந்தனையில் மானிட்டரையே பார்த்திருந்தான்.   சில நொடிகள் நின்று பார்த்தவள், “சார்? எனிதிங் […]


Mister Rascal 8

“அவன் பேருக்கூட…” என்று பூபதி இழுக்க, ஷைலஜாவின் மெலிதாக நடுங்கும் தன் உதடுகள் அசைய, “ரகு…!” என்றாள்.   “ஹான்… அதான் அதான்!” என்றவன் மேற்கொண்டு பேச வர, காரின் ‘ஹாரன்’ ஒலி கேட்டது.   “நடேசன் வந்துட்டாரு போல! நான் கிளம்புறேன் ஷைலுமா! டேக் கேர்… ஸீ யூ டுமாரோ!” என்றவன் எழுந்துக்கொண்டான்.   துர்கா கையில் காஃபீ கோப்பையுடன் வந்துவிட, ‘உப்ப்…உப்ப்’பென ஊதி இருமடங்கு குடித்தவன், “நெக்ஸ்ட் டைம் பொறுமையா ஃபுல்லா குடிக்குறேன்! இப்போ […]


Mister Rascal 7

தன் வீட்டு பால்கனியில் பீம்பேகில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டிருந்த ஷைலஜாவிற்கு உடல் மட்டும் தான் அங்கே இருந்தது. மனம் முழுக்க என்னென்னவோ சிந்தனைகள்.   தொடுவானத்தை தொட்டுக்கொண்டிருந்த அவள் விழிகளின் முன்னே தடுப்பாய் வந்து நின்றாள் துர்கா.   “என்னாச்சு க்கா? எதுவும் பிரச்சனையா?”   வந்து நின்றவள் திடுமென இப்படி கேட்க, “ஏன்?” என்றாள் ஷைலஜா.   “காஃபீ கொஞ்சம் ஆறினா கூட பிடிக்காது உங்களுக்கு… அதான்!” என்றவள் பார்வை டீப்பாய் மீதிருந்த ஏடு படிந்த குளம்பி’யின் […]


Mister Rascal 6 2

காதுக்குள் சுட்டுவிரலை விட்டு ஆட்டியவன், “அட, நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க? நைட்டு தூங்குறப்போ நானே கழட்டி வச்சுட்டு தான் தூங்குவேன்! பாக்கணும்ன்னா நைட்டு என் வீட்டுக்கு வாங்க! ஆனா, போன் பண்ணிட்டு வாங்க! சம்டைம்ஸ் லுங்கி போட மறந்துருப்பேன்!” என்றதும் ஷைலஜாவிற்கே சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.                “யோவ் என்னய்யா இவன்? சுத்த கிறுக்கானா இருக்கான்… இவனையா ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுன?” என்றார் அமைச்சர் ஐ.ஜியிடம். பூபதியோ, “சார்… கொலையை கண்ணால பார்த்த ஒரு பொம்பளையை […]